Wednesday, July 26, 2023

ஆசுகவி - பகுதி 7

ஆசுகவி - பகுதி 7  ::

811. கர்ம ஞான பக்தியில் அசக்தருக்கு இது  ::
அந்தண்மைக் கேலும் அறுதொழிலும் ஈகையை  
முந்துறவை இல்லறத்தும் ஒந்திலேன் -- எந்தனேன்செய்    
பக்தியுள்ளும்  போழ்கனேன் உய்யலாம் உக்திதான்  
முக்தன் முகுந்தன் தன் தாள். 
812. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் ::

கண்ணனைக் காணவேண்டி கண்ணுறக்கம் கொள்வேனாய் 
எண்ணியாங்கு யான்இருப்பேன் என்றவன் -- கண்ணில் 
களிபுறக் காண விழையெனுக்கு  இன்றிலையாய்  
நாளை வரப்போம் கனவு ?
813. அல்ப, அஸ்திரத்வாதி சுக, சாந்தி, சௌக்கிய ஆகந்துகம் ::
கூட்டுப் புழுதளைப் பட்டன்ன வாழ்கையில்
சாட்டி இலதாமோர் பேரின்பத் --தாட்பட
மாட்டிலராய் என்புதோல் ரோமம்வேய் கூட்டிதனை
வெட்டிவீட் டின்பத்தை நாட்டு.
814. பக்த விஜயம்::
எம்பிரான் எந்தை எனவாய் நணுகியே
கும்பிடுவார் உய்யவந்த தெய்வம்நீ ! — அம்மனோய்!
என்று பணிந்து இராமா நுசர்க்காளென்
ஒன்றுவார் எம்முடை வாழ்வு.
815. உருவு கண்டு எள்ளாமை ::
மலையும் அணிலும் சிறியர் பெரியர்
நிலையில் எனவாய்தம் தாம்உரிமை -- கோல
உருவில் பெரிய மலையின் உலவு
பெருமை அணிலே உடைத்து.
816. உருவு பெரிதாய் உள்ளம் சிறியார் ::

பெரியவாம் யானை சுனைநீர் ஆடி
தெருவில் புழுதி தலைக்காக்கும் -- பேர்த்து;
உருவில் சிறிய எறும்போ கடிது
கரும்பை சுமக்கும் தலைக்கு .
817. இழிவு கண்டு தள்ளாமை ::
உயர்குடிக்காய் உற்ற பிறப்பும்,நல் ஓத்தும்
பெயரளவாய் பேச்சும் செயலும் — இயையா
தயல்பட நேர்என் இயல்புகண்டு மாலே!
துயக்கிடல் மாற்றோ வினை.
818. அந்தர் ஜ்யோதி ரமேயமேகம் அம்ருதம் ::
தன்னைத்தான் முன்னம் அறிகை தவமேல்,
நம் தம்முள்ளே மேவி அருள்மாயோன் — தன்னை
நெறிவாசல் தானாய் அறிதல் பயனாம்;
பொறிவாயில் ஐந்து அவித்து.
819. கண்டு கழிக்கையினும் காணாக்கண் கருணையம் தேவி -
சிரி தேவி ::
மண்ணுளார் வாழ மறைவாழ மாதவனார்
விண்ணுலகின் வைத்தங்கு போல்இங்கு — கண்ணனாய்
ராமனாய் தோன்றிற்றா தோற்றும் சிரிதேவி
ஆமோ நிலமங்கை நேர் ?

820. பூ தேவி ::

மடியில் கிடந்து முலையூண் போல
செடியில் கொடியில் படியில் — கிடைப்ப
கனிகாய் விளைத்தூட்டும் அன்நில மங்கைக்
கினியார் இணைவான் முகத்து?
821. நீளா தேவி ::

ஊட்டி உரம்சேர்த்து நன்றாக நாநிலத்து
தொட்டில் தொடங்கி அரவதண்ட — புட்டில்
புகப்பெய்து மாயாமல் வீட்டின்ப பாட்டில்
அகபடுத்தும் ஆண்டாளே ஆய் !

822. கிமர்தம் நபூஷிதம் பூஷிதார்ஹா :

ஆடை அலங்கார மாலை அவைகொண்டு
மாடினிய மங்மலநின் மேனியை — மூடாது
கண்ணெச்சில் காடிட காட்டுதியோ? தேவா !வன்
கண்ணர் வெறிவிலக காப்பு!

823. ஆஸ்ரயாஸி ::


தானும் எரிந்து தனக்கிட மானவை

தானும் எரியச்செய்  சுள்ளிபோல் — ஊனும்

புசியவளர் காமம் - ரசமிலத கண்ணாடி -

தூசு துடைப்பவளர்ந் தற்று. 

824. வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ::

மருந்தும் அமுதும் துறப்பும் விருப்பும் 

அருந்த அமையும் நலனும் -- திருந்து 

செயலும் பழக பயக்கும்வான் இன்பம் 

முயங்கும்மால் மொய்கழற் குற்று.

825. ஆண்டாளும் அக(கா)ரத்தானும் ::

ஆடியில் பூரத்து அவதரித்தாள் தென்னேரி

பாடியுள் ஆன அகரத்தே — ஓடிவந்து 

பாங்காய் குடிபுகுந் தாளாய் நலம்பேணி

எங்குயாம் ஏகல் இனி?

826. அரங்கம் விட்டு மல்லி வந்த ஜாமாதா ::

வேட்டகம் வந்தநம் மாப்பிள்ளை மன்னாரின்
தேட்டம் எதுவோ? கேட்டாயேல் -- சூட்டுநால்தோள்
மாலையின் பாட்டெழுதித் தந்தஅச் சீட்டதன்
கோலக் கிளிஆண்டாள் தான் !
827. பாஹு சாயம் அவஷ்டப்யம் ::
வான்நிறைந்த சூரியவர் சேவை தனைஎன்னோ
தான்உதறி இங்குளதோர் ஆய்குலம் -- தான்புக்கு
கான்கடை ஆமருவி யானே பசுபதிஎன்
பான்தோள் குடையாம் உடைத்து.
828. ஆலிநாடன் வால்லபியம் ::
அணைத்தபொன் வேலும் அருகில் அழகாய்
இணைந்த குமுதவல்லி நாச்சியாரும் -- பூணிப்
பிணைந்ததன் கையில் இருமடல் ஆணையில்
ஆளும் கலியன் மிடுக்கு.
829. ஆனைக்கன்று அருளை ஈந்த கண்ணறா ::
இற்பிறப்பு என்பதோர் ஆழியுள் மூழ்குவேனை உற்றுமோந்து உண்டு உழல்வதோர் -- சிற்றன்ப
பேர்முதலை வாய்ஆனை துன்பத்தை பார்த்திராதே 
தீர்திரு மாலே!புள் ஊர்ந்து.
830. பக்தாநாம் துவம் பிரகாசஸே ::
ஆனை மலைக்கரசே! வள்ளலே! வட்கிலா
தானைக் குழாங்கொள் தெய்வத்துள் -- கோனேயாய்
வானே வழங்கும் எதிரா சராம்பேறு
தானே தரும்நம் தமக்கு !
831. ஆணல்லன், பெண்ணல்லன் அல்லா அலியும் அல்லனாம் நாச்சியார் கோல அவசரம் ::

மீனாய்ஓர் ஆமையாய் கேழலாய் ஆளரியாய்
ஆனாய்! அதன்றியும் மாண்உரு -- தானாய்யிங்
கேகினாய்! ! சாதிகள் மூன்றிலும் ஆணாம்!இம்
மோகினியே யாதுளும் மேல் !
832. நீராட்டமோர் சீராட்டு ::
அழுக்கு பதியா உடலும் உலகோர்
தொழக்கண் இரண்டிவை போதா -- அழகனுக்கு
மஞ்சன மாட்டுமிச் சேவை உபசார
வெஞ்சனத் துள்ளாம் பொருட்டு.
833. ரக்ஷிஸ்யே இதி விஸ்வாச :
என்னை இரந்தீர்க்கு யான்உரைப்ப தன்னங்காள் !
தன்னை இரந்தார்க்கு தான்இரங்கா -- தன்மை
அனார்க்கு நாரா யணன்எனும் இப்பேர்
தனக்காகல் தக்க தியம்பு.
834. உற்றதும் உன்அடியார்க்கு அடிமை ::
கடிகமழ் சோலை அரங்கத் தடியார்க்
அடியேன்; வளம்பொழில்சூழ் மாடத் — திருக்குருகூர்
மாறன் தனக்கும் பழவடியேன் அத்தால்
நெறிவாசல் ஒன்றாய் இயைந்து.
835. புறம் பொசிந்து காட்டுமழகு ::
தாயினும் சாலப் பரிந்து கருணைசெய்
மாயனை மாலை மதியாத -- பேயர்தாம்
நாயேன் நணுகா தகல்வான் குறள்மாலை
மேய புறக்கோலம் தீட்டு.
836. சிஷ்யஸ்தேஹம் ஸாதிமாம் துவம் பிரபன்னம் ::

