ஆசுகவி - பகுதி 9 ::
1106. முதல் தனி வித்து ::
ஆலில் பழுத்துதிர் நல்வித்தே போல்மாலின்
தோல்பொறை யோடாம் பெயரும் உருவும்
இலையாய சூட்ம உயிரும் உலகும்,தான்
1107. ஆயிரம் இராமர் -,கண்ண! நின்கேழ் ஆவரோ?
வேடர் தலைவன் குரக்கரசன் ராக்கதன்
கூடப் பிறந்ததோர் வீடணன் — நாடியாள்
நட்பதமோ சேயன் அணியன்மால் கண்ணன்போல்
1108. ஆத்மா வா அரே திரஷ்டவ்ய :
ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாசித்வய :
கண்டு பலகாலும் கூடி அலுக்காமல்
தொண்டு உடனிருந்து ஆற்றவாமோ -- ஈண்டு ?
அதுவால் மனத்தால் நினைவால் அருகாம்
1109. பகவத் நியாமகத்வம் ஜீவத்துவாரா? ஆதவா ஸ்வத : ?
தன்னால்பின் நான்முகன் தன்னால் இவைபடைத்த
பின்னால் அவையவை ஒன்னுள்ளும் -- நின்னாம்மால்
நம்முடலின் ஓரிடத்தோ? அல்லபரம் பிற்றானோ
1110. ஊர்ணநாபி போலாம் காரிய-காரண பிரஹ்மம் ::
கால்கள்ஓர் எட்டும் உபகரணம் தன்எச்சில்
நூல்வலை யாக அதில்தான் அமர்தல்போல் -- மாலோனும்
தன்னுள் திரைத்தெழுந்து மீளும் தடங்கடல்போல்
1111. வேத-வேத்யன் நியாயம் ::
விண்மீ திருப்பான் கடல்சேர்ப்பான் காணவிழை
எண்ணத் திருப்பார்தம் உள்ளத்து -- உண்டாம்மால்
மண்மீ துழல்கோயில் வேதா கமபுராணத்
1112. பொறிவாயில் ஐந்தவித்தார் ::
இவையல்ல நல்ல இவையல்ல தீயவென
ஆய்ந்து அவையும் உவையும் — சுவையாது
ஆமைபோல் ஐந்தவித்து தம்மனதை ஆள்வார்போய்
1113. குணபந்த விதானேஷாம் ::
சூரா வளிக்காற்றத் தாட்ப்பட்ட நாவாய்போல்
பேரா பெயர்த்துண்ணும் ஐம்புலன் -- வேறுவேறு
பக்கம் வலிப்ப உயிர்முக் குணத்து இயங்கவாம்
1114. யதமான, வியதிரேக, ஏகேந்திரிய ,
வசீகார ஸம்ஜ்ஞா யஸ்ய ஸா ஜித துவந்த :
குசிக பரத பிரகலாத ராவவர்தாம்
ஆசை வெகுளி அவைவிரவி — மீசு
உலகவாம் பற்றைத் துறந்து விரகத்
1115. ஞாச இதி பிரஹ்ம ::
முக்தி தனில்தனைத்தான் ஆழ்ந்து அனுபவித்தல்
போக்கி தனக்கிறை தன்னின்தாள் — மிக்கு
எனஅவாவி செல்கதி ஐந்தில் கடைவழி
1116. நித்யோதிதம்-சாந்தோதிதம் ::
உடல்மிசை உய்உயிர் வேறாம் உலகியல்போல்
தாடாளன் தன்மைத்து மானாலும் — கேடில்
குணத்துருவில் நித்யசாந் யோதித ஆனந்த
1117. தத் தாம பரமம் மம (கீதை 15-6) ::
(பத்யதே இதி பதம் )
புலன்வழி நேரும் அறிவ துறுவதற்கு
ஏலா இருள்கடி ஞாயிறு — போல
மாடதன் ஞான விளக்கு.
