முகநூல் மலர்ந்த ஆசுகவி - பகுதி 6.
680. நெறிமையில் முறைமைசெய் தருமன் ::
(விதியின் பனி கைகளுக்கு எதிராக எந்த கவசமும் இல்லை)
பெரிய சமன் செய்பவர்.
அரசனும் ஆண்டியும் மாண்டபின் மண்ணாம்
சுரசம் பார்க்கில் மரணம் -- விரசத்து
ஊடே சமரசம் துற்றும் துலாக்கோல்
நடத்தலும் சீறுபாறென் பெற்று ?
681. ஸ்வாசார்ய குரு பூர்ணிமை அபிநந்தனம் ::
பெரியதிரு மந்திரம் புந்திப் புகட்டி
திருவளர் நாரணன் தன்னை -- பெறுமாறு
காட்டி, திருமகள் என்னும் சிபாரிசும்
கூட்டும் குருவருளை சாற்று.
682. பிரணவார்த்த பிரதான தமிழ்மறை திருமந்திரம் ::
ஆனிதனில் மூலம் அதனில் அரங்கனவன்
தானக முன்வந்து மாமுனிகள் — தேனாம்
திருவாய் மொழிஈடு தன்செவி சேர்த்து
அருமா தனியனவர்க் கீந்து !
683. ஆச்ரயண சௌகர்ய அனுகூல விதானம் ::
திருமால் திருமார்பில் ஏறி அமரக்
கருதி '' கணப்போதும் நீங்க -- திருப்பேன் ''
எனவாய் அணைவாளை தன்அடிக்கீழ் ஆக்கிப்
புனைவான் ஏன்? ஆழ்வார்தா னத்து .
684. அம்ருத சாகராந் அந்தர் நிமக்ந ஸர்வாவயவ : ஸுகமாஸீத ::
( ஸாலோக , ஸாமீப்ய , சாயுஜ்ய ஸம்மோக - த்ரிபுடீ சாம்ய மோக்ஷம்)
துக்கச் சுழலை கழலாது நே ர்சீவன்
முக்தி தான் மொக்கமோ ? அன்றேல், மேல் - நோக்குகொள்
ஊ ர் த்வ கதிதானோ ? சூனியமோ தான்? மால்புத்
தேறல் புகப்பெய்தற் கொத்து !
685. அங்கண் யங்கா தேவதா :
கடல்அள வாய குணங்கள்தன் மேன்மைக்
கிடமாய் திருமால் பெருமை -- கிடக்க
இனிமற்றைத் தேவர் அதன் திவலை
எனவாய் உறைவர் உடற்று.
686. ஸ்வாதித் திருநாள் ::
687. தத் தஸ்ய சதுர்சம் பவேத் ::
பறப்பதன் குட்டி தவழுமோ ? மாலே !
உறவு உனக்கான பின்யான் — பிறன் கடை
பேணிப் பிழைக்கவோ ? இன்னாப் பொழி ந்து
அணையவந்த ஆக்கமென் ஆக்கு.
688. பகவந் நிக்ரகாநுக்ரக ரூபமாத்ரம்
பாப - புண்யம் ::
பிறப்பிடை தோறும் உயிருடன் மேவும்
திறனுடை கர்மருசி வாசனைக் — கூறு
அதன்செயல் நல்வினை தீவினைக் கம்பயன்
ஏதிலாமாச் செய்தல் நினைவு.
689. தட்டு மாறிய சேஷ - சேஷித்வம் ::
குற்றமே குறிக்கொள் குவலயத்தோர் மா ட்டுறவு
முற்றுமாய் விட்டகலக் காணீர் , னும் - அற்றபல்
குற்றங்கள் முற்றுமே நற்றமாய்க்கொள் நாதன்தாள்
உற்றபோ தரோ ! உய்ய ல் பாற்று .
690. ஸௌ ஸ்ரேயான் பவதி ஜாயமாந :
முதல்முடிவு தோற்றம் மறைவு இலா நாய்
பதியினில் பாங்கினில் வந்து - வி தவிதமாய்
ஆற்றும் அவதாரம் தன்னில்தன் சீர்வற்றா
தேற்றம் பெறுவான் பரன்.
