Friday, July 17, 2026

ஆசுகவி - பகுதி 16

 ஆசுகவி - பகுதி 16.

1701. முஹுரஹோ ரஸிகா புவி பாவுகா:
பூமியில் உள்ள பரம பக்தர்களாகிய பாவுகர்களின் நெஞ்சம் ஒரு தூய்மையான கண்ணாடி (முகுரம்). அத்தகு பக்தி நெஞ்சங்களில்தான் பகவானின் எழில் வடிவமும், அவனது லீலைகளின் மெய்ப்பொருளும் எவ்வித மாசும் இன்றி, அப்படியே தூய்மையாகப் பிரதிபலிக்கும்!.
ஸ்ரீமத் பாகவதம் 1-1-3.
''முகுர முக தர்ப்பணம்"
(मुकुर मुख दर्पणम् -உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி)
ஒரு தூய்மையான கண்ணாடி தன் முன்னால் உள்ள பிம்பத்தை அப்படியே காட்டும். அதுபோல, இந்த பூமியில் (புவி) உள்ள உயர்ந்த ரசனை மற்றும் ஞானம் கொண்ட சான்றோர்களின் மனக்கண்ணாடிக்கு, இந்த கவிதை அதன் உண்மையான மெய்ப்பொருளைத் துல்லியமாகப் பிரதிபலித்துக் காட்டும் என்ற உன்னதப் பொருளில் இத்தொடர் அமைகிறது.

[ஒருவரின் புரிதல் அவர்தம் புத்தியின் வெளிப்பாடு. ஒரே பொருளில் (object) சிலர் நற்பண்புகளையும், சிலர் தீய பண்புகளையும் காண்பது பொருளின் குற்றமா? பார்ப்பவர் குற்றமா? கோயில் சிலையை தெய்வமாகவும் (அ) கல்லாக (கலையாக) பார்பது அவரவர் உள்ளத்தையும் உணர்வையும் பொருத்தது தானே. அந்த வகையில் ஒரு தலைப்பு - அதற்கான பாடல் வரிகள் இவை]

பிறப்புயிர் யாவும் எழுதப்படா ஏடதில் 
கூறும் மொழிசெயல் சூழல் -- ஊற 
உருவாம் உணர்வுபோல்எம் பாட்டில் பொருள்சேரல்  
காண்குவார் ஞானமொரு மித்து. 

கருவறையில் கற்சிலை நம்வழி பாட்டு 
உருவமாய் கோயில் புறவெளித் -- திருஉருவம் 
தெய்வமேலும் கல்லாய் கலையாய் காண்பதுபோல் 
செய்யுள் பொருளால் புனிது . 

முமுக்ஷுப்படி - துவய பிரகரணம். 
136.  புருஷகார பலத்தாலே  ஸ்வாதந்த்ரியம் தலை சாய்ந்தாள் தலையெடுக்கும் குணங்களை சொல்லுகிறது நாராயண பதம். 
137. அவையாவன வாத்சல்யமும் ஸ்வாமித்வமும் சௌசீல்யமும் சௌலப்யமும் ஜ்ஞானமும் சத்தியம் 
138. குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம். கார்யம் செய்யும் என்று துணிக்கைக்கு ஸ்வாமித்வம். சுவாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம். கண்டு பற்றுகைக்கு சௌலப்யம். விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள். 
139. இங்கு சொன்ன சௌலப்யத்துக்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்.  
இவை அனைத்துக்கும் ஊற்றுவாய் பகவத் ஸ்வரூப ஷாட்குண்யம். இது அகவிதழ் ஆனால் அவை புறவிதழ்களாம். இந்த குணா-குணீ அன்யோன்யாஸ்ரயம்  பூவுக்கு மணத்தையும், விளக்குக்கு ஒளியையும் போலே, கண்ணழிவற்ற நித்ய யோகம் இங்கும் அங்குமே .  அர்த்தாத் இவை அனைத்தும் பிரகாரி ஐந்து நிலைக்கும் சம்புட ஸம்யோக சித்தம்.                                                                    
1702. சத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்ம 
என்றும் நிலைத்ததாய் மாறாதாய் உண்மையாய் 
முன்பின் நாடுஎன தன்னையும் -- இன்னுயிர்கள் 
தன்மையும் நன்கு அறிந்தனாய் குன்றாத 
ஆனந்த எல்லை இறை. 

1703. பகவத் ஸ்வரூப ரூப விபவம் ::

குணங்கள் ஒருஆறும் மாலுக் குயிராம்;
அணங்கு திருவும் அரனும் - பிணங்குறு  
மார்பும்நல் உந்திப் பிரமனாய முக்குணத்
தோர்க்கிடம் அம்மால் உடம்பு. 

1704. நிர்குண நிராகாரமும்-ஸகுண சாகாரமும் ::

அருவும் உருவும் இருவேறு தன்மை  
அருவாய் உணர்த்தும் அனைத்துப் -- பொருள்கட்கும் 
ஆன்மா எனவாய் உருவால் உணர்த்துமவை  
தன்பால் தழுவு குணத்து. 

1705. ஆத்மா ஸ ஸர்வபூதாநாம் அஹம்பூதோ ஹரி ஸ்ம்ருத: |
அஹந்தா ஸர்வபூதாநாம் அஹமஸ்மி ஸநாதநீ ||
- லக்ஷ்மீதந்த்ரம்-2-13

இயக்கம் இயக்கி இவைஇரண்டில் ஆன 
இயக்கம் ஓர்ஐந்தில் முத்தொழில் -- ஆய 
படைத்தளித்து நீக்கல் வழிஅருளல் அல்ல
திடர்த்தல் துணைமால் திரு. 

1706. ஓம் நமோ நாராயணாய 
என்கிற திருமந்திரத்தில் 
ஓம் - ஸ்வரூபத்தையும் 
நம: - உபாயத்தையும் 
நாராயணாய - புருஷார்த்ததையும் சொல்லும்.
அந்த உபாயம் தானும் பகவதேக உபாயமாகிற சரணாகதியை சொல்லுமிடத்து 
நம: பகவான் தானும்  சொல்வதாக கொள்ளில், அவன் தன்னைக் கழித்து தன் திருவடிகளை உபாயமாக காட்டித் தருகிறான் என்று கொள்ளலாம். இதையே தன்னுடைய அபய ஹஸ்த்தால் தடையில்லா உபாயம் 'நானல்லேன்' என்றும் கடி ஹஸ்தத்தால் அது தன 'திருவடிகள்' தான் என்றும் அபிநயமாக நடித்தும் காட்டுவதை துவய பிரகரண சூத்.
144- சரணௌ திருவடிகளை 
145 - இத்தால் சேர்த்தி அழகையும் உபாய பூர்த்தியையும் சொல்லுகிறது. 
146. பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது. 
"திண் கழலாய்'' இருக்கும்.
147. சேஷி பக்கல்  சேஷ பூதன் இழியும் துறை. பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே இத்யாதிகள் இதனை சூசிப்பிக்கிறது.  

தன்னை அறிகை தமது கடன்பின்னை 
என்னப்பன் என்னாசான் எந்தமர்க்கு -- இன்முகத்து  
மாடுயர் சேவகம் தன்னை 'நம'என்னே 
நீடலுமாம் ஆறுஅவர் தாள். 

1707. கிம் தேன அக்ருதம் புண்யம் சாயுஜ்ய சாதனம்?
(செய்த வேள்வியர்)

ஆதி பிரமன் அவனோடு ஒன்றாம் 
விதியோதும் வேத உபநிடதப் -- பாதை 
அதிலேகல் விட்டுபேதம் ஓதி இறைத்தொண்டு 
சாதிக்கல் தம்தாம் தெரிவு. 

