Friday, July 12, 2024

ஆசுகவி - பகுதி 9

 ஆசுகவி - பகுதி 9  ::

1106. முதல் தனி வித்து ::
ஆலில் பழுத்துதிர் நல்வித்தே போல்மாலின்
தோல்பொறை யோடாம் பெயரும் உருவும்
இலையாய சூட்ம உயிரும் உலகும்,தான்
கோலி பெருக்கல் படைப்பு.

1107. ஆயிரம் இராமர் -,கண்ண! நின்கேழ் ஆவரோ?
வேடர் தலைவன் குரக்கரசன் ராக்கதன்
கூடப் பிறந்ததோர் வீடணன் — நாடியாள்
நட்பதமோ சேயன் அணியன்மால் கண்ணன்போல்
ஆட்க்கொள் அடிமைத் திறத்து?

1108. ஆத்மா வா அரே திரஷ்டவ்ய :
ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாசித்வய :
கண்டு பலகாலும் கூடி அலுக்காமல்
தொண்டு உடனிருந்து ஆற்றவாமோ -- ஈண்டு ?
அதுவால் மனத்தால் நினைவால் அருகாம்
விதிவாய்ப்ப நல்லருள்மால் ஈட்டு.

1109. பகவத் நியாமகத்வம் ஜீவத்துவாரா? ஆதவா ஸ்வத : ?
தன்னால்பின் நான்முகன் தன்னால் இவைபடைத்த
பின்னால் அவையவை ஒன்னுள்ளும் -- நின்னாம்மால்
நம்முடலின் ஓரிடத்தோ? அல்லபரம் பிற்றானோ
நம்மின் உகிர்மயிருள் ளாங்கு ?

1110. ஊர்ணநாபி போலாம் காரிய-காரண பிரஹ்மம் ::
கால்கள்ஓர் எட்டும் உபகரணம் தன்எச்சில்
நூல்வலை யாக அதில்தான் அமர்தல்போல் -- மாலோனும்
தன்னுள் திரைத்தெழுந்து மீளும் தடங்கடல்போல்
ஒன்னி உலகம் படைத்து.

1111. வேத-வேத்யன் நியாயம் ::
விண்மீ திருப்பான் கடல்சேர்ப்பான் காணவிழை
எண்ணத் திருப்பார்தம் உள்ளத்து -- உண்டாம்மால்
மண்மீ துழல்கோயில் வேதா கமபுராணத்
தொண்தருமம் ஆழ்வார் தம் பாட்டு.

1112. பொறிவாயில் ஐந்தவித்தார் ::
இவையல்ல நல்ல இவையல்ல தீயவென
ஆய்ந்து அவையும் உவையும் — சுவையாது
ஆமைபோல் ஐந்தவித்து தம்மனதை ஆள்வார்போய்
ஏமாப் பிருநிலத் துய்த்து.

1113. குணபந்த விதானேஷாம் ::
சூரா வளிக்காற்றத் தாட்ப்பட்ட நாவாய்போல்
பேரா பெயர்த்துண்ணும் ஐம்புலன் -- வேறுவேறு
பக்கம் வலிப்ப உயிர்முக் குணத்து இயங்கவாம்
துக்கம் துடைத்தருள்வான் மால்!

1114. யதமான, வியதிரேக, ஏகேந்திரிய ,
வசீகார ஸம்ஜ்ஞா யஸ்ய ஸா ஜித துவந்த :
குசிக பரத பிரகலாத ராவவர்தாம்
ஆசை வெகுளி அவைவிரவி — மீசு
உலகவாம் பற்றைத் துறந்து விரகத்
திலக்காம் இரட்டைக் கடந்து.

1115. ஞாச இதி பிரஹ்ம ::
முக்தி தனில்தனைத்தான் ஆழ்ந்து அனுபவித்தல்
போக்கி தனக்கிறை தன்னின்தாள் — மிக்கு
எனஅவாவி செல்கதி ஐந்தில் கடைவழி
யான எதிராசர்க் காள்!

1116. நித்யோதிதம்-சாந்தோதிதம் ::
உடல்மிசை உய்உயிர் வேறாம் உலகியல்போல்
தாடாளன் தன்மைத்து மானாலும் — கேடில்
குணத்துருவில் நித்யசாந் யோதித ஆனந்த
மாணத்தால் அஃதிரண்டும் ஒத்து!

1117. தத் தாம பரமம் மம (கீதை 15-6) ::
(பத்யதே இதி பதம் )
புலன்வழி நேரும் அறிவ துறுவதற்கு
ஏலா இருள்கடி ஞாயிறு — போல
அடைதல் உரியவான்ம யோக நெறியர்க்கு
மாடதன் ஞான விளக்கு.

1118. ஸ்தித பிரக்ஞ :
மலைமுகட்டில் எத்தனைதான் வான்பொழிந்தா தாலும்
நிலைபிழறா தன்மைபோல் வாழ்வில் — புலையவாசை
மோகம் கழற்றி உயிரில் நிலைப்பார்தாம்
ஆகத் தணுக்கராம்மா லுக்கு!