1118. ஸ்தித பிரக்ஞ :
மலைமுகட்டில் எத்தனைதான் வான்பொழிந்தா தாலும்
நிலைபிழறா தன்மைபோல் வாழ்வில் — புலையவாசை
மோகம் கழற்றி உயிரில் நிலைப்பார்தாம்
1119. எதிர்சா லாப சந்துஷ்ட :
அந்தணர்க்கு ஆன்ற அழகு அருமறை
முந்துற ஓதல் அதன்வழி — பிந்தி
நடத்தல்வாய் ஓதுவித்தல் கூடியிடா தீட்டல்
1120. ஸம்சாரத்தில் அடிக்கொதிப்பு ::
உலைவைத்த சோறு அடிக்கொதிப்பு போல
உலையில் எரிதணல்ஆம் ஊழ்,அதனின் — மேலா
இடுபானை போல்யிப் பிறவி எனும்பாவக்
1121. என்நாவில் இன்கவி யான்னொருவர்க்கும் கொடுக்கிலேன் ::
தேவர் முனிவர் இறையரு ளாளர்
அவாவிச் சொன்னவை என்றல்லால் — தேவன்
திருமால் புகழ்பாடல் என்நாவில் யாகம்
1122. சம்ஸார ஷட்கம் ::
இங்கிப் பிறவி புதைமண் புகப்பெய்தல்
எங்கனேயோ என்னில் அறியவேண்டும் -- ஐந்தின்
அறிவிலியாய் முக்குணத்தில் மற்றிரண்டும் பற்றி
உறும்ஊழ் வினையறுப்பான் உற்று.
1123. ஸப்த பதி ::
ஈஸ்வரஸ்ய சௌஹார்தம்
யதுர்ச்சா ஸுஹ்ருதம்
அத்வேஷம்
ஆபிமுக்யம்
ஆசார்ய வரணம்
பகவன் லாபம்
உயர்மா னுடபிறப்பும்கூன் குருடு
அயர்ப்பிலா சீரிய ஐம்புலன் -- ஆயவருள்
கொண்டு பகைவிலக்கி தம்பால் திறம்பல்செய்
தொண்டர் துணைசேர்த் துயர்த்து.
1124. தோஷாஷ்டகம் ::
தேஹாத்ம புத்தி
ஸ்வாதந்திரியம்
அன்ய சேஷத்வம்
பிரபத்தியில் உபாய புத்தி
தேவதாந்தரங்களில் பரத்வ புத்தி
பிராப்யாந்தர ஸம்சர்கம்
ஸ்வார்த்த கைங்கர்யம்.
உடலின் பிறிதோர் இயற்கை இலையாய்
கடவுள் தனக்குத்தான் என்று -- கடப்பாடு
பெற்றதாய் அன்னஎம் மால்விட்டு மற்றையார்க் காற்றல்என் உய்வகையோ தான்?
1125. பிரதான பிரதி தந்திரார்த்தம் ::
வான்மீகம் கூறும் இராமகாதைக் கானசாரம்
தான்மால் அடைக்கலமாய் ஏலுமத்தை— மேன்காண்டம்
ஏழில் உரைப்பினும் வீடணன்றன் கேழில்
சரணா கதியே தலை.
1126. பெரியதோர் பாரதம் தன்னைப் பணித்த
கரிய குறிய முனியாம் — வியாசன்
தெரிய உரைத்தவைவுள் சேயன் எளியன்
கரியகோலக் கண்ணன் படிறு.
1127. ஆழ்வார் பதின்மர் அருளிய பாயிரம்
ஆழ்ந்து அலசி அறிவார் — மொழிவதும்
மன்னுயிர்க்கு உய்உபாயம் தெய்வம் திருமால்தன்
பொன்னடியே என்ற படிக்கு..
1128. நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒருவழியாலும்
பசைகாணாதே அப்பிராப்பியம் என்று கண்ண நீரோடே மீளும் ::
நன்மை எனப்பெயர் சூட்டலாம் தீமையில்
என்னை கொடுநரகம் காட்டுவான் — இன்னம்
விலக்குதியோ மாலே! மணல்சோறு உண்பார்
இலகும்கொல் கல்ஆராய் சி?
1129. கிம் வா க்ருபணே மயி ரக்ஷணீயே ?
நீயிட்ட கட்டளை நீதிநூல் எல்லாம்
பயிற்றிலவாம் அன்ன புறத்தருமம் — ஓயாது
தேடுதியால் நின்னுள்ளாம் தண் ணளிக்கு என்கருத்து
நாடுமவர் கைவிட்டக் கால்?
1130. நைவ சாஸ்திர நைவச கிரம :
மாவலிபால் மூவடிமண் முன்இரந்த மண்ணாளன்
தேவிமார் எண்மர் பதினாராம் -- ஆயிரவர்
பெண்ணாளன் காட்டுவதும் ஆதவ யாதவனாய்
மண்ணாசை பெண்ணாசை மாய்த்து.
