Friday, January 19, 2024

ஆசுகவி - பகுதி 8

ஆசுகவி - பகுதி 8  ::

1001 ஆசார்ய தேவோ பவ :
ஆன்ம நெறிவழியில் யாவரும் ஒர்நிலை
தன்னில் பயணிப் பவரல்லர் -- என்னாகில்
உயர்நிலையில் தூகுவார்தாள் பற்றி உயப்பார்த்தல் தண்ணியார் தக்கதென்று நேர்.
1002. நல்லான் சக்ரவர்த்தி ::
ஆற்றோடு வந்த அநாதபிணம் தோள்தீண்ட
உற்றதை பார்க்கில் திருமாற்கு -- உற்ற
திருச்சின்னம் தோள்இருப்ப செய்சடங்கால் ஊருக்கு  
பொல்லான்காண், நல்லான் பரர்க்கு!
1003. அனன்யார்ஹ சேஷத்வம்
அனன்ய சரணத்வம்
அனன்ய போக்யத்வம்
ஆகிற ஆகாரத்ரயம் ஸ்வரூபம் ::
தன்னை அறிகை தவமேல் தனக்குள்ளாம்
தன்மை தனித்திறலோன் தன்னை — உன்னிப்
பணிதல், அதுவும் தனக்கும் பிறர்க்கும்
துணியா தியற்றல், முறை.
1004. ஊர்துவ மூலம் அதசாகா அஸ்வத்தம் ஸம்சாரம் ::
பாரில் படைப்பு அனைத்தும் நடத்துமப்
பேரியல் தேவன் சதுமுகன் — நேரும்
உயிரும் உடலும் கிளைகீழா வேர்மேலாம்
ஆய அரசமரம் போன்று.
1005. கேசவ சோமயாஜி தீர்த்தம் ::
பேராழி நட்ட நடுவேயோர் தெப்பமென
நீராழி மண்டபம் பாதியும் — மூழ்கிட
பெய்த மழைநீர் வடியாது நிற்குமேல்
மொய்த்தபூ வல்லி மலர்ந்து.
1006. தேன மைத்ரீ பவதி, யதி ஜீவிதும் இச்சதி ::
வெந்துவீழ் வீட்டில் ஒருகம்பு ஆகிலும்
மிஞ்சுமோ என்று நெருப்பினை — முந்தி
அவிப்பார்போல் பத்தலை ராவணன்நேர் நெஞ்சு
பவத்தாரை ஆழ்வார் திருத்து.
1007. திருநாரணன்தாள் காலம்பெற சிந்தித்துய்மினே !
மரணத்தின் பால்முடியும் வாழ்வு ; அழகாம்
பருவம் முடியும் முதிர்வில் — பெருஞ்செல்வம்
அஃதும் முடியும் களவிலாய் நாளையென்னு
மஃதும் முடிக்கவாம் இன்று.
1008. இராமனும் ராமாநுசனும் ::
காடுறையப் போனதும் வேடுவர் மீட்டதும்
நாடுநீங்கி வானேற நல்வழி — காட்டியதும்
தம்மக்கள் வாய்தன் சரிதைதான் கேட்டதுவும்
எம்மரங்கர் போல்எதிரா சர்!
1009. லோகாயனம் ::
புலனின்ப ஊரல்வாய் ஊன்வளர்த்து மோடு 
துலக்கி இருப்பார்த்தாம்  ஆன்ம — அலவல்
மறந்த பிறப்பாம் புழுபூச்சி கீழ்இழிந்த
தூறா குழியில் அழுந்து.

1010. ஆசார்ய ருசி பரிக்ருஹீத பகவத் கைங்கர்யம் ::
தன்னை அனுபவிக்கை நீக்கி தனக்குள்ளாம்
ஒன்னை உகந்து உயிரளிப்பான் — தன்னை
தனிதேட்டத் துய்தலாம் கைவல்யம்; வைகுந்தம்
பேணில் அடியரோடு ஆங்கு.
1011. சித்த சுத்தி நித்ய முக்த போக யுக்தி ::
அலைஎறியும் நீர்நிலையில் நும்முகம் காணல்
இலைபோல் அலைபாய் மனதில் — அலைகடல்
வேலை துயின்றஅம் மாலை நினைவின்
தலைசமைத் தாளல் அரிது.
1012. அஹமன்நாதோ அஹமன்நாதோ அஹமன்நாத :
விழித்துணர்த்த ஆன்மாவை நாற்றங்கால் அஃதில்
உழுது களைபறித்து ஓங்கி — எழுநெல்லை
கள்ளர் கறவைவாய் கொள்ளை கொடாதள்ளி
அட்டநல் அன்னமாக்கும் மால்!
1013. ஸத்வம் ஸத்வவதாம் யஹம் ::
வில்லுக்கு வீரன் விசயன் அவனும்தன்
வில்லை உயர்த்தி பிடிப்பவ — அல்லனாய்
கள்ளர் எதிரிட தோற்ற கதைகள்ள
கண்ணன்தன் தாமம்போ வற்று.
1014. கந்தல் கழிந்தால் அனைவருக்கும் நாரீணாம் உத்தமையினுடைய அவஸ்தை வரக்கடவது ::

கடிமாமலர் பாவையோடு உள்ள ஸாம்ய ஷட்கம் ::
அநன்யார்ஹ சேஷத்வம்;
அனன்ய சரணத்வம்;
அனன்ய போக்யத்வம்;
ஸம்ச்லேஷத்தில் தரிக்கை;
விஸ்லேஷத்தில் தரியாமை;
ததேக நிர்வாகஹ்யத்வம்.
கூடில் களிப்பு பிரியிலாம் இன்னாப்பு
நாடி அவன்தன்னால் ஆளப் -- படுகை
அதுவன்னோ ஆழியான் அன்பர்க் குரிய
பொதுநீதி, பெண்ணாம்தன் மைக்கு !
1015. சத்ருக்ணன் படி ::