1708. ஆத்மானம் ரதிநம் வித்தி சரீரம் ரதமேவ து ।                                           
புத்திம் து சாரதிம் வித்தி மனஃ ப்ரக்ரஹமேவ ச ॥                             
(கடோபநிஷத் 1.3.3)

புலன்ஐந்தும் பஞ்சவரைப் போல மயக்கி 
வலைப்படுத்தும் இச்சைகள் நூறும் -- போலஅன்  
நூற்றுவர் சாட போர்படுத்தி தேர்நடாத்தும் 
கூற்றுகொல் ? கண்ணன்மால் கூத்து. 

1709. தேவ யானம் - அர்ச்சிஸ் மார்க்க ஆரோகணம் ::

இறந்தற்று வீயுமுடல் தன்னை உறவோர் 
புறம்தள்ளி அஃதை கடைத்தேற்ற -- வேறுலக
மேவுமுயிர் நின்றுபின் நோக்காதே சாகும் 
தவவாழ்வுக் காம்மால் உலகு.  

1710. வடக்கில் சாளக்கிராமம்; கிழக்கில் பூரி ஜகன்நாதம்; 
நடுவில் நைமிசாரண்யமாய் அதன் மேற்கில் புஷ்கரமாய்
ஆவிஷ்கரிக்கும் காஷ்ட பாஷாண சன்நிபன் ::

கல்லாய் மரமாய் வனமாய் புனலுருவாய் 
எல்லாமாய் நில்லும்மால் வண்மையால் — சொல்லாய் 
மொழியாய் துதிப்பார்தம் தோத்ரப் பொருளாய் 
செழுமைசெய் வாய்நீ எமக்கு!  

1711. பிறந்தவாறும் வளர்ந்தவாறும் செய்துபோன மாயங்கள்.        கண்ணனின் லீலைக்கு எல்லையே இல்லை ::

சிறுகனாய் சாகசம் பாலனாய் தீம்பு 
பருவத்தே ராசக் கிரீடனம்— சூரமாமன் 
வைரி குசேலதோழன் பஞ்சவர் சேவகன் 
மெய்ஞானி  பக்தவீடு பேறு. 

1712. உபயோபேய ஐக்கியமத்வம் :: 
ராமன் - உதாரண புருஷன் - பின்பற்ற.(Path) 
கிருஷ்ணன்- லட்சிய புருஷன் - பக்தி செய்ய.(Destination)

வீடடைய வேண்டுவோர் செல்பாதை சேரிடம் 
ஏடதில் வேறதாய்க் கூறிட -- பாலே 
மருந்தும் விருந்துமாகல் போல்நெறி வாசல் 
இராம கிருட்ணர் நமக்கு. 

1713. அந்திமாட்டு முந்தியாவான் ஆய்ந்துரைத்த ஐந்து வார்த்தை::
(ஒன்றானவன் இரண்டதற்கு மூன்றாமவர்வாய் உரைத்த நாலும் ஒன்று). 

ஓத்தார் மிகையார் இலையாய ஓர்பரன்  
தந்தமில் மூவுயிரும் ஆம்பிறிதாய் -- முத்தேவி 
தம்துணையா தாள்பணிய அந்திநினை அல்லதேனும் 
இம்மையிலே நாமாக்கும் வீடு. 

1714. க்ஷேம க்ருஷீவலன் ::
தெய்வத்துள் தெய்வம் திருமால் ஒருவனவன்
செய்யகண்ணாள் தன்துணை சேரசேர்த்திக் -- குய்ய
இருவர் அவராள் உயிர்வகைகள் மூன்றும்
பெரும்பயன்கள் எண்ணில் பல.

1715. இச்சையே அதிகாரம். இரக்கமே உபாயம். இனிமையே புருஷார்த்தம் ::

இராமனாய்ப் தோன்றிபின் தன்னடிச் சோதிக்கு
சேராமுன் தம்மூர் அயோத்தி -- சராசரம்
வைகுந்தம் ஏற்றுவானாய் கண்ணன் தனிப்பயணம்
செய்ததுவும் இச்சையிலார் தாழ்வு.

1716. மணல் சோற்றில் கல்லாராய்வார் உண்டோ?
என்அடியார் அதுசெய்யார், 
செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் ::

ஆனான மால்தேவி லக்குமியே தன்னடியார் 
நாணாது செய்குற்ற மெல்லாம்மால் -- பேணான் 
விலக்குமதை சோதிக்க பன்னி உரைக்கில்  
விலக்குமவை காணாக்கண் கொண்டு.   

1717. மேக் மலஹாரி ::
(இது ஒரு மேக மூட்டத்தையும், மழை இரைச்சலையும் உணர்த்தும் தாப ஹாரி ராகம்)

வாடும் பயிர்வாழ நீடுகொடை மேகம்கண் 
டாடுமெழிற் பீலி மயில்போல் -- வாட்டுமுயிர்க்   
காதல் அனல்தணிய மேகவண்ண! கூட்டுமாலென் 
கூதைநோய் தீர அணைந்து.  

1718. துவஜா பஜ்யேயம் ந நமேயம் ::

தாகம் தணிக்ககேணி நீர்செய்ய வீழ்ந்ததில் 
சாக நினைப்பதே? தம்பிக்கு -- ஆகும்  
அடைக்கலம் அண்ணற்கும் நீட தலைவணக்கா 
கேடர் கெடுவ  துயிர். 

1719. பிராதிகூல்ய-ஆனுகூல்ய வீடு-பற்றுக்கு 
தேவதேவி-குமுதவல்லி ::

பெண்வலைப் பட்ட இருவர் அடியார்கள் 
ஒண்மதிப்பு நாமறிய ஆழ்வார்கள் -- என்றாக்கி
பாசுரங்கள் தன்னாகிக் கொண்ட அரங்கனருள் 
பேசிப் பெயர்க்ககில்லா வே!

1720. ஸ்வஸுரம் அமரவந்தியம்

திருவாடிப் பூரம்  உதித்திட்ட ஆண்டாளும்
சேர குலவல்லித் நாச்சிமாரும் — பேரரங்கர்
தன்தேவி ஆககர்ம யோகி சனகன்போல்
நன்மாமன் ஆவர் பிது.

1721. திவ்யஸூரி ஜனகம் ::

சங்கு கதைவாள் சக்கரம் சேனையர்கோன் 
வீங்குயர்புள் மேதினி கௌதுபம் -- தூங்கு 
வனமாலை மார்வில் மறு குமுதரென  
சார்ங்கவில் சேவகர்ஆழ் வார்! 

1722. மித்யாவாத மரீசிகா (मरीचिका) ::

தூரத்தே உண்மையை வைத்து இகத்தில்வாழ் 
சாரமற்ற வாழ்வியல் யாவையும் -- நீறாம் 
பொய்க்கனவாய்க் கூறும் பருப்பதப் பொய்யுரை 
கொய்துய்தான் ராமா நுசன்..  

1723. ஸர்வே மனோ நிக்ரஹ லக்ஷ்ணாந்தா :
(சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட 
சாதனங்கள் தர்மங்களின் நோக்கம் சமுமம், தமமும்)

ஆசைக் கடலின் அலைவாய் பறக்கும் 
விசைப்படகாய் பற்றுகள் தோறும் -- நசைகொளத் 
தொற்றி தரிகெட்டு ஓடும் மனதை மடைமாற்றி 
பற்று அறுப்பான்தாள் முற்று. 

