Friday, June 12, 2026

ஆசுகவி - பகுதி 15.

 ஆசுகவி - பகுதி 15.

1651. தன்னை அழியமாறி மேன்மை பிறர்காக்கில் 
ஈதார்க்கு பெற்றாரால் பேறு .

பிள்ளைக் கறிஉண்ணக் கேட்டபிரான் மாலுக்கு 
பிள்ளைவரம் ஈத்தானாய் பங்கயக்கண் -- கிள்ளி 
துதித்தற்கா சக்கர நற்படை நல்கலுமே  
தாதைசேய் தெய்வவிளை யாட்டு. 

1652. நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம்- நாராயண ஹ்ருதயம் .
வீராணம் ஏரி மதகுபோல் மால்கருணை 
ஓரோர் மனுஜருக்கும் வாய்த்திட -- சீரார்
குருமார் எழுபத்து நால்வரை ஈந்தெம் 
பெருமானார்க் கன்றியாரே ஆள்?

1653. மாயாம் து ப்ரக்ருதிம் வித்தி மாயிநந்து மஹேஸ்வரம் 
மாயா வயூநம் க்ஞானம் ::

இன்றுபோய் நேற்றாக நாளையும் இன்றாக
நின்று கழியும் பொழுதிவை -- ஆன்றவெளி  
தோன்றிக் கரைந்திடும் மேகமென்னில் என்றுமுள 
வான்போல்யான் பொன்றாப் பொருள்.   

1654. இறைவன்  வினைச் சொல்லா?
பெயர் சொல்லா? அவன் யாவபடி ?

இறைநீ எமக்கு! படைத்தளித்து நீக்கும் 
நிறைகுட  ஆற்றல் வடிவாய் -- மறைந்து 
அகமிருந்து ஆளும் இயக்கமாய் அன்பு   
உகமிகுத்து ஊட்டும் உணர்வு. 

இறைவனை  வினைச்சொல்லாக அல்லாமல் பெயர்ச்சொல்லாகப் பார்ப்பது சரியா ?

இறைவனை ஒரு 'பெயர்ச்சொல்லாக' (Noun) பார்க்கும்போது, அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட வடிவத்துடன் இருக்கும் ஒரு தனி நபராகவோ அல்லது பொருளாகவோ மட்டுமே சுருங்கிவிடுகிறார். ஆனால், அவரை ஒரு 'வினைச்சொல்லாக' (Verb), அதாவது ஒரு செயல்பாடாகப் பார்ப்பது என்பது விசிஷ்டாத்வைதத்தின் 'அந்தர்யாமி' மற்றும் 'ஜகத் காரணத்வ' தத்துவத்திற்கு மிக நெருக்கமானது.

அதை எப்படிப் புரிந்து கொள்ளலாம் என்றால்:

  • இயக்கு ஆற்றல் (The Act of Sustaining): ஈஸ்வரன் என்பது ஒரு பெயரல்ல; அது பிரபஞ்சம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மகா இயக்கம். பிரபஞ்சத்தை சிருஷ்டித்தல் (ஆக்கல்), ரக்ஷித்தல் (காத்தல்), லயம் செய்தல் (அழித்தல்) ஆகிய தொடர் வினைகளின் வடிவமே ஈஸ்வரன்.

  • அகவொளி செயல்பாடு (The Act of Guiding): ஒவ்வொரு ஜீவாத்மாவுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து, அதற்கு அறிவைக் கொடுத்து, அதை இயங்க வைக்கும் "இயக்கமே" (The principle of enlivening) ஈஸ்வரன்.

  • அன்பின் வெளிப்பாடு: ஈஸ்வரன் என்பது நிலையாக இருக்கும் ஒரு பொருளல்ல; அது ஜீவன்கள் மீது பொழியும் 'கருணை', 'அருள்' போன்ற செயல்பாடுகளின் வடிவம்.

சுருக்கமாகச் சொன்னால், ஈஸ்வரன் என்பவர் எங்கோ இருக்கும் ஒரு 'பொருள்' அல்ல; அவரே "இருத்தல்" (Being), "இயக்குதல்" (Energizing), மற்றும் "அறிதல்" (Knowing) போன்ற பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த வினைகளின் கூட்டு வடிவம். நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலிலும், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவிலும் அந்த வினைச்சொல்லை நாம் தரிசிக்க முடியும்.

1655. ''பக்தாநாம் துவம் பிரகாஸசே'' என்பதற்கு இணங்க ஆஸ்ருதர்களுக்கு வகுத்த இடம் - அர்ச்சா திருமேனி ::

வடிவது கொண்டு குறைவாளன் போல்தம் 
முடைஇருப்பு பக்தரால் தான்ஒன்றும் -- ஆற்ற 
கடவலனாய் இட்டது பூரைக்கும் தத்துவம்தான் 
வீடது கிட்டிடவாம்  தேவு!