இராமானுச மந்திர ரஹஸ்யம் -
ஓம் நமோ ராமாநுஜாய :
இராமானுச விதி ரஹஸ்யம் -
ஸர்வ கர்மாணி ஸந்தெஜ்யச ராமாநுஜ இதி ஸ்மர |
விபூதிம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம் மம ||
இராமானுச அனுசந்தான ரஹஸ்யம் -
ஸ்ரீமத் ராமாநுஜ சரணௌ சரணம் பிரபத்யே
ஸ்ரீமதே ராமாநுஜாய நம :
1. ப்ரஹ்மம் ஜகத்காரணம் அல்ல - வைசேஷிக மதம்
2. ப்ரஹ்மமே கிடையாது - லோகாயத மதம்
3. ப்ரஹ்மம் நிமித்த மாத்திரம் - துவைத மதம்
4. ப்ரஹ்மம் பிரத்யக்ஷ, அனுமான, சாஸ்திரத்தால் அறியமுடியாத எல்லையற்றது - சாங்கிய தர்சனம்
ஆற்றல்மிக் காளும் பிரமம் உளதென்பார்
கூற்றும்; அலவென்பார் மாற்றமும்; கண்டுகேட்டு
ஊகித் துணரலாகா தென்றும்; முதல்,துணை
போக்கி நிமித்த மூலமொன்றே என்னும்
பலசமயத் துள்ளும் உலகினர்க் கெல்லாம்
உலப்பிலா வைதிக வேதநெறி ஒன்றே
துலங்க வரும்எம் எதிராசா! எம்மையும்
பாலித்து ஆட்கொள் உமக்கு!
1016. அத்யந்த பக்தியுக்தஸ்ய நசாஸ்திரம் நைவ ச கிரம :
பரத்வாச ரோடு சபரி தருமவை
அருந்துவான்; மாமுனி வார்த்தை அதோடு
குரக்கரசன் சொல்லுக் கிசைவான்எம் யாதவாத்ரி
நாரணன் எம்பெரு மான்!
1017. விஷ்ணு சித்தன் மனத்தேஏ கோயில் கொண்ட கோவலன் :;
தன்னைத்தான் பேணாதே தன்முன்னே தோன்றுமால்
தன்னின் திருமேனிக் கென்தீங்கு யாராலே
என்வருமோ என்றயர்து பேசும் பெரியாழ்வார்
தன்மனத்தே ஏகவது நீங்கு.
1018. உதங்க பிரச்னத்துக்கு உத்தரம் உண்டோ?
கிணற்றங் கரைசேர் குழந்தையை தாயேதான்
பேணல் மறந்து தள்ளினாள் என்னுமவ்
வீணான பழிவருமுன் காப்பாள்போல் மால்காண
கூடிற்றா மால்நல் லுரைப்பு !
1019. சம்பந்த உபாய புருஷார்த்த ஞானம் பிறந்து
துவயத்தில் வளர்ந்து பிராப்திக்கு அணுக்கராகை அவஸ்யாபேக்‌ஷிதம் ::
கடலில் பிறந்துபின் பாஞ்ச சனயன்
உடலில் வளர்ந்துதிரு மால்கை — தடத்து
அமரும்ஒண் சங்கேபோல் சம்பந்தம் ஆறாய்
தமரோட்டை சேவகம்மா லுக்கு!

1020. துரீய ஆஸ்ரம விக்‌க்ஷேபம் ::
வேர்த்துக் குளித்து பசித்துப் புசித்துதன்
ஆர்த்தியது தோற்ற எதிராசா! — என்னோர்த்து
எம்பெருமான் சேவடி ஒன்றே புரிந்திருப்பார்
எம்மாட்டும் எள்கல் துறவு!
1021. சாங்கே த்யம், பாரிஹாசம், ஏளனம் வா
நின்நாமம் கற்ற ஆவலிப்புடைமை ::
பேரா யிரம்உடைய பெம்மான் திருநாமம்
கூறுமேது ஏளனம் சங்கேதம் — பாரிகாசம்
யாதா யினும்அகம் போய்பக்தி யோகமதால்
வீடதும் ஆகும் அவர்க்கு!
1022. சொல்பமஸ்ய தர்மஸ்ய திராயதோ மஹதோ பயாது ::
சிந்தித்தும் பூசித்தும் வந்தித்தும் வண்மாலை
ஆந்தனையும் மேவ முயல்வார்க்கு— வந்ததாம்
எத்தடையும் போக்கும் மருந்து அவன்நாமம்
தித்திக்கும் பாலாம் விருந்து.
1023. உபாய புத்தி தியாக பிராப்பிய புத்தி வியவசாயம் ::
நாரா யணனே நமக்கே என்றிருக்கும்
நாரா யணாய பராய — ணரானநாமும்
ஆறு எனவல்ல வாயினும் நேறியவை
பேறுயென ஆற்றல் கடன்.
1024. ஆத்மகுணம் கைபுகுந்தால் ஆசாரியன் கைபுகும்;
ஆசாரியன் கைபுகுந்தால் திருமந்திரம் கைபுகும்;
திருமந்திரம் கைபுகுந்தால் மந்திரத்துக்கு உள்ளீடான ஈஸ்வரன் கைபுகும்; ஈஸ்வரன் கைபுகுந்தால் வைகுந்த மாநகர் மற்றது கையதுவே என்கிறபடியே பிராப்பிய பூமி கைபுகுரும் ::
தன்னைப்போல் ஊரும் உலகுமே வாழிவாழி
என்று மொழியவே கூடிதிளைக் --கப்பண்ணும்!
அன்னவொரு ஆசா ரியன்தனக்கு இன்னிளம்
தன்மை குமரனாம் மால்!
1025. ஸுலப ஸ்ரீதர : சதா ::