1724. கிணற்றில் விழுந்த குழந்தையை தாயே தள்ளி விட்டால்  
என்ற பெயர் வாராமைக்கு 

தாயாகிய தான் "குழந்தையைத் தள்ளிவிட்டாள்" என்ற பெயர் வராதபடி அஞ்ஞானக் கிணற்றிலிருந்து தூக்கி, விஜாதியனான தான் நேரடியாக வந்து திருந்தாத சம்சாரிகளை, சஜாதீயரான ஆசாரியர்கள் என்னும் "தோழமை ஆன்" (கும்கி யானை) கொண்டு "கான் ஆனை" (காட்டானை) போன்ற நம்மைப் பழக்கித் திருத்தி, நாற்றிசைத் திவ்யதேசங்களிலும் நிலைத்து நின்று, 7 அருள் படிகள் வழியே பரமபதத்தில் தன் கைங்கர்யத்தில் சேர்த்துக் கொள்கிறான்!

ஏழையர் எம்மை இனிப்பாழே போகாது
தோழமைஆன் கொண்டுகான் ஆனை -- பழக்கி
உழக்கல்போல் நாற்றிசையும் தான்நின்று நம்மவரை
சூழும் படிக்கட்டு ஏழு.

அந்த 7 படிகளாவன:
விவேகம் (நல்லறிவை அடைதல்)
நிர்வேதம் (சம்சாரத்தின் மீது வெறுப்புறுதல்)
விரக்தி (லௌகிக ஆசைகளைத் துறத்தல்)
பீதி (சுவதோஷத்தைக் கண்டும் பிறவிப் பிணிக்கும் அஞ்சுதல்)
பிரசாதனம் (எம்பெருமான் தன்னை உபாயமாக காட்டித் தருதல்)
உத்கிரமணம் (உடலை விட்டு ஜீவாத்மா கிளம்புதல்)
ப்ராப்தி (பரமபதம் அடைந்து நித்ய கைங்கர்யம் பெறுதல்)

1725. ஞான வைராக்கிய யோகாம் ச தியானம் ஏகாக்ர சித்தைக சாத்யம்
ந ஸுகரம் ந்ருணாம் தஸ்மாத் அத்ர ஸுகோபாயம் ஶ்ரீமந்நாதமநா.
(சங்கீத ரத்னாகரம்)

நாதவேத சாமனே நாரா யணனே! 
ஓதுமொழி ஓசை எலாம்கீதை -- ஓதிய   
யாதவனே! அம்எழுத்து ஆன பிரணவ 
போதமெய் ஞான விளக்கு.

1726. கச்சதா மாதுலகுலம் பரதேந ததா (அ)நக !
ஸத்ருக்நோ நித்யஸத்ருக்நோ நீத: ப்ரீதிபுரஸ்க்ருத: !!
சத்ருக்னன் பரதனுடைய உகப்புக்காகவே ராம பக்தியையும் விட்டு,
பரதனைப் பின் தொடர்வது, இறுதியான பலன்
ராமரின் உகப்புக்காகவே என்று உடையவர் அருளிச் செய்வர்.
ஆசார்ய ருசி பரிக்ருஹீத பகவத் கைங்கர்யம்போலே 
பகவத் ருசி பரிக்ருஹீத பாகவத கைங்கர்யம் சத்ருக்னன் படி

அரசன்மார் கையில் உடைவாளை நீங்கக்  
கருதார்போல் ராமகாம பாபமதும் -- தீரஇலா 
சத்ருக்னன் ஏகும் பரதன் பணிசெய்ய 
சொத்தென ஆள விடுத்து. 

1727. அவாகீ அனாதர :
(வேண்டுதல் வேண்டாமை இலா மௌனி - இறைவன்)
(ஸதா பஸ்யந்தி ஸூரய:)

காணா பரனுலகம் கண்டவர் தம்நிலை 
பேணான் பிறவி முடித்து -- நாரா 
யணன்தனி உலகமேகி நோக்கும் செயலும் 
கணமுமவ னுக்காம் தொடர்ந்து.

1728. உத்தமன் பேர்பாடி பரமன் அடி பணிய 
நாராயணனே பறை நமக்கே தருவான்.  -ஆண்டாள்.

நாரா யணன்நம் பரனடி தன்நாமம் 
ஓரா யிரம்பரவிப் பாடபெரு -- வேள்வி 
எரிகுண்ட இந்தளத்து இக்மம்போல் தீய்ந்து 
கரித்துண்டாய் பாழேபோம் ஊழ்.   

1729. அக்ஷர, அபர, பராத்பர த்ரிமூர்த்த பிரஹ்மம் ::
(காரிய காரண ஸப்த ப்ரஹ்ம ஐக்கியமத்வம்)

ஒலியோசை சொல்முதல்'அம்' என்ற பிரணவமாய்  
காலஇடத்து நேர்நிகழ்வு கள்கொண்டு -- லீலா 
கைவல்யமாய் தான்செய் உலகுயிர் எல்லாமும் 
தெய்வம் திருமால் உரு.

1730. இரண்டவதாரத்தில் ஆமது 
ஓர்அவதாரத்தில் ஆக்கும் குரு.

கால்பட்டு கல்லும் கவின்இளம் பெண்ணாமால் 
மால்திருக் கண்பட்டு தீய்ந்தகரிக்-- குட்டனை 
கோல்குரிசில் ஆக்கும்,எம் ஆசான்றன்  நோக்கதே 
சால்பு காலாக்கும் பேறு.

1731. ஆப்னோதி பரம் ஆத்மா 
(ஜகத் ஸர்வம் சரீரம் தே - என பிரகிருதி-புருஷர்களை 
தனதாக்கிக் கொள்பவனுக்குப் பெயர் ஆத்மா)
என்றாலும் ஜீவ-பர பேதம் தோற்ற ஜீவாத்மா-பரமாத்மா 
என்று சொல்வதின் காரணம் :

ஆண்டான் அடியான் இவனவர்க்கு செய்தொண்டு 
கொண்டும் நியமிக்க வேண்டுமதாய் -- ஈண்டு 
உடல்உயிர்க்கு ஆதல்போல் ஈசன்உள் நின்று 
நடத்த தளைஇலார்க் ஈடு.

1732. ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் 
மாட்டுக்கு அதனை நீள வைப்பான் என்?

கல்வி தரும்செல்வம் ஜன்மம் மரணம்தன் 
வல்வினை யாயஇவை ஐந்துநாம் -- நில்லா 
உலகில் பிறவி எடுப்பான் பரமன் 
அலகிடும் நெற்றிப் பொறி.

1733. நிர்மோகத்வே நிஸ்சல தத்வம் ::


பிறவியுள் பல்கால் பிணங்கி சலிப்புற்று
வேறா விளையும்மேன் வீட்து -- சேர, நாம்
நேராத நாடி திசைப்ப ஈசன் தன்
பேறா வழிநடத்தும் பின்.


1734. அனுஷ்டான வேளை -> செயல் முற்பட பயன் பிற்பாடதாய்
(உ.ம். அக்கினிஷ்டோமேந ஸ்வர்க காமே யஜேத) 
உபதேச வேளை -> செயல் பிற்பட பயனை  முன்னம்மொழிவர்.
(உ.ம். ஒழிவில் காலம் - அகலகில்லேன் திருவாய்மொழி)

பயன்கரு தாது செயல்முனைவார் உண்டோ
உயக்கொண்டு போகுங்கால் உண்டாம் -- பயனது 
முந்துற ஓதி செயமுடிப்பார் பின், அவரே 
பிந்திமுன்பாய் ஆற்றுப் படுத்து. 