1656. ஸ்ரீ ஸ்துதி ::

த்வம் மாதா ஜகதாம் தேவி த்வம் ஹி நாராயணப்ரியா |
த்வம் அதிகதாம் சாம்யமேதத் விஷ்ணு வக்ஷஸ்தலாச்ரிதா|
த்வம் தேஹி மே ஸ்ரீரச்யுத பங்கஜ பாத ஸேவயாம்  ||
ஏவமர்ச்சயதாம் மாம் த்வம் ரக்ஷ ஜகதாம்பிகே ||

1657. நாதோபாஸன ஜேஸின வாரிகி
நாதமுடு ஸ்ரீராமா ::

உடலிது யாழின் நரம்புகள் புலன்கள்
தடவிப் பரிமாறும் விரல்கள் -- மிடற்று
இசையோ உயிரின் உயரிய நாதம்
இறையும் குழையும் அதற்கு !

1658. வேடும் வானரமும் தாமுடை வேங்கடம் ::

வான்மதியம் தூங்கு சிகரநீள் வேங்கடக்
குன்றில் குரங்குகள் நூக்கியோடி -- மேன்நின்ற
அம்புலியை ஆகாசத் தாமரை என்நினைந்து
தாம்பறித்தாக் கப்போம்மா லுக்கு.

1659. மந்த்ரம், மந்த்ர திரஷ்டா, மந்த்ர தாத்பர்ய கிருஹ்ய த்ருப்புடி  ஸம்பிரதாயம் விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்களான 
பராங்குச முனி , இராமானுச முனி, மணவாள முனிகள் ஸம்பிரதாயம் 

உண்மைப் பொருள்மூன்று; திண்கழல் நாரணன் 
வண்புகழார் மந்திரங்கள் மூன்று;அக் -- கண்ணன்மால் 
கேசவன்சீர்  ஓதுமாழ்வார் எம்பெரு மானார்சேர்த் 
தேசிகரோ மூவர் முனி.

1660. தீயாரோடு இணங்கல் தீதிலும் கேடு ::
(If you are neutral in situations of injustice, you deserve the same punishment as the oppressor.)

பிதாமகரும் ராஜ குருவாம் துரோணரும் 
சாதுவாய் மாதவள் பாஞ்சாலிக்  -- காத 
பரிபவம் பார்த்துமே வாளா இருந்துவீழ்ந்தார்  
போரில் அநீதிக்காட் பட்டு. 

1661. (தசா)அவதார ரகசியம் ::

நீர்நிலம-நீர்வாழ் உயிரின மாய்த்தோற்றி 
ஓர்விலங்கின் உள்ளுணர்வும் மானிடர் --தேர்அறி 
வாற்றலும் மாண்குறளும் கோடரி வில்கலப்பை 
ஏற்குநல்ஞா னத்துரு விட்டு.

 இந்த அழகிய கவிதை வரிகள், தசாவதாரத்தின் வழியே உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையும், மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தையும் மிக ஆழமாகவும் சுருக்கமாகவும் விளக்குகின்றன.

உங்கள் கவிதையின் பொருளும் தசாவதார ரகசியமும் எவ்வாறு இணைகின்றன என்பதைப் பார்ப்போம்:

  • "நீர்நிலம-நீர்வாழ் உயிரின மாய்த்தோற்றி " (மச்ச & கூர்ம அவதாரம்): உயிரினங்களின் தோற்றம் முதலில் நீரில்தான் (மச்ச அவதாரம் - மீன்) தொடங்கியது. பின்னர் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய ஜந்துவாக (கூர்ம அவதாரம் - ஆமை) பரிணமித்தது என்பதை இது குறிக்கிறது.

  • "ஓர்விலங்கின் உள்ளுணர்வும் மானிடர் தேர் அறிவாற்றலும்" (வராக & நரசிம்ம அவதாரம்): முழுமையான நிலவாழ் விலங்காக (வராக அவதாரம் - பன்றி) மாறி, பின்னர் விலங்கின் உள்ளுணர்வும் (சிங்க உடலும்) மனிதனின் அறிவாற்றலும் (மனித தலையும்) இணைந்த ஒரு இடைக்கால உருவமாக (நரசிம்ம அவதாரம்) மனிதன் மாறினான்.

  • "மாண்குறளும்" (வாமன அவதாரம்): மாண்புடைய, ஆனால் இன்னும் முழு வளர்ச்சி அடையாத ஆதி மனித வடிவத்தை (வாமன அவதாரம் - குள்ளமான மனிதன்) இது குறிக்கிறது.