தேடிச்செய் தோழமைக்கு ராமபிரான் என்றாமால்
நாடிப்போய் தாழ்ந்த விசயன்தன் — வாட்டம்
விலக்கிய கண்ணனுமாம் நட்புக் கிலக்கணம்
சீல சுதாமன் திறத்து.
837. இறைநோக்கிலா நம்நோக்கு பாழேபோக்கு ::
பொருள்உணர்ந்து வேதம் மொழியரேனும் ஆவல்
பெருக உரைப்பராயின் தன்பால் —பெருகுநலம்
கூறில் பொருள்வரிய ஓலக் குழவி
திறத்ததாய் தன்அருளே போன்று.
838. ஆகஸ்த்யமும் அநாதி ::
முகத்தில் விழியே அழகு அதன்வாய் 
விகர்பம் இலாநோக் கதற்கு -- தொகையிரண்டும் 
வேண்டும் அதுபோல் வடமொழி தென்தமிழ் 
கொண்டு முகமன் உலகு. 
839. வீட்டின்பம் ::
(அர்ச்சா விக்ரகம்) 
வித்தினுள் ஆலேபோல் சித்தினுள் சீவன்செய்
மூர்த்தியுள் மூலமாம் மால்.
840. ஸதா பஞ்சாயுதம் பிப்ரதி ::

ஆயுதம் ஐந்தினை ஏந்தினை! நின்பால்மால்!
தூய மனம்இலார் ஆயினும் — நேயநல்
கண்மலர் வாய்முறுவல் கையபயம் காண்டிட
பூண்பகை மாற்றுவார் தோற்று.

841. பக்திவிநா ஸந்மார்கமனு கலகது ::
புலமையில் மிக்குநின் கண்பக்தி ஏதும்
இலாபுலையர் தாம்காண் பரோ? மால்! — சொலப்புகில்
மாதமாறு நாள்ஏழில் நின்னருள் சூடுவார்தம்
ஆதரம் காட்டும் எமக்கு.
842. நாரீணாம் உத்தமியின் அவஸ்தை வரக்கடவது ::
உருப்பிணி நங்கை உகப்ப அவளின்
கருத்துற வந்து கன்னிதனை -- நேர்ந்த
சிசுபாலன் தேசழித்து செய்த மணமதுபோல்
மூசுபகை மாய்த்தெனை துய்த்து.

843. அம்ருத ஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவ : ஸுகமாஸீத |
கன்னலை இன்னமுதை கண்ணனை கற்கண்டை
பன்னலார் போற்றும்போர் ஏற்றை என் -- மன்னனை
மாணிக்கத் தண்ணலாம் தண்தடாகத் தாழ்ந்தபின்
பேணிலேன் மற்றாதும் மால் !

844. ஸம்சாரம் கிழங்கெடுத்தால் அல்லது பெயராமுயற்சி ::

அழகன் ! குழகன் ! பழக வினிய
எழிலன் ! தொழுது எழசுலபன் ! — ஏழை
எமக்கு இகபர வாழ்வளிக்கும் சேமவலன்
தாமேயாய் ஞாலத் துழற்று.
845. நிரூபித ஸ்வரூபமும், ஸ்வரூப நிரூபகமும் ::

சிரிதேவி சிக்கெனக் கூடி கொலுவிருக்க
பூரித்த உள்ளத்து போதுமிடம் — கூறிட்டு
கண்ணுதல் ஐயனும் யாமும் கௌதுபமாய்
ஒண்டுமிடம் மால்மணி மார்பு.
846. நுமர்களை பழிப்பவர்கள்தாம் புலையர் போலும் ::
வாயரிக்கை வந்தபோது வேதாந்தம் பேசியே
நேயமுடன் ஓர்புலையன் நாய்குவளை -- வாயதாம்
நீர்விலக்கி மெய்ஞான தாகம்தீர் உத்தவர்க்
கோர்கீதை சொல்வழியே செல்!
847. நிர்ஹேதுக கிருபா பிரபாவம் ::
(நீயும் வேண்டா நானும் வேண்டா
அவை தன்னடைவே போம் )
பிறந்தேனாம் பல்பிறவி மாயையுள் மாலை
மறந்தேனாய் தூறா வினைக்குழி — துற்றிடவென்
செய்தேனாய் பாழேகொல் போக்கும் உறங்குவான் 
கைப்பண்டம் போலா அவை.
848. ராஸக்ரீடை காட்டும் ஸாரக்ரீடை ::
இடைச்சிய ரோடு இலையுதிர் காலம்
புடைத்த முழுநிலவில் கண்ணன் -- நடத்திய
அற்புத ஆட்டமும் பாலொடு நீர்க்குடை
நட்பினைக் காட்டும் நெருப்பு.
(நீரொடு கலந்த பாலை காய்சும் போது நெருப்பு நீரை பிரிக்கப் பார்க்க, நண்பனை பிரிய விரும்பாத பால் பொங்குகிறது. அதை தணிக்க நீரினை தெளித்தால் சமாதானமாகி அடங்குகிறது. இல்லையேல் தானும் நெருப்பில் விழுந்து உருமாய்ந்து நண்பனைப் பிரித்த நெருப்பையும் அணைக்கிறது. 
அதைப்போல் கண்ணனைப் பிரிந்தால் முடிந்து பிழைக்க எண்ணும் கோபியர்களின் கிருஷ்ண காமமாகிற விரக நெருப்பை அணைப்பது கிருஷ்ண ஸம்ச்லேஷமாகிற அவனுடைய நீர்மைக் குணம் ).
849. மார்கண்டேயனும் கரியே ::
ஓரா லிலைமிசை தன்கழலை தான்சுவைத்து
ஆராதான் தாளே பிறவாழி -- தீரம்சேர்
நாவாய் எனநேர்ந்து வேராலின் கீழமர்ந்து
ஓவா துணர்த்தும் அரன்.
850. பிதேவ புத்ரஸ்ய சகேவ ஸக்யுஹு ::
(மாதா பிதா குரு தெய்வம் - அரங்கனுக்கு எதிராசர்)
வானாளும் ஓர்இறையை தானாளப் புக்கரங்கர்
சேனா பதியென ஆங்கனைத்து - கொத்தும்
திருத்தி அமுதனார் கொண்டுதன் வந்தரியாய்
சீரார்ந்த தாயாவார் தாம்.
மணம்முடித்தும் பிள்ளைகள் இல்லையாய் தேடி
அணைவார்ஓர் செல்வபிள்ளை; பின்நாள் — இணையிலா 
துணையாம் வடுகனைக் கூவ அவரைப்
பணிந்துநற் சீடனாம் மால்.
அடியார்கள் ஆள அரங்கன் அழைத்து
குடியடிமை கொள்வார் தமக்கு — படியினில்
பாங்கினில் தன்பெரு வீடதும் ஈந்திட
ஆங்கவரை ஆக்கும்நம் தேவு.
854. மாலழகன் மணாட்டி நீராட்டம் ::
அன்னையவள் நீராட்டம் கண்டு அனுபவிப்பார்
முன்னை வினைமுழு முற்றும்போய் — பின்னைவர
நின்றவை ஒன்றும் நன்று நசியுமாம்
சென்று தொழுமினோ நீர்!
855. தத் சேஷத்வம் ததீயஷத்வே பர்யவசானம் ::
மையல் மிகக்கொண்டேன் மாலுக்கே! மற்றதுவால்
ஐய! அவனருள் பெற்றேனாய் — செய்யவன்தாள்
சுற்றத்தார் தம்மோ டுடன்கூடி செய்வதோர்
குற்றேவல் அவ்விருவர் கே!
856. தன்னை அழியமாரியும் தன்னடியார்க்கு அருள்செய்
பெம்மான்::
திருஓணத் தான்உல காளும் எனவாம்
பெருமை உருவாக ஒர்நாள் — திருமால்
குருமாண் உருவாய் இரந்துமண் கொண்டான்
பெருந்தேவர் ஈதல் பொருட்டு.
857. குணாபி ராமம் கோதண்ட பாணிம் ::
ஆய குணங்கள் பதினாறும் வான்திகழ்
தூய மதியின் பிறையதாய் — ஓவ
இரவி குலத்து இராகவன் ஆவன்
மருவில் இராமசந்ரன் என்று.
858. நாம்பற்றும் அப்பற்றும் அபராதகோடியிலாய் விலக்கு ::
தன்னுடம்பு துத்தா அழுக்கதுநம் ஊனாக
இன்னுமது தன்னை விலக்கிட — உன்னு
உபாயம் அவனதன்றி நாம்கடமோ? என்று
அபயகை காட்டுவார்தாள் சூடு.
859. பெருமை பெருக வளர்ந்த சிறுக்கன் ::
குடையும் செருப்பும் உழைகோலும் மான்தோல்
மிடைந்தன்ன முப்பிரியும் மௌஞ்சியும் -- கோடா
நடையும் குளிர்முகமும் வாய்நல்ல வான்மறையும்
கூடியாள் வாமனனைக் கூடு.
860. நேதி நேதி ஸுருத்யர்தாத் அபேதம் நேதி ::
(உபய லிங்க விஷ்ட ப்ரஹ்மத்வம்)

அல்லவிது அல்லவிது என்றவாற்றால் உள்ளவை
இல்லவை ஆவதிலையே! ஏலுமறை — நல்ல
விலங்க மற்றல்லவை ஓம்பா இருகூறு
துலங்குபிர மத்துரு வே!