1735. அத்தினத்துக்கும் ஓட்டகைக்கும் ஆயிரம் காதம்
ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்
(நாடோடிப் பாடல்)

சங்காழி  தண்டுகை ஒட்டகை கோவிந்தா !
பங்கயக் கண்ணா! அடைக்கலம் என்  --  றேங்க, நல் 
ஆடை சுரந்துமானம் காத்தான் சமரிலைவர் 
நாட்டைவெல் வித்தனவை கொண்டு.

1736. கார்கோடகஸ்ச நாகஸ்ச நளஸ்ச தமயந்தியா: 
ருதுபர்ணஸ்ய  ராஜ ரிஷே : கீர்த்தனம்  கலிநாசனம்   
(இந்த சுலோகம் ஸ்ரீமத் பாகவதம் மற்றும் மகாபாரதம் 
(நள-தமயந்தி வரலாறு) ஆகிய புராணங்களில் இடம்பெற்றுள்ள 
மிகவும் சக்திவாய்ந்த ஒரு பிரார்த்தனை ஸ்லோகமாகும்.)

மதுமாது சூது இம்மூன்றும் பஞ்சமகா பாதகம் 
அஃதூள் தீதுமுன்னில் பின்னது  --  ஆதலால் 
ஏத கலிபுருடன் நீக நளனவன்
காதை செவிசேர்செவ் வே!

1137. தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை (என்ற)
தாய் சொல்லைத் தட்டாதே. 

பன்றியாய் பார்மகட்கு அன்றோதிய வார்த்தையை 
நன்கறிய நம்மவர்க்கு தானுரைத்தாள் -- மன்றில் 
மணம்கமழும் மல்லிகைப்பூ மாலையை மாதவர்க்கு 
தானணிந்து தந்தளாம் தாய். 

அஹம் ஸ்மராமி மத்பக்தம் - என்றான் வராஹப் பெருமான்.
அஹம் த்வா மோக்ஷயிஷ்யாமி - என்றான் கண்ணனெம்பெருமான்.
ஏதத் விரதம் மம - என்றான் இராமபிரான். 
இந்த மூவராகிய ஒருவரே நம் அரங்கநகர் அப்பன். அவரே நமக்குத் தந்தை. 
அவர் உரைத்த வார்த்தைகளே நமக்கு அமூல்ய மந்திரம்.
அந்த அரங்கனையே ஆசைப்பட்டு, அனுகரித்து பாவை பாடி
 ''உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்'' என்ற 
தாய் சொல்லை மீறுவதற்கு இல்லை. மாறாக ''கரிஷ்யே வசனம் தவ'' என்று 
இருவர் உபேதங்களையும் ஏற்று நடப்பவர்களே ''தம் மக்கள்'' ஆவர்.

1738. கொல்லாமை நல்லறம் அஃதல்ல செய்இருவர் 
தொல்கதை கேட்டாள் தெளிவு.  

புலால்வாணிபம் செய்வியாத னேனும் முனிவரும் 
ஆலோ சனைக்காவன்  நாடுவர் -- ஏலாக்  
கொலைவேடன் தாம்கொணர் ஊதியம்தம் இல்லையென் 
சொல்லிடவான் மீகியாம் பின்.   

1739. தசரதஸ்ய யோ புத்ர: புமான் தாசரதி: ஸ்ம்ருத: |                                                                                                                 
பக்தி-ஞான-பலைர் யுக்தா: மாத்ரூ: க்ருத்வா ராம: ஸ்வயம் ||          

தயரதன் ஆய்ந்த மனைவிமார் மூவரவர் 

பயத்ததும் மூத்தவள் பக்தி -- உயக்கொண்ட 
வத்தால் இளையவள் ஞானத்தால் மத்யமாம்பாள் 
பெத்த விறல்வலிமைக் கென்று

1740. நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர் 
சிறுமானிடவர் நாம்செய்வதென்?
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே::
-- நாச்சியார் திருமொழி-10.10-

தியானமோன ஆரா தனாசா தனையும்
பிராண அபான வியான — உதான
சமானயேன உச்சுவாச நிச்வாச யோகா
சனமுமேனோ மால்கைப் பெறின்?

1741. கீராத ஹூணாந்த்ர புலிந்த புக்கஸா
ஆபீா கங்கா யவனாஃ கஸாதயஃ |
யேऽன்யே ச பாபா யதுபாஸ்ரயாஸ்ரயாஃ
ஸுத்யந்தி தஸ்மை ப்ரபவிஷ்ணவே நமஃ ||
ஸ்ரீமத் பாகவதம் 2-4-18.

மிலேச்சனும் பக்தனானால் சுத்தனாம் பூசிதனாம்
மாலொச்சு மாகவை குந்தத்தே -- கோலோச்சு 
சூரிக ளோடுஒரு கோர்வையாம்  ஈங்கவர் 
ஊரும் குலமும்  உயர்வு.

1742. பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு 
திறங்கள் காட்டியிட்டு செய்து போன  மாயங்களும் 
நிறந்தநூடு புக்கு எனதாஙியை நின்று நின று உருக்கி உண்கின்ற 
சிறந்தவென் வான்சுடரே!
திருவாய்மொழி 5-10-1

கஞ்சன்கை ஆள்பதின்மர்க் கொன்றுபின் பங்காளி 
துஞ்ச சமரில்  பதினெண்அக் -- ரோணிசேனை 
வஞ்சனையால் வீழ்த்தான்  பிறந்தகுடி யாதவரும்
எஞ்சாமை கண்டகல்வான் என்?

1743. பசியன் சோற்றைக் கண்டாப் போலே
வறியன் புதயல் கண்டாப் போலே::

உடமைக்கு ஒர்முழுக்கு நம்மை உடைய
கடவுளுக்கோ பல்முழுக்கு எற்றேமால் — வீடில்
பிறவிப் பெருங்கடல் வீழ்ந்தயெமை மீட்கச்செய்
மாறிலவ தாரம் ப(போ)ல. 

1744. இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லிற்று ::

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடுஎனவால் — தேவியேலும்
வாயினால் கூசுமொழி தொண்டன்பால் பேசித்தால் 
தீயினாக்கி மீட்டான் அவள். 

1745. அவித்யா கர்ம வாசளா ருசி பிரக்ருதி சம்பந்த 
ஆத்யாத்மிக ஆதிதெய்விக ஆதிபௌதிகம் 
ஆகிய இவை எட்டும் ஈநாயனம் ::

முன்னிலாய நாலும் இதற்கேலும் காரணமாம்
பின்னிலாய மூன்றும் இதுதன்னால்— பின்னிப்
பிணைக்கும் உடலம் உயிர்க்கு இடும்பை
சுணைகருதி வெல்லல் நலம்.

1746. ஶ்ரீமத் பாகவதாக்யோயம் சாட்சாத் கிருஷ்ண ஏவ ஹி |
யஸ்ய ஸ்தோத்ரம் குணாநுசந்தான ரூபம் ||"

தன்னிலும்  தன்னின் திருநாமம் முந்துற  
உன்னியே காவல்செய் காவலோன் -- இன்னுமே 
இவ்வுலகோர் உய்வுற   வேத  இதிகாச 
முவ்வாறு மாப்புராண மாகு 

1747. அவனருளால் அவன்தாள் வணங்கி ::

கண்ணிரண்டுக் காம்பரிசு அன்நின்ற நின்னுருவம் 
ஒண்காதுக் காம்பரிசு மாயநீ -- பண்ணின 
பொய்கலவா மெய்விளை யாட்டவையாய் என்சென்னிப் 
பெய்தகைஐ யன்வான் பரிசு. 