1119. எதிர்சா லாப சந்துஷ்ட :
அந்தணர்க்கு ஆன்ற அழகு அருமறை
முந்துற ஓதல் அதன்வழி — பிந்தி
நடத்தல்வாய் ஓதுவித்தல் கூடியிடா தீட்டல்
உடைய அறம்அவன் மாடு.

1120. ஸம்சாரத்தில் அடிக்கொதிப்பு ::
உலைவைத்த சோறு அடிக்கொதிப்பு போல
உலையில் எரிதணல்ஆம் ஊழ்,அதனின் — மேலா
இடுபானை போல்யிப் பிறவி எனும்பாவக்
காடில் மிடியும் உயிர்.

1121. என்நாவில் இன்கவி யான்னொருவர்க்கும் கொடுக்கிலேன் ::
தேவர் முனிவர் இறையரு ளாளர்
அவாவிச் சொன்னவை என்றல்லால் — தேவன்
திருமால் புகழ்பாடல் என்நாவில் யாகம்
கருமம் எனவாதல் கொண்டு.

1122. சம்ஸார ஷட்கம் ::
ஞாதவ்ய பஞ்சக அஜ்ஞானம்
அஸத் ஸேவை
ஜன்மா
கர்மா
அவித்யை
அசித் (தேக) ஸம்பந்தம்
இங்கிப் பிறவி புதைமண் புகப்பெய்தல்
எங்கனேயோ என்னில் அறியவேண்டும் -- ஐந்தின்
அறிவிலியாய் முக்குணத்தில் மற்றிரண்டும் பற்றி
உறும்ஊழ் வினையறுப்பான் உற்று.

1123. ஸப்த பதி ::

ஈஸ்வரஸ்ய சௌஹார்தம்
யதுர்ச்சா ஸுஹ்ருதம்
அத்வேஷம்
ஆபிமுக்யம்
பாகவத ஸமாகமம்
ஆசார்ய வரணம்
பகவன் லாபம்
உயர்மா னுடபிறப்பும்கூன் குருடு
அயர்ப்பிலா சீரிய ஐம்புலன் -- ஆயவருள்
கொண்டு பகைவிலக்கி தம்பால் திறம்பல்செய்
தொண்டர் துணைசேர்த் துயர்த்து.

1124. தோஷாஷ்டகம் ::
தேஹாத்ம புத்தி
ஸ்வாதந்திரியம்
அன்ய சேஷத்வம்
உபாயாந்தர பிரவிருத்தி
பிரபத்தியில் உபாய புத்தி
தேவதாந்தரங்களில் பரத்வ புத்தி
பிராப்யாந்தர ஸம்சர்கம்
ஸ்வார்த்த கைங்கர்யம்.
உடலின் பிறிதோர் இயற்கை இலையாய்
கடவுள் தனக்குத்தான் என்று -- கடப்பாடு
பெற்றதாய் அன்னஎம் மால்விட்டு மற்றையார்க் காற்றல்என் உய்வகையோ தான்?

1125. பிரதான பிரதி தந்திரார்த்தம் ::

வான்மீகம் கூறும் இராமகாதைக் கானசாரம்
தான்மால் அடைக்கலமாய் ஏலுமத்தை— மேன்காண்டம்
ஏழில் உரைப்பினும் வீடணன்றன் கேழில் 
சரணா கதியே தலை. 

1126. பெரியதோர் பாரதம் தன்னைப் பணித்த
கரிய குறிய முனியாம் — வியாசன்
தெரிய உரைத்தவைவுள் சேயன் எளியன்
கரியகோலக் கண்ணன் படிறு. 

1127. ஆழ்வார் பதின்மர் அருளிய பாயிரம்
ஆழ்ந்து அலசி அறிவார் — மொழிவதும்
மன்னுயிர்க்கு உய்உபாயம் தெய்வம் திருமால்தன்
பொன்னடியே என்ற படிக்கு.. 

1128. நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒருவழியாலும்
பசைகாணாதே அப்பிராப்பியம் என்று கண்ண நீரோடே மீளும் ::

நன்மை எனப்பெயர் சூட்டலாம் தீமையில்
என்னை கொடுநரகம் காட்டுவான் — இன்னம்
விலக்குதியோ மாலே! மணல்சோறு உண்பார்
இலகும்கொல் கல்ஆராய் சி?

1129. கிம் வா  க்ருபணே மயி ரக்ஷணீயே ?

நீயிட்ட கட்டளை நீதிநூல் எல்லாம்
பயிற்றிலவாம் அன்ன புறத்தருமம்  — ஓயாது
தேடுதியால்  நின்னுள்ளாம்  தண்ணளிக்கு  என்கருத்து 
நாடுமவர் கைவிட்டக் கால்? 

1130. நைவ சாஸ்திர நைவச கிரம :

மாவலிபால் மூவடிமண் முன்இரந்த மண்ணாளன் 
தேவிமார் எண்மர் பதினாராம் -- ஆயிரவர் 
பெண்ணாளன் காட்டுவதும் ஆதவ யாதவனாய் 
மண்ணாசை பெண்ணாசை மாய்த்து.