691. ஜன்ம ஜராதி அதிவர்த்தன திருமேனி ::
(யுவ குமார :)
முதல்முடிவு தோன்றல் மறைதல் இலாது
புதுப்புனல் பொய்கைவாய் பூத்த -- மதுவுண்டு
வண்டிண்டும் தாமரை கண்கைகால் கொண்டது
பண்டுபண்டே உண்டுநம்மா லுக்கு.
692. சுபம் ப்ரூயாத் ::
மாயத் திரைவிலக்கி மங்கலங்கள் நல்கலும்
தூயதுணிச் சீரை கிழித்துநின் -- ஐய
அமலங்கள் தன்னால் அகலவாம் அந்தி
அமைந்தநல் காப்பிதுவே சால்பு !
693. அலக்ஷ்மீம் நாசயாம்யஹம் ::
மங்கல நல்வினை நல்கிடும் நாயகி !
சங்கொடு சக்கரத்தான் தன்பாத -- பங்கயங்கள்
நங்கள் நணுகி நலமுற கூட்டுவாள்
எங்கும் திருவருள் மாட்டு.
694. ஸாக்ஷாத் அபி அவிரோத: ஜைமினி :
சிவத்தாணு சங்கரன் என்னுமின் நாமம்
புவியில் உருத்திரன் பேராய் — உவகையோ
டோதலும் பாட்டன் பெயர்பெயரோன் ஏற்கும்
விதம்தான் மாலுக் கியல்பு.
695. இத்தம்வித் பாதேநைவாத் யாரோஹதி ::
பன்னக மாமலை வேங்கட வாணந்தாள்
நன்று நடந்திடச் சென்றுயார் -- ஒன்றுவார்
போய், அண்டக் கூரை மிதித்துயர் பாம்பணைவாய்
கால்வைத்து மால்மதிக்காய் வீற்று.
696. உசாத்துணைக்கு ஆளாக்கும் ஆசாரிய கிருத்யம் ::
தன்னைப்போல் என்னாக்கி என்னை இகல்முடித்து
தன்னுக்கும் ஆசிலருள் ஞானகுரு -- தந்தனக்கு
என்னோதான் ? இந்திரை கோன்உளம் நன்கிளகி
தன்வீட்டில் இன்பமர்த்தும் என்று!
697. மன ஏவ பந்த மோக்ஷ காரக :
ஆசை அழைப்ப மனமதன்பால் வலிக்கும்;
பாசத்தில் புத்தி தடுத்தாலும் -- மீசுமது
நேச உயிர்க்காசு தந்தாகில் தான்விலகி
இசையும் பிணக்கம் தவிர்ந்து .
698. சமாநாதிகரணம் ::
(ஏவம் சமனஞ்ச)
மட்குடம் பொன்வட்டில் என்பவை ''ஆல்'' விகுதி
இட்டு இயம்பல் இருக்கவதை -- விட்டுமுதல்
வேற்றுமையில் சொல்லிற்றும் காரண-காரியத்
துற்றசமா நதிகர ணம் !
699. தாத்பரியம் ::
(உள்ளுறைப் பொருள் - ஸ்வாபதேசம்)
முதல்முடிவு மற்று இடையிடையாம் கூற்றுக்
கெதில்நோக்கு யாது புகல்அதன் -- ஏது
அதற்காம் பயன்அவை கொண்டு அறியலாம்
ஈதிதன் தாத்பரியம் என்று.
700. க்ஷிதா - க்ஷீரம் ::
(அக்காரக்கனி)
நரம்கலந்த சிங்கமாய் ! பாலொடு தேன்விரவு
நாரணன் நன்மேனி முன்னில் -- உருவம்
விலங்காய் பிறிதவை மானுடமாய் நிற்க
இலங்கும் இரண்டும் கலந்து !
701. கடையர் மிதித்தடையும் பெருமாள் ::
( தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் )
கல்லினைப் பெண்ணாய் குரக்கரசன் நட்பாய்ஓர்
நல்லரக்கன் நாதனாய்நீ யானாய்போல் — வில்லோய் ! என்
நெஞ்சும் நினைவும் செயலும் இறுகியலைந்
தெஞ்சாமை ஈவாய் எனக்கு !
702. குடி குஞ்சீஸ்வர ::
குன்றணை தோறும் இடமாகக் கொண்டவன் !