861. மூர்த்தமாலம்பித தியானம் மோக்ஷ சாதனம் ::

உருவது கொண்டவாற்றால் அப்பிரமத் தான
பெருமை அளவுபட ஆகவற்றாய் -- கூறல்
மருளாம்; உருவாய் அருவாய் குறுகி
பெருகலில் ஈசன்காண் மால் !
862. தாயினும் சாலப்பரிந்து செய் நேயநியமம் ::
(பவித்ரோத்சவ பிரஸம்சை)

சுத்தமுத்த நித்யதத்வன்! குற்றமொன்றும் இல்லாத
அத்தன்! அவனியாள் பித்தன்!பால்— எத்தால்
எதுவால் இதுபோல் குறைகளையக் கோலுவார்?
ஈதுமோர் தாயர்செய் பித்து.
863. இறைக்க சுரக்கும் கேணி - உரைக்க சுரக்கும் அறிவு ::
யாமறிந்த எல்லாம் எமதென்ப போக்கி 
நமதறியார் நாமார் நமக்கென் -- எனவாய், வாய்
சும்மனாதே அன்புடை யார்க்கு அவைஅனைத்தும்  
வம்மின்! எனவழங்க வற்று.
864. பகவத் ஸமிர்த்தி கண்டு க்லேசிப்பார் உண்டோ ?
நாடுநச்சுப் பொய்கை எனவாகா துய்வகை
வீடு திருத்தி உலகோர் -- பெருவீடு
நண்ண இறையனார் ஏவிப் பிறந்தாராம்
''அண்ணா'' அவர்புகழ் பாடு.
865. நமக்குள்ளாம் ராம காதை ::
ஒருவாலி நானாக பத்தலை ராவண்
உருவான என்மனம் உய்ய — அரியே!ஶ்ரீ
ராமா!சொல் புத்தி சுயபுத்தி முக்தநித்ய
ஏமம் அளித்தெனைக் கா!
866. சின் முத்திரை ::

பொருளாசை பூமியாசை பெண்ணாசை மூன்று
விரல்விலக்கி கட்டை விரல்போல் — இரும்அக்
கடவுளை சுட்டு விரலதால் தொட்டுரைப்பார்
வீடுசெய் ஞான குரு !
867. புருஷோத்தம வித்தை ::
(செய்த வேள்வியர்)

என்னை நினை!எல்லாம் செய்தானாய் நீஏற்றம்
தன்னைப் பெறலாம்! உலப்பிலா— இன்நெறிமுன்
சொன்னவன் கண்ணன் ! தலைக்கொளவாம் பக்திஈ
தொன்றே குறிக்கொண் டியற்று.
868. தேவகி கர்ப ஸம்பூதமாவிர்பாவம் மஹாத்மநா ::
சந்திரன் செய்ய குலத்துக்கோர் சேவகனாய்
சுந்தர மந்திர இந்தரி — விந்தனாய்!நல்
நந்தன் மதலையாய் ஆய்சேரி பாலனாய்
வந்தயிந்த கண்ணன்நம் கண் !
869. குணமோ இயல்போ அவனே சார்பு ::

நின்றவாற்றால் தன்னதே எல்லா உலகும்,
இன் நின்ற உயிரும் உடமையும் — என்று
எழுதி எமைக்கொண்ட பொன்அரங்கா! நின்தாள்
தொழுவிழைவார்க் அஃதேயாம் சார்பு.
870. அத்துவேஷ மாத்ர ஆகாங்ஷன் ::

குழலூதும் கண்ணன்! மழலைமாறா செல்வன்!
அழகன்! பழக இனிய — குழகன்!
தொழுமடியார் சூழ வருமே-மல் லீச்சரத்து
வாழுமெந்தை தோழமைஆர் வுற்று.
871. எழிலார் கோலக்குழலார் ::

அள்ளித் தெளித்தஇவ் ஒப்பனை காணிலே
பிள்ளை அலங்காரம் தேவதேவா! — ஒள்ளியாள்
ஆய்சி அசோதை செய்யுமவை ஒக்குமே;
ஏய்பிலானுக் கேதும் அழகு!
872. ஆடல் பாடல் அறிவயன் ::

அவனா இவன்?என் வினவுவார்க்கென் கூற?
உவந்து உருப்பணி ஏற்றும் — புவனத்தோர்
சுந்தரன்! சேயன்! இனியன்! வெண்ணைவாய்
மந்திர வேய்குழலான் மோஜு!
873. சட்சாத் மன்மத மன்மத :

பொன்னிலே வார்த்த புனிதன்றன் மேனிக்கு
மின்னும் மணிமாணிக் கம்பவளம் — இன்னும்
பலகல் பதித்த சராய்யதில்வாழ் சாரதி
மேலாக்கண் பெற்ற பயன்.
874. தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் ::

பக்தியால் பல்பிறவி மாலே! உனைப்பிரிந்து
விக்கித் திரியாமே முப்பிறவி - துக்கித்து
நின்னை விரோதிப்பார் நின்கையால் முக்திதனை
உன்னிப் பெறுவார்நின் வேட்டு.
875. விதிவத் ஏகாதசி விரதம் ததுபரி
துவாதசி பாரணம் அநுஷ்டேயம் ::

ஒண்டொடியாள் மார்வனை ஓதாமல் செல்லுநாள்
பிண்டத்து பாழ்வயிற்றுப் பெய்துபெய்து — கொண்டு
மறந்தநாள் ஏகதசி ஆகதே பட்சத்
தொருநாள் அதிலேனும் ஓம்பு.
876. பிரத்யஸ்திரம் இல்லாப்படை வலவோன் ::
கணைமாறு இல்லாஓர் அத்திரம் கூறில்
இணைவேறு இல்லா இறையாம் -- பணைத்ததோள்
ஐம்படையான் நாரணன் வாளி விலகிட
கும்பிட்டு தாழலொன்றே மாறு.
877. வீடாக்கும் போது விவேகப்பூ பூக்கும் ::
காயில் கசப்பதும் அஃது கனிந்தபின்
வாயில் இனிப்பதும் யார்செயும் ? -- வீயும்
விதிர்த்து அதுவாய்!அக் காலம் வருங்கால்
உதிரும் உலகவாம் பற்று.
878. மூன்று எழுத்தத்தனை 3 எழுத்ததனால் 3 எழுத்தாக்கி
3 எழுத்தை ஏன்று கொண்டிருப்பார் ::
நன்று நமக்கும் திருமால் தனக்குமாய்
என்றுமுள சம்பந்தம் காட்டியஃ -- தொன்றும்
அடைய தடைபோக்கி தேச விசேஷம்
கொடையாக்கும் கோனாம் குரு!
879. தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மையான் ::
கன்னல் நெறித்துநல் சாறு எடுத்துபின்
நின்றதன் சக்கை எரித்துகூழ் — அன்னதோர்
அக்காரம் ஆக்குவார்போல் நம்மேனி மல்கியுள்
நெக்கியுறை முத்தெடுப்பன் மால்.
880. யோகக்ஷேமம் வஹாம்யஹம் ::
[கோதா = கோ + ததாயதே = ஸ்ரீஸூக்தி பிரதத்வம்.
கோவிந்தா = கோ + விந்ததி = ஸ்ரீஸூக்தி ரக்ஷணத்வம்.]
நல்ல பொருள்நா வமர நமக்கருள்வாள்
மல்லிநா டாண்ட மடமயில் -- வில்லிபுத்தூர்
கோன்கோதை அஃதொன்றும் சேமமுடன் நீள்நிலைப்ப
தானருளும் கோவிந்தக் கோ !
881. ஒரு பிறவியில் இரு பிறவியானவர் ::
உறையில் இடாதவர் பாடல் பொருள்புரிந்து
தேற அவிடும் சுருதியாம்!நா — வீறு
மழிசையார் முக்கண் அரனார்க்கு தன்கால்
உழிதீக்கண் காட்டும் பிரான்!
882. ஸ்தனந்தயை பிரஜை ::
(நம்பெருமாள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அவசரம்)
கைலிப் பெருமாள் ஒயிலான கச்சு
பொலிய புதுநகை பூத்து— மலர்விழி
காட்டும் அழகு இராமனோ கண்ணனோ
நாட்டம் நமக்கவர்தாள் மாட்டு.
883. ஒண்டுக்குடித்தன வேங்கட கிருஷ்ணன் ::
ஒருவராய் ஒன்றா இருவராய் பார்த்தன்மேல்
ஒருநூறு தாயாதி அக்கோணி - ஈராறு
என்று எதிர்ந்துவர அநின்ற சாரதியாய்
வென்று முடித்தான்ஊர் இங்கு.
884. அகரணே பிரத்யவாயம் ::
அவசர வேக கதியில் இயற்றும்
தவமும் எவையும் தனக்காய் — உவந்து 
ஏற்ப விரைமால் அவன்துரிதம் நேர்கொடாது
தோர்ப்ப விடைகொள் பயன்.
885. பகவத் பக்த பாதரேகா  ::
நிழலும் அடிதாரும் ஆனவப் போது
விழலும் செய்யதில் ஏற — எழுந்தவேலி
போல்புறம் போகதே நாற்றங்கால் வேர்என
கால்கீற்றாம் மாலடியார் மாட்டு.
886. தோமாலை ::
தரங்கநீர் காவிரி கொள்ளிடமாய் ஓடி   
அரங்கர்க்கு மாலையாம் ; பிள்ளை -- உலக 
ஆரியனும் தேசிகனும் ஆவர் எதிராசர்  
பூரித்த தோள்மாலை போன்று. 
 