1748.நின் நாமம் கற்ற ஆவலிப்புடமை கண்டாய் அரங்கமா நகருளானே.
-- தொண்டரடிப்பொடி ஆழ்வார். 

கலௌ நாஸ்த்யேவ  நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிரன்யதா
ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம ஜீவனம்
- போதேந்​திர சரஸ்வதி சுவாமிகள். 

மலைஅருவி போலாகல் நெஞ்சும் கரைய
அலைகடல் பள்ளிகொள் மாமாயன் — மாலை​, நன்
காலை​ பின் மாலை அவன்நாமம் கண்சோர
ஆலித் தகல்வான் பொழுது!

1749. ஜன்மாந்தர சகஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி:  நராணாம்
க்‌ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி: பிரஜாயதே

அண்ணல்பால் அன்புதான் இற்பிறப்பில் எய்தலும்

எண்ணிறந்த முற்பிறவி தம்மில்செய் — புண்ணியம்
அல்லதே தீவினை மாய்குறநம் கண்ணன்கண்
அல்லதே இல்லையோர் கண். -

1750. மயர்வற மதிநலம் அருளினன் எவனவன் 
துயறறு சுடரடி தொழுதெழு என்மனனே ::

முன்செய்த புண்ணியம் அல்லதே தெய்வம்தன்          
இன்னருள் ஒன்றால் சிலரை — சிலகால் 
நன்றுஇன் நாடு திருத்திநல் வீடாக்கும்  
என்று, தான் ஆழ்வார்கள் செய்து. 
1751. விஸ்மயமாநம் ஈசம் ::

ஒன்றெள் றுரையிலவன் ஒன்றாம் பலவென்றே 
தான்தீர் நினையில் பலவாகும் — ஒன்றும் 
பலவும் இருவேறு கூறு அலதாய்
நிலவும் இறையின் திறத்து .

ஒன்றை நினைக்க பிறிதொன்றை காட்டுவாய்
அன்றி அதுவேயாய் ஆகிலும் — நன்றெனாமுன்
சாரா அதனின் புதிதாய் வெளிப்படுத்தாய்
யாரே நினைமுடியக் கற்று?

1752. தததிகம உத்தரபூர்வாக யோரஷ்லேஷ விநாஷௌ தத்வ்யபதேஷாத்
பிரஹ்மசூத்ரம் 4-1-13

மாமுனி வேள்வியில் வந்த ஒருவனை 
சாமென மாய்த்து ஒருவனை -- போமென 
நீத்ததாம் ஒக்கும்நம் முன்வினை மாய்த்து 
வருவினை நீக்குமால்தாள் போந்து. 
 
1753. 'அஹம்' அல்லதை அகம் என ஆதரிக்கை அகங்காரம் :: 

யான்எனது என்பதாம் வேற்றுமை தோற்றவாம் 
சான்றுசெய்  வேற்று உறுபதை -- நாம்நோக்கில் 
யானல்ல அஃதைநீர் யான்என எண்ணுகை 
தான்அகங் காரமதை நீக்கு. 

1754. பச்சைமா மலைபோல் மேனிப் பவளவாய் கமல செங்கண் 
அச்சுதா! அமரர் ஏறே::

பாசி படர்ந்தோர் மலையும் அதனின்

வசத்தேயாம் செந்தீ மலரும் — பலாச
மரமும் மருங்கினில் தாமரைக் காடும் 
விரவுமால் கண்கனிவாய். காட்டு. 

1755. ஒரு கதை. அது உணர்த்தும் உண்மை ::
வன விலங்குகளின் பெருக்கம் குறைக்க அரசனும் அமைச்சனும் வேட்டையாடச் சென்றனர். காட்டில் அலைந்து திரிந்து இருவருக்கும் பசிதாகம் மேலிட இருவரும் உணவகம் காணாது சோர்ந்து போயினர். அமைச்சன் கடவுளை தியானித்தால் வழிபிறக்கும் என்றான். அரசன் தொலை தூரத்தில் விளக்கு எரிவதைக் கொண்டு அங்கே சென்று முயற்சிக்கலாம் என்றான். அமைச்சன் தெய்வபலத்தில் நம்பிக்கை கொண்டு தியானத்தில் மூழ்கினான். அரசன் தன் முயற்சியில் நம்பிக்கை கொண்டு விள்க்கெரியும் திசையில் நடந்தான். அங்கு ஒரு மூதாட்டி அரசனக்கு பசியாற்றினாள். உணவருந்திய அரசன் அமைச்சனுக்கும் ஒரு பட்டை சோறு கேட்டுப் பெற்றான்.
அரசன் கொண்டுவந்த சோற்றை புசித்து அவனும் பசியாறினான்.
இப்போது அரசன் தன்முயற்சியால் சோறு பெற்றதை குறிப்பிட, அமைச்சன் மறுத்து தன் தெய்வ நம்பிக்கையால் சேவகம் பெறவேண்டிய அரசன் தனக்கு உணவை கேட்டு பெற்றுத் தந்ததை தெய்வ பலத்தால் நடந்ததாகச் சொல்லிக் கொண்டான். இந்த நிகழ்சியை விளக்கும் பாடல் :: 

வேட்டை நடுவே வயிறு பசித்திட
காட்டின் நடுவே உணவது - ஈட்டிட
தெய்வபலம் தன்முயற்சி ஈதிரண்டில் வெல்வதுவும்
ஐயம்தவிர் தெய்வம் வலிது.

1756. பூத ஸூக்ஷமம் ருசி வாசனா சஞ்சித கர்மமிவை 
தூம மார்க ஆன்மா துணை. 

பொறிஐந் ததன்மூலக் கூறும் செயல்வாய்
உறுநசையும் பல்பிறவி தோறும் — நிறைபதிவும் 
தூறா விளையும் இருவினையும் 
பேணிப்
பிறிதுடல் சேரும் உயிர். 

1757. பிரம்ம ரந்திரப்ராப்தி ::

நூற்றில் ஒருவிந்தால் உந்தப் பிறந்துபின்
நூற்றில் குறையாது வாழ்ந்துமுன் — நூற்றோறாம்
நாளம் அதைபற்றி ஏற ஒளிமார்கத்
ஆளாம் நபர்வைகுந் தத்து. 

1758. செம்புனல் பெயல் நீர்போல் நம்மிடை கலப்பராம்
மஹநீய: மந்த: நீரந்ரேண ஸம்ஸ்லேஷ:
ஸீலவது ::

மாலேநின் பாலேபோல் சீர்நாமம் எத்தனையும்  
ஞாலத்தே மேவாது வானத்தே — பாலிப்ப
பகல்விளக்காம் அன்றிநீ இங்குற குன்றின்மேல்
அகல்விளக்காம் நீர்மைபோல் ஏது?

1759. அக்ஞானஸ்த ஹேதோஹோ கூபஸ்த மண்டூகா: 

கிணற்றுத் தவளை வெளிநாடு உண்டென்
உணரா வதுபோல் இறையருள் — காண 
கலைகள் பதிநாலும் ஞானபக்தி தாள்தடச் 
சாலைப் பயிலார் நுணல். 

1760. மாயாம் ந சேவே பத்ரம் தே ந வ்ருதா தர்மமாசரே | 
சுத்தபாவம் கதோ பக்த்யா சாஸ்த்ராத் வேத்மி ஜனார்தனம் ||  
-ஸஞ்சயன் .