மந்திரம் மாதா! குருப்பிதா! என்றவர்
அங்களத் தாள்இளம் சிங்கம்! — நங்கள்மால்!
பூங்குழல் கோதை மணாளன்! பொன்னியல்
பூங்கழல்போல் அல்ல புகல்!
1026. பழுதை பாம்பு என்னல் காட்சிப் பிழையேலும்
பழுது பொய்க்கலா மெய் ::
காரண காரியம் யாவுமே சூனியமா
கூறலும்; காரியம் மாயை — காரணம்
நிர்மல ஆனந்தசின் மாத்ர அமூர்த்தமென்
ஒர்த்து உரைப்பார் அலப்பு.
1027. யத்ர அஷ்டாக்ஷர ஸம்சித்த :
ந த த்ர வியாதி துர்பிக்க்ஷ தஸ்கராத் ::
எட்டெழுத்தும் கற்று உணர்ந்தோர் குலாவுநன்
நாட்டிலே ஆன்மா பகாரமாம் — திருட்டும்;மால்
காவல் மறந்துவாழ் பஞ்சமும்;மால் சேவகமும்
நேரா பிணியுமுறா ஆங்கு !
1028. மதுராபிந்து மிஸ்ரமான சாதகும்ப சலிலம் போலே அதிருஷ்டத்தில் அஹங்கரிக்கை நிகிருஷ்டம் ::
தன்தன்மைப் பார்த்திடில் தீனனாம்: காப்பாளன்
தன்தன்மை பார்த்திடில் பற்றுகைக்கு — நன்றான
நான்கும் பணிந்தபின் காரியம்நேர் நான்கும்
நடுவில் பெருங்குடிக்காட் பட்டு.
1029. பிறவிப் பயனவை எய்துவர் எய்தார்
இறைவன் அடிசேரா தார் ::
பிறவி எனும்பாவக் காடு அதனில்
விராவி வளர்விருட்சம் மீதில் -- கனிந்த
இருகனி போல இறையன்பும் மாறில்
பெருமை அடியருமாம் மீட்பு.
1030. ரசிக ரச சுதா ரங்க பர்த்ரு ::
தன்னைத்தான் தாயார் எனஒப்னை செய்துமால்
இன்முகத்தில் கன்னக் குழிசுழிக்க — புன்னகித்து
காட்சி தரும்-நாச்சி யார்தன் கருவிழி
காட்டகில்லா நாணிக் கவித்து!
1031. மாம் ஏவ யே பிரபந்தயந்தே மாயாமேதாம் தரந்திதே::
அயம்படு காந்தம்போல் ஆலிலை மாயன்
வயம்படு வைய்ய மனிசர் -- நயம்பட
தம்முள்ளாம் நல்குவார் தாளிணைக் கல்லால்நம்
தம்கள்ளம் விள்ளல் கடிது.
1032. ஆவரணத்தப்பால ரங்கன் வெகுமதி ::

என்புதோல் போர்த்தி இருநிலத்தில் எம்மனோர்
அன்பால் அரவணைத்து ஆள்அரங்கன் — தன்பால்ஓர்
நாட்டம் இலாதார்க்கு ஒன்பது வாயிலோட்டை
வீட்டுக்கென் பூட்டு திறவு!
1033. ஏரார் முயல்விட்டு காக்கைபின் போவதே?
இற்பிறப்பு என்பதில் ஆன்ற அருளாளர்
அற்புத நல்நெறி யாளர்களாம் — பற்பல
ஆழ்வார்கள் ஆசா ரியர்களும் தோன்றியஊர்
வாழ்வார் பரம்பதம் ஈண்டு.
1034. வைதிக காமம் ::
தேவியை ராமன் பிரிந்து பலவாறு
ஓவா தலற்றியதும் கண்ணனாய் — பூவையர்
கூடி இராச கிரீடை யதாடிற்றும்
அவனியார் காமம்போல் அன்று.
1035. ததீய சேஷத்வ பர்யந்தமான தத் சேஷத்வம் ::

மனைவிலை செல்ல உரிமைகோர் ஆவணம்
ஏனைய நாள்வரை வில்லங்கம் -- போனதில்லை
என்னாதல் வேண்டல்போல் தன்னடியார் பேணுதலை
உன்னாத்தார்க் கின்னாதான் மால்!
1036. அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய் துங்கர் ::
வணங்கலில் வீணர்; இணங்கி இறையும்
நணுகிலார்; கூடி வருகிலும் — பேணிப்
பழகிலார் போக்கி எடுத்துகை நீட்டிவாழ்
அணுக்கர்சூழ் கூட்டனாம் மால்!
1037. உபாய சாமான்யமும் உபேய சாமான்யமும்
ஸ்வரூப விசேஷதயா வர்ஜனம் ::
விலக்கல் வழியோ முனைதல் நெறியோ
மலக்கு மனத்தராய் மேவல் -- தொலைவார்
முயல்கை பயன்பற்றி ஆறு அதாம்செயல்
மாள்வார் திருமாற் குகப்பு !
1038. இவ்வளவும் வந்தவன் இத்தை விட்டால் குற்றம் வாராது::
ஆத்ம ஞானமும் அபிரதிசேஷமும் பிறந்து பிரபதனம் மானசீகமாய் சேஷத்வ அநுரூப கைங்கர்யம் காயிகமாதல் உபாயோபேய அத்யவசாயம்::
தன்னை அறிந்து தடைவிலக்கி தாள்புகுந்த
பின்னை புரிந்துசெய் குற்றேவல் — உன்னல்
மனத்தால் இயற்றல் கரணங்கள் மூன்றால்
எனவாதல் நோற்றார் கியல்பு!
1039. பிரயதமரேவ வரணீய பவதி ::
ஆதரம் பெருகநின்ற தன்னடியார் பக்கல்நம்
ஆதரம் விரும்பி நடக்கபேர் — ஆதரம்
காட்டுமால்தன் ஆதரம்தம் பால்மல்க வேட்டுவார்
ஆட்பட வாதலடி யார்க்கு.
1040. திருமாமகள்கொல்? நிலமகள்கொல்? நப்பின்னைகொல்?
இத்தை நம் ஆழ்வார் நெஞ்சினராகிச் சொல்!