1131. யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ |
கடலை கரையினின்று காட்டுவார் போலேயாம் விட்டுவின் பேரா குணக்கடலை -- தொட்டு
உரைக்கவும் ஏலாது ; எல்லையில் மால்சீரை யாரே முடியக் கண்டார்?
கடலை கரையினின்று காட்டுவார் போலேயாம் விட்டுவின் பேரா குணக்கடலை -- தொட்டு
உரைக்கவும் ஏலாது ; எல்லையில் மால்சீரை யாரே முடியக் கண்டார்?
1132. மக்நான் உத்தரதே சாஸ்திர பாணிநா ::
சங்கு திகிரிவில் வாள்தண்டு கொண்டுநீ
இங்கு உதித்ததும் இவ்வுலகோர் — தங்களை
வைகுந்தத் ஏற்ற அதுநடவா தற்றுமெய்
ஞானத் துயர்குருவாய் ஆற்று.
1133. சுள்ளிக்கால் கொழுகொம்பு ::
களிப்பும் கவர்வதும் அற்று அளப்பில்
துளக்கமில் நல்விளக்கத் தானந்தம் — நாளும்
இலகிட நாரணன் நல்லருள் கூடிக்
குலாவிடும் ஈட்டத் திரு.
1134. நிர்மால்ய சேவை ::
மரகத நீல மலைபோல் தோளில்
உரகமாள் கோலநின் நாயகி -- ஆரநல்
மாலை அடையாளம் காணவாம் பள்ளியறைக்
கோலம்என் நெஞ்சிலாக வே !
1135. ஆசார்ய வக்தயா முக்திஸ்யாத் ::
(ஈஸ்வரனும் ஆசார்யத்வத்தை ஆசைபட்டிருக்கும். குருபரம்பரையில் இடம்பிடித்ததும், உபநிஷத் சாரமான கீதையை உபதேசித்ததும் அது கொண்டு)
பயனல்ல செய்து பயனில்லை ஆகில்
சுயம்மேவல் தாழ்த்து பயத்தல் — உயர்ந்ததாய்
கும்கியானை ஏவியிட்டு காட்டானை ஈட்டல்போல்
நம்மிலாம் ஆரியனைக் காட்டு.
1136. மார்ஜால கிஷோரம் நியாயம் ::
வீடணர்க்கு ஆன அபயம் அவனோடு
கூட வருவராம் நால்வர்க்கும் — நீடல்போல்
தன்னா ரியன்தன் அபிமானத் தாளர்க்கு
அன்னார் அடிகளேமால் வீடு.
1137. மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறம் ::
நீர்தெளிய தேற்றுவான் கொட்டைபோல் நம்உடுப்பின்
கார்வெளுக்க சௌகாரம் தானுமாம்! — சேர்மலி
நீர்தடம்போல் பாழ்நெஞ்சம் தூயதாக ஆவகேளில்
தார்த்தடந்தோள் கார்கண்ணன் சீர்!
1138. பாழ்குளத்தில் மண்டூகமும் வாழ்வதரிது ::
வெண்டா மரைபொய்கை வாழ்அன்னம் போல்தூய
எண்ணவலை தும்பித் தளும்ப — திகழ்வதுண்டாம்
நெஞ்சத் திடலில் இனதேவாழ் தெய்வம்தான்
எஞ்சாமை செல்லுமஃது இல் !
வெண்டா மரைபொய்கை வாழ்அன்னம் போல்தூய
எண்ணவலை தும்பித் தளும்ப — திகழ்வதுண்டாம்
நெஞ்சத் திடலில் இனதேவாழ் தெய்வம்தான்
எஞ்சாமை செல்லுமஃது இல் !
1139. யோ பரமாத்மநயோர் ரக்த : விரகத : அபரமாத்மநி ::
புலன்பத்தும் ஆள்மனதும் மாலே!நின் பால்திறம்பல்
ஏலாப் பிறவி இதனூடே -- காலம்
கனியவந்தென் வன்நெஞ்ச மென்ஆவி ஈர்தியால்
யானினி எங்ககல்வன் மாதோ?
1140. ஷடரிபு தாவத் தகனம் ::
ஆசை வெகுளி மயக்கு அழுக்காறு
பேசிஎன் தற்பெருமை காழ்ப்பிவை -- மீசு
மகரமாறும் எம்மிடற்ப வேகமேகாய் கைமாவை
சாகப் பிழைப்பித்தார்ப் போன்று.