1131. யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ |

கடலை கரையினின்று காட்டுவார் போலேயாம் விட்டுவின் பேரா குணக்கடலை -- தொட்டு
உரைக்கவும் ஏலாது ; எல்லையில் மால்சீரை யாரே முடியக் கண்டார்?

1132. மக்நான் உத்தரதே சாஸ்திர பாணிநா ::

சங்கு திகிரிவில் வாள்தண்டு கொண்டுநீ
இங்கு உதித்ததும் இவ்வுலகோர் — தங்களை
வைகுந்தத் ஏற்ற அதுநடவா தற்றுமெய் 
ஞானத் துயர்குருவாய் ஆற்று. 

1133. சுள்ளிக்கால் கொழுகொம்பு ::

களிப்பும் கவர்வதும் அற்று  அளப்பில்
துளக்கமில் நல்விளக்கத் தானந்தம் — நாளும்
இலகிட நாரணன் நல்லருள் கூடிக்
குலாவிடும்  ஈட்டத் திரு. 

1134. நிர்மால்ய சேவை ::

மரகத நீல மலைபோல் தோளில் 
உரகமாள் கோலநின் நாயகி --  ஆரநல் 
மாலை அடையாளம் காணவாம் பள்ளியறைக் 
கோலம்என் நெஞ்சிலாக வே !

1135. ஆசார்ய வக்தயா முக்திஸ்யாத் ::
(ஈஸ்வரனும் ஆசார்யத்வத்தை ஆசைபட்டிருக்கும். குருபரம்பரையில் இடம்பிடித்ததும், உபநிஷத் சாரமான கீதையை உபதேசித்ததும் அது கொண்டு)

பயனல்ல செய்து பயனில்லை ஆகில்
சுயம்மேவல் தாழ்த்து பயத்தல் — உயர்ந்ததாய்
கும்கியானை ஏவியிட்டு  காட்டானை ஈட்டல்போல்
நம்மிலாம் ஆரியனைக் காட்டு. 

1136. மார்ஜால கிஷோரம் நியாயம் ::

வீடணர்க்கு ஆன அபயம் அவனோடு
கூட வருவராம் நால்வர்க்கும் — நீடல்போல்
தன்னா ரியன்தன் அபிமானத் தாளர்க்கு
அன்னார் அடிகளேமால் வீடு. 

1137. மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறம் ::

நீர்தெளிய தேற்றுவான் கொட்டைபோல் நம்உடுப்பின்
கார்வெளுக்க சௌகாரம் தானுமாம்! — சேர்மலி
நீர்தடம்போல் பாழ்நெஞ்சம் தூயதாக ஆவகேளில்
தார்த்தடந்தோள் கார்கண்ணன் சீர்!

1138. பாழ்குளத்தில் மண்டூகமும் வாழ்வதரிது ::

வெண்டா மரைபொய்கை வாழ்அன்னம் போல்தூய
எண்ணவலை தும்பித் தளும்ப — திகழ்வதுண்டாம்
நெஞ்சத் திடலில் இனதேவாழ் தெய்வம்தான்
எஞ்சாமை செல்லுமஃது இல் !

1139. யோ பரமாத்மநயோர் ரக்த : விரகத : அபரமாத்மநி ::

புலன்பத்தும் ஆள்மனதும் மாலே!நின் பால்திறம்பல்
ஏலாப் பிறவி இதனூடே -- காலம்
கனியவந்தென் வன்நெஞ்ச மென்ஆவி ஈர்தியால்
யானினி எங்ககல்வன் மாதோ?

1140. ஷடரிபு தாவத் தகனம் ::

ஆசை வெகுளி மயக்கு அழுக்காறு  
பேசிஎன் தற்பெருமை காழ்ப்பிவை  -- மீசு 
மகரமாறும் எம்மிடற்ப வேகமேகாய் கைமாவை 
சாகப் பிழைப்பித்தார்ப் போன்று.  

1141. பொய்மையும் வாய்மை இடத்து ::
(பொரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்)

காடுறை காலம் கடந்தவோர் ஆண்டுமே
தேடியும் காணலாக அக்ஞாத — கூடவாசம் 
பாண்டவர்க்கு நேர்ந்தவக் காலத்து பொய்யுரை
தீண்டலும் வாய்மை திறத்து.

1142. Do Service to Humanity as Service to God ::

ஆற்றுவம் தொண்டு உயிரனைத்தும் எம்குடியாய்
ஏற்பனவன் நம்மின் இறைதொண்டாய்!— மேற்படி
இவ்வுலகும் இன்னும் வருமெதிர் காலத்து
எவ்வுயிரும் இன்புற வே! 

1143. த்வமேவ உபாயபூதோ  மே பவ இதி 
பிராரத்தநா மதி : சரணாகதி : 

தனக்கும் பிறர்க்கும் அலராய் திருமால் 
தனக்கே உரியனாம் அவ்வோர் — முனைப்பை
தனக்காம் பொறுப்பாய் சுமக்கும் திருமால்
நமக்காய் நடத்தும் முடித்து.