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
பேணியவன் ஓருருவம் கொண்டு — அணுக்கனாகில்
ஆடவரும் பெண்ணுடுப்பை நச்சியவன் பால்நாளும்
கூடபிச் சேற்றிமாலு மால்!
1041. பக்திஸ்ச நியதா வீர : பவோ ந அன்யத்ர கச்சதி ::
மெய்ஞானம் மிக்கு முதிர்ந்தக்கால் பக்தியாம்;
உய்ஞானம் அஃதெய்த லாதபோது — செய்கிரியை
தக்கவது கொண்டு மால்பக்தி யுக்கியுணர்
ஆக்கம் எதுவானும் நூக்கு.
1042. ஆசார்ய சமதிகாம் அன்யாம் ந மன்யாமஹே ::
நிலாத்தேவர் முன்னிட்டு விண்ணுளார் பெம்மானை
மேலாக் குலாவி அனுமதி — கோலி
அவர்தலைவர் அன்னவர்க்கே நாம்சரண்என் மேவ
திவம்தரும் மந்திரகோல் கொண்டு!
1043. தேகத்தால் பேறு என்கிறது சாத்திரம்;
ஆத்மாவால் பேறு என்கிறது திருமந்திரம்;
ஈஸ்வரனால் பேறு என்கிறது சரம ஸ்லோகம்;
பிராட்டியால் பேறு என்கிறது துவயம்.

மாதவன் என்றென்று ஓதல் இரட்டிப்பும்
மாதவள் முன்னால் அடைவதாம் அவ்வாறு
மாதவன் பற்றி மகிழ்விக்கும் பேறவளால்
ஆதலாய் சாற்றுதுவ யம்!
1044. ததா புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யமுபைதி :: (ஸாம்யாபத்தி மோக்ஷம்)
இன்பதுன்பம் போய்குற்றம் வீய்ததற்பின் வைகுந்தம்
தன்னில்தோய் அப்பரம சாம்யமோக்கம் — ஒன்றேயாம்
வீடு அதன்றிநேர் பாஷாண கல்பமாம்
பாடு ஏதுறவாம் கூறு?
1045. ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸ : ப்ரஹ்மணா விபஸ்சதா:: (ஸாயுஜ்ய மோக்ஷம்)
எண்ணரும்சீர் ஏழை எமக்கருளி வண்மையினால்
எண்குணத்தான் தன்னைப்போல் நம்மையும் — பண்படுத்த
எட்டெழுத்தும் ஈரடியும் ஈற்றுரையும் பூடணமாய்
பூட்டு உடுகுறையாய் கேட்டு.
பேறு தப்பாது என்று மார்பில் கைவைத்து உறங்க பிராப்தமானாலும் பிராப்பிய ருசி இருக்க ஒட்டாதே நமை த்வரிக்கப் பண்ண,
உறாதாரை உற்றோமாக்கப் பெற்றிலோமே என்கிற பாரிப்பு அவனது::

மார்கழி நீராட என்ற முதல்பிராயத்தோர் வழி முன்நில்லாதே சிற்றஞ் சிறுகாலை சேர்வழி பார்த்திருந் தோமே எனமால்தான் பிற்பாடன் ஆனதவன் ஆர்ப்பு!
1046. க்‌ஷீணே புண்ய மர்த்ய லோகம் விசந்தி ::
புழுக்கம் பெருக மழைவருமா போலே
இருக்கம் பெருகியிடர் மாட்டு— முழுமுற்
றிரைஞ்ச அருளும் இறையன் பதற்கு
துருவ பிரக்லாதர் சான்று!
1047. பிரசாத சமத்காரம் ::
கண்ண புரத்தின் னமுதென் னமுது!நம்
கண்ண னவன்அமுது செய்தருளும் — கண்ணமுது!
கல்கண்டு பால்நெய் உலர்திராட்சை முந்திரி
எல்லாம் அதிலுண்டு காண்டு!
1048. பலரடியார் முன்பருளிய பாம்பணை அப்பன் ::
தன்மக்கள் தம்வாயால் தம்சரிதை யும்; பீட்மர்
முன்பகன்ற ஓரா யிரமும் — தான்தனித்து
கேட்ட குறைதீர தேவிமார்தம் கூட்டனாய்
வேட்டும் அழ்வார்தம் வாக்கு.
1049. வளையாதி விபூஷணம் பகவத் சம்பந்த த்யோதகம்::
அஞ்சலி கைகாப்பு; தோள்வளை ஐம்பொறி;
செஞ்சொல் மூன்றும் செவிப்பூ — விஞ்சல்
விலகலிலா பத்தனம் பாடகம் ஞானபக்தி
ஏலு விராகத் தொடர்பு!
1050. மிருக்கடம் போலன்றே பொற்குடம் ::
கல்சட்டி காக்கிய ஊறுகாய் அஃதையும்
கற்பித் தவர்க்குமே தீண்டல் விலக்குபோல்
அற்பநெறி பௌத்தமொழி மாயோன் உரையதேனும்
ஓர்பதாமோ ஆழ்வாரின் மிக்கு?
1051. ப்ரஹ்மாலங்காரேண அலங்குர்வந்தி
என்று தருவானும், தருகைக்கு உபாயமும், பெறுகைக்கு உபகரணங்களாகிற சங்கல்பமும், கிருபையும், கடாக்ஷ வீக்ஷணமும், ஸ்வீகாரமும், பல ஸன்மானம் எல்லாம் அவனால் ஆக-அனுஷ்டித்த கோபியரோடு, அநுகரித்த ஆண்டாளோடு, அப்யஸித்த நமக்குமான கிருஷ்ணா னுபவம் துல்யம்::

அன்றீன்ற கன்றுக்கு இரங்கி முன்னீன்ற கன்றினை கொம்பிலும், குளம்பிலும் கொள்ளுமா போலே
த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம்கார்யம் சீதயா மம ||
இற்பிறப்பு என்பதோர் வேலையை தன்தீர்வு
உற்றவாம் மந்திரம் நாட்டியருள் --மற்று
தண்ணளி என்பதோர்கைக் கொண்டு கலக்கியான்ம
பெண்டாளும் பூமேலாள் மிக்கு!