1141. பொய்மையும் வாய்மை இடத்து ::
(பொரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்)
காடுறை காலம் கடந்தவோர் ஆண்டுமே
தேடியும் காணலாக அக்ஞாத — கூடவாசம்
பாண்டவர்க்கு நேர்ந்தவக் காலத்து பொய்யுரை
தீண்டலும் வாய்மை திறத்து.
1142. Do Service to Humanity as Service to God ::
ஆற்றுவம் தொண்டு உயிரனைத்தும் எம்குடியாய்
ஏற்பனவன் நம்மின் இறைதொண்டாய்!— மேற்படி
இவ்வுலகும் இன்னும் வருமெதிர் காலத்து
எவ்வுயிரும் இன்புற வே!
1143. த்வமேவ உபாயபூதோ மே பவ இதி
பிராரத்தநா மதி : சரணாகதி :
தனக்கும் பிறர்க்கும் அலராய் திருமால்
தனக்கே உரியனாம் அவ்வோர் — முனைப்பை
தனக்காம் பொறுப்பாய் சுமக்கும் திருமால்
நமக்காய் நடத்தும் முடித்து.
1144. த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாய ஸமாநம்
விருக்ஷம் பரிஷஸ்வஜாதே (முண்டகோபநிஷத்)
நல்வினை தீவினை வித்தாக முற்பிறவி
வல்வினையில் வேர்ப்பதித்து இற்பிறப்பில் -- எய்தினராய்
நிற்றமரம் காய்த்தபழம் இன்பதுன்பு துற்றிவாழ்தல்
உற்ற கிளியிரண்டில் மற்று.
1145. பக்தியா அனன்யா ஸக்கிய : அஹம் ஏவம் விதோர்ஜுணா |
(கீதை 11-54)
பற்று அதுவைப்பார் வைத்த இடம்சேர
உற்ற பெயரும் பொருள்பலவும் -- பெற்றாங்கு
அன்புகாதல் ஸ்நேகம் கொள் தேசம் மொழிப்பற்று
என்றாங்கு பக்தியாம் மாலுக்கு.
1146. ப்ரணதகாமத₃ம் க்ருஷ்ண பத்₃மஜார்சிதம்
(கீத கோவிந்தம்-13)
பக்தி அதனின் வெளிப்பாடு கூறிடில்
யுக்த தியானம் தவம்தானம் -- வாக்வேள்வி
என்றெலாம்தந் தாம்நின்ற நேர்த்திக்கு ஏற்புடைத்து
என்றாலும் கோபகீதம் மிக்கு.
1147. ஆஸுரி ஸம்பத் சதுஷ்டயம் ::
அழகு இளமை வரம்பில் பெரும்செல்வம்
சூழ அவிவேகம் நாலும்நம் -- கேழிலாகில்
மர்கடம் கள்வெறி பிச்சேறி தேள்கடி
சேர்வுறில்நேர் தீம்பினுக்கார் காப்பு?
1148. தெய்வீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா |
மாமேவ யே பிரபத்யந்தே மாயாமேதாம் தரந்திதே ||
(கீதை 7-14).
தேவரில் ஒர்சயந்தன் மானிடரி்ல் கூறில்
தவத்தில் கொழுத்த தசமுகன் — ஆவனே
ஆசுர யோநி பிரக்லாத வீடணர்
பேசில் தேவரில்இல் மாறு.
1149. இடையது நழுவில் வீழ்வது உலகில் |
கடையது கழியில் சூழ்வது இறையே |
அறம்பொருள் இன்பம்இம் மூன்றும் ஒருவர்க்கு
ஏறும் படியானால் வாழும் -- திறம்தான்
உலகியல் விட்டு இறையன்பன் ஆசான்
அலப்பதே ஆள்விக்கும் வீடு.
1150. பிரவிர்த்தி தர்மஸ்ய பிராஜபதிர் ரதா அப்ரவீத் |
நிவிர்த்தி தர்மஸ்ய ருஷிர் நாராயணோ அப்ரவீத் ||
வேதம் விதித்தது நம்பி நடப்பரேல்
ஏதம் எதுவுமவர் சாரா -- அதோடு
இயற்றும் எவையும் இறைப்பணி என்னே
முயறல் முனைப்பில் துறப்பு.