உடனோதி உண்மை அறிவிலா மன்னன் 
மடமை தெளியவே தேரோட்டி  -- சஞ்சயன் 
கோடிட்டுச் சொன்னமொழி  ''வஞ்சனை நீத்துகற்ற 
ஏடுவழி கண்ணனைக் காண்''

1761. வந்தாய்போலே  வாராதாய்
வாராதாய்போல் வருவானே!
- நம்மாழ்வார் திருவாய்மொழி 6-10-9

அல்லல்தீர் மால்தனக்கும் ஆனவல்லல் மூன்றவை
சொல்லில் முதலைவாய் ஆனைசிறை - பட்டதும்;இங்
இல்லை அரி'யென்? இரணியன்தூண் தொட்டதும்
நல்லபலை பட்டைபறித் தாங்கு. 

1762. நாஸ்தி பிரத்யவர வாநரம் கஸ்சிது ஸுக்ரீவ ஸந்நிதௌ
- தன்னைக் குறித்து சீதைக்கு  ஹநூமத் வசனம்

யோஜனை நூறு அகல்ஆழி தாண்டிய
சாதனைக்காம் பேறு தலைக்கொளாத - தூதனை
ராமன்கை மோதிரம் ஈதென சீதைக்கு
ஈந்தானை வாதனை சாற்று.  

1763. கர்பகதி, யாம்யகதி, தூமகதி, அர்சிராதிகதி 
இன்நின்ற கதி நான்கில் யாவரும் இறந்தபின் செல்கதி ஒன்று.

ஆக்கையுள் ஆவி பிரியிலது செல்கதி
மாக்கள் எனமாதா கர்பத்து - நூக்கல்
சுவர்க நரகவீடு போகார் திவத்து
ஒளிகொண்ட சோதி பிடித்து.

1764. தர்சனம் பேத ஏவச ::

பிரமம் அருவமாய் லிங்கமாய் தேவதையாய் 

ஓரோரு காலத்து மாறியதோ? -- பாரில் 
கடவுளர்தம்  வேதா கமபுராண தோற்றத் 
தடைவே சமயப்  பிணக்கு.  -

1765. அருள்வழி செல்செல்வம் ஆக்கும் திரு::

ஓடியாடி சேர்த்த பெருஞ்செல்வம் போகுங்கால்
கூட வராதென்பர் ஆதலால் — மாடதனை
நன்நெறிக்காய் வித்திட்டால் பெற்றிடும்  புண்ணியம் 
பொன்றுங்கால் பொன்றா துணை. -

1766. ராமோ விக்ரகவான் தர்ம : - கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம் 
(ஆத்மாநம் மானுஷம் மன்யே) - (அஹம் வோ பாந்தவோ ஜாத:)
(மரியாதா புருஷோத்தமன்) - (லீலா புருஷோத்தமன்)

ராமனின் பாதையில் ஏகலும் கண்ணன்மால் 
தாமவன் செய்தனதாம் போக்கி -- பாமரரும் 
நம்பி செயல்படவாம்  தேர்த்தட்டு வார்த்தயவை 
ஓம்பி ஒழுகல் உயர்வு. 

1767. யார் வைதிகன் ?

வாசித்தல் கற்றல் உணர்தல் ஒழுகலென
பூசித்தற் குற்றசாதி அந்தணன் - பேசிய
நாலும் பழமறை சாகையும் பாலிப்பார் 
செந்தண்மை யோடாம் பெரிது.

1768. மதியாநாதி கர்மப்ரவாஹ பிரவிருத்தாம் 
பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் 
விபரீத ஜ்ஞான ஜநநீம் 
ஸ்வவிஷயாஸ்ச போக்கிய புத்தேர் ஜநநீம் 
தேஹேந்த்ரியத்தவந போக்யத்தவேந சூக்ஷ்ம ரூபேண சாவஸ்திதாம் 
தேவீம் குணமயீம் மாயாம்
(சரணாகதி கத்யம் சூர்.12)

கருவை உறையும் நெருப்பை புகையும் 
உருவுகாட்டும் ஆடியை மூடி - கருக்கும் 
புழுதியும் போலா அறிவை மழுங்கும் 
அஞான மூடு திரை..

1769. ராகவன் வாழ்வும  யாதவன் வாக்கும்
அடியவர்க்கு பாதையும் படிப்பினையாகும் ::

நரம்கலந்த சிங்கமாய் நாரா யணன்தான்
வரத்தின் வரம்புள் அவுணன் - உரம்கடிந்தான்
ராகவ சிம்மம் யதுகுல சிம்மம
தாகவந்து பேசி நடாத்து. 

1770. பிரம்மா ஸ்வயம்பூ: சதுரானனோவா
ருத்ரஸ் த்ரிநேத்ர: த்ரிபுராந்தகோவா|
இந்த்ரோ மஹேந்த்ர: ஸுரநாயகோவா
த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம்||
-(ஸுந்தர காண்டம் ஸர்.51 ஸ்லோ.45)

முக்கணான் மொய்ம்புடன் ஈந்த வரத்தினார்
எஃகு அனைய உரத்தினார் - பக்கம்
அரனேலும் பத்தலையன் பாணனொடு கர்ணன்
உரம்மேவா மாலின் புகர். 

1771. ஹனுமன மதமே ராமன மதமு ::

மனையாள் தன்னைப் பிரித்ததச கண்டனை 
தானை தனிப்போரில் இன்றுபோய் - மேனாள்வா
வென்விடுத்தான் மற்றேனோ வாலியை கண்டகன்போல் 
கொன்றான் இராமன் முனிந்து? 

1772. முமுக்ஷஉவுக்கு அறிய வேண்டும் ரகசியம் மூன்று. 
(பிள்ளைலோகாசார்யர் முமுக்ஷுப்படி சூத்.1)
அதாவது 
மும்மைசால் உலகுக் கெல்லாம் மூல மந்திரம் மூன்று ::

தன்நிலையை முன்னறிய எட்டெழுத்துத் தொன்மந்ரம்
பின்அவனை கிட்டும் வகைஇயம்பில் — மன்னுயிர்க்கு
கண்ணன் கழறும் கடைமொழிவாய் சென்றாங்கு
அண்ணல்மால் ஆட்ச்செய் இரண்டு. 

1773. அர்த்த பஞ்சகம் :

பரன்தன் பெருமை  உயிர்கள்தம் தன்மை
கரைசேர் முறைமை விரைந்து - இறைசேரா
மூள்வினை தன்முயற்சி தாழ்த்து பரனருள்
ஒன்றால் விளைவீடே வாழ்வு. 

1774. ஆலோட்ய  ஸர்வ சாஸ்த்ராணி விசார்யச புநப்புந :
இதமேகம் ஸுநிஷ்பன்னம் த்யேயோ நாராயணோ ஹரி:

ஆய கலைகள் பதிநான் கவைநன் 
குயஓதி நீர்உணரு மேலாம்  -- உயர்பொருள் 
தாம்சொலில்  எல்லா எவர்க்கும் நயம்பட 
வாம்பொருள் அரிஒருவன் என்று. 

1775. வேதாஸ் சாஸ்த்ரம் பரம் நாஸ்தி
ந தெய்வம் கேசவாத் பரம் ::

சாட்டி இலதோர் அரும்பெரும் தெய்வம்மால்
காட்டிடும் வேதம் கருணையால் - நாட்டினான்
நாநிலத்து பல்தெய்வம் உய்பவர்க்கு உய்வண்ணம்
மேனிலாமோ மற்றை யவர்?