  • "கோடரி வில்கலப்பை ஏற்கு நல் ஞானத்துரு விட்டு" (பரசுராமர், ராமர், பலராமர் & கிருஷ்ணர், புத்தர்): இது மனித நாகரிகத்தின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது:

    • கோடரி (பரசுராமர்): காடுகளை அழித்து மனிதன் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கிய கற்காலம்/இரும்புக்காலம்.

    • வில் (ராமர்): சட்ட திட்டங்களுடன் கூடிய சமூக அமைப்பும், அதைக் காக்கும் அரசாட்சியும் உருவான காலம்.

    • கலப்பை (பலராமர்): மனிதன் ஓரிடத்தில் நிலைத்து விவசாயம் செய்யத் தொடங்கிய உழவுக் காலம்.

    • நல் ஞானத்துரு (கிருஷ்ணர் & புத்தர்): மிக உயர்ந்த அரசியல் தந்திரங்கள், தத்துவங்கள் மற்றும் ஆன்மீக ஞானத்தை அடைந்த உன்னத மனித நிலை.

மிகவும் அர்த்தமுள்ள, தத்துவார்த்தமான வரிகள்! தசாவதாரத்தின் பின்னால் இருக்கும் இந்த அறிவியல் உண்மையை இந்த கவிதை மிக நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

1663. சாங்கியம் யோகா: பாஞ்சராத்ரம் வேதா: பாசுபதம் ததா        
ஆத்ம பிரமாண்யாநி ந ஹந்தவ்யாநி வேத ச

சாங்கியம் யோகம் வடமொழி வேதமோடு                                                                ஓங்குயர் பாஞ்சமகா ராத்திரம் — சங்கரனார்                                                        பாசுபதம் என்னா இவைஐந்தும் ஆன்மநெறிக்                                                            ஈசன் வகுத்த வழி. 

1664. புருஷார்த்த பராகாஷ்டை ::

மங்களம் மாலுக்கு! மங்களம்மால் தேவிக்கு!                                                          மங்களம் எங்குமுள மாலடியார் — தங்களுக்கு!                                                      பொங்கும் பரிவால் பெரியாழ்வார் அன்றோது                                                          மங்களப் பல்லாண் டிசைத்து.   


1665. வாழியென வாழ்துவார்! வாழியென வாழ்த்துவார்!                                           கேழில் கடப்பாடு ஈதென்று — ஏழ்பாரும்                                                               சூழ்திருந்து நாரணனை வாழ்த்துவார் தம்தாளில்                                                         தாழ்த்துவாம் நங்கள் தலை.


1666. கஸ்யஶ்ரீ
புருஷோத்மக் க:? 

தனக்கொரு ஆன்மா தனித்திலாத் தன்மயன்                                                                       ஆன பொருளும் நம்உயிர் — யோனிக்கண்                                                                                      நின்று நியமிக்கும் அவ்விறைக்கு இன்னொருவன்                                                                            என்றுமில என்ப வது.

1667. சாத்விக ஆகாரம் ஸத்வ பிரச்சோதகம் :: ஆஹார சுத்தௌ ஸத்வ சுத்திஹி - சாந்தோக்ய உபநிஷத்.

உண்ணும்பால் சோறு தயிர்வெண்ணை யும்போல                                                               எண்ணம் வெளீயதாம் நல்லநல்ல !-- திண்ணம்                                                                   தெளிமின் கிடீர்!முக் குணத்து இரண்டவை                                                                       ஒளிக்கஒளிர் சத்துவம் ஓங்கு.

1668. ஸ பிரம்மா ஸ சிவ: ஸேந்த்ர ஸோக்ஷர பரமஸ்வராட் :

அறிந்தனம் ஆதியை !அண்ணலை ! எம்மனத்தே  மாறின்றி வந்து குடிகொண்ட — தோறிறையை! ஏறனை !பூவனை ! மாலுமாய ஏகனை ! என் கூறியாம் ஏற்றுவம் இங்கு ?

1669. ஈஸ்வரனைக் காட்டித்தரும் ஆச்சாரியன் உபகாரமோ பாதி
அந்த ஆச்சாரியனை நமக்கருளும் பக்வதுபகாரமோ அதீதி.

மயிலுக்கு தோகையும் பாடும் குயிலுக்
கொயிலான வின்குரலும் ஈத்தவம் -- மாயவனார்
அன்றோ நமக்குய்ய நல்லா ரியனைதான்
தந்தான் அதற்கென்கை மாறு?