1052. ராம பக்தி ஸாம்ராஜ்யம் :: 

ராமபக்தி சாம்ராஜ்ய இங்கித கோசல
வாராம் நிதிம்! சீதாயாராமம்! ராவணாரிம்!|
நாராயணஸ்ய பூர்ணாவதாரம்! தேவம்யம்
வரகுண சோமம் ரகுராமம் பஜேஹம்||

1053. ஞான கொறதையின் அநுஷ்டான தௌர்பல்யம் துஸ்சகம் ::

கற்றுணர்ந்த கல்வி கடைக்கணிசி தான்நோற்றுப் 
பெற்ற குலமரபும்  ஏலாது -- சுற்றித் 
திரியம் கடையரின் கல்லாதார் தம்மடமை 
காரியமாம் கண்ணன் கழற்கு.

1054. குலிங்க பட்சி சாகசம் துஸ்சகம் ::

ஆனை அடித்ததன் ஊனை அசைபோடும்
கானகக் கோனின் கடைவாய் — தானமர்ந்து
தம்இரை தேடும் குலிங்கம் உரைவார்த்தை
ஓம்பேல்நீர் 'சாகசம்' என்று. 

ஒம்பா துரைத்தல் இழுக்காய்முன் ராமனாய்
தாம்பிறந்து  நன்நெறி யாவுமே — சோம்பா
தனுட்டித்துச் சொன்னவன் கண்ணன் குலிங்கம்
தனைகாட்டில் ஏலும் படிக்கு!

1055. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேனும் காத்தல் அரிது ::

என்னில் கடையாய பாபி எவருமினி
இன்னிவ் உலகில் இலையான — பின்னும்
தன்னை உவந்ததன்பால் உய்யத் தருமால்தன்
அன்பர் பழிப்பார் பொறான்!

1056. ராம : பிரதிபக்ஷ பிரதாப:

வேண்டாத கானகம் வேண்டி வருவாளை
கொண்டொய்தான்; வேண்டி அடைக்கலம் — பூண்டானை
தண்டிப்பேன் என்பானை ஒப்புவித்து ஆள்வானை
கொண்டாடி ராமனைக் கூடு.

1057. வித்யயா அம்ருதம் அஸ்நுதே ::

குடமுனி ஏழ்கடலும் ஓர்கை சலமாய்  
குடவயிற்று கூடாக்க வற்று! -- வடமொழி 
ஆரணமோ அந்திதொழ உள்ளங்கை நீர்ஏற்று  
பாரணம் செய்வதாம் ஒத்து.

1058. உத்கிராந்தி ::

ராணிஈ வேற்றிடம் சேரவதன் பின்செல்
பணிப்படை தேனீக்கள் போல — பிணிவாய்
மரணம் அணித்தா மனப்பிராண வாசனா
புறத்தாம் உயிரோ டியைத்து!

1059. மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை ஏன்றுகொண்டிருப்பார் ஏகு கதியும் பதியும் ::

குசலத் திடைகீற்று அஃதை கழித்தல்போல்
மீசலான இவ்வுடலை வாங்கி — தேசுடைத்
தாய பரிசுத்த வான்மா பரிதி
வயத்தூடு புக்காள்மால் வீடு!

1060. பரமாமநியோரக்த : விரக்த: அபரமாத்மநி ::

கூடுகட்டி வாழ்மரத்தை கோடறி கொண்டு
படுத்தவிடை நேரும் பறவைபோல் — கூடிதில்
கூடி உயிர்இருப்ப காலன் வரும்காலை
மாடிதில் பற்றை கழற்று!

1061. போக்தா போக்கியம் பிரேரிதாரம் ச மத்வா 
 ஸர்வம் புரோக்தம் த்ரிவிதம் பிரஹ்ம ஏதது || 

 அகார உகார மகாரோங் காரம் 
 பகரில் போகம் போக -- நுகர்ச்சி 
 நுகர்தல் அருள்வான் உயிரும் உடலுமாக 
 ஏகமெண்ணி ஏற்றத் தகும்!

1062. ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச்ச 
ப்ரத்யகாத்மா : , ப்ராப்த்யுபாயம் பலம் ::

மூன்றெழுத்து என்பதோர் விற்கொண்டு அம்மகாரம்
என்ற சரத்தை உகாரமாய — நாண்பூட்டி
கர்ம சககார பக்தி பிரபத்தி
நேர்அகாரத் தெய்தல் இலக்கு!

1063. ஞானான் மோக்ஷ சித்த: ராஜசிம்ஹா :

கர்மஞான பக்தி வரண உசிதஉயர்
கர்மம் துணைகொண்டு ஓச்சவக் — கர்ம
பயன்கருதா கண்ணனுக்கே ஆமது காமமென்
நேயம் நயம்பட ஆக்கு!

1064. அந்தர் பஹிஸ்ச தத்  ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்தித:

ஓர்மடந்நை உன்திரு மார்பில் இரும்மடந்தை;
பார்மடந்தை பற்றிக் கிடந்தாய் — இடந்தாய்
நடந்தாயாய் அவ்விருவர் உள்ளும் புறமும்
சுமந்தாயால் விட்டுவானாய் நாட்டு. 

1065. கேசரி-கீடம் நியாயம் ::

ராமாவோ நின்னபயம் என்றணைந்த வீடணன்
தாமடைந்த  நற்பேறு நால்வரவர் — தாமுமாக
ராவணன் பின்நின்றார் பட்டொழிந்தார்; என்றாமால்
ஆவம்மால் அன்பர் திறத்து. 