887. வடகலையும் தென்கலையும் திகழ்ந்த நாவர் ::
வாயில்நல் வேதமோதும் நாவலர் நாரணர்க்கு 
ஆயசீர் குற்றேவல்  நீட்டேவல் -- யாவுளும் 
தூயதமிழ் நான்மறை ஓதும் உபசாரம் 
மேய பிறப்பறுக்கும் பேறு.
 
888. தூப்புல் தேசிகர் ஸந்நிகர்ஷம் ::
தவழ்ந்த பருவத்து கண்ணன் யசோதை
உவந்து அளித்த ஒருகோல் — முகிழ்ந்த
அதரத்து ஒப்புவித்து ஊதுகுழல் செய்யுமிவர்
வேதாந்த வாசிரியர் தாம்!
889. முனித்ரயம் ::
உலகளித்து ஒப்புவித்து ஓங்குவித்த மூவர்
உலப்பிலா வைணவத்து ஆசான் — சொலப்புகில்
நாதமுனி  ஆளவந்தார் நம்மாழ்வார் தாள்வாழ்
எதிரா சராம்இவர் தாம்!
890. கடலில் பிறந்து பஞ்சஜன்யன் வயிற்றில் இருந்து
ஊழியான் கைத்தலத்தே புகப்பெய்தபடி ::
எட்டெழுத்து மூன்று பொருளாய் பிறப்பொடு
நட்டமில் நல்இருப்பும் சீராரும் — சிட்டர்தம்
கூட்டம் புகப்புமாய மெய்யறிவு உய்உபாயம்
தொட்டுசெய் சேவைமா லுக்கு!
891. வேதாஸ் சாஸ்திரம் பரம் நாஸ்தி :: 
பெயர்க்குறிய வாம்பொருள் அப்பொருள் தம்மின்
உயர்பண்பு மற்றவை கொண்டு — இயற்றும்
செயலிவற்றை முன்னம்போல் ஒன்றிப் படைக்கும்
முயல்வுடை மாலே இறை!
892. சாஸ்த்திர யோநித்வாத் ப்ரஹ்ம ::
புலன்வழி ஓர்வ தறிவு! பிறப்பித்த
குலத்துடை தந்தை அறிவது — மேலாத்தாய்
சுட்டுமோர் சொல்வழியாம் அன்ன மறையதுவால்
தொட்டுரைப்பத் தெய்வம் தெரிந்து. 
893. அக்யாதி, ஸக்யாதி, அநிர்வசனீய கியாதி இத்யாதி ::
க்யாதி
(யதார்த்த ஜ்ஞானம்)
உள்ளதை உள்ள படிஅறிகை நல்லறிவு;
அல்லதை உள்ளதாய் ஓர்தலாம் -- புல்லறிவு.
சிப்பியை வெள்ளியென  வாய்,கயிற்றை பன்னகமாய் 
தப்பி அறிவார் மருள்.
தெருளும் மருளும் புலனுழி பேதம் 
பொருளல்ல வற்றைப் பொருளென்று --  தேறல்தான்  
ஐயம் திரிபு மயக்கம் குணத்திலாய் 
பொய்யில் பொருளதன்வாய் நேர்ந்து.
குணத்தால் வருவது ஐயம், பொருளின் 
பிணக்கால் வருமது தான்திரிபு -- உணர்த்தபோகில்  
சிப்பி பளபளப்பால் வெள்ளியாய் அக்கம்மேல்  
ஒப்புருவால் பன்னகம் தோற்று. 
ஸக்யாதி ::
(வைதிக பக்ஷ யதார்த்த கியாதி)
வெள்ளியில் காண்நெருப்பு சிப்பியுள் நேர்பூமிக் 
குள்ளாம் நெருப்பாய் விரவிமேவா  --  வற்று 
துயக்குறு ஞானம் துலங்க மிகவாய்   
பயனுறு  ஞானம்போல் மெய்!
. 
அக்யாதி ::
(பிரபாகர பக்ஷ சாதிருஷ்ய ஸ்மரணம்)  
கிடந்த பழுதையோர்  பாம்பு எனவிதிர்த்து 
ஓட,பாம்பு அல்ல பழுதாம் -- திடஅறிவு 
கூட அதற்காம் நினைவின் மறுவலது  
வீடுகொள் ஞானத்  தெளிவு.
அஸத் க்யாதி ::
(மாத்யாத்மீக பௌத்த பக்ஷம்)
பொய்யில் இருப்பதாம்  ஞானம் பொய்யதாம்;
ஐய! கடல்சிப்பி வெள்ளியென -- பொய்யாய்ப் 
புரிய அதன்வாய் பிறப்பதோர் மெய்யில் 
அறிவும் முடிவுமாம் பொய்.
அன்யதா க்யாதி ::
(சாங்கிய சந்நிகர்ஷ பக்ஷம்)
சிப்பியில் வெள்ளி இலையாய போதிலும் 
சிப்பியில் வெள்ளி உணருகை -- செப்பிடில்  
ஒன்றின் குணம் பிறிது ஒன்றினில் காண்கிற்பார்  
உன்னிய புந்தி பிழை.
.
900. அநிர்வசனீய க்யாதி ::
(அத்வைத பக்ஷம்)
அல்லதை உள்ளதாய் உன்னி உணரும்வாய் 
இல்லது உள்ளதாய் தோற்றுமது -- சொல்லில் 
உளவாகும்  மெய்ப்பரம்தான் அல்லா நகலாய் 
கொளவாக காட்டும் அது.
901. யதாயதாஹி தர்மஸ்ச கிலானிர் பவதி ::
பொற்கண்பொன் மேனிகச்சப ஓர்ஒரு
அற்பரைக் கொன்றது தான்தனி — நிற்று;பின்
விற்பிடித்து ஓர்ஊராய் கோல்பிடித்து நாடுநாடாய்
செற்றடர்த்தான் மூன்யுகத்து மால்!
902. சைஷா தேவி சகலபுவன பிரார்தனா காமதேனு ::
மாதொரு பாகனார் பக்கத்தில் வைப்ப!மாலோ
மேதகு மார்பினில் நேர்விப்பான்! — ஓதுமறை
நால்வாயன் நாவினில் வைப்ப! சிரிதேவி!
நூலாட்டி நோக்கதே மிக்கு.
903. கோயில் மணி என கோஷித்து ஹிதைஷிப்பர் ::

உள்ளங்கை காண்கனி யாக உபநிடதத்
துள்ளனைத்தும் நூல்செய்த வேதாந்தத் — ஒள்ளிய
மெய்ஞான தேசிகனை! தீந்தமிழ் ஆரியனை!
எய்துய்யா தார்என் பிறந்து?
904. ஓதி உணராதன அருளால் வருமது ::
ஞானக் கடல்கரை நின்றுநாம் நேசிப்ப
தானது அல்லால்நம் தேசிகர்தம் -- தேனான
நூலாழி நீந்தக் கடவமோ? நன்றவர்
காலேகி கல்லாதே பெற்று.
905. கன்னி ச்ரவணத்துன்னும் பெருமாள் ::
காண்கிற்ப்பார் கண்ணும் மனதும் பனித்திளக
பூண்கிற்பார் பூமாலை யாதுமின்றி -- விண்ணிற்ப்பார்
ஏங்க வியனுலகோர் ஒங்க வரும்வட
வேங்கடவா! நின்றாள் எமை.