மன்றின் நெடுந்தூணில் ஆளரியாய் -- நின்றவன் !
சென்றிலங்கை சீதைக்காய் செற்றவன் ! என்றவர்க்கு
இன்றாம்ஊர் மல்லிச் சரம் !
703. அவரவர் தமதமதறி வகை ::
சீரிய நான்மறைபால் சேரு சமயங் கள்
ஆறும்அந் நேரா தன கூறும் - ஓர்நாலும்
மாரி இரண்டும் சோ திப்பத் தேறும்சத் கார்ய
பிரமத்தின் பாலே உலகு !
704. வெறும்புறத்திலே ஆரத்தி வழிக்க வேணுமாம் படியான
சேர்த்தி அழகு ::
முத்தும் மணிப்பரலும் முன்னிழைத்த பொன்னகைபோல்
ஒத்திலங்கு வைர மணிமேனி -- சுந்தரந்தன்
குத்திகைக் கீழ்வைத் திலங்கும் இலக்குமியை
எத்திறம் யான்இயம்ப? காண்!
705. மார்கோ நேயோ நயோ நய:
(கர்த்தா கர்மம் கருவி பலதாதா )
(சரீரக சதுஷ்டயம்)
உலகும் உயிரும் படைப்பான் எவனோ
அலகில் அவனே பரமன் ! -- பிரமம்
அவனால் இல்லை பிறிதொன்று காரணமா
மேவல் அவனால் அவன்.
706. சே ஷி த்வ - பிராப்யத்வம் ::
( சுபாஸ்ரய க்ஷே த்ரக்ஞன் )
அளி போடு ஆண்டு அளக்கும் பிரபு வாய்
ஆளிவன் என்று அடைக்கலமா — தாளணை ந்தார்
வாழுலகம் வைகுந்தம் தானதனைக் கா ட்டித்தன்
ஞாழலன்ன மேனிநனி தந்து.
707. நாமம் ஆயிரம் உடைய நம்பி ::
(விஸ்வம் விஷ்ணு வஷட்கார :)
எண்குணத்தான்! ஈசன்மால் யாதிலும் யாங்கணும்
அண்ணல்செய் தாள்வானாய் தான்நிறை
ஆக்கி அளிப்பானாய் அற்றகுற்றம் ஊற்றிலா
மிக்கமேன்மை பெற்றியோன் பண்பு !
708. ஸ ஸ்வராட் பவதி ::
(அந்ய நாதத்வம் விலகி அநாதத்வம் சித்திக்கை)
பிறவித் தளைவிடுத்து முக்தநாகை , '' கேட்ப்பார்
அறவே இலையாய்த் '' திரிகை -- குறித்தோ ?
உறவும் உவப்பும் ஒருவன் திருமால்
பரமாய் திறம்பார் பிறர்க்கு !
709. தட்டுமாறா தருமத்தியல்பு ::
ஞானம் விரக்தி அடிமைக்கண் அன்புடன்
ஆன தருமம் இவைநாலும் -- மோன
உயிர்க்கு இயல்பாம்; பிறப்பிடைத் தேய
உயர்வாம் நிறைய பலத்து.
710. தர்மி கிரக பிரமாணம் ::
இலைஎன்பார்க் கில்லைகாண் ஆதாரம்; உண்டேன்
நிலைப்பார் பிரமாணம் கொண்டு -- குலைப்பார்
இறைமெய் திறத்தை கருதக் கடமோ?
மறைப்பால் மதிப்பிலார்க் கூழ்ப்பு !
711. அத்ரபரத்ர்சாபி தத்வம் பேத ஏவச ::
பலவென்ப தில்லையாய் வேற்றுமை நீ ங்கி
உலவு உயிர்ப்பொருள் ஒன்றாக - கு லாவும்அவ்
அல்லலெல்லாம் கொள்ளாது வானுளார் க் கூடிமால்
தொல்லடிமை நல்கல்நம் வாழ்வு !
712. ஜீவன் முக்தி அவியாப்த்தி ::
என்னில் எனக்கண்டு ஆழ அனுபவித்தல்
புன்மை புருடார்த்தம் அன்றியும் -- தன்னைத்
தொலைத்து பரமனாகும் தன்மையான் முக்தபங்க ம்
கோலுவதும் ஏலாமாப் பேச்சு !