1066.  பிரஸ்நோத்தரி ::
பரபக்ஷ நிரசனம் ::

வேதம் சித்த வஸ்துவை சொல்லாதே - என்னில்
சொல்லும் - லிங்க பூயிஷ்டாத்
ஆனுமானிகத்தால் பிரம்மத்தை சித்திக்கலாமே? - என்றால் 
முடியாது - ஞான சக்தி அளவிறந்ததால்
பிரஹ்மம் புருஷார்த மன்றேல் சாஸ்திர சித்த பிரஹ்ம விசாரம் வேண்டாவே -
என்பராகில் - தியான உபாசனத்தால் பிரஹ்மம் அடையத்தகுந்ததால், பிரஹ்ம விசாரம் உத்தேசியமே.

சித்தனை சாதிக்க வேதத்தென் வேலையோ?
உக்தபல லிங்கம் உடைத்தானுக் — அஃது
அளவையோ? ஊகித் உணரும் பரனை
விளம்பியடை வான்என் பொருட்டு?

சித்தனை சாதித்தல் அய்யனை ஆய்குறிப்ப
தத்தனை; லிங்க இலக்கமும் — சாகத்
தணைசந்ரன் ஒத்ததாய்; ஊகத் தடங்கா
பணைத்தபரன் தாள்சேர் இலக்கு!

கஸ்துவம்? தத்வமிதஸ்மி! தர்ஹி பரமம் வஸ்து கிம்? விஷ்ணு:! கதம்? தத்வமிதம் பரம்! தைத்ரீயமுக த்ரையந்த ஸந்தர்ஷநாது! அந்யாஸ்த இத்கிரஸ்தம்? குணவசாது! அத்ரா: ருத்ரக்கதம்? தத்திருஷ்டியா: கதம் உத்பவதி? அவதரதி! அன்ய கதம்? நீயதாம்! 

யாரோதாம்? என்னேர்க்கு விதுவான்யான்! என்றாராய் 
மாறில் பரம்தத்வம் யார்தாம்? -கூறுமென்ன 
விட்டுவேதான்! அன்னல்என்? வேதமுச்சி தைத்ரீயம் 
காட்டுமது நிச்சித்து ! மற்றைபல் தேவர்தம் 
ஏற்றமும் சப்தமதன் உக்தவழி நோக்கிநீர் 
சாற்றில் குணபர மாகவற்று! எற்றே 
உருத்திரனும் தன்பரத்வம் சாற்றுவது? என்னில் 
கருத்து - உடல்குறித்த ஒவ்வொன்றும் அஃதுறையும் 
பொன்றா உயிரின் பரமாகல் போன்று! 
முறையே; முத் தேவர் இடைநிற்க அம்மூவர் 
குறைவாய் துரீய பிரமம் மாறு உளதாய் 
நுடிவார் பிழைப்ப பரமான நாரணன் 
நாடி தமைதாழ விட்டு ஒழுகலான்! 
ஏலு மறையின் பொருளிதுவாய்க் கோலி 
விடைகாண , அஃதொருங்கற் பாற்று!

1067. தத் பக்த பக்தேஷு ப்ரீதி அப்யதிகோ பவேத் ::

தன்னை நயவாதார் தம்மை பொறுத்தன்நேர்
நிற்பானை நயந்தார்க்கு ஊறெவர் — உன்னுவார்
ஆங்கவரை மன்னியா ராகவ யாதவ
ரங்கேந் திரசிம்மத் தான்!

1068. பரபக்ஷ ப்ரதிக்‌ஷேபம் ::

விடைஏழின் கொம்பிடை வேண்டிக் குதித்து
முடிவில்லக் கும்பக்கோன் நப்பின்னை — கூடிமகிழ்
பெருமான்போல் உத்தீர்ண வாத குறும்பர்
மிடறடர்த்தான் ராமா நுசன்!

1069. தபசாம் அதிரிக்தமாநாம் நியாஸாம் -
தஸ்ய நியாச மேஷாம் அதிரிக்தமாஹுகு ::

அஸ்வ+ஸ்த+ந = அஸ்வத்த
(நாளை என்பது ஸ்திரமற்ற சம்ஸாரம்)
ஊர்த்வ மூலம் அத சாகாம் அஸ்வத்தம்

இன்றுள வாகநாளை வாரா தொழிகைநேர்ந்
தன்ன உலகில் புகப்பெய்தி — இன்றேயோ
நாளையேயோ என்று உழல்கை பிறளஇவ்
வேளை இயற்றுகமால் தாட்க்கு!

1070. ரத ஸப்தமி ::

ஒருகால் உயர்ஓடம் ஏழு புரவி 
உருள்தேர் உடைய பெருமான் — கருத்தொரு 
மித்தராய் இம்மாக மாதவளர் சப்தமி 
பத்திசெய்வார் சித்தம்மால் வீடு!

1071. வரத ஜலதி :: 

வேழ மலைமேகம் தாத சமுத்திரம் 
ஆழ்ந்து ஒருபாடு ஏகிஅன்— நீருண் 
டெழுந்தகாள மேகமென வாகல் உலகோர்நாம்  
வாழ அருளல் பொருட்டு!

1072. அக்ரகண்ய :

ஆய்ந்த ஒருசொல் ஒருவில் ஒருஇல் 
தூய்மை யுகந்தோரும் ஈங்கிவர் -- வாய்ப்ப 
அரிச்சந் திரன்ராமன் மற்று தருமன்போல்
உரியபேர் யார்இவ் யுகத்து?

1073. போய பிழையும் புகுதருவான் நின்றனவும் ::

பொய்கலா மெய்ஞான உய்பொருளே! ஐய!எம்
மெய்இலா பொய்பிழைப்பாம் கைமையே — செய்தேர்க்கு
நின்காணாக் கண்காட்ட இட்ட திருநாமம்
நன்கெண்ண வேம்கடம்எம் மாட்டு!

1074. திருதாஷ்டிர சுயநலம் ::

அந்தகன் தம்மக்கள் சாதலை நோக்குதல்
எந்தமக்கு ஆகது என்றனாய் — தந்தனன்
சஞ்சயன் தான்முந்துற நோக்கவே அந்தமாயன்
செஞ்சமாயப் போர்காண லுற்று. 