906. பக்தி, பிரபத்திக்கு நியமம் வகுத்தவிடம் ::
ஞானம் கனிந்த நலம்காய் கனிந்தபழம்
ஏன வழிசெல் பிரேமம் -- கனப்பதோர்
பக்தி ஒருவழி உய்வழி அஃதுசெய்து
முக்தி பயத்தலும்மால் நோற்று.
907. முழு நம்பிக்கையும் மூட நம்பிக்கையும் ::
விலங்கு மனிதன் வான்தேவன் தெய்வம்
சலமில்ல தோர்முழு நம்பிக்கை — ஏலும்
இறையிடத்தே! மற்றதன் நற்குணம் ஆற்றல்
நிறையில் குறையுடைத்தாய்க் கொண்டு.
908. ஸ்ரீரங்க மங்கள தீப ரேகா ::
மங்கள தேவிதன் மார்பினில் வைத்து
மங்களம் நல்கிடும் மாயோன்செய் -- மங்கள
வீடிதன் மேன்மை, அவள்கண்அசைவதும்
கூடிசெய் நன்மை நமக்கு !
909. மங்களாசாசனத்து மாண்புணர்த்த பெருமான் ::
தேடல் முனைவார்க்கு கூடல் நகராளன்
மாடளித்து மல்கி மறுவலில் — வீடுமாக்கும்
சென்நாள்இன் நாளல்லா தென்நாளும் எம்தமக்கா
நின்றான் இருந்தான் கிடந்து.
910. ஆயர் தங்கம், அசோதை சிங்கம் ::
குடக்கூத்து ஆட்டு குரவயர் கோத்து
விடைஏழின் கொம்பு பறித்து -- விடங்கொள்
அரவத் தடல்கெடப் பாய்வான்போய் அம்மனைமார்
உரப்பவாம் அஞ்சப் புணர்த்து.
911. அம்மா! அடியேன் வேண்டுவது ஈதே ::

பூப்புனை புண்ணியன் பூண்நல் பவித்திரம்
காப்புநாண் கட்டியம் ஆழ்வார்கள் — ஓர்ப்புடை
பண்ணார் பதிகங்கள் ஓர்நா லாயிரமும்
கொண்ட நலம்நம் தமக்கு.
912. ஏத்துவார் எத்தனை ஏற்றிலும் முற்றிலா மாயோன் ::
உந்தி தடத்துயர் தாமரை மேலயனும்
சந்தார் கபாலத் திடர்ஈசனும் — வந்தித்து
வாயாற வாழ்த்தி வணங்கியும்காண் கிற்பரேல்
மாயன்சீர் ஆற்ற அரிது.
913. தமர்களுள் கடையனான தொண்டனேன் ::

ஆயன் அடிபரவும் அன்புடையர் ஆகியவன்
தூய துளபநன் மாலையும் — காயமதில்
மீசு துவாதச நாமமும் தேசுமார்
ஆசிலடி யார்க்கெம் குடி.
914. இமைய வரம்பிடம் திராவிடம் ::
(இமையவர் விரும்பிடும் திராவிடம்)
முற்பட கற்கவாம் மூத்தமிழ் நான்மறை
மாற்கு அயோத்திமன் அம்மாஜி -- நிற்கோயில்
நாளும் ஒழுகிட அஃதினை தெக்கணத்
தாள்மொழி என்னல் பிழை.
915. யாத்ருஸீ பாவநா யஸ்ய சித்திர்பவதி தாத்ருஸீ ::
மந்திரம் புனிதநீர் சேட்திரம் அந்தணர்
அந்தரத்து வானவர் ஊழ்வினை — முந்துர
சூழ்தலறிவார் காயகல்பம் ஆம்தனையும் நம்பல்
பழுதிலார் மாட்டே பயன்.
916. ராம திவாகர வரத ஸுப்ரபாதம் ::
காலை கதிரொளி மேல்விரி வேளை “தன்
வேலை அடியார்க் கருள்கை” — அதனைநீ
செய்திடாய்யென் வேதிகை பாயசம் முன்பயக்க
வாய்த்தவர்க் கோர்அருளப் பாடு.
917. பாம்பணை பஞ்ச மஹிஷியார் ::
திருமடந்தை மண்மடந்தை சோழர் மடமங்கை
சேரகுல வல்லியாம் நால்வருடன் — வேறான
பீபிநாச்சி மாரும் ஆகஐவர் ஆள்அரங்கர்
காபி ககுத்தகண்ணன் தான்!
918. நரக நாசக துரந்தகன் கோயில் ::

நாயாந்தேன்! நாயந்தேன்! நமோநமோ நாரணா!
நாணாது வாயில் கடைபோந்து -- நான்உன்னை
கூவி அழைக்கின்றேன்! ஏழை எனைவாழ்வித்
தாவிகாத் தாள்வாய் துணை!
919. ஸ்திரியம் புருஷ விக்கிரகம் ::
(நாச்சியார் கோலத்தில் பெருமாளின் தன்மயீ பாவம்)
சீதை இவளல்ல கோதையோ? அல்லாது
கோதை இவளல்ல ராதையோ? — மாதர்
மனம்கவர் மன்மதன் ஆள்ரதியோ? யாரோ
அனைத்ழகும் கொண்ட வணங்கு ?
920. இடத்துறை ஈசர்க்கு என்குறை ?
(விஷ்ணு புராணம்)
ஏகா தசிதோறும் நல்விரதம் நேர்ந்தாராய்
மாகாயம் மட்டித்து நாரணனை — ஏகமாய்
பூசிப்பார் கூறாளும் ஈசன் குலாவிடினும்
ஏசாமை ஏற்றம் தரும்.
921. மண்டோதரி சதுஸ்லோகி ::
வில்விடுத்து ஒண்சங் கதையாழி ஏந்தியன்றுஒல்லையுன் மெய்யுருவம் காட்டுவித்தாய் — எல்லாம்துறந்த முனிவர்க் கலாது பகைவர்திறத்தவாம் கற்பினா ளுக்கு.
922. வேத விளம்பி நமையாள் நம்பி நம்பெருமாள் ::
அன்னமாய் அன்று அருமறை ஆய்ந்துரைத்த
துன்னு அமரர் தனித்தலைவன்! -- இன்று
அணிகொள் அரங்கத்தே நின்றான் கிடந்தான்
பணிசெய்து பயனுறுவோ முக்கு.
923. அர்ச்சா சாமான்யத்துக்கு ஆணிவேர் அரங்கம் ::
(ஸ்ரீவைஷ்ணவ ராஜதானி)
வாழி அரங்கம்! வளர்க்க அரங்கத்
தெழில்பொன்னிப் பேராறு! வாழியவே -- ஞாழல்
மலிகமழ் நான்மாடக் கோயில்! பொலிக
இருந்தமிழ் வேதக்கோல் ஓச்சு !
924. துஷ்ட சிக்ஷண ஸாது ஸம்ரக்ஷணம் ::
கீதை உரைசெய்த வேதமுதல் நாயகன்!
நீதி இலாததோர் நூற்றுவரை — சூது
பலசெய்து ஐவரைவெல் வித்தவர் தாளல்லால்
ஞாலத்து தாழார் தலை.
925. விஷ்ணு லோக மணிமண்டப மார்கதாயி ::
வாழ்ந்தார் எதிராசர் வளம்மிக்கு இவ்வையம்
வாழ்வாங்கு வாழ்வுறவே! பொங்கோதம் — சூழ்அரங்கர்
சீர்ஒன்றே இவ்வுலகம் பேர்த்து வைகுந்தவான்
சேர்ஏணி என்னப் பணித்து!
926. ரிணம் பிரவர்த்தமிவ ::

தூது நடந்தவன் சாது எனப்பேச வாகுமோ?
ஏதிலாள் மானம் பிழைப்பசீரை — ஈதலை
நேர்நின்று நேரா தனனாய்ஓர் சேனைமாள
தேர்ஊர்ந்தும் தீரான் கடன்.
927. மடை மாற்றம் விடையாமே ::
புலன்ஐந்தும் போம்வழி போகல் திருத்தி
அலகில்மால் ஓர்முடி ஈரடி — முத்திறம்நால்
தோளுடை ஐம்படைக்காய் ஒள்ளியதா ஓம்புதற்பின்
எள்கது என்ஏழை நெஞ்சு !
928. மும்மைசால் மூல மந்திர விழுப்பொருள் ::
தம்மக்கள் தம்சீடன் தம்மாசான் தாமேதான்
அம்மூ வரில்இருவர் என்றாகி -- ஒம்மை
வதரி அரங்கம் குருசேத் திரம்அயோத்தி
ஈதில் செவிசேர்த் துரைத்து.
929. வியாபக, அவியாபக நாம கோசரன் ::நாமமோர் ஆயிரம் சாற்றிடும் மாலுக்கு சேம மதுஎண்ணி உள்ளும் புறமும்தாம் ஆமதைக் கூறும்பேர் மூன்று; குணம்செயற் காமதைக் பேசும் பிற.
930. பக்தஜன ரக்ஷண பிரதீக்ஷிதன் ::
மார்பில் திருவும் மனதில் நினையாவும்
ஓர்ந்து விரிசிறகும் வேகமும் -- நேர்ந்த
செயல்கருடன் தம்மாகி சூழும்மால் நம்மாக
வாயும் இடர்நாடா வே!
931.அலம்புரிந்த நெடும்தடக்கை அமரர் வேந்தன்::
(ஸ்திர பலப்ரதோஹி விஷ்ணு :)
கார்காலம் நீடு கொடையோர் இரண்டுமாதம்
ஏர்பயத்த நற்கழனி நீடுகொடை — ஓர்நாலு
மாதம் குருவருளால் நாம்பயத்த மால்கருணை
ஓதிலிம்மை யோடுமரு மைத்து!
932. அவனிவன் என்று குழேல்மின் இவனே அவனாம் ::