713. நித்யோதித சாந்தோதித தசை :: சாந்தோதித தசை ::
(ஸ்வரூபநுபவம்)-(ஸ்வபாவாநுபவம்
மாமேரு சந்திர சூரியரை ஏந்தியே
பாமினிமார் மூவர் புறம்தனில் -- தாமிருப்ப
நாகணை நன்கமர் நாதன் சேமநலம்
ஆகவென் ஆழ்ந்திருப்பர் சூழ்ந்து !
714. முக்தாநாம் பரமா கதிஹி ::
பிறவித் துயர்மிகக் கண்டு சலித்து
மறையுணர்ந்தோர் வாய்மொழி ஓதி -- இறையருள்
கூட்டு ஒளிவழி பற்றி புறப்பட்டு
வீட்டின்ப தேட்டந் திளைத்து.
715. கடாகாச - மஹாகாச உபாதி பேதம் ::
உருவும் பலவும் உணர்தற் குபாயம்
பெருவெளி பானையுள் ஆம்துளியாய்த் -- தேறு
தெருளும் மருளும் பரமனுக்கே நேருமெனக்
கோரும் மறைப்பொருள்தான் வேறு!
716. ஐத தாத்மியம் இதம் சர்வம் ::
ஒன்றென்பர் என்பார்? மெய்ப்பொருள் பலவென்பார்
ஒன் று எனவாம் வகையுண்டேல் ! -- பொன்றி
பரன்கூடி அப்பரனுக் கீடா குணமும்
உருவும் தொடுப்ப தடுத்து!
717. தன்மயீ பாவ மாவிர்பாவம் ::
ஆண்பெண் மனிதன்வான் தேவன் விலங்கெனக்
காண்பல் பிறவி தலைப்பெய்யப் -- பூண்னம்
வினைப்பயன் வீய பரமந்தன் பாவம்
புனைகை அலால்இலை கூழ்ப்பு!
718. ஸுப்ரபாதா ச மே நிஷா ::
(வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து)
இகலொழித்து வீடு புகுந்து பேறு
மிகவெய்தி ஆறுகை அஃதேகாண் — மாகமால்
வைகுந்தத் தென்குணம்சேர் பேரின்பத் தொருமித்தல்
வைகறையாம் முக்த உயிர்க்கு !
719. ஓம் விஸ்வஸ்மை நம :
எங்கும் நிறைபர பிரம்மம் குணமெல்லாம்
சங்கையில் தாங்கியே அல்லவை -- மங்கிடும்
துங்கனாம் ; ஆள்கை அரசனாய் ஆகாயத்
தாங்கு விரிந்துமவன் வைகு !
720. அப்ரதக்சித்த ஸ்வம் - ஸ்வாமித்வம் ::
தாங்கியும் ஏவியும் எம்மை அவன் நடக்கட்டும்
பாங்கரும் பண்பில் பிரகாரமாய் — வீங்குடைமால்
ஈசன் தமக்கு உயிர்கள் உடமையாம்
பேசிப் பிறிதாள்கை இல் !
721. வைஷ்ணவ நம்பி ::
எம்பிரான் எந்தை எனைஆள்வார் தம்பிரான்
நம்பிநம் நாரணன் தன்கழல்கள் — தாம்துணையாய்
அன்பினால் ஆர்வத்தால் பூவிட வல்லார்க்கு
முன்பின் கடம்முற்றும் வேம்!
722. பர்யங்க வித்தை ::
கரிய முகில்வாய் வெளீய நிலவு
விரிய வெள்ளி மலையாய்த் — தெரியும்
அரவு ஆசனத்து மாயோன் கரம்பிடித்து
சேரும் பிறவி முடித்து.
724. நின் நாமம் கற்ற ஆவலிப்புடமை ::
பொறிவாய் புகப்பெய்தி பொய்ஞானத் துள்நின்று
தூறா பிறவித் துவள்வேனை — புறம்
கொள்ளாதே ஆள்வாய் திருமாலே! நி
ஒள்ளிய என்நாவுள் நின்று !