1144. த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாய ஸமாநம்
விருக்ஷம் பரிஷஸ்வஜாதே (முண்டகோபநிஷத்)

நல்வினை தீவினை வித்தாக முற்பிறவி 
வல்வினையில் வேர்ப்பதித்து இற்பிறப்பில்   -- எய்தினராய்  
நிற்றமரம் காய்த்தபழம்  இன்பதுன்பு துற்றிவாழ்தல்  
உற்ற கிளியிரண்டில் மற்று.

1145. பக்தியா அனன்யா ஸக்கிய : அஹம் ஏவம் விதோர்ஜுணா |
(கீதை 11-54)

பற்று அதுவைப்பார் வைத்த இடம்சேர 
உற்ற பெயரும் பொருள்பலவும் -- பெற்றாங்கு  
அன்புகாதல் ஸ்நேகம் கொள் தேசம் மொழிப்பற்று 
என்றாங்கு பக்தியாம் மாலுக்கு. 

1146. ப்ரணதகாமத₃ம் க்ருஷ்ண பத்₃மஜார்சிதம் 
(கீத கோவிந்தம்-13) 

பக்தி அதனின் வெளிப்பாடு கூறிடில் 
யுக்த தியானம் தவம்தானம் -- வாக்வேள்வி 
என்றெலாம்தந்  தாம்நின்ற நேர்த்திக்கு ஏற்புடைத்து 
என்றாலும் கோபகீதம் மிக்கு. 

1147. ஆஸுரி ஸம்பத் சதுஷ்டயம் ::

அழகு இளமை வரம்பில் பெரும்செல்வம் 
சூழ அவிவேகம் நாலும்நம் -- கேழிலாகில் 
மர்கடம் கள்வெறி பிச்சேறி தேள்கடி 
சேர்வுறில்நேர் தீம்பினுக்கார் காப்பு?

1148. தெய்வீஹ்யேஷா குணமயீ  மம மாயா துரத்யயா |
மாமேவ யே பிரபத்யந்தே மாயாமேதாம் தரந்திதே ||
(கீதை 7-14).

தேவரில் ஒர்சயந்தன் மானிடரி்ல் கூறில்
தவத்தில் கொழுத்த தசமுகன் — ஆவனே 
ஆசுர யோநி பிரக்லாத வீடணர்
பேசில் தேவரில்இல் மாறு. 

1149. இடையது நழுவில் வீழ்வது உலகில் |
கடையது கழியில் சூழ்வது இறையே |

அறம்பொருள் இன்பம்இம் மூன்றும் ஒருவர்க்கு
ஏறும் படியானால் வாழும் -- திறம்தான்
உலகியல் விட்டு  இறையன்பன் ஆசான்
அலப்பதே  ஆள்விக்கும் வீடு. 

1150. பிரவிர்த்தி தர்மஸ்ய  பிராஜபதிர் ரதா அப்ரவீத் |
நிவிர்த்தி தர்மஸ்ய ருஷிர் நாராயணோ அப்ரவீத் ||

வேதம் விதித்தது நம்பி நடப்பரேல் 
ஏதம் எதுவுமவர்  சாரா -- அதோடு 
இயற்றும் எவையும் இறைப்பணி என்னே 
முயறல் முனைப்பில் துறப்பு. 

1151. சீக்ர பலப்ரதோஹி ஸ்வாசாரியன் ::

குற்றம் கணிசி வெறுவலும் அஃதன்றி
உற்ற அருள்தன்னால் தான்தருவ — தற்றும்
உடல்மாய்த் துயிர்கொள்ளும் காலத்து என்றல்லால்
நீடலுடன் கூடும் குரு. 

1152. பரம்பத யாத்ரா பாதேயம்
(ஸ்ருதி பிரஸ்தானம் - உபநிஷத்
பிரதி பிரஸ்தானம் - கீதை
நியாய பிரஸ்தானம் - ப்ரஹ்ம ஸூத்ரம்)

பிறவிப் படிஅ தகன்று பரம்பதம்
சேரும் வழித்தடம் தன்னில் — பருகுநீர்
தின்னும் பதார்த்தம் இவைமூன்னும் ஆகா(தா)ரம்
என்னும் வகைசுவை தேடு. 

1153. நால்வர் துதி நங்கள் கதி ::

 பாலனாய் செய்த பலதீம்பும் தான்வளர்ந்த
காலத்து செய்பாரதபெரும்போர் — ஜாலமெண்ணில்
பாஞ்சாலி குந்தி விசயன் பிதாமகர்வாய்
தஞ்சமவர் துன்னு துதி!

1154 காம ஏஷ: குரோத ஏஷ: ரஜோ குண ஸமுத்பவ :
(கீதை 3-37).

ஆசை எனும் வலைப் பட்டார் அலப்பதும்
மூசறை வண்டினைப் போலவீசி — ஏசல்தான்
ஆடுவர்; ஆசை அதைத்தீர வென்றவரோ
நாடியோட லஃதில் இருப்பு. 
 