பிரமன் ஒருகால் இடைச்சேரி ஆவும்
சிராரும் ஒளித்து விளையாட — மாறாக
தன்னூரில் கண்ணன் பிரமன் எனவாத
துன்னில் பராவரம்யார் மாட்டு?
933. சீக்ர பலப்ரதோஹி அர:
மழுவும் மருள்மானும் கைநிற்க மாஉமையும்
சூழ அரன்அணி வித்தான் — மலர்மகுடம்
சோழன் தலைக்கு அதுவால் அவன்புகழ்
தாழாது வாழுமுல கத்து!
934. ஸனாதனம், ஸத்சங்கம், ஸாத்வீகம் ::
எழுமையும் தாழா ஒழுக்கும்;மெய் ஞான
வழக்கும் மூன்றில் முதலுள் -- வழுவா
விருப்பும் இறைஉணர்வும் அஃதுளார் நட்பும்
இருப்பார் பிறப்பே சிறப்பு .
935. அதுவும் அவனதின்னருளே ::
ஓதுவார் ஓத்தெலாம் நின்பெயரே செங்கண்மால்!
சாதுவாய் காண நினைப்பதுவும் — மாதுவாழ்
மார்ப!நின் பொன்மேனி இன்நேர் நிலைத்திட
சார்வாய் சரண்அருளா யே!
936. யதிராஜ சம்பத் குமாரன் ::

மாமேனி மாயன் மகனாம் யதிபதிக்கு!
பூமேனி கண்டு புணர்காதல் — தான்மேவ
கொல்லை புரதுருக் கத்தி ஒருத்திதன்
எல்லை இரந்துமீட்டத் தால்.
937. பஞ்சபர்வ காலத்துள் ஏகாதசி புறப்பாடு ::
முழுநிலவும் மற்றை பகல்நிலவும் ஆன
வழிமுறையில் ஓர்பத்து நாளும் -- கழிந்த
முதல்நாள் கண்கள் உபவாசம் தீரநம்
வீதியார வாரும் பரன்!
938. கூவி அழைப்ப கூடான் என் ?
இன்றாக நாளையாக இப்போதும் எப்போதும்
நன்றாக நாரணனை வாழ்த்துவாம் -- என்றாக
கண்ணாற கண்டவனை காணல் அழைத்தேர்க்கு
எண்ணத் திரைஏகான் கொல் ?
939. இயற்கை இறையின் வெளிப்பாடு ::
கடுகை துளைத்து கடலைவைத் தார்போல்
கடுகிற் சிறிய அணுவில் -- மிடைந்துகாண்
மின்ஊட்ட நட்ட துகள்கள் இடையுள
தன்வட்டத் தோர்விசைதான் 'ஓம் 'எனவாம் ஓசை
அதனுள் உளவாத மூன்னெழுத்து சேர்க்கை
'அவும' அவையுள் உயிர்மெய் -- அசைச்சொல்
பயிற்றும் சடம்-அசடம் என்றிவைக் கான
இயல்புணர்கை மெய்யறி வாம்!
940. திவ்ய தம்பதிக்கு இல்லை இணை ::
மக்கள் மரம்செடிகோள் ஆகாயம் மாபுருடன்
புக்கமர் மாகாயம் என்றாக -- அக்கடவுள்
நற்குணங்கள் யாவுமன்னை லக்குமி என்றாக
உற்றதுணை மற்றில்லை ஓர்.
941. பகவதபசாரம் தோல்பொறை வாசி
பாகவதபசாரம் மர்ம ஸ்பர்சி ::
வேதவாய் அந்தண ரேலும்,கா தன்மையால்
போதில் புரிஅறு காலபூசை -- நீதியராய்
வாழ்கிலும், மெய்வாய் மனத்தால் நுமர்கள்
பழிக்கில் இழுக்காம் ஒழுக்கு.
942. ஸ்நேஹோஹி பரமோ நாத :
ஒருகுரக்கைக் சாய்த்து ஒருகுரக்கைக் காத்தான்போய்
ஒர்அரக்கன் மாய்த்தவன் தம்பிக்கு — பாரும்
அரவணை தேவுமீந்தான்; சீரார் குகனனுமர்க்
காராத காதல்கூர் நட்பு.
943. கிணற்றுத் தவளை கடலை அளக்கவோ?
(தனக்கும் தன்தனமை அறிவரியான் தேவி)
வரம்பிறந்த தொன்றை அளந்துரைப்ப தாமோ?
திறன்எல்லை இல்ல திறையும் — திறம்பு
பெருமை உடையமால் தேவி புகழல்
தரமோ எமக்கு இனி ?
944. பராங்குச ஈக்ஷ வீக்ஷணி ::

என்னை அடைந்தால் ஏணியாவேன் !என்னம்மான்
தன்னின் அருள்தீரம் சேர்துடுப்பு — என்றாவேன்!
இன்னும்என் சிந்தை மருள்கை எனஅன்னை
தன்தடக் கைவார்த்தைப் பாடு!
945. பெரியன் செலக்காணாது கண்டவாறு ::

திருமால் திருப்பதி நூற்றெட்டும் நாளும்
ஒருவாறு அங்குறாமல் சேவிக்க — நேறுமேல்
எப்படி நெஞ்சம் குதூகலிக்கு மோஅன்நேர்
ஒப்பாம் உவகை உசாத்து!
946. ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம் ::
தம்மைப் பிடித்து தமர்தம் திருநாடு
தன்னை உடன்சேர இன்னாப்பு — இன்றியே
வானின்று வேங்கடம்சேர் தேவன் திருமால்
நானின்று நாடும் படிக்கு.
947. காந்தஸ்தே புருஷோத்தம :
நிரப்புகூறு ஒத்தகூறு என்னலாத தன்மையள்
கூறு குணம்ஏறு ரூபம் — தேறில்
வரம்பில் இவள்மகிமை மாயோனின் மிக்கு
நிறம்பெறல் நாதனாகப் பெற்று.
948. வாகீசராய் வந்த தியாகேசன் ::

அத்திகிரி ஆள்வார் அவரே அரங்கர்க்கு
உத்தி தனில்முன் எதிராசர் — தத்தீந்து
காத்தான் உலகாரியன் என்னா உதித்து
மற்றை அவருமவர் மாடு.
949. இரவிமுன் மின்மினி ஈயாடவோ?

விளக்கு விளக்கால் துலங்கவோ? ஈங்கு
துளக்கமில் வைகுந்த வாழ்வின் — அளப்பரிய
ஆரமுதை அண்டி இணக்கமாய் தோன்றுமிப்
பேரமுத பெற்றியாள் முன்.
950. ரமணம் சத்ராவ்ருதாநனம் ::

ஒருகுடைக் கீழ்இவ் உலகம் அடங்க
திருவுடை தேவன்நால் தோள்அமுதன் — ஓர்இடை
வீடின்றி மன்னியே காத்திடும் தன்மையான்!
தேடியாள் தெய்வத் தரசு.
951. மூவர் கண்ட முதல்வன் ::

முதலாழ்வார் மூவர் வெளியுள் இருள்விலக
ஆதவன் சோதியும் என்புருகி — மாதவன்பால்
ஞான விளக்கும் எரித்து திருப்பொலிந்த
மேனி அழகனைக் காட்டு.
952. பிரதம பிரவ்ருத்தி ஸ்வாதந்ரியம் ::

உள்ளுவார் உள்ளிற் றெலாம்உடன் நின்றவர்
உள்ளக் குகையில் எழும்போதே -- வெள்ளென
தானறியும் தன்மையான் நம்மை தடுக்கிலான்
போனவழி போகல் விடுத்து.
953. கோயில் நடை மூடவும் வேண்டுமோ ?