729. அபிராக்ருத அகர்ம பரமேஷ்டி ஸ்வரூப ஆவிர்பாவம் ::
ஐந்துசேர் ஆக்கை அவிவதன் முன்
ஐந்து அவித்தான் அடியிணைகள் -- ஐமூன்னும்
எட்டெழுத்தும் கூட்டி ஆட்படுவார் தட்டாமல்
எட்டா வைகுந்தத்து ஊடு !
730. பிராட்டி ஸத்காரம் ::
சுற்றத் தொருத்தனாக வே !
731. மூவா மருந்து ::
(விடம்முறி அமுதம்)
உலகியல் ஊழ்நின்று ஓயா துறுத்த
அலகில் இடர்பா டதன்நடுவே -- மேலா
இறைஇன்ப போகமதில் நம்மனம் ஏக
நிறைவாம் எதிராசன் சீர் !
732. தர்மயேவ ஹதோ ஹந்தி ::
பகடைக்காய் ஆட்ட பணயக்காய் ஆன
தகவுடையாள் பாஞ்சாலி தான்கெஞ்ச -- தகவிலைசெய்
கௌரவர்கள் வீய தருமம்தான் வென்றதம்மா!
வவ்விய சூது முடித்து.
733. அப்யுகம வாதம் ::
(பூர்வ பக்ஷத்தை வாதத்துக்காக ஒத்துக்கொண்டு
சித்தாந்த்தைக் காட்டி தள்ளுவது)
அநப்யுகம வாதம் :
(பூ.ப.-ஐ ஒத்துக்கொள்ளாமல் செய்கிற வாதம்)::
குணங்கழித்து ரூபம் விபூதி பொய்ப்ப
பிணங்கி பிறவி துயக்கு -- அணைய
நிறைவாம் இறைக்கு குறைகள் உரைப்பார்
மறைபால் மருள்கொள் மயக்கு !
734. தேவ-மனுஷ்யாணாம் துராவாஸ :
பன்மடங்கு பீடுடைய நன்நலம் தன்னுளமால்
தன்நிகர் ஆவரோ தேவர்தான் ? -- என்றாங்கு
எட்டி பறிக்கலா வெண்மதியை சூழ்பரண்
விட்டத்து கிட்டவோ தான் ?
735. ஸாமான்ய-விசேஷ நியாயம் ::
தூணுண்டு! குடமில்லை! என்னவாம் போது,பின்
பேணுவதே முன்னா ளுவதினும் -- ஏலும் (மெய்மை)
பிறிதொன்று லோபம் (பொய்மை) எனவாக கோலுவார்
தெரிவிலார் தேட்டச் செறிவு.
736. நிஹீன குண ராஹித்யம் ::
சேறுகண்ட போது விலகா தொழியஅச்
சேறுபூசி அலம்புவார் உண்டோ? -- சிறந்த
குணத்தினானை நிற்குணன் என்ன குணங்களை
பூணிக் கழிப்பார் பழி !
737. கீர்தய கேசவம் முர ரிபும் ::
பாசிதூர்த்த பொற்றா மரைக்கயம் ஆ
வாசத் தடமாதல் வேணுமேல் — மீசுவாளை
மண்டியங்கு பேணல்போல் நாரணன் நேசநாமம்
கொண்டியம்பப் போம்மன மாசு !
738. பக்தி சித்தாஞ்சனம் ::
அன்பு பணிவு இறைநேசம் பத்திமையால்
நன்புருகி நாளும் மனம்மொழி — ஒன்
எண்ணத் தராய்இரைஞ்சு வார்சன்மம்
பண்பும் பயனும் அது !
739. ஸாலோக ஸாமீப்ய ஸாயுஜ்யம் ::
உவந்துருவம் கொண்டுமே உன்னிய பல்
ஓவுமடி யாரவர் கூட்டனாய் — மேவி
சங்கல்ப சக்தி உடன்கூடி உஞற்றல்
அங்குற்ற போதாகும் பேறு !
740. ஸ்வரூப ஆவிர்பாவ வெளிப்பாடு ::
கரணங்கள் இன்றியே கண்டுகேட் உற்
தேரும் வகையுண்டே? பாதபாணி — ஊரு
உருப்பிலனாய் ஓடியாடல் ஆற்றும்
நேருமிவை முக்தனாம் போது!