1075. ஸ்திரியம் புருஷ விக்கிரகம்! 

 காமனை கண்கொடு காய்ந்தவக் கண்ணுதலோன் 
ராமனைஇன் நேர்காணில் என்னாவான்? — காமத்தீ 
கண்ணுற கானகத்தில் ஓர்அரக்கிக் கானகதி 
எண்குற்றால் சேயாவான் தாய்க்கு.

1076. த்ரிவித காரணம் பிரஹ்ம :

இடையில் செருகிய ஊது குழலும் 
இடதுதன் கையில் தோய்ந்ததயிர் -- கூடிய 
சோறும் முடைகோப வேஷமதும்  காணப்  
பொறாத பிரமன் மடமையில் மாடுகன்று 
மக்கள் ஒளித்து விளையாட, கண்ணனும் 
ஒக்க அவனூரில் தான்பிரமன் என்று 
அமர, தவற்றை உணர்ந்த திசைமுகன் 
தாமோ திரன்தாள் பணிவான் - இடைப்பட்ட 
அந்நாளில் ஆயன்தான் மாடுகன்று மக்களவர் 
பொன்நாண் குடையும் செருப்பும் கோலுமென  
எல்லாமும்  தானுமாய் ஆனபடி நோக்கில் 
அசைவில் உலகும் அலகில் உயிரும் 
இசைய படைக்கும் கருப்பொருள் மூன்றதும்   
நாரணன் என்றாதல் கொண்டு!
 
1077. கிருகார்சையும் இளங்கோயிலும்  ::

வீட்டின்ப வேதியனை பன்நாளும் பத்திமையால் 
நாட்கமழ் மாலை கொண்டேற்ற -- ஈட்டும் 
பயன்தான்  மனைமடதி மக்கள தாகஊர் 
கோயில் குலாவல்ஊ ருக்கு. 

1078. நாயமாத்மா பிரவசனேன லப்ய: ந மேதயா ந பகுதா ஸ்ருதேன ::

தவத்தால், கல் நான்கிடை நெய்சொரிந்நு ஓம்பிடும் 
யாகத்தால் ஞானத்தால் நேர்கலா — யோகனை
என்கவி கொண்டோயான் எய்துவன்?மால் தன்கருணை
ஒன்றே அவாவினசெய் ஆறு. 

1079. கதி சிந்தனம் ::
(பர்யங்க வித்தை)

ஊன்விலகி உள்ள உலகங்கள் ஈரேழும் 
பின்போக்கி ஆவரண சலமதுவும் — தான்நீங்கி
ஓடும் விரசையில் மூழ்கியெழச் சேரலாம்
வீடதில் மாலோன் மடி.

1080. யதிபதி பராங்குசன் ::

யாவர்க்கும் மேலானை ஏழை எமைப்போலா 
பாவியர்க்கு ஏதும் இரங்கானை -- சேவித்து  
உய்ய வகைசெய் எதிராச மாமுனி
ஐயவோர்  யானைப்பா கன்!   

1081. வெள்ளை சாத்து::

முன்னம் எதிராசர் அந்நாள் இருந்தவோர் 
மண்ணாளும் மன்னனவன் இன்னாப்பு -- தன்னால்  
காவி துறந்து வெளுப்புடுத்து மேல்நாடு 
மேவினார் வைணவம் வாழ்ந்து.

1082. சேனாபதி ஆழ்வார் ::

அமுதுசெய்து துய்த்த  கலத்தது உண்டு 
அமலன் முகக்குறிப் அஃதால்   -- மதிப்பசெய் 
ஆளுமைநேர் சேனா பதியாழ்வார் அன்பதுவும்
நாளும் நமக்காதல் நாடு.

1083. கதிர் மதியம் போல் முகத்தான் ::

அடியார்க் கருளும் அவர்பகையை தேடி 
முடிக்கும் வெறுவும் நமக்கிப் -- படியில் 
குடியடிமை கோலி நடக்க உறுப்பாம்; 
நெடியோன்கை ஆழியம் சங்கு !

1084. திருவரங்கன் உலா ::

லோக பதிமுன் அரங்கம் அதனின் 
விலகிமேல் நாடு பலவும்  -- உலாவி 
துருஷ்கர் கலகம் அகலமீளு நாள்பரீ
தாபி வைகாசிபத்  தேழு. 

1085. பக்தியில் அசக்த ஆத்ம நிஷ்டா் ::

நேயதன் ஆருயிர்க்கு அன்பது செய்குவார்தாம்
தூயநம் மாதவன் தன்கழலில் — ஆயபத்தி
ஏலா தயர்பராய் மாயமான் கோலி
இடறுற்றாள் பட்டது ஈட்டு. 

1086. அஷ்டபதி ::

பொறிஐந்தும் புத்தி மனப்பிராணன் அட்டபதி 
கூறில் நமக்குநல் நட்பும் -- தெறிவில் 
பகையுமாம்; எண்ணம் களவும்மால் கற்பும் 
அகமிக ஆமப் பொழுது. 

1087. ஷட்பதி ::

புலனைந்தும் என்மனதும் நின்பதமாய் கோலநல்  
மாலின்கண் ஆறாத பக்தியது -- வாலியா 
ஞானமும் ஒண்சிறகாய் ஏகு எழில்வண்டே!
கோனேரி குட்டர்க்கென் தூது. 

1088. பின்னது முன்னதன் புணர்ப்பு ::

நிலம்நீர் நெருப்பு உலவுகால் ஆகாயம் 
நாலுமொன்றும் கூறில் ஒலிஉணர்வு — போல்உரு
ஊறுசுவை நாற்றம் இவைகூட்டாய் ஒன்றின்
தெரிவு பிறிதில் மறைவு. 