1151. சீக்ர பலப்ரதோஹி ஸ்வாசாரியன் ::
குற்றம் கணிசி வெறுவலும் அஃதன்றி
உற்ற அருள்தன்னால் தான்தருவ — தற்றும்
உடல்மாய்த் துயிர்கொள்ளும் காலத்து என்றல்லால்
நீடலுடன் கூடும் குரு.
1152. பரம்பத யாத்ரா பாதேயம்
(ஸ்ருதி பிரஸ்தானம் - உபநிஷத்
பிரதி பிரஸ்தானம் - கீதை
நியாய பிரஸ்தானம் - ப்ரஹ்ம ஸூத்ரம்)
பிறவிப் படிஅ தகன்று பரம்பதம்
சேரும் வழித்தடம் தன்னில் — பருகுநீர்
தின்னும் பதார்த்தம் இவைமூன்னும் ஆகா(தா)ரம்
என்னும் வகைசுவை தேடு.
1153. நால்வர் துதி நங்கள் கதி ::
பாலனாய் செய்த பலதீம்பும் தான்வளர்ந்த
காலத்து செய்பாரதபெரும்போர் — ஜாலமெண்ணில்
பாஞ்சாலி குந்தி விசயன் பிதாமகர்வாய்
தஞ்சமவர் துன்னு துதி!
1154 காம ஏஷ: குரோத ஏஷ: ரஜோ குண ஸமுத்பவ :
(கீதை 3-37).
ஆசை எனும் வலைப் பட்டார் அலப்பதும்
மூசறை வண்டினைப் போலவீசி — ஏசல்தான்
ஆடுவர்; ஆசை அதைத்தீர வென்றவரோ
நாடியோட லஃதில் இருப்பு.
1155. அகிருத அவியாபகஹ :
(செயல் மாண்டபின் பயன் விளைதல் இல்)
கர்மபலம் காய கிலேசம் ஆயமாயம்
யார்தரும்? காயமது வீய்ந்தபின் — தேர்வதாம்
தூய உயிர்க்கு பாவமென்? புண்ணியமென்?
மாயவனார் கண்வலையாட் பட்டு!
1156. ஐம்பூதத் ஐஞ்சுவையாள் புவி
ஐம்புலம் ஆழ்படுத்தும் பாழ்குழி ::
ஒலிக்கு மயங்குவதாம் மாசூணம்; மாப்பிடிக்கு
மேலுரும்மா களிறு; அழலுருவில் — நாலி
விழும்விட்டில்; மலர்கள் சுவையது தேடிவீழும்
தேனீ மணம்நாடி வண்டு.
1157. பகவதாஹ்லாதகர விஷயம் புண்ணியும்
நிக்ரஹாக்ரஹக விஷயம் பாபம் ::
இற்பிறப்பில் இன்பதுன்பம் முற்பிறப்பின் வந்ததென்பர்!
மற்று பிறப்பிடை தோறுமூர்வ — தற்று
அருவத் துயிரும் அவைசுமப்ப தில்லையாய்
வாரும் இறைநெஞ் சதால் !
1158. கர்மம் கைங்கர்யத்தில் புகும்.
ஞானம் ஸ்வரூப பிரகாசத்தில் புகும்.
பக்தி பிராப்பிய ருசியில் புகும்.
பிரபத்தி ஸ்வரூப யாதாமியத்தில் புகும் . இப்படி
அவனை உகப்பித்து உகப்பதுவே இவனுக்குத் தகும்.
விடுகைக்கும் பற்றுகைக்கும் யார்துணை அம்மால்
மடிப்பிடித்து வேண்டிப் பெறுவதாம் -- நீட்டேவல்
குற்றேவல் தாமும் அவனுகப்புக் கல்லால்நம்
பற்றியவை வாரா தொழுகு!
1159 உந்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது ::
சேவியாது ஓவலில்யான் எத்தனை நாளுமுனை
கூவி அழைத்தும் நீ! வாரா — தவிக்கியால்
மாலே! எனைஎன் வினையா யினகொண்டு
காலன்கை காட்டா தொழி!
1160. வீடுமின் முற்றவும் வீடு செய்து
நும்முயிர் வீடுடையானிடம் வீடு செய்மினே!
(அங்க பிரபத்தி vs ஸ்வதந்திர பிரபத்தி)
பற்றுவார் பற்றதை விட்டபின் என்பதும்
பத்திவாய் முட்டதாய் நிற்றபாப — முக்திக்காய்;
சித்தயோக நிட்டரோ மற்றவாறு முற்றவும்
விட்டனாக கிட்டுவார்மால் மாட்டு!