741. தர்மபூத ஞான விகாச சமிஞை::
நுகர்சிப் புலனவை ஒவ்வொன்றும் ம
போகப் பயனை சுவைப்பது — ஆகதே
வையத்து; கூடகன்று மாகமால் வைகு
எய்தற்று கூடுமது அங்கு !
742. தத் பக்தேஷு அதிகோ பவேத் ::
இம்மை பிறவியோள் பாலை வனச்சோலை
தம்மில் இருந்த ஒருமரத்து — ஒம்
கனிந்த பழமென கேசவன்பால் அன்பு
இனித்தோ அவனடியார் நீத்து ?
743. தன்வினை தன்னைச் சுடும் ::
தான்மொழிந்த தீச்சொல்பின் சீதை
தான்இறக் கிற்று அதுநிற்க — தீயில்
பிறந்த திரௌபதி புன்னகைப்பால் மா
இரந்து பிழைக்கலா யிற்று!
744. நீசனேன் நிறையொன்றுமிலேன் என்
பாசம் வைத்த பரம்சுடர்சோதி
காடேழ் கடலேழ் மலையேழ் உலகங்கள்
ஏழேழில் பாழ்வினையால் பல்பிறவித் — தாழ்வேனாம்
ஏழையை தண்ணளியால் சூழ்மாலை என்
கூழைவால் ஆட்டியான் காட்டு.
745. தியாகேசன் துதி ::
அத்திகிரி தன்னில் வரம்கொடுக்கும் பெருமாள்
சித்திரையில் அத்தத்தில் அவதரித்த பெருமாள்
முத்தீ மறையாளர் மூதலிக்கும் பெருமாள்
பத்தியுடன் எதிராசர் பணிந்தேத்தும் பெருமாள்
எத்திசையும் கொண்டாடும் ஏற்றமிகு பெருமாள்
முத்தமிழும் முதுமறையும் முன்பின்னோடும் பெருமாள்
முத்திதரும் கச்சிதனில் நச்சினார்க்கினிய வித்தகன்
தியாகேசன் நம்தெய்வ சிகாமணி பெருமாள் !
746. விழைகை பிழையாதருளும் வகை ::
கடிப்பசாதல் வேண்டும் எனவரம் வேண்டி
முடியும் எறும்புபோல் தாயென — நாடிசேய்
நஞ்சுண்ணத் தந்தவள் வீய படிறுசெய்வான்
அஞ்சன வண்ணர்க்கென் ஆர்ப்பு ?
747. மேன்மையினோர் எளிமை பெருமதிப்பு ::
ருக்மிணியை கொண்டொய்ய தேரனேறி வந்தவன்
புக்கு நரகனவன் வீயபாமை — பக்கத்
திருத்திக் கடாவியதேர் பார்த்தன்முன் தம்மை
இருத்தி நடாத்தும் உகந்து !
748. திருவாளன் திருமதி செய்வெகுமதி:
அடைதல் அடைவித்தல் கேளல்மால் கே
உடன்இணங்கா ஆங்கவள்தன் காந்தன்
அடைவிப்பக் கோரி தடைவிலக்கி அண்
அடைந்துய்தல் செய்வாள் திரு!
749. உகாவாதார் பகவன் இராமடம் ஊட்டுவாரைப் போலே::
ஊன்கம்பம் நாட்டி உகவாதார் கள்
தன்னிலும் கர்ப்பவாசம் செய்மாலை —
பக்தி இலாததோர் தூரிகைகொண் டெத்
நக்க ஆளரியாம் ஆங்கு !
750. ந ஸம: அப்யதிக குதோந்யோ? ::
தண்டா மரையான்அங் கண்கைகால் வாயமுதம்
வண்டூறும்; ஒண்டொடியாள் பொன்மார்பில் -- கொண்டாடி
தானமரும்; விண்ணவரும் மண்ணவரும் தண்ணியரே !
தேனமரும் தாரான் திரு!
751. ஆதி வியாதி ஔஷதி::
வினைஅடித்த காயம் எதைசுவைத்து வீயும்?
தினைத்துணை யேனும் திருமால் — அனைத்துமான
அன்பர் அவர்க்கடிமை ஆற்ற விலகலல்லால்
என்பினார்க்கு இல்லை மருந்து!