1089. “அதி “- ஸர்வத்ர வர்ஜயேத் ::

கொடுத்துக் குலைந்தான் பலியும்;  கொடாமல் 
முடிந்தான் சுயோதனன்; கூடாதாள் — நாடல்
விழைந்த விராவணன் தன்குலம் வீழ
இழைத்தன மூன்றும் விலக்கு. 

1090. பக்திக்கு பாடல் முக்திக்கு மௌனம் ::
(அவாகி அநாதர :)

இறையோடு நாம்உரை யாட மௌனம்தான்
நிறைவான செம்மொழி! அவ்வுரை யாடல்
முறையாய் பிறர்பால் பரிமாற வார்த்தை
துறைப்பால் சேர்க்கும் கவி .

1091. பதின்மர் பாடும் பெருமாள் ::

வேத மயன்நாத ரூபன்தாள் தண்டையும் 
ஏதமில்  நாணும் கௌதுபமும் -- கோதிலவா 
கண்டிகையும் காதணியோ டான கிரீடமும் 
பண்ணார் பதின்மரவர் பாட்டு !

1092. அஹ்ருதய பக்திகோஷம் கடலோசையோ பாதி ::

வாய்வெருவி வேங்கடமே! வேங்கடமே! என்றாதல் 
ஆய்ந்தோதி வாய்விடுப்பார் கேட்டதன் -- மெய்ப்பொருள் 
துய்பதாகில் நும்மனம் ஒன்றிலையால் ஊமைவாய் 
ஐயவது கேளா செவி. !

1093. லோகவத்து லீலா கைவல்யம் ::

உதயத் தெழுபானு தன்கதிர் தோகை
விதிர்தலொப்ப உலகம் பிறப்பான்  — விதிசெய்
இறைவன் அவனுமவன் சக்தி இரண்டன்
துறைப்பால் நமைசேர் பொருட்டு. 

1094. அவதார ரகசியம் :: 
(நானும் பிறந்து இனி நீயும் பிறக்க வேண்டாவே - கீதை) 

 தெய்வம்தான் பூமியில் தன்செய்ய பொற்கோல 
உய்உருவம் பாழ்கொடாது மீன்ஆமை — மெய்ப்பாடு 
மிக்கதோர் கேழல் அரியுரு மானுடமாய் 
 இக்கரையோர்அக்கரை போக்கு.

1095. கருமம் கைங்கர்யத்தில் புகும் ::

குலவிச்சை கோடா தொழுகலால் வீடாம்
அலகில் வினைவாய் வியன்இன்ப —துன்பம்
விலகில் பெறலாம் விராகம் அதுதான்
இலகில்மால் பக்தித் திளைத்து.!

1096. உடம்பு தின்ற படி ::

(செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் 
எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?-
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்)

1097. விசிஷ்டவேஷ ஆத்ம ஸ்வரூபம் ::

உப்பளத்தில் ஊறின கட்டைபோல் ஊத்தைஊர்  
இவ்வுட லத்து உயிருமென் -- செப்புவார்
ஒப்புமோ? சாகுமுடல் சாகா உயிர்எனவாய் 
வவ்வினார் வார்த்தை மறைத்து!

1098. ந ஹிநஸ்தி ஆத்மநாத்மாநம் (கீதை 13-29)
முடிவில் பெரும்பாழ் உயிர்கது ஒட்டாய்
மடுத்த பிறவி வினையூண் -- படுத்த
அயர்ப்பாம் அதன்பயன் துய்த்தல்! அதுவால்
உயர்த்தும் உமைஇறைக்காட் பட்டு!

1099. பிரஹ்ம விவர்த்தன  வாதம் ::

அன்பு அதிசயா நந்த அனுபவ 
தன்னிலை தம்மின் திரளதாம்  -- ஆன்மா!
அணுவைத் துளைத்து மலையை புகுத்தற்  
கிணையாம் கடவுள் அதற்று!

1100. ஸ்வரூப, ஸ்வபாவ ஆவிர்பாவம் ::

தன்னைத்தான் முன்னம் பெருக்கி புவனத்து
மன்னுயிர் முக்குணத்து மூட்டிடும் -- தன்மையான் 
முன்னது உள்ளார்ந் தியல்பால்  மற்றது 
தன்னின் குணத்தால் பிறங்கு. 

1101. மணிபாதுகா மகிமை ::

பாதுகை நின்றமணி பாதம் இரண்டும்நம் 
போதமர் சென்னிக் கணியாய் --  உதவ 
ஏதம் தவிர்ந்தெம்மால்  தன்னடிக்கே ஆட்செய 
ஏதுவாம் மாறன் அடி .

1102. சங்கரையா! நின்செல்வம் சால அழகியதே!

அவிவில் கவிதை பலவும்என் நாவில்நன்
கோவ நினைந்தாயால் அன்றுதவ — பாலன்
துருவன் கபோலத் எழுதிய சங்கத்
ஒருகால் எமைநீ வருடு !

1103. ஜனன சமய லப்த  ஞான பக்தி பிரசாத :

நினைவென்னும் தூரியம் கொண்டு உலகில் 
அனைத்தும் படைத்து உருவாக்கும் -- தானைத் 
தலைவ! சதுமுகனும் நேராப் பெருமை  
மாலைத்  துதிக்கல்என் புக்கு? 

1104. கிருஷ்ணார்ப்பணம் ::

பண்டுபண் டென்னை உனக்காக்கிக் கொண்டுநின்
கொண்டாட்டு ஒன்று விடாதுஎன்— தொண்டதாய் 
நாவகம்பால் நன்று எழுதி நவிலல்
உவந்தாய்! உனக்கென்கை மாறு? 

1105. பலாபிஸந்தி ::

வானும் கடலும் உலகும் உயிர்தானும்  
யானும் எமதிம்  மொழியும்அக் --  கானும் 
கதிரும் நிறைமதியம் போல்நீடு நின்று 
துதிப்பார்க் கருள்மால் மதித்து!

Composed by:
(Agaram) Kidambi Srinivasa Rangan Srinivasa Dasan.






No comments:

Post a Comment