1155. அகிருத அவியாபகஹ :
(செயல் மாண்டபின் பயன் விளைதல் இல்) 

கர்மபலம் காய கிலேசம் ஆயமாயம்
யார்தரும்? காயமது வீய்ந்தபின் — தேர்வதாம்
தூய உயிர்க்கு பாவமென்? புண்ணியமென்?
மாயவனார் கண்வலையாட் பட்டு!

1156. ஐம்பூதத் ஐஞ்சுவையாள் புவி 
ஐம்புலம் ஆழ்படுத்தும் பாழ்குழி :: 

ஒலிக்கு மயங்குவதாம் மாசூணம்; மாப்பிடிக்கு
மேலுரும்மா களிறு;  அழலுருவில் — நாலி
விழும்விட்டில்; மலர்கள் சுவையது தேடிவீழும்
தேனீ மணம்நாடி வண்டு.

1157. பகவதாஹ்லாதகர விஷயம் புண்ணியும் 
நிக்ரஹாக்ரஹக விஷயம் பாபம் ::

இற்பிறப்பில் இன்பதுன்பம் முற்பிறப்பின் வந்ததென்பர்! 
மற்று பிறப்பிடை தோறுமூர்வ — தற்று 
அருவத் துயிரும் அவைசுமப்ப தில்லையாய்  
வாரும் இறைநெஞ் சதால் !

1158. கர்மம் கைங்கர்யத்தில் புகும்.

ஞானம்  ஸ்வரூப பிரகாசத்தில் புகும்.
பக்தி பிராப்பிய ருசியில் புகும்.
பிரபத்தி ஸ்வரூப யாதாமியத்தில் புகும் . இப்படி 
அவனை உகப்பித்து உகப்பதுவே இவனுக்குத் தகும். 

விடுகைக்கும் பற்றுகைக்கும் யார்துணை அம்மால் 
மடிப்பிடித்து வேண்டிப் பெறுவதாம் -- நீட்டேவல் 
குற்றேவல் தாமும் அவனுகப்புக் கல்லால்நம் 
பற்றியவை வாரா தொழுகு!

1159 உந்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது :: 

சேவியாது ஓவலில்யான் எத்தனை நாளுமுனை
கூவி அழைத்தும் நீ!  வாரா — தவிக்கியால்
மாலே! எனைஎன் வினையா யினகொண்டு 
காலன்கை காட்டா தொழி!

1160. வீடுமின் முற்றவும் வீடு செய்து
நும்முயிர் வீடுடையானிடம் வீடு செய்மினே! 
(அங்க பிரபத்தி vs ஸ்வதந்திர பிரபத்தி)

பற்றுவார் பற்றதை விட்டபின் என்பதும்
பத்திவாய் முட்டதாய் நிற்றபாப — முக்திக்காய்;
சித்தயோக நிட்டரோ மற்றவாறு முற்றவும்
விட்டனாக கிட்டுவார்மால் மாட்டு!

1161. கத்யர்த்தே புத்யர்த்தம் ::

தெரிந்தே விழைவதாம் நைப்பு ருசியாம்
தெரியா தொழுகையோ வாசனைஎன் — றோர்ந்து
இரண்டும் மறுபாடு வாரா விடுகை
திரண்ட கருத்தாய் பொகடு.

1162 ஆயன் மாயமோ மருட்கைத்தே! ::

ஏலா தவன்போலா போரில் புறமுதுகு
கோலி நடந்தாய் வியப்பே! பின் — தோலாத
பாணன் நரகனவன் தோள்துணித்தாய்! ! நீஎளியன்
மாண வலியனிதில் யாது?

1163. கௌந்தேய !ப்ரதிஜானிஹி ந மே பக்தா பிரணஸ்யதி -(கீதை 9-31) 
(அ)
தத்பக்த வசனம் ந பிரணஸ்யதி ::

1163a . கரையேற்றும் காலில் நிசாதன் கணைஎய்து
யாரையான் மாய்த்தனன் என்னே — கறைந்து
துணுக்குற தன்னடி சோதிக்கு ஏகல்
இணக்கம தென்றருளி னான்!
(அ)
1163b கரையேற்றும் காலில் நிசாதன் கணைஎய்து
யாரையான் மாய்த்தனன் என்னே — கறைந்து
இரைஞ்சிட தன்னடி சோதிக்கு ஏகல்
விரைந்ததென்று தான்மறைந் தான்!

1164. வசவும் வாழ்த்தும் ஏற்புடைத் தூர்த்தன் ::

தன்வாக்கு பொய்த்தாலும் தன்னடியார் மெய்ப்பிக்கும்
தன்மையான் அந்தகனவன் பெண்டு பொறுமியின்
நாதீந்த சாபமும் பொறையில் முனிசாப
மும்ஏந்தான் தண்மைக்கார் ஒப்பு ?

1165. பிரபாச தீர்தன் இன்முகக் கண்ணன் ஆர்த்தி  ::

இட்டமான பாண்டவர் கட்டம் களையவே
துட்ட துரியோ தனர்க்கூட்டம் — வெட்டிப்
கிடத்தின சிட்டன் சிரீதரன் பட்டனயார்
படுவார் உலகத் தினி ?