1776. பகவன் நாம கிரஹணத்துக்கு உபதேஷ்டாவான குரு அபேட்சையும்
காசியாம் மரணம் முக்தி என்பதான தேச அபேட்சையும்
குளிகை பகல் உத்தராயணம் இத்யாதி கால பிரதீட்சையும்
வைதரணீ தான தர்மாதிகள் செய்ய தட்சிண தாம்பூலாதி திரவ்யாபேட்சையும்
இப்படி எதுவும் வேண்டாதபடிக்கு பிள்ளையின் நினைவில் நாராயண 
நாம கிரகணம் பண்ணின அஜாமிளன் பராங்கதி கண்டு கொண்டான் 
என்றால் நாம சங்கீர்த்தனத்துக்கும் ப்ரபத்திக்கும் கால தேச வஸ்து விவஸ்தா 
அதிகாரி நியமம் எதுவும் இல்லை. கேவலம்  விஷய நியமம் மாத்ரமே உள்ளது.

குருவரியர் தீட்சையும் முக்திநீடு தேசமும் 
பூரித தக்கணையோ டாம்கால - நேரபரி
காரகாமம் ஏதுமில் நாரணன் நாமம்
பரவும் அஜாமிளன் உய்ந்து. 

1777. அகத்திணை ஆர்ப்பு  ::
மேக விடுதூதும் நாரைவாய் மாற்றமும் 
மூகர் முகப்பே மடல்ஊர்ந்தும்  -- சோகமிடர்   
தோழியவள் சாடும்  மருகுதாய் தன்பழியும் 
நேரான்மால் நங்கள் பிழை. 

1778. தனிநலம் தேடும் மனித குலம்
தெய்வம் தனக்காய்  இணைக்கும் பாலம் ::

கூடிவாழ் காகை கரைந்து உடன்உண்ணும்
கூடி எறும்புகள் சங்கிலிபோல்  - ஓடியாடும்
கூடா மனிதர் தனித்திரிவர் தெய்வக்தான்
கூட்டுமவர் தனதா  கத்து. 

1779. பாகவத அக்ரேச: சிவ:

எட்டெழுத்து மந்திரத்து ஓரெழுத்து தாம்-ரகாரம்
கற்றை சடையான் சிவநாமத் - துற்ற
எழுத்து மகாரம் இவைஇரண்டும் சேர
எழுமைநோய் ஔடதமாம் “ ராம் “!

1780. The proof of God is in His Creations.

நேர்மின் எதிர்மின் சுமையில் துகள்மையக்
கூரின் நிறைஅடர்த்தி எண்ணிக்கை - ஆர்ந்த
அணுகள் பிரபஞ்சம் அண்ட தடாக
இணக்கம் இறையின் படைப்பு. 

1781. கிருஷ்ணார்சன பிரபவாதி நோ ஜகாதி

முனியாய் இருந்து ஒருமான் தினைவில் 
தனதுயிர் போக மறுமையில் -  மான்என 
வாயினும் ஈட்டிய தற்றவம் நட்டத்து
வீயதே கூட்டும்மால் நோற்று. 

1782. தனம் தானம் ஞானம் மூன்றும் 
ஒருநாள் உழைப்பில் உயராது. 

ஈதல் இசைபட வாழ்தல் மறைநாலும்
ஓதல் அதன்வழி சாகல் - நிதிபல
கூடல்  இவைநல்ல வாதலின் மாடிவை
ஈட்டநீள் காலம் வேட்டு.

1783. அறுவடைக்கு வந்த பயிர் களவுபோகமே காக்க கழனியில் பரண்கட்டி வசிப்பாரைப் போல 
ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரணி தடே ரமயா ரமமாணாய வெங்கடேசாய மங்களம்”

காலத்தால் ஞானத்தால் பக்தியால் சாலப் 
பலநாளாண் டூழியூழி பின்னானார் - பாலிப்ப
விண்ணாடு தான்விலகி கோனேரிக் குன்றதன்மேல்
அண்ணலார்சேர் வேங்கட வெற்பு. 

1784. ஸ்வாசாரியன் உபகாரக ஆசாரியன்-உத்தாரக ஆசாரியன் பரமாசரியன்.

பல்பொருளை பன்முகத்து கேட்டுத் தெளிகிற்பார்
நல்லாசான் பான்மைப் பலருள்ளும் - செல்கதிக்கு
தீயில் இலச்சினையும் மந்திரமும் ஈயும் 
எதிராச ராம்அவரே உய்வு. 

1785. ஜலான் மச்யான் இவோ த்ருதௌ ::

அக்குளத்து மீனதே ஆயினும  ஞானமில்
குக்கரில் கீழ்மிறவி புக்கதால் - மோக்கம்
நணுகா அவைபெரு மானுடல் ஊறும்
அணுக்க கரைப்பானை ஒத்து. 

1786. பாதச்சாயா ஸுகா பர்த்து: தாத்ருசஸ்ய மஹாத்மன: 
ஸ ஹி நாதோ ஜனஸ்யாஸ்ய ஸ கதி: ஸ பராயணம்.
ஶ்ரீராமாயணம்.  

உடலை நிழலில்  உயிரை வெயிலில்
விடுப்பார் திருந்தி  திருமால் - குடைக்கீழ்  
வருதலும் ஓய்விடம்  மாலடியார்  ஆல
மரநீழல் போலாம் கழல்.

1787. குழலழகர் வாயழகர் கொப்பூழில் எழுகமல பூவழகர் :

கதிரவன் காந்த கதிர்வீச்சம் அண்டத்
தெதிர்விசை நேர்மின் துகள்மோத - ஏதவழி 
ஏகா தவைகோணி கூடைபோல் சூழ்ந்துயிர்
லாகுசெய்கொப் பூழ்க்கடவுள் ஒத்து. 
1788. நின் நாமம் கற்ற ஆவலிப்புடமை கண்டாய் அரங்க மாநகருளானே!

நாக்கில் சுவையும் வயிற்று பசிப்பிணியும்
காக்கும் உடலில் புதுப்பொலிவும் - ஆக்கும்நல்
பட்சிய போஜ்யம்போல் ராமநாமம் காட்டுமவன்
காட்சிக்கு நெஞ்சம் கரி. 

1789. காலத்தின் கட்டாயம் ஸநாதன சங்கமம் ::

தத்துவம் வேறேனும் வேர்பற்றாம் தர்மமொன்று; 
நித்த வழிபாடு மாறினும் - ஒத்ததே 
வாழ்வியல்; கோட்பாடு வேறாய் சமுதாயம் 
வாழ சனாதனத்து  ஊன்று.

1790. பிரேயஸ் - உபாசனா பலம் - நாம் நமக்கு தேடும் நன்மை விலைப்பால் போலே. 
ஸ்ரேயஸ் - மோக்ஷ பலம் - பகவான் தானாக நமக்குச் செய்யும் நன்மை முலைப்பால் போலே

பிறப்பும் இருப்பும்  அவன்கருணை கூற
விருப்பால் முயன்று பெறும்அப் -  பிரம்ம 
பதவியும் ஈடன்றே  தான்முனைந்து தெய்வம்
உதவும்  பரம  பதம். 

1791. பண்டைக் குலத்தைத் தவிர்ந்து
தொண்டக் குலத்தில் உள்ளீர் ஆவீரேல் :
சாவை கடக்க புகழுடம்பு எய்துக
ஆவக் கடவதூம் நன்னெறி - ஓவ
நடப்பதாம் அன்நெறி ஆழ்வார் தடத்து
குடியடிமை கோவிந்தர்க் குற்று.