1161. கத்யர்த்தே புத்யர்த்தம் ::
தெரிந்தே விழைவதாம் நைப்பு ருசியாம்
தெரியா தொழுகையோ வாசனைஎன் — றோர்ந்து
இரண்டும் மறுபாடு வாரா விடுகை
திரண்ட கருத்தாய் பொகடு.
1162 ஆயன் மாயமோ மருட்கைத்தே! ::
ஏலா தவன்போலா போரில் புறமுதுகு
கோலி நடந்தாய் வியப்பே! பின் — தோலாத
பாணன் நரகனவன் தோள்துணித்தாய்! ! நீஎளியன்
மாண வலியனிதில் யாது?
1163. கௌந்தேய !ப்ரதிஜானிஹி ந மே பக்தா பிரணஸ்யதி -(கீதை 9-31)
(அ)
தத்பக்த வசனம் ந பிரணஸ்யதி ::
1163a . கரையேற்றும் காலில் நிசாதன் கணைஎய்து
யாரையான் மாய்த்தனன் என்னே — கறைந்து
துணுக்குற தன்னடி சோதிக்கு ஏகல்
இணக்கம தென்றருளி னான்!
(அ)
1163b கரையேற்றும் காலில் நிசாதன் கணைஎய்து
யாரையான் மாய்த்தனன் என்னே — கறைந்து
இரைஞ்சிட தன்னடி சோதிக்கு ஏகல்
விரைந்ததென்று தான்மறைந் தான்!
1164. வசவும் வாழ்த்தும் ஏற்புடைத் தூர்த்தன் ::
தன்வாக்கு பொய்த்தாலும் தன்னடியார் மெய்ப்பிக்கும்
தன்மையான் அந்தகனவன் பெண்டு பொறுமியின்
நாதீந்த சாபமும் பொறையில் முனிசாப
மும்ஏந்தான் தண்மைக்கார் ஒப்பு ?
1165. பிரபாச தீர்தன் இன்முகக் கண்ணன் ஆர்த்தி ::
இட்டமான பாண்டவர் கட்டம் களையவே
துட்ட துரியோ தனர்க்கூட்டம் — வெட்டிப்
கிடத்தின சிட்டன் சிரீதரன் பட்டனயார்
படுவார் உலகத் தினி ?
1166. ஞானமனுட் டானமிவை நன்னா குடையனான
பிரம குரு ::
இப்படித்தான் நாம்ஒழுக வேண்டும் எனநடந்தான்;
எப்படிறும் தம்படியாய் சூழ்தீம்பன் — செப்புநெறி
கீதையு மான இருவர்தம் வாழ்வும்நல் வாக்கும்
உதவிக்கை மாறில் பரிசு.
1167. யாதொன்றும் தீமை இலாது சொலல் அறம் ::
அறநூல் உரைப்பன யாவும் உலகோர்
திறத்து திருந்திய ஞானம் — நெறிபட
வாழ்குணம் நற்செயல் நன்மோக்க
வாழ்வும் அணைதல் பொருட்டு.
1168. ஆசார பிரபவோ தர்ம : தர்மஸ்ய பிரபு அச்சுத :
ஆரணத்தாள் ஆன்ற அறநெறி யாவுமே
சீரிய வாழ்வினை ஆக்கும்நல் — பேரியல்
பெற்றி தருமமாம்; அஃதொழுகு வார்செய்கை
உற்றமால் உள்ளம் மகிழ்த்து.
1169. கன்னி (புரட்டாசி மாதம்) தன்னைக் கைப்பிடித்த பெருமாள் :
தெய்வத்துள் தெய்வம் திருமலைத் தெய்வம்போல்
உய்பவர்க்கு உய்வதாம் வண்ணம்யார் — ஐய்யயிங்கு
பண்ணும்சொல்? செய்ய தடங்கோல மாலண்ணல்
திண்கழல் சேருவார்க் கே!
1170. நிவ்ருத்தி பாதக பிரவ்ருத்தி தந்நிரோத : சரணாகதி :
இயற்றி இருவினை பாசம் கழற்றல்
முயற்றி முழுவேத நாதனை -- நாயேன்
பயற்றல் விடுத்து மழைநோக்கு சாதகம்போல்
காயும்யான் கண்ணன் கழற்கு.