இருவினையும் இன்னலேதும் சாரா இறைக்கு
அருக்கனை ஆழியது கொண்டு — மறைத்தன்ன
சந்திரனை ராகு அபகரிக்கை என்செயும்?
எந்தானும் ஊரார் பொருட்டு.
954. கீழ்-மேல் மூவரில் முதல்வர் ::

காடுறை மாயோனை நாடறியப் பாடிய
பீடுடை ஆழ்வாருள் முன்னவர் — வீடுசெய்
வெஃகாவுள் மேவ உலகா ரியன்கொற்றம்
அஃகாமல் தென்கலைஆ யிற்று.
955. மழைக்கடவுள் செருக்கழித்தவன் ::

பசித்தவனைப் பட்டினி இட்டு அமுது
புசித்து வருமழை காக்க — ஒசிந்த
வரைஎடுத்து ஆனிரை காத்த பெருமான்
குரைகழலே கோருவமிப் போது.
956. திருவல்லிக் கேணியான் சென்று ::

அலைஎரியும் நல்முத்தம் ஆடை அணியாகக்
காலை கதிரொளியில் வில்வீசம் — கோலம்
மழிசைபேய் மங்கையார் தாம்அவாவித் தந்த
பழந்தமிழ்பா வின்பின்செல் வார்க்கு.
957. ஸ்மிருதி அபோஹனம் ச ::

கடவுள் மறுப்பார் உணரும் வகையில்
கடல்வண்ணன் கண்டமை காட்டும் — திறம்பண்டு
பண்டே! திருவை! திகழ்கின்ற பொன்னுருவை
கொண்டவாழி யம்கை அவர்க்கு!
958. அவதார ரகசியம் ::
[நம்பெருமாள் பெரிய பெருமாள் ஆனபடிக்கு]
சிறையிருந்தாள் தன்தகவும்; அன்னவட்காய் முன்னோர்
முறைதூது செல்குரக்கின் சீர்மையும்; -- மாறில்
அடிமை இலக்குவன் செய்தமையும் தான்நடத்த
கண்ணன் எனவாய்ப் பிறந்து.
959. ஸ்தூணான் நிகனன் நியாயம் ::
நட்டதூண் நிற்று நடுக்கலா வண்ணம்மண்
முட்டி அலைப்பக் காண்பர்; -- பிராட்டி
நட்டமாய் பேசி விலக்கினும் துட்டமாய்
தட்டிக் கழிக்கிலன் மால்.
960. மார்பில் கை வைத்து உறங்குமாறு ::
துரும்பு நறுக்க வகையறியேன் மாலே!
விரும்பி எனைகைக் கொள்ள — வருமேல்
அதுவேயோ நின்றன் திருவருள் நேரவாம்
சாது வழிநீ எமக்கு.

961. இராமனாய் தனக்கு இருந்த வருத்தம் தீர்ந்த -
குறை ஒன்றுமில்லாத கோவிந்தன் ::
பெற்றதாய் தந்தை ஒருவர்க் கிருவராய்
கற்பித்த ஆசான்செய் தக்கணையும் — மற்று
உடன்பிறந்தாள் காப்பும் குழல்கீதை ஆடல்
குறையில்லா கோவிந்த ராம்!
962. சேதன லாபம் ஈஸ்வரனுக்கே ::

நெருப்பிடை நின்றும் பொருப்பினை தூக்கி
நிருத்தி வருத்தவும் வேண்டா — கிருட்டினா !
உன்னை அடையயாம் செய்து கிடைப்பதாம்
நன்மை உமக்கலவோ பேறு!
963. நெறிவாசல் தானாம் மால் ::
வரியன் குறைகழிய தாம்கொடுப்பார் அத்தை
பெறலுரிய கைப்பையும் தாரானோ? — பாரிப்ப
மேல்வீடு தந்துதவும் மாலுக் கதைநீடு
தொல்நெறி யாதல் மரபு.

964. அர்சக பராதீன அகிலாத்ம ஸ்திதிஹி ::
குரக்கரசன் மற்றும் கடலரசன் காலில்
விரகிலன்போல் விழ்ந்தவன்போய் பின்னை — அரன்காலில்
பிள்ளை வரம்கேட்டு தாழ்ந்ததுவும் கேளில்
கள்ளநகை காட்டும் களித்து.
965. பக்திஸ்ச நியதா வீர :
பக்தியில் மேலாம் துருவ பிரக்லாத
முக்தியதும் ஏலா அனுமனென — ஆப்த
அதிகாரி பார்த்து அருளல்என் பேறு?
அதமன் எனக்கலாத போது!
966. கிருஷ்ணாஸ்ரய : கிருஷ்ண பாராயண :
கிருஷ்ண நாதஸ் ச பாண்டவ :
பெரிய கடல்சேர் திரையறுவி அன்ன
குருவரியர் தம்மிடை யான -- பெரும்படைப்
போரில் தருமரவர் பக்கல் தருமத்
துருகண்ணன் செய்மாயம் மிக்கு.
967. ஸுந புச்சம் கிம் நிமித்தம் ?

இறைவன் படைப்பில் பயனல்ல என்று
குறைசொல்ல ஒன்றுமே இல்லை! — அரையை
சரியாக மூடாத நாய்வால் உரிய
உதாரணம் ஆகும் அதற்கு.
968. அநீச :
சிவன்பிரமன் இந்திரன் என்னிவர்க்கு ஈசன்
இவன்என்ற உண்மை உகவானாய் — தேவன்!
தமர்செய் வனசெய்து கொண்டு உழலுமோர்
பாமரன்தான் என்னல் விரும்பு.
969. மாமேவ யே பிரபத்யந்தே மாயாமேதாம் தரந்திதே ::
கீழில் கழிந்தநாட்கள் பாழே ஒழிய,என்
வாழ்வில் இருந்தநாட்கள் மாலே!அவ் -- ஊழ்வந்து
உக்கி உறுத்தா வகைஎனை யுன்பாலே
போக்கி பொறுத்தருள்செய் மிக்கு.
970. ஆத்மானம் ஸ்ருஜாம்யஹம் ::
எமக்குள் உனைப்போல் உனக்குள்ளே யாரும்
சுமக்கா உமக்கு அறிவார் — தமக்கு
உயிராம் அவரை உனக்கு உயிராய்
பயிற்றினை தன்னைப் படைத்து.
971. காலட்சேபம் ::
(போம்பொழுதை பயன்பட போக்கல்)
உண்டு உறங்கிப்போம் போது விலக்கியான்
கண்ட படித்தின்னும் கேட்டானாய் — மீண்டும்
மனதில் இசைபட சுவைத்தும் எழுதி
தினத்தை கழிப்பன்மால் கற்று.
972. தஸ்மாத் ஆசார்யவான் உச்யதே ::
பலர்கால் படகிடந்த பாறை அதனை
பலர்வாய் துதிபாட செய்சிலை — போல
புறம்பே திரிந்த எமைதிருத்தி மால்சேர்
உறச்செய்வோன் ஆசா ரியன்!
973. முனிமானஸ வாசம் ::
அகத்தில் இருப்பதை காட்டும் முகம்ஓர் வகையில் திறந்தவாம் கண்ணாடி -- ஆக வெளுத்த அகிரதன் உள்ளத்து மாலை பளிங்குபோல் மாமுனியும் காட்டு.

974. அரிஷட் வர்க ஸ்படிகாரம் ::
ஆசைவாய் கோபம் விருப்பு வெறுப்பிவை
பேசில் உலகோர் மனத்துக்கண் -- மாசுஅவை
போக வழியுண்டேல் அன்பும் அறனுமாய
யோகமான்ம நேயதுணை கொண்டு.
975. வேற்றுமை இயற்கையின் நீதி-
பிரிவினை அதற்கோர் வியாதி ::

மேல்கீழ் உயர்தாழ்வு என்றலா வாழ்விதில்
கோலும் பிரிவினை யாவுமே — ஏலா
உலகிதில் அன்பிலார் ஆணவம் தன்னால்
அலப்பறை செய்வார் பிணக்கு.
976. வாக் அர்தா மிவ ஸம்ப்ரக்தௌ ::
உயிர்மெய் இவைபுகுந்து வைய மனிதர்
உயர்நின்று ஆளும் இறைதான் — பயத்த
உயிர்மெய் இணைந்தசொல் போல அகலா
தியையும் திருவுடன் தான்!
977. ஸ்திதப்ரக்ஞன் :
ஆழியே சூழ இருந்தாலும் வங்கம்
அழுந்திடாது தன்வழியே சாகும் -- கடல்நீர்
கேழில் கப்பல் புகுகிலோ மூழ்கிடல்போல்
சூழல் வயமாகல் கேடு.