752. பிராட்டி பெருமை ::
(உயர்வு நவிற்சி)
கண்டனன் சீதையை! என்றனன் தேவிதூதாய்;
மீண்ட அனுமனை சீதைஎனக் — கொண்டுகந்து
ஆரத் தழுவினன்; ராமதூதாய் செல்பரிசோ
வீரன்தன் வாலில் நெருப்பு ?
753. விப்ரலம்ப ஸ்ருங்காரம் ::
அவாவிய மால்காதல் ஆற்றா தலப்பலுற்று
கூவி அழைத்தும் செவிகொடு — மேவார்
தமக்கு விடுதூதாய் வண்டே!நீ சென்றுரையாய்
ஆமோ தகவிது என்று ?
754. கோஸி? அஹம் பிரஹ்மாத்மகமஸி ::
பாதம் பிடித்துபாகன் ஆனைதன் மத்
மீதமர்வான் போல்மால் அடியார் —
தான்பிடிக்கும் பாதம் பிடித்து
தாம்புகுவர் மால்மடிக்காய் உற்
மாயோன் மேயயுகம் மூன்றிலும் உய்
ஆயகலி அஃதுதித்த ஆழ்வார்கள்— வா
நாட்களிலும் வாழ்ந்திலேனாய் அண்
ஆட்கொண்ட போழ்கனேன் யான்!
755. அவையடக்கம் ::
யானேஎன் தன்னதே என்றுழலும் மண்
யானோ கடவன் திருந்துலுகம் — வா
ஏற வகைசெய்ய? என்றாலும் என்பாட்
கூற உவகைமா லுக்கு!
756. பிறந்து படைத்த பயன் ::
உடல்கொடுப்பாள் அன்னை! அதில்அழி
சுடர்தொடுப்பான் தந்தை! குருமா
கல்வி! மகள்கொடுப்பான் மாமன்! கொ
நல்க அறம்தழைப்பாய் நீ!
757. மாமேவ யே பிரபத்யந்தே மாயா ஏதாம் தரந்தி தே! ::
தன்முயற்சி தன்னால் பிறவித் தளையவிழ்ப்ப
தொன்றோ?முன் செய்த வினைகழன்று — பின்வருவன
பொன்றச் செயக்குருவி கூட்டை பிணைந்தவன்
பொன்னங் கழல்புகுதல் நன்று!
758. முக்த போகம்::
(ஞான, தர்சன, பிராப்தி பலம்)
அறிதல் அடைதல் அவாவிய ஏவல்
பரிவினில் பாங்கினில் பாத — நெறிமையில்
தேவன் திருமால் அடியா ரவர்கூடி
மேவல்காண் முக்திப் பயன்.
759. சித்த சாதன ஸ்வீகாரம் ::
கண்ணனை முன்நினை என்மனமே! பண்ணிய
புண்ணிய பாபம் அவைஒன்— றொழியாமே
திண்ணிய வீய்ந்திட நன்றவன் ஒண்கழல்
எண்ணிடல் அல்லால் ஏது?
760. பொறாதார் பொச்சரிப்பு பூழாப்பு ::
மாதொரு பாகனார் மால்தன் இடமாய்
போதரப் போந்தவன் சாஸ்தாஎன் — பேதுறப்
பேசுவார் கூசி இசையார்க்கு வாசுதேவன்
நேசநல் கீதையே சான்று!
761. சித்த-சாதக வேஷம்::
பரந்ததன் மேனியில் பாதியிடம் ஈந்து
நரஹரி யானவன் ஒம்மை — ஹரிஹரன்
ஆனகதை என்காட்டு ? நல்சித்த சாதக
ஞான தெருட்டின் பொருட்டு.
762. விசேஷ-விசேஷ்யம்::
மாமேரு மேல்மழை மேகம் அமர்ந்தன்ன
பூமேவு மங்கை புனிதையள் — தான்மேவு
மார்பன் அவன்றன் திருவடியே சார்வெனத்
தேர்ந்த மதிநலம் மிக்கு.
763. பேற்றுக்கு ஆறு அவன்முயற்சி::
அசத்கல்ப மானவனை ஆளாக்கி அன்பா
இசைவித் துயக்கொளமால் செயும்மா
அனைத்தும் உபாயத் அளவவையாய் கூ
மனமே! நீ ஒன்று முயல்!