1792. பகவத் அனுபவ ஜனித்த ப்ரீதிகாரித்த கைங்கர்யம் பகவத் கைங்கர்யம் 
பகவத் அபிமத விஷய ஸ்வரூபாநுரூப கைங்கர்யம் பாகவத கைங்கர்யம் ::
அதாவது 
நம்முடை விருப்பால் செய்வது பகவத் கைங்கர்யம்
நம்மை அவன் விரும்பும்படி செய்வது பாகவத கைங்கர்யம். 

1. நற்பண்பு - ஸகல கல்யாண குணாத்மகனாய் ,ஹேயகுண ப்ரதிபடனாய், ஸர்வேஸ்வரனாய் 
2. வேண்டுதல் வேண்டா சமநோக்கு  - வைஷம்ய நைர்க்ருண்யம் லவலேசமும் இல்லாதவனாய் 
3. குற்றம் கிடக்க வெறுவாமை - அபராத ஸகத்வ சேஷியாய் 
4 நட்புடைமை - ஸ்வாமித்வம் பாராட்டாது சகாவைப்போல் முழுசி பரிமாறுவனாய் 
5. ஏதிலாமைக் கண்டிரங்கல் - கைமுதல் இல்லாமையே பற்றாசாய் கடையேற்றுபவனாய் 
6. பக்திக் கெளியன்  - இட்டத்து கொண்டு திருப்தனாய் தம்மையே தமர்க்கு நல்குபவனாய் 
7. பதிபத்னி பாசத்தான் - அபிமத விஷயத்தில் சேஷத்வம் போக்கியமாம்படி கைங்கர்ய பிரதிசேஷியாய் 
8. உண்மைத் தனம் - ருஜுபுத்தி ஸ்வபாவனாய் 
மற்று  
9. ஏற்றம்செய் ஏணியாம் - ஸாத்மிய போக பிரதனாய் 
10. எல்லா எவர்க்குமாய் உற்றதே நாடுவான்- ஸர்வபூத ஸுக்ருத்தாய் இஷ்டா பூர்த்தங்களை அருள்பவனாய் 
என் றித்தனையும் தன்னிலாம் 

நன்மைகூர் தெய்வம் திருமால் திருவடிக்கு  
அன்பது மிக்குசெய் தொண்டு - துரும்பதேனும் 
இன்பம் பயக்குமே அஃதினும் அவனடியார் 
பொன்னடிக்காய் மேவல் உயர்வு. 

1793. நவராத்ரி கொலு உற்சவம் :

பல்லுயிரும் பால்பொருளும் தாம்புறப் பாடுகாண  
வல்லமால்! கன்யா நவராத்ரி - எல்லில் 
புறப்பாடு நும்மின்செய் எம்மின் பெரியர்யார் 
கூறு தெரிய எமக்கு. 

1794. வஸ்தவ்யம் பகவத் சன்னிதி 
ஜப்தவ்யம் அவன் திருநாமம் 
பந்துத்வம் மாலடியார் தமக்கு
சாரம், சாரதரம், சாரதமம் எமக்கு. 

நின்னத் தனைமாலே! நின்னடியார் எம்கேளீர்!
கன்னலமு தும்கைத் திடவாகும் -  இன்சுவை 
நின்நாமம் ஊணாய் கதிசெய் பதியேநின்
கோயில் வகுத்தவிடம் ஆகு. 

1795. மமாஸ்து மங்கள விவிருத்தயே ஹரி:

இருபத் தொருகால் அரசுகளை கட்ட
வருமவ தாரம் குரோத - உருவான 
காரணம் கூறிடில் இன்துணை பூமகள்
சேரா விலகும் இடத்து. 

1796. நும் இட்டா தெய்வம் ஏற்றித் தொழிலும்
கிட்டுவது கண்ணன் கழல்.

ஒருமை இருமை இரண்டுமான தன்மைத்தும் 
கூறுமடி யார்கூறு கட்டி - வாதிலும்
மாறுமோ அப்பிரமம் தன்நிலை தான்பிழற?
ஆறு சமயமெவன் மாட்டு? 

1797. சைலே சைலே ந மாணிக்யம் மௌக்திகம் ந கஜே கஜே | 
ஸாதவோ ந ஹி ஸர்வத்ர சந்தனம் ந வனே வனே ||
-சுபாஷிதம்.

ஒவ்வொரு மலையிலும் மாணிக்கம் கிடைக்காது.
ஒவ்வொரு யானையின் நெற்றியிலும் முத்துக்கள் இருக்காது.
காடுகள் எல்லாவற்றிலும் சந்தன மரம் கிடைக்காது்
அதே போல சாதுக்கள் எல்லா தேசத்திலும் இருப்பார்கள் என்பது இல்லை. 
உன்னதமான விஷயங்களும் சான்றோர்களும் உலகில் அரிதானவர்கள் என்பதே இதன் சுருக்கம்.

கொடியை கொழுகொம்பில் ஏற்றிட சுள்ளிக்கால்
தேடி இடுவார்போல் மாலடியார் - கூடி
பெரியார்கட் காட்பட்டால் தப்பாது பேறு
அரிதா வதொன்றவர் கூட்டு.

1798. கிருத யுகம் தபஸ் த்ரேதா யுகம் யக்ஞம் த்வாபர யுகம் அர்சனம் கலி யுகம் நாம சங்கீர்த்தனம் 
இத்தனையும் ஓடகையற்கு. விட்டத்தில் இருப்பார்க்கு ‘’என்நன்றி செய்தேனா என்நெஞ்சில் திகழ்வதுவே’’ 
எற்ற அளவிலே நாம் படவேண்டிய பாடெல்லாம் அவன் படும்::

வேங்கடம் என்னும் பொருப்பிடை நின்றுபின்
ஓங்கோத பொன்னிப் பெருக்கிடை - தூங்கியும்
நான்முகன் ஓம நெருப்பிடை தோன்றியும்
தான்தவம்கொள் நம்மைப் பெற. 

1799.  அறு சமய செடியதனை அடியறுத்தான் வாழியே! 

உலகம் உருவாம் அணுக்கள் அவையால்
அலதேல் இயற்கை செயும்தமைத்தாம். - என்னலப்பல்
மாள்வித்து பின்யோகம்  தர்க்கம் மீமாம்சம்
ஆள்வித்து வாழ்வைதிக மே!

1800. சம்ஸாரிகளை திருத்த நாமா ஆள்? உடலில் ஒருவித எண்ணையைத் தடவி நெருப்பால் எரியவிட்டு விளையாட்டு காட்டும் வித்தகர் போன்ற  பகவான் அல்லவோ அதற்குக்  கடவன் என நாட்டாரோடு இயல்பு ஒழிந்து நாரணனை நண்ணுகையே நமக்கு உத்தேஸ்யம்.

உலகோர் குறைகளை கண்டுமவை காணா  
விலகல்  நலம்எதுபோல் என்னே - சொலப்புகில் 
தைலக்காப் பிட்டு எரி யூட்டுவித் தர்போல்  
அலாதார்க்கில் ஊரார்  இயல்பு.

ஸமர்பணம் ::
நாள்தோறும் ஞானம் தழைப்பசீ மாதவன்
தாள்நயந்த சீர்த்தொடை ஆயிரமும் —  வாய்க்கொள்ள 
அத்தாமத் தன்புதான் மிக்கியற்றும் சீனிவாசர்க் 
குற்றவராம் இங்குமங்கு மே!
   

--  ஆக்கம், படைப்பு மற்றும் பதிப்புரிமை :
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.