1166. ஞானமனுட் டானமிவை நன்னா குடையனான
 பிரம குரு ::

இப்படித்தான்  நாம்ஒழுக  வேண்டும் எனநடந்தான்; 
எப்படிறும் தம்படியாய் சூழ்தீம்பன் — செப்புநெறி
கீதையு மான இருவர்தம் வாழ்வும்நல் வாக்கும்
உதவிக்கை மாறில் பரிசு.  

1167. யாதொன்றும் தீமை இலாது சொலல் அறம் ::

அறநூல் உரைப்பன யாவும் உலகோர்
திறத்து திருந்திய ஞானம் — நெறிபட
வாழ்குணம் நற்செயல் நன்மோக்க
வாழ்வும் அணைதல் பொருட்டு. 

1168. ஆசார பிரபவோ தர்ம : தர்மஸ்ய பிரபு அச்சுத :

ஆரணத்தாள் ஆன்ற அறநெறி யாவுமே
சீரிய வாழ்வினை ஆக்கும்நல் — பேரியல்
பெற்றி தருமமாம்; அஃதொழுகு வார்செய்கை
உற்றமால் உள்ளம் மகிழ்த்து. 

1169. கன்னி (புரட்டாசி மாதம்) தன்னைக் கைப்பிடித்த பெருமாள் :  

தெய்வத்துள் தெய்வம் திருமலைத் தெய்வம்போல் 
உய்பவர்க்கு உய்வதாம் வண்ணம்யார் — ஐய்யயிங்கு 
பண்ணும்சொல்? செய்ய தடங்கோல மாலண்ணல் 
திண்கழல் சேருவார்க் கே!

1170. நிவ்ருத்தி பாதக பிரவ்ருத்தி தந்நிரோத : சரணாகதி :

இயற்றி இருவினை  பாசம் கழற்றல்  
முயற்றி முழுவேத நாதனை --  நாயேன் 
பயற்றல் விடுத்து மழைநோக்கு சாதகம்போல் 
காயும்யான் கண்ணன் கழற்கு.

1171. சாஸ்வதி இஷ்ட சித்தி :

யார்யார் எதெதன்வாய் ஊற்றப் படுவராய்ச் 
சேர்பலன் கூறில் மனத்திடை — நேர்ருசி
வாசனை முக்குணத் தக்கதாம் மந்திரம் 
பூசனை தெய்வம் குரு!

1172. ஆகார த்ரய ஸம்பன்நாம் :

1. நிக்கிரஹிக்க உத்தியோகித்தவனை அனுகிரஹபூதனாக்கி உபாய விரோதியை கழிக்கை.
2. குப்புற விழுந்த விமுகனான காகத்தை சரணாகதனாக்கி பிரபதியை ஸ்வீகரிப்பிக்கை யாகிற ஸ்வரூப விரோதியைக் கழிக்கை. 
3. பிராப்தி தசையில் கைங்கர்யத்தில் அபிருசியை வர்த்திப்பித்து பிராப்பிய விரோதியைக் கழிக்கை 
ஆகிய மூன்றும் பிராட்டிக்கு ஸ்வாபாவிக ஸ்வரூபம்.
அங்கனன்றிக்கே 1. சேஷத்வம் 2) பாரதந்திரியம் 3) ததேக நிர்வாகஹத்நவமாகிற அன்யார்ஹ சேஷத்வம் இம்மூன்றும் ஆகவுமாம். 

அக்கரை யேற்று மவனுக்கும் நாலாறும் 
ஓக்க உரைத்து தனதாள்ஆம் -- தெப்பத்  
தொதுங்குவார்  தம்மின் திறங்களவை செப்பி 
பதமலர் சேவைக்காள் ஆக்கு. 

1173. மைத்ரேய-பராசர
ப்ராசேதச-நாரதாத்
யுதிஷ்டிர-காங்கேய
மதுரகவி-சடஜித் ஸம்வாதாத் 
சாஸதிர பிரஸ்துதாதிவ : 

கேள்விகள் கேட்க பிறப்பது ஞானம்!அக் 
கேள்விக்கு தக்க பதிலாக — ஆள்வித்து 
மேவுவது வாழ்கையாம்; நல்லார் அவர்நட்பின் 
ஆவலிப்பும் அன்பும் அது.

1174. அலக்ஷ்மீம் நாசயாம்யஹம் ::

தன்னைத்தான் காட்டி தனத்தாள் தனையும்தான்   
பின்கூட்டி தேவன் திருமால்தம் -- இன்னாப்
பதனையும் தாம்விலக்கும் தண்ணளி யாள்உதவிக்
கைமாறு என்இறைவிக் குற்று ?  

1175. அஹமேவ பரம் தத்வம் - உபாயேஷு  பிரபத்திஸ்யாத்  ::

கூறு சமயங்கள் ஆறும் அதன்வழி 
தேறும் நெறிகளாய ஐந்தும் -- உரியபேறு 
நாலுமென ஓதி நெறிவாசல் திருமாலென் 
கோலாதார் கற்றதற்றும்  வீண். 