1670. காமகோடியும் சறுக்கிய இடம் ::

ஐங்கணை வில்லானை முக்கண்ணால் நீர்த்தான்தான்
கொங்கிள மான்வடிவான நாரணன்றன் -- பங்கிமார்வில்
தங்கலாமாய் தான்துடித்து பின்னோட ஆங்கவளை
சங்கமிக்க லாகா விதிர்த்து.



1671. வாஸுதேவம் பரித்யஜ்ய யேந்யம் தேவமுபாஸதே

தேஷாம் கதி ப்ரபத்யே வை --கைசிக புராண ஸ்லோகம் -49.


கேழலாய் ஆழ்கடல் அன்று அகழ்ந்தவன்

ஞாழல் நிலமகட் ஈன்றகாதை -- மாழைமென்

மோகினி காதையும் மாலின் சிறுமைகூறப்
போகுமோ? பேசில் பிசகு.

1672. சரபமாய் கண்டபே ருண்டர்க்கு வீழ்ந்ததும்
நாரணன் றன்முழந்தாள் பூசிவன் -- சீர்முடியில்
சேர்ந்ததுவும் காபாலி முண்டம் விலக்கியதும்
தேர்வார்க்கு இல்லை மயக்கு.

{திருமாலும்-பிரமனும் வராஹமும்-அன்னமுமாய்ச் சென்று அடியும்-முடியும் காணாத சிவ-புராண கதை ; தேவர்களுக்கு அமுதுண்ணப் பண்ண திருமால் மோஹினி அவதாரத்தில் மயங்கி சிவன் வீர்யத்தால் சாஸ்தா உண்டான கதை; நிருசிம்ஹ ஆவேச பங்கம் பண்ண சிவன் சரப -கொக்கான கதை; இராவண வதை காரணமாக பிரமஹத்தி தோஷம் விலக ஸ்ரீராமன் ராமேஸ்வரத்தில் லிங்க பிரதிட்டை பண்ணி பூசித்த கதை; பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சிவனிடத்தில் யாசித்த கதை - என்று சிவ பாரம்யத்தையும் விஷ்ணுவின் அவரத்வத்தையும் பேசுமது இழுக்கு என்கிறதுஇத்தால்.}


1673. பூசுரர்வாழ் தமிழ்த் தலை நகரம் :: 

கார்முகில்போல் வண்ணன்! கடல்வண்ணன்! நீர்நிறத்
தோர்வண்ணன்! பார்மகள்கோ தைக்கன்பன்!  - பார்த்தன்தன்    தேர்முன்னோன்! சேர்திகழும் ஊர்திருவல் லிக்கேணி                ஈரத் தமிழ்கில்லை நேர். 

1674. ஆஸ்ருத ரக்ஷண துரந்தரர்களான ஆதி தம்பதிக்கு
மேற்பட்ட அன்யோன்யாஸ்ரயணீயம் உண்டோ உயிர்க்கு?

அன்பும் பரிவும் அதிசயித்து என்புதோல்
துன்பம் அதுவிலக்க அர்த்திக்கும் -- அன்னையோ?
அன்னவள் இன்முகம் பாரித் தருள்மாலோ?
என்னிவரின் யாரே புகல்?

1675. பிரஹ்மன் ப்ரத்யக்ஷ அகோசர : பரந்து வேதைக அதிகம்ய :
அப்பிராப்தே சாஸ்த்திரம் அர்த்தவது.
ப்ரத்யக்ஷேண அநுமித்யா வா யஸ்து உபாயோ ந புத்யதே | 
ஏனம் வதந்தி வேதேந தஸ்மாத் வேதஸ்ய வேததா ||

பொறியூடு ஐம்புலனும் கொண்டு மனதால் 
அறிவதும் யூகித் தறிவதும் -- கூறிடில் 
விக்ஞானம் ஆகலாம் மெய்ஜ்ஞானம் சாத்திர
சுக்ஞான கோயில் விளக்கு. 

1676. நிக்ரஹாநுகிரஹ கங்கண பத்தாய ந்ருஸிம்மாய (தஸ்ய) வீர்யம் நமாம்யஹம். 

பிள்ளைதன் வாயால் பெருமான் திருநாமம் 
எள்ளளவும் தன்னுயிர் காவல்தான் -- கொள்ளாது 
உள்ளி உரைக்கச் சீறுவான்சீழ் தெள்ளிய    
சிங்கர்சீற் றத்தெம் வணக்கு!. 

1677. பகவத் ஸ்வரூப ரூப வியாபார தியோதகம் ::

ஞானபல ஐச்வர்ய வீர்யசக்தி தேசச 
மானகுண மாறும் தனக்குயிராய் -- தனதுடை 
இசைவே செயலாய் நினைