Sunday, April 5, 2026

ஆசுகவி - பகுதி 14.

 ஆசுகவி - பகுதி 14.

1601. ஸுப்ரபாதா மயா அத்ய நிஸா
தேவகி-நந்தனோ ஹி அஸௌ |
யத்-அங்க்ரி-பங்கஜ-ரஜ: -
ஸ்பர்ஸேந ஆத்மா புநாதி மே || - 
"இன்று என் இரவு விடிந்து, ஒரு மங்கலமான சுப்ரபாதம் 
(நல்ல காலைப் பொழுது) எனக்குத் தோன்றிவிட்டது!" 
-பாகவத தசம ஸ்கந்தம், அக்ரூர யானம் .

பகல்கண்டேன் நாரணனைக் கண்டேன் அதுவால் 
இகல்படுத்தும் அக்ஞான ஆரிருள் -- நீக 
விழித்துமெய் ஞான  பகல் பொழுதாகி 
வீழல் தவிர்ந்தெழல் உற்று. . 

1602.ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி 
(Diversity is not a contradiction of unity; rather the 
manifestation of the Lord does not blemish His infiniteness)::

கடல்நீர் குடத்தில் குடுவையில் வாய்த்த 
மடக்கில் முகந்தால் மடுத்த -  கடல்நீர் 
அததன் உருவம் எடுக்கும் அதுபோலே 
யாதுமுள எம்மால் வடிவு. 

1603. ஸர்வ பலப்ரதோஹி விஷ்ணுஹு ::
(கூறை சோறு செல்வம் தகவு வீடு வாசல் யாவும் ஈவான் மால்)

கஞ்சிக் கலையமும் பாஞ்சாலி மானமும்
மிஞ்சநூ லாடையும் பாரினை - பஞ்சவர்க்காய்
ஈத்தானே செல்வம் குசேலர்க்குக் காட்டினான் மத்தோர்கை கூடா வகை.

1604. தன்னைத் தான்பாடும் என்வாய்முதல் அப்பன் ::

மழலைவாய் சொல்பிழைய தேனும் இனிதா  

விழையும் தமப்பன்தாய் போலும் -- பிழையது 

கொண்டு மொழிவனேலும் தாமுகக்கும் தெய்வம்மால் 

விண்டு விளம்ப விரும்பு.


1605. தேஹம் ரதம் யுக்தமேவ |
துஷ்டாஷ்வயுக்தமிவ வாஹமேனம்
-ஸ்வேதாஸ்வதர உபநிஷத் 2.9
உழவர் மனைகட்டை வண்டிகாளை போலும்
உழலும் உயிர்உடலின் ஊடே -- விழல்பொதி
பாரம் எனஊழ் வினையான் நடாத்தும்
பராபரன் கோல்வசமாம் வாழ்வு.

1606. அத்யேன ஞான அனுட்டானங்களாலே பிராம்மண்யம் போலே சந்தங்கள் ஆயிரமும் அறிய கற்று வல்லார் களானால் ஶ்ரீவைஷ்ணவத்வ சித்தி ::
வேதவழி ஓதி உணர்ந்து நடப்பார்தாம்
சாதிகூர் அந்தணர் ஆவர்போல் -- வேதம்
தமிழாம்பின் அஃதறியக் கற்றுவல்லார் தானே
அமிழ்தினய வைட்டணவர் ஆம்.

1607. இல் பொருள் உயர்வு நவிர்சி ::
மீன்மரம் ஏறலாம் பாரில் கரிக்கட்டை
மின்வைரம் ஆகலாம் காகமும் — தேன்குரலில்
பாடலாம் பாம்பு வளைவுநீங்கி நேரே
ஓடலாமால் மேவா தெது?

1608. ஸக்ருத் ஏவ பிரபன்னாய "தவாஸ்மி" இதீ ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம ::
யான்எனது என்னும் நினைவகற்றி, செங்கணோயே!
"யான்உனக்கு" என்பதனை யாம்மொழிய -- தான்தனது
மேன்மை தகமிகுத்து வான்தந்து தன்னடியார்
முன்னே உகநிறுத்தும் முந்து.

1609. ஒளபசாரிக , ஸாம்ஸ்பர்ச, போஜ்ய போகங்கள் :
தூபதீபம் கண்ணாடி சாமரம் காட்டியபின்
ஆபரணம் தோள்மாலை சந்தன -- லேபனம்
அப்பமவல் பாயசம் மாலுனக்கு நான்தர
இப்போ தருள்கிடாய்நீ வந்து.

"யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே..."
(உலகில் மலைகளும் ஆறுகளும் உள்ளவரை, இராமனின் புகழும் அவனுக்குத் தொண்டு செய்தவர்களின் பெருமையும் நிலைத்திருக்கும்).
கரணங்கள் மூன்றும் கருத்தொரு மித்து
உறும்செயல் ஊடு தன்நலம் -- சேரா
உடையவன் தொண்டும் பொறையும் பணிவுமாய
மாடுடை நால்வர்நம் வாழ்வு.

1610. பத்தி உழவன் பழம் புனத்து மொய்த்தெழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து
-நான்முகன் திருவந்தாதி 23.
என்நாதன் என்னப்பன் எம்பெருமான் என்னாக
அன்பு பெருமான் அவன்பால் — தன்னாக
உண்டாக சன்ம விடாய்க்கது காளமேகம்
கண்டநல் பக்திநெல் வித்து.

1611. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை
அருளுக்கும் அஃதே புகல்.
செல்வம் தனக்காய் நுகர்சிநர காவகம் ;
நல்லுரைப் பால்பிறர்க்கு மாய்ப்பேண -- வெல்வ
துயர்சுவர்க்கம்; அஃதா இறைப்பணிக்கே போக்க
பயற்றுவார் வீடதே மாடு.

1612. கைங்கர்யத்தில் களை அறுக்கையாவது
கொண்டமைக்கு கைக்கூலி கோரா தொண்டதாகும் ::
புறம்போக்கி பல்பிறவிப் பாழ்பட்ட பின்னை
அறம்மெல்ல இன்று உனபால் - நிறுத்த
வெகுளாது இன்முகத்தான் கைகவித்த பேறதற்கு
மீகுளதோ யாம்செய்யும் தொண்டு

1613. சாத்திரம் கொண்டு இணங்காரை தன் சேட்டிதம்
கொண்டு இசைவிக்கும் அபதான பிரதாபம் ::
ஏழு மலைவாசா! எம்மையாள் ஈசா!முன்
கேழல் உருக்கொண்டு மண்ணிடந்தாய்! -- மாழை
மடப்பின்னை காரணமா ஏறடர்த்தாய் அத்தால்
மடங்குமாவி நின்பால் மிடைந்து.

1614. க்ரீஷ்மே சீதமிவக்ருதம் :
த்வதீக்ஷண ஸுதா ஸிந்தோ !
ஷீதலை அபிஷிஞ்ச மாம்.
வேனில் வெயிலுக்கு ஆடும் படநாக
கூனல் குடைக்கு ஒதுங்கவோ? -- கானல்
பிறவியில் வெம்பசிநோய் கூறநின் பாதத்
தொறவுசீத நீருள் குளித்து.

1615. அவனிவன் என்று கூழேல்மின்
இவனாகும் ஆழ்கடல் வண்ணனே ::
-திருவாய்மொழி
கொக்கைப்போல் கோழியைப்போல் உப்பைப்போல் நீட்டேவல்
புக்கிட்டு குற்றேவல் உக்கிட -- எட்டாத
விட்டத்து வைகுந்தம் விட்டு தமர்கூட்ட
வீட்டின்பக் கோயில் விரவு

1616. த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன:|
காமக்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாத் ஏதத்ரயம் த்யஜேத்||
கீதை 16-21.
பொறியில் வைத்த பழத்தை பறிக்க
விரலை துருத்திப் பிடியூண் -- குறவன்
குரங்குபோல் ஐம்புலன் வாய்வலைப் பட்டு
கிரங்குமாவிக் காசை இடர்.

1617. பஞ்சாக்நி வித்யா ::
கடலேழ் உலகேழ் மலையேழ் உடைய
தடமேல் தனிதிரி ஆவி -- இடிமின்
முழங்குகார் மேகமது பற்றி மழையென
வீழப் பயப்ப துயிர்.

1618. யத்ர அஷ்டாக்ஷர ஸம்சித்தி: ந தத்ர வியாதி (ஸ்வதந்த்ரியம்)
துர்பிக்ஷ (ஸ்வயத்னம்) தஸ்கரா: (ஸ்வார்த்தம்) ::
நாரா யணனே நமக்கே பறைதருவான்
ஓரா நமவென்ன லாம்கடமை - மாறா
வழுவில் அடிமைக்கண் ஆம்துடிப்பு தீர்வு
பழுதிலாவாழ் வுக்கெட் டெழுத்து.

1619. ஸம்ஸார சாகரம் கோரம் அனந்தகிலேச பாஜனம்
பதிதம் பீப₄வார்ணவோதரே கருப்பையா ஆத்ம ஸாத்குரு ::
உறவினர்பால் பாசம் பொருள்பால் பற்று
பிறள்வதாம் சூழல்பின் பட்டு — துறட்டிபோல்
காலம் இடர்க்குமிவ் வாழ்வில் நிழல்போல்
உலரநீரில் நீந்துவார் வாழ்ந்து.

1620. உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு
ஒழிக்க ஒழியாத பாஹிநேய - ப்ராத்ருவ்யர் ஸம்பந்தம் ::
அறிவு பணிவு அதோடண்ணல் ஆன
துறவி இராமா நுசமுனிதன் — ஆறாத
காதல் விடலில்கைத் தண்டம் எனவாம்
முதலியாண்டான் எம்மின் இறை.

1621. இன்றுவந்தவன் இருப்பிடம் எந்தன் இதயத்துள்ளே தனக்கின்புறவே ::
மங்களம் யதி வர்யாய - மங்களம்
மச்சித்த ஸுக வாஸிநே
மங்களம் யோகீசாய - மங்களம்
பவபய பீத ஹாரிணே
மங்களம் பூத புரீசாய - மங்களம்
மந்த்ரராஜ தர்ஸிநே
மங்களம் ரங்கப்ரிய சேவகாய
ஸதாயாந்து தே மங்களம்!

1622. விஷ்ணு லோக மணிமண்டப மார்கதாயி ::
தான்தமர் தம்மதான மேனி மிகஉகந்து
வான்போகம் தன்னை மறந்தராய் -- தான்இறங்கி
யான்உளனாய் தான்தரும் மால்ஈசர் எதிராசர்
யாம்உளமாய் என்குறைஎங் கட்க்கு ?

1623. சித்தித்ரயம் :
பரமபதம் பாற்கடல் தேர்த்தட்டு இன்நின்று
கூறும் உபதேசம் ஒவ்வொன்றும் -- பாரில்
பிறந்து உழல்தல் விடுத்து தனதாள்
உறல்பொருட்டு ஆரியன்வாய் காட்டு

1624. நம: பங்கஜ நேத்ராய நாத ஸ்ரீ பாத பங்கஜே |
ந்யஸ்த ஸர்வ பராய காருண்ய பூர்ண மூர்த்தயே ||
அட்டாங்க யோகம் அதனை பிணம்கிடக்க
நட்ட நடுவே மணம்புணர்வார் - உண்டோ?
எனவிடுத்து செய்தநல் வேள்வியராம் தன்மை
தனால்உய்யக் கொண்டார் உலகு.

1625. மூவரான ஒருவர் யார் இவர்க்கு நிகர் ?
பூதூரில் வந்துதித்த புண்ணியனோ? கோதில்வண்
யாதவாத்ரி வள்ளலோ? தென்னரங்கம் -- போதபொருள்
மன்னரங்கர் யாத்தனாய் ஈத்தஇம் மூவரில்
உன்னலில் யாரேமேல் என்று!

1626. ருசி அடியாத தாஸத்வம் தடஸ்தமானால்  
ஸ்வரூப பிரயுக்த சேஷத்வமே ஆத்மாவுக்கு அந்தரங்க நிரூபகம்  ::

அடிமைக்கண் ஏவல் இழுக்கலவே? என்னில்  
கடமை உணர்வில் முனைவார்  -- இடத்தும்
அடையமிக் கன்புடையார் மாட்டும் பழுதிலையால்   
நீடவுயிர்க் கில்லை உலப்பு.

1627. ஸ்ருதி ஸ்மிதிர் ச சக்ஷுஸீ  விப்ராணாம் தேவ நிர்மிதே  
காணஸ் தத் ஏகயா ஹீன: துவாப்யாம் அந்த பிரகீர்த்தித :

பழமறை யோடு இலகு தருமநெறி 
வாழும் புவிஅந் தணர்க்கு -- விழிஇரண்டு 
கூறில் இரண்டுமன்றி ஒன்றேனும் தேறார் 
கறுங்காக்கை அந்தகனா மே!

1628. நாமப்ரபாவம் போலன்று நாமிப்ரபாவம்.
அவன் தூரஸ்தனானாலும், இது கிட்டி நின்று உதவும்.
திரௌபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமம் இறே. 

நாரணன் நாமங்கள் எஞ்சாமை கொண்டுநீர் 
ஈரில் இரட்டை இரண்டிரண்டா -- நேரா   
தொலைய சுவர்க நரகும் விலக்கா    
மலக்குநா மீதுரக்க செப்பு. 

1629. மழை - மானுடக்காவல் :

காடும் கடலும் கதிரவன் வெம்மையும் 
நாடும் நகரும் செழிப்புறக் -- கூடி 
மழையெனப் பெய்தர வாழும் உலகு
மழைமேனி மாயோன் குறித்து. 

1630. த - ஸ்திதி-வாசுதேவ; 
பூதானி வஸந்த்யத்ர பூதாத்மநி ச பூதக்ருதி | 
ஸர்வபூதாஸ்ரயபூதோ தகாரார்தஸ்ததோSவ்யயஹ ||
(விஷ்ணு புராணம் 4-8-81)
ச - சம்பு - சம்ஹாரம் 
ருத்ராணாம் ஶங்கரஶ்சாஸ்மி
(கீதை 10-23)
க இதி ப்ரஹ்மணோ நாமம் 
(ஹரிவம்ச பர்வம், 3.88.48)
திஸதி இதி தேசிக :

அளித்து அழித்து படைத்தல் எவர்தொழில்
ஆளும் இறைவாசு தேவன் -- காளராத்ரி
சம்புவான சங்கர்டன தேவன் பிரத்யும்னன்
தம்மொடு தேசிகரென சாற்று.

1631. மனச்சேன் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே,
ததஃ கிம் ததஃ கிம் ததஃ கிம் ததஃ கிம் ?
-- ஆதி சங்கரர் .

பாலாழி மேனி குருவரிய! நின்ஆசி
போலாம் உறைசேர் மனத்தயிர் -- ஆலித்து
பக்தியெனும் மத்தால் கடைந்தெடுத்த வெண்ணையுள்
அத்தனருள் தான்உருக்கு நெய்! 

1632. குருரேவ பரம் ப்ரம்ம குருரேவ பரா கதிஃ | 
குருரேவ பரா வித்யா குருரேவ பரம் தனம் ||
குருரேவ பரஃ காமோ குருரேவ பரம் தபஃ | 
தஸ்மாத் ஸர்வகதைஃ ஸித்யை குருமேவ பஜேத் ஸதா ||
-- ஸ்காந்த புராணம்.

மந்திரத்து உட்பொருளாய் ஓவல் எவனைநாம்  
அந்தமால் ஈசன் அவனும்தான் --  இந்தபுவி 
தன்னில் அவதரித்த காலத்தோர் ஆசானை 
சென்றணுகி வாசிக்கக் கேட்டு. 

1633. வைத்தவிடத்திருந்தேனோ பரதாழ்வானைப் போலே ?

இங்கேயே வைத்தாலும் வைகுந்தம் சேர்த்தாலும் 
செங்கண்மால் நின்றன் குறிப்பதாகில்  -- நங்கள் 
குறைவு நிறைவு விலைசெல்  வதே?பேரா  
ஊருணிப் பாவியோ முக்கு !
 

1634. பிரதம பிரவிருத்தி ஜீவ ஸ்வாதந்ரியம் 

ஸம்சார சாகர பிராரம்பம் ::


உலகும் உயிரும் படைத்த இறைவன் 

குலவு நெறியும் கொடுத்து — கலக்கு

மனம்தான்ஏன் தந்தான்? ஆதி பகவன்

இனம்தழைப்ப வித்திடவே அன்று. 


1635. முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா!

அட்ட புஜமான எம்மால் நினைவோடு 
சிட்டர் பதின்மர் மனத்தோடு -- எட்டிரண்டு 
கைக்கொண்டு  நாலா யிரம்உய்த்த நம்மாழ்வார் 
நான்முகனோ? ஐமுகனோ தான்?

1636. குஹ்யாத் குஹ்யதமம் பரம் :

உள்ளம் ஒருகோயில்! அங்குயிர் ஊஞ்சலதில்     
கள்ளன்கொல் மாயன்  தனக்கிடமாய் -- மெள்ள  
அமர்ந்திட அப்புந்தி என்பதோர் பூசாரி 
நாமங்கொண்  டர்ச்சிப்பன் ஆங்கு.

1637. விஷ்ணோபதே பரமே மத்வ உத்ஸ:
(ரிக்வேதம்)

கண்ணன்கார் வண்ணன் கமலைக் கொழுனனாம் 
அண்ணல்தன் ஊதுகுழல் வாய்வைத்து — பண்ணிசைப்பக்
கேளில் நமக்கினிது ஆகவோதேன் ஊறித் 
தெளும்பும்கால் முன்வாயில் வைத்து?

1638. என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் ::
(இரண்டாம் திருவந்தாதி-95)

மற்றுள்ள ஆழ்வார்கள் ஒன்பதின்மர் யாவரிலும் 
உற்றபூதத் ஆழ்வாரே தம்சிரசாம் -- கூற்று 
குருகூர் அருள்மறனுக் கான திருவர்  
மருகுநெஞ்சும் அத்தியூராட் பட்டு. 

1639. யதா² கா³வோ நஸி ப்ரோதாஸ்தந்த்யாம் ப³த்³தா⁴ஶ்ச தா³மபி:⁴ । 
வாக்தந்த்யாம் நாமபி⁴ர்ப³த்³தா⁴ வஹந்தி ப³லிமீஶிது: 
இதன் பொருள் :-
மூக்கணாங்கயிறு கோர்க்கப்பட்டு, பெரிய கயிற்றினால் ஒன்றாகக் கட்டப்பட்ட மாடுகள் எவ்வாறு தங்கள் எஜமானரின் சுமையைத் தாங்கிச் செல்கின்றனவோ, அதுபோல வேதங்களாகிய கயிற்றில், பெயர்களாலும் (நாமங்களாலும்) கடமைகளாலும் கட்டப்பட்ட உயிர்கள் அனைத்தும், அந்த ஜகதீஸ்வரனின் (இறைவனின்) கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவனுக்கான வாழ்வியல் கடமைகளைச் சுமந்து நிற்கின்றன.- ஸ்ரீமத் பாகவதம் (1.13.41):  

பாலதுன்பம் பல்படைப்பு தோறும் எமக்களித்தாய்  
ஞாலத்து நம்மை நலிந்து -- சலியாதென் 
லாபம்? சலமிது நீவிடுத்து ஈபாபம் 
ஈறா எமைகரை ஏற்று.  

1640. அத புருஷோ ஹ வை நாராயணோऽகாமயத ப்ரஜா: ஸ்ருஜேயேதி । 
நாராயணாத் ப்ரம்மா ஜாயதே । நாராயணாத் ருத்ரோ ஜாயதே ।
- நாாராயண உபநிஷத் (நாராயண அதர்வசீர்ஷம்)

மாலே பரதெய்வம் என்பார் அரனை,வா
யாலும் உரையார் அதுபோலா  — ஏலார் 
சிவனடியார் மாலை, தனுவான தன்மை 
இவரவரில் உண்டென்ப விட்டு.

1641. என்னை தீ மனம் கெடுத்தாய், மருவித்தொழும் மனமே தந்தாய் ::

யாதானும் செய்துமே நீங்கும் விரதத்தனாய் 
போதேனும் நின்பால் உணர்விலா  -- தீதனை 
மாலே!நின் தாள்நயப்பச் செய்தனை நின்றனக்கு 
ஏலும்கை மாறா துளனே ?

விட்டுவான தன்மை அவனடியார் கள்ஆன 
வைட்டணவ னுக்குஏலா தாப்போல் -- விட்டுவும் 
வைட்டணவன் ஆகான் உடலம் உயிரோடு 
ஒட்டிநின்று வேறாம் படிக்கு !

1642. பாரமார்த்திகம் - வியாவகாரிகம் ::

மாயா உலக மயக்க அயர்ப்பகற்றி  
தூயமெய் ஞான நிலையதே -- உய்வென 
உன்னி உலகியல் உண்மையுள் நில்லாது    
உன்னத உண்மைக்காய் மன்னு. 

1643. சாஷ்டாங்க பிரணாமம் அதுவுமோர் அஷ்டாங்க யோகம் ::
 
கரம்சிர மேல்குவித்து  தாள்இணைத்து காயத்
திரும்உறுப்பு  நாலிரண்டும் தண்டு  —  தரையில் 
விழுந்தார்ப்போல் போக்கிடமும் கைமுதலும் யாதுமிலா 
ஏழ்மை இயம்பல் வணக்கு.

1644. ஊர்த்வமூலம் அதஃசாகாம் அச்வத்தம் ::
(கீதை 15-1)

கனிந்த பழம்கிளையில் ஒட்டாது இற்றுவீழும் 
மேனது வேறிடத்து வித்தாம் - எனஇம்மெய்
கூட்டைப் பிரியுமாவி ஐயன் சுவைத்துமிழ்  
கொட்டை விளைநிலம் வீடு.

1645. ஸ்வ ஹ்ருதயம் தெய்வம் அத்ர ப்ரமாணம் ::
(ததிபாண்டனாய் மோக்கம் போனதும் 
சாந்தீபினியாய் மோக்கம் போகாததும் எவர் செயல்?)

சண்டாள னாய்ப்பெற்றுப் போவதும் அந்தணனாய் 
கொண்டாள மாட்டா  திழக்கையும் -- உண்டலவோ ?
கைகூப்பி சேவிப்ப ரேலும்சீ மாதவன் 
செய்கை எனவல்லால் மற்றோ?

1646. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
(நீத்தார் பெருமை, குறள் 25):

காமம் அகந்தை வெகுளி இவைமூன்றால்
காபுருடன் ஆன அமரர்தம் — கோமான்
பழிபாப சல்லடைக் கண்ணனானான் கான்அகல்யை
பூழிக்கல் ஆனாள் புணர்த்து.

1647. ஸ்வர்கத ஸம்புக ஸம்ஸ்துத ராம் 
(நாமராமாயணம்-உத்தரகாண்டம்-line 7)

அந்தணர்க்கு அல்லா அவிர்யாகம் சம்புகன் 
இந்த்ர பதவிக் கியற்றவத்தால்  -- அந்தண 
பாலன் மறித்திட ஆங்கவனைக் கொன்றுஉய் 
பாளனானான் ராமன்மற் றேது ?  

1648. பத்தினிப் பேரணங்கு :

ஆற்று பசுமண் குடம்வனைந்து நீர்கொணர் 
மாற்றிலத மேதாள் ஒருத்தி;அன் -- நேர்த்தி 
கிணற்றின் நடுவே குடம்நிறுத்தி  யாள்ஒருத்தி 
கண்ணகியும் பேணான் அணங்கு.

1649. காலை நிழல் பின்னும் 
மாலை நிழல் முன்னும் 
உச்சி நிழல் உடலோடும் நடப்பவாம் ::

அயோத்தியில் மாமியார் மெச்சராமன் பின்நடந்தாள் 
மேய கானிடை ஐயன்தோள் -- சாய்ந்தினிதே   
வாழ்ந்தாள் பின்இலங்கை முன்எய்தி தானவனைச்  
சீழ்ந்தாள் நிழலாய்த் தொடர்ந்து. 

1650. ஸுஆராத்திய ஸுலப ஶ்ரீதர : ஸதா ||

கண்களில் வந்துபின் புந்தியுள் நின்ற-மால்
அண்ணல் விரும்பி இருந்ததும் — நண்ணக்
கிடந்ததும் நெஞ்சுளே! ஏத்தி இரைஞ்ச
தடையும் உளதோ இனி?
(தடையில் மனமதும் தந்து)

ஸமர்பணம் ::
நாள்தோறும் ஞானம் தழைப்பசீ மாதவன்
தாள்நயந்த சீர்த்தொடை ஆயிரமும் —  கொள்கிற்பார்
அத்தாமத் தன்புதான் மிக்கியற்றும் சீனிவாசர்க் 
குற்றவராம் இங்குமங்கு மே!

--  ஆக்கம், படைப்பு மற்றும் பதிப்புரிமை :
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.