1176. வேங்கட வெற்பு ::

வான்தழுவு மால்குடுமி வேங்கடம் தீங்கருப்பஞ் 
சாந்தின் அமிழ்திறுகி நின்றதோர் -- அந்தமில் 
அக்காரக்  கட்டியதின்  நின்ற நெடியோன்றன் 
மிக்க கருணை வடிவு.  
1177. துவம் அப்ரமேயஸ்ச துராசதஸ்ச ::

பருந்துதான் என்னோ உயரப் பறந்தாலும் 
வாரும் பசிக்கது  கீழ்இழிய  --  நேரும்போல்;
யாரும் தமைபெரிதா சாற்றிலும் மாறில் 
இறைக்கு சரிசாடி யாறு?

1178. பாவனம்  ஹரிசரணயோர்ப்பித துளஸீ தீர்த்தம் 
ஸுபாவனம் குருவரேண்யோர் தர்ப்பித பாதோதகம்.

மெழுகை உருக்கும் கதிரோன் களிமண் 
குழம்பை இறுக்கும்; அலர்த்த -- கடவசெந் 
தாமரை தண்ணீர் பிரிய உலர்த்தல்போல்  
சேமம்செய் ஆசாரியன்!
 
1179. ததீயத்வ பூர்த்தி உத்ரோத்தரம் பவதி ::
அன்பு சமநோக்கு பேதயர் பால்இரக்கம்
உன்னி இறையம்சம் காண்பதாம் — தன்மை
இறைஅடிஇன்  நால்வரில் மிக்க நிறையுடையார் 
முன்னிலும் பின்னவரே தாம் !

1180. அஜாயமாநோ பஹுதா விஜாயதே ::

மீனாமை கேழல் எனவாகி சிங்கவுரு 
தானாகி மாவலி வேள்வியுள் -- மேனேகி 
மண்ணிரந்த மால்மூ விராமனாகி ஆறாத 
கண்ணன்தான் கல்கியுமாம் பின்பு.

1181. கிணற்றடிக் குழந்தையை 
தாயே தள்ளினாள் என்னலாவதே? 

கண்ணால் மனத்தால் பரிசத்தால் தன்கன்றை 
நண்ணா தசலிடத்தே  ஆனபோதும்  -- ஒண்ணா
துயிர்காக்கும் மீனாமை  கேழல் எனவாய் 
பயற்றி அவதரிப்பன் மால்!

1182. ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமின்!

விளையும்  நிலத்தில் விதைப்பதூம் வாடி 
களைப்ப பசித்தவன் உண்ண  -- அளிப்பதூம் 
ஏற்றநீர்  பாத்தி விழலுக்கு ஏகதேபோல் 
ஆற்றாவாம் ஆன்ம அறிவு!

1183. ஷடரிபு  சாக்ஷாதாக்கள் ::

ஆசை அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் 
மீசுபாசம் ஆணவம் ஆறும் -- தசானனன் 
கன்னன் சுயோதனன் வாலி குசிகமுனி 
யன்னகுரு மன்னன்பால் ஆம். 

1184. வியாத நீதி :: 

கருணை பொறுமை இரண்டும் தவமாம் ;
வருமிடர் மாட்டு வழுவா -- திருப்பவர்தம்  
வாய்மை தருமம், இவைவழி நிற்பவர்க்கு 
உய்வகை அல்ல பிற. 

1185. ஆரணத்தான் வாயமுதப் பாரணம் :: 

மாலே! உனபுகழ் கேளாத நாளும்
உலப்பில்உன் கீர்த்திக் கவிதை - சொலாதுசெல்
நாளும் எனக்கவை ஏகா தசிநாளே!
மற்றத் துவாதசியாய் மாற்று. 

1186. பொருள்படப பேசல் புலமைக்கழகு :

கவிதைக்கு ஆன்ற அழகென பொய்யுரை 
மேவப் புனைவதாய் சொல்வளம் -- தூவி  
இலைமறை காய்போல் பொருள்வளம் குன்றத்  
தலைப்பார் புலமைக் கிழுக்கு .

1187. ஆசாரம் இலாவிசாரம் என்னே சாரம்?

கல்விக் கழகு கசடற கற்றதற்பின் 
நல்கு  மதன்பலன் தோற்றவே -- பல்கிநன்  
ஞானம் எனவாகி அஃதொப்ப நிற்பதாய்  
ஆன உயரொழுக தால்!
  
1188. அபகதமதமானை: அந்திமோபாயநிஷ்டை:
அதிகதபரமார்த்தை: அர்த்தகாமாநபேக்ஷை: |
நிகிலஜநஸுஹ்ருத்பி: நிர்ஜிதக்ரோதலோபை:
வரவரமுநி ப்ருத்யை: அஸ்து மே நித்யயோக: ||

செருக்கு அறுத்துதன் ஆரியன்தன் நன்மதிப்பு 
சேருமவர் குற்றேவல் தேறியழுக் -- காறு 
அவாவெகுளி ஆறும் துறப்பார் தவத்துயர்  
மாமுனிவன் சூழடியார்எம் கூட்டு. 

1189. ஆரோக்கியம் பாஸ்கரா திச்சேத் 
ச்ரியம் இச்சேதி ஹுதாஸந : |
ஈஸ்வராத் ஜ்ஞானம் அன்விச்சேத் 
மோக்ஷம் இச்சேத் ஜனார்தந:||

இறவாமை வேண்டின் பிறவாமை வேண்டும்;
அறவாழி அந்தணன் நாமம்  -  திறம்பாமை  
கொண்டு  அவனை மறவாமை உண்டேல்விண் 
ஆண்டென்றும் மீளார் உலகு. 
1190. துறவின் பக்குவம் ::
(ந்யாஸ ஸந்யாஸயோர் அபேத:)

பசுவதை பாபமது காரணமா வேள்வியவை
கூசி விடுவர் ஒருசாரார் —. ஆசை
அமரர் உலகுக் கலாது திருமால்
சமர்பணமென் ஆற்றுவார் மற்று. 

1191. ஸம்பவாமி யுகே! யுகே! ::
நீதி நிலைக்க தருமம் தழைக்கவ 
நீதி கெடுத்து பலபடி — மேதினியில்
தான்தோன்றி மால்செயும் ஆனைத் தொழில்தாம்
தமர்கள் நலிவார் பொருது. 

1192. வித்தம் ஹரதி தத் :
(ஸுலப ஸ்ரீதர ஸதா )

பாடிப் பரவி எளிதா பயன்பெறல் 
நாடி பிறதெய்வம் பேணிநீர் — ஓடுவரேல்
நீடு வரமல்பம் அத்திரம் ஆதலால்
வீடுசெய விட்டுவைக் கிட்டு. 

1193. கர்ம சங்க பரித்தியாகம் vs பலத்தியாகம் ::

செய்தநல் வேள்வியர் செய்யா தொழிகிலர் 
ஐய! கரும வினைகளை — செய்தப்
பயன்தவிர்ந்து செய்தற்றும் தாமலராய் மாலொருவன்
ஆய உகப்பதுவே கொண்டு. 

1194. மஹாமஹிமோபகாரம் :: 

நாதமுனி செய்தநற் சாகசம்தான் நம்தமிழ் 
வேதமதை நாட்டில் நடையாட — விட்டமைபோல் 
கோதிலவாம் ஈடுதனை கூடிட் டமைவிலக்கி 
போதித்த மாமுனிசீர் ஓம்பு.

1195. வித்யயா விந்ததே அமிர்தம் ::

உன்மத்தன் போம்நினை வின்றியே போனாலும் 
தான்சேர்வன் ஊர்அதுவால்  ஏர்நடவு — என்றலாது 
சேற்றில் எறிந்தநெல் காய்கலாது போகாது-
மாற்றோ வினைமாலுக் கென்று! 

1196. யாதானும் செய்து அகலும் விரதம்  ::

எளியன் எனதாழ விட்டு அணையில் 
களிக்கலாது காதம் விலகும் -- தெளிவிசும்பு 
தேவன் எனமேன்மை காட்டிலோ மேவாது 
எட்டாக் கனியாய் அயர்த்து. 

1197. அந்தி மாட்டு அந்தி வைத்த மும்மைசால் மூல மந்திரம் ::
(அநந்யார்ஹ சேஷத்வம்-அனன்ய சரணத்வம்- 
அனன்ய போக்யத்வம் ஜீவாத்மா)

மாலுக்கு மற்றுமோர் தெய்வம் உளதென 
ஏலாத தூய அடிமைக்கு  -- ஆலிப்பும் 
பாலின் சுவைபோகம் என்று அவர்க்கே 
தலைப்பெய் வதாம்எட் டெழுத்து. 

1198. சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன:
அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன்
ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம் !

தூண்நின்ற தேவைதான் காண்கிலனாய் கைநின்ற 
திண்கதையால் பொன்னன் புடைத்தவன்று  -- விண்மண் 
தொடநின்ற சிங்க உருவை கடிகை 
தடங்குன்றில் சென்றுகாண் இன்று. 
 
1199. பிராமண-பிரமேய பரித்திராணம் ::

வானின்று வீழுமால் தம்கருணை ஆழ்வார்கள் 
பாநின்று  பல்கி வழிந்தோட -- மேநின்ற 
நம்பூர்வர் நல்ல வியாக்கிகள் தாமிட்டு 
சேமித்தார் லோகாச்சார் போன்று. 

1200. ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்யச புநப்புந:
(அதீதி, போத, ஆசரண, பிரசாரணம் )

கற்பவை கற்றபின் கற்றவை யாவுளும் 
உற்றவை ஓர்ந்து அதன்வழி -- நிற்பராய் 
நற்றவை பற்றி  கணிசிப்பார் கற்பித்தும் 
அர்பித்தும் போக்கவாம் போது.  


--  ஆக்கம் மற்றும் படைப்பு 
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.































































































































No comments:

Post a Comment