978. பகவான் அவதரித்துச் செய்யும் ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவதாபசாரம் பொறாமையாலே ::
நெல்குத்தும் வேளை வியர்நீர் பெருகல்போய்
நல்கும் பெரும்பயன் என்ப - தலவே!
அதுபோல் அடியார்க் கருளும் பொருட்டு
எதிர்வார் களையப் படும்!
979. அவரவர் இறையவர் குறைவிலர் ::
தீயில் திகழ்கின்ற பொன்னுருவாம் அந்தணர்க்கு
மேய முனிவர்க்கு குன்றதில் — ஆய
விளக்குருவாம் நெஞ்சில்மால் ஏதிலார் மாட்டு
துளங்கிடும் கோயில் கிடந்து.
980. குன்றம் எடுத்தவன் குடை கோஷ்டி ::
குன்று குடையாய் எடுத்தவன் கோவிந்தன்
என்ற விருதம்முன் பெற்றவன் — இன்று
அவனுகக்கு நல்லடியார் தம்புடை சூழ
பவனி(காண்) குடைசேவை நன்று.
981. சதுர்மூர்த்தி சதுர்பாவ :
விழித்து உறங்கி கனவில் மிகஆழ்ந்து
சூழல் மறந்தவோர் மூர்சையுள் — வீழுகை
நாலும் வியூகத்தாம் மூர்த்தமொரு நாலுமாய்
தூலமொடு சூட்சுமம்ஆம் மால்!
982. ஏகபாத் சதமூர்த்தி சதானந :
கருணையால் தோற்றுமால் காட்டும் குணமோர்
குருணை அளவாம் உலகில் — அருளை
உடையான் பெருமை பரம பதத்தே
தடையின்றி நாம்சவிக்கப் பாற்று.
983. தோளுக்கினியானில் நம் சிந்தனைக் கினியான் ::

பிள்ளையை தோளில் உயர்த்தி உலகதை
வெள்ளென காணல் உதவுவார்போல் — கள்ளமில்
உள்ளத் தடியவர் தோளில்மால் ஊர்வதும்நம்
உள்ளத் திடம்பிடிக்கப் பார்த்து.
984. கத்யந்தர சூன்யத்வம் ::
மணலை கயிறாய் திரித்து பரந்து
அணையலாகா பால்வெளிபோல் ஆகாயம் — கோணித்து
கட்டியதை கட்கத்தில் பூட்டுவார் யாவரவர்
ஈட்டுவார்மால் விட்டுமேன் வீடு.
985. தத் சேஷத்வம் ததீய சேஷத்வ பர்யந்தம் சென்றல்லது நில்லாது ::

அடிமை தலைநின்ற ஆன்மாவின் உண்மை
படியதுவும் ஓம்பிடில் செம்மை — உடையஅம்
மாலுக்காய் நில்லாது மால்தமர் தம்மளவும்
ஏலுநற் சேவகத்து இன்பு.
986. அர்தபஞ்சகத்து விஞ்சிய நிலை ::
யான்எனது என்பது ஆன்ம விரோதி!மால்
தன்கருணை வான்ஏற்றும் நல்ஆறு! — இன்னும்
அவன்எளிமைக் கெல்லை நிலம்அர்ச்சை! தொண்டவன்
இன்முகம் விளம்பச் செயல்!
987. பிரளய பயோதிஜல ஹரே கேசவ மீன சரீர ::
கைநின்ற தோர்கயல் சத்ய விரதன்ஊ
கைஅளவின் மிக்கு கமண்டலம் — பெய்ய
பெரியதாய் ஆறு கடல்என மேவி
பிரளயத்து மன்னுயிர் காத்து.
988. தன்குருவின் தாள்கண்ட சதிருக்கு உண்டோ எதிர் ?
முக்கணான் எண்கணான் ஒராயிரம் செங்கணான்
மிக்க அருள்நோக்கு என்றிவை — ஒக்குமோ?
தக்கசீர் தண்ணருள் உட்கணால் நோக்கியருள்
நற்குருவின் தண்ணளிக்கு ஈடு !
989. ஆர்வுற்று இசைந்து பாக்கிய ஹீனராய் இழக்கை ::
மதங்கள்யா தொன்றிலும் நம்பிக்கை நேரொழொகல்
ஏதும் இலராய் அவைபகர் — நீதி 
மதியால் இசைந்து விதியால் வழுவுவார்
கேதிப்பர் தெய்வபலம் நீத்து.
990. ஞானப்பிரானை அல்லால் இல்லை ::
நிலமகள் நீரின் இடந்த பிரான்இவ்
உலகோர் பிறவிக் கடலின் — விடுப்ப
மறைப்பொருளை பொய்ப்பொருளாம் ஆழ்கடலின் மீட்டு 
முறைசெய்தான் வார்த்தை பெரிது.
991. God Formula::

பரமாணு ஓசை ஒளிஇவை மூன்றின்
பரிமாணம் காலம் எனுமோர் — திறன்சேர்ந்
தியையின் அதுவாம் உலகம் இயக்கும்
மயல்மிகு மால்சக்தி என்று !
நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்தம் நோக்குமவர்
பண்பகர்வும் சென்மம் அறும்.
992. நக்ஷமாமி வஸுந்தரா!
எத்தனை பக்திதான் தன்பால் உளரேனும்
ஒத்திலன் தம்மடியார் தீங்கவர் - ஆற்றிலே!
ராகவ யாதவ ரங்கேந் திரசிம்மம்
ஆக(மால்) பணித்த பணிவு.
993. தன்னை அழியமாறி அடியார்க்கு அருளும் பெருமாள் ::
அத்தலைக்கு ஆன்ற அதிசயத்தை ஆற்றுகை
உத்தேசம் நம்மதாக நாம்நினைக்க — வித்தகன்
சித்தமோ தன்னைத்தான் தாழ்த்தி தமர்க்களுக்கு
ஏத்தம் அளிப்பதே நோக்கு.
994. புருஷகார வைபவம் ச சாதனஸ்ச கௌரவம் ::
தேவமாதர் தம்வெஞ் சிறையை விலக்க
உவந்தளாய் சீதை சிறைஇருந்தாள் — ஆவல்
அதுவால் இராகவன் தானும் நடந்ததூதும்
கண்ணன் எனவாய் பிறந்து.
995. பக்தியில் அசக்தருக்கு இது ::
நின்றவா நில்லாத நெஞ்சு உடையவர்க்கு
ஒன்றுமோ அங்குற்றை வாசம்?மால் — தன்னால்
தனதுலகம் தந்து நமைஅழைக்க, இசையும்
மனத்தரா மேல்அது காண்டு!
996. பகவதபசாரம் தோல்பொறை போக்கி-
பாகவதபசாரம் மர்ம ஸ்பர்சி ::
அம்மான் அருகிருக்க அம்மான் அவாவினளாய் 
பெம்மானை தான்பிரிந்தாள் சீதையும் — தம்பி
இலக்குவன்பால் செய்த பிழையாம்ஊழ் வந்துறுத்த
மேலை பிரிவாம் நிகழ்வு.
997. யதாஹி சோர : ததாஹி புத்த:

நீதியில் நின்று தருமம் ஒருநாலும்
மேதினியில் காத்தவன் ராமன்! அ — நீதியை
சூதினால் வென்றவக் கண்ணனே கள்ளபௌத்தர்
வாதில்வெல் ராமா நுசன்!
998. ஸர்வக்ஞ :
பெரியவான் விண்வெளி ஓடையில் நீர்க்குமிழ்போல்
சூர்ய குடும்பமதில் நம்உலகு — தூரியம்
காட்டும்நல் ஓவியம்போல் நம்வீடு நம்நலம்
மாட்டே அரங்கன் நினைவு!
999. ஸர்வதோ முக :
விருப்பால் வெறுப்பால் பயத்தால் அறிவால்
தெரிவால் தெருளுற்ற தோர்நல் — குருவால்
வலிய எளியென யாவதோர் நல்நெறியால்
ஆலிப்ப ஆகவாம் மால்!
1000. பிறவிக் கடன்::
பிறவிப் பெருந்துயர் பாழேயாப் போக்க
மறைப்பால் மொழிந்த அறவழி — கூறில்
தேவ மனித முனிபூத தெய்வம்பால்
மேவும் கடன்நமக்கு ஐந்து.
Composed by:
(Agaram) Kidambi Srinivasa Rangan Srinivasa Dasan.

இயந்திர வாழ்வு இதில்செய் இறைவணக்கம்
மேய அரைநொடியில் ஆற்றி -- பயப்பதோர்
புண்ணியம் உண்டாமால் ஈதல் முறைசெயமால்
எண்ணியாங்கு ஏகும் பிறந்து.

வந்தே மாதரம் - இந்தியத்தாய் மூல மந்திரம் ::
தன் முடிசேர் செவ்வானும், வெண்பனியும் பசுஞ்சோலை இமய வரம்பும்
இன்னும், பொன்தாலி புனைந்தென்ன கங்கைத் தாழ்வரையம், தட மார்பும்
மின்னு மேகலையாம் தெக்கணமும் , அஃகம் பெருக்கி நிற்கும் நிலையில்
துன்னுபுகழ் யாதவாத்ரி, வேங்கடாத்ரி ஜானுவும் , துலங்கு காவிரி பயஸ்விநி நூபுரமும் இலகு
என் பாரத அன்னையை அன்றோ இந்துமா கடல் உதித்த சிரிதேவி என்பேன்!
அன்னை அவள் மூல மந்திரம் - வந்தே மாதரம் சொன்னேன்!

No comments:

Post a Comment