764. அறம்சாரா வலம் கேவலம் ::
(கும்பகர்ண, கர்ண, விகர்ணர்கள்).
ஒழுகலோடத் தோடோட்டை ஓடம்என் வாசி?
பழுதலோ டான பரிசலேரி — ஆழமான
ஆற்றை கடப்பவன் நீஞ்சலொன்று விட்டுதான்
மற்றை நிபுணனாய்என் பெற்று?
பூத்தபூ எல்லாம் இறையடிக்கே போ
வாய்த்தசீர் ஓரொருவர்க் காங்கது
சத்வத்தில்
வீடணனும், ராவண கும்ப கரணனிவர்
மாடதாம் மற்றை இரண்டு.
766. தஸ்மாத் சாஸ்திரம் பிரமாணம் தே ::
நுண்ணியதாய் விண்ணில்நாம் காணுமத் தாரகைகள்
கண்ணதில் சந்திர சூரியர்போல் — திண்ணியதாய்
தோன்றதொலை நோக்கு கருவிபோல் சாத்திரம்தான்
ஆன்மாவைக் காண விரகு .
(விரகு = உபாயம்).
767. தத்சம அப்யதிக குதந்யோஹோ ?
மாலே! இறையே! உலப்பில் புகழ்உனக்கும்
மேலே சொலவோர் தேவும் — அலவே!
அயர்க்கும் தவத்தேவர் ஊனேய் குரம்பை
பெயரும் உயிருமாவாய் நன்று!
768. ஆஸ்ருத ரக்ஷண பிரதீட்சிதனானவனின் ஸத்தா ஸமிர்த்தி::
உலகை அளந்துதுகீழ் ஓரடியால் மீட்டான்
மலையை எடுத்துஓர் ஊரை — மேலை
மழையின் தடுப்பாரை வேண்டிப் பெறுவார்
இழைக்கும் பிழைஎன் பொறுத்து?
769. தன்னுள்ளே திரைத்தெழும் தரங்கவெண் தடங்கடல்::
அண்டமும் அண்டத்து தோற்றும் உயிர்களும்
பிண்டத்து மாற்றும் குயவன்போல் — பண்டுமால்
யாதுமில்லா அன்றுதன் சிந்தனை உந்ததான்
ஈதுசெய்வான் என்னப் புரிந்து.
770. மானம் பிரதீபமிவ ::
நினைவு அறிவு திருட அறிவு
அனைய இவைமூன்றின் கூட்டுறவு — பூணுடல்
பூதமைந்தின் ஒர்கலவை அஃதாம் பிறப்பிதில்
வேதநெறி ஆன்ம விளக்கு!
771. ஆத்யம்கலு பிரஹ்ம சாதனம் ::
அறிவின் வடிவேயாம் ஆன்மா! நினைதல்
திறனுடை நெஞ்சம்!கொள் நிச்சித் — நெறிமாட்டு
புத்தி! இவைதம் செயல்மேவு ஊன்பிறவி
வித்து கருமவினை தொட்டு.
772. காம ஏஷ: க்ரோத ஏஷ: ரஜோகுண ஸமுத்பவ:
முக்குணத்தில் முன்னது மிக்குடைத் தாகிலே
அக்கணத்தால் மற்றை இரண்டதன் — மக்களாம்
காமம் வெகுளி மயக்கவை வீய
நுமதான்மா தோற்றும் எளிது.
773. தமர்களில் தலையாய தமயன் ராமன் ::
வேடர் தலைவன் குகன்போல் குரக்கரச
னோடு அரக்கர் இளவலாம் — வீடணன்
பாடதாய் தம்பி எனாதுராம! நின்னையே
நீடலென் மாருதிக்கு சொல்லு ?
774. இயத்தா ராஹித்தியம்::
(இத்தகயவன் என்று உதாகரிக்க இன்னொரு ஆள் இல்லாதவன்):
மாலே! இறையே! உலப்பில் புகழ்
மேலே சொலவோர் தேவும் — அலவே!
அயர்க்கும் தவத்தேவர் ஊனேய் கு
பெயரும் உயிருமாவாய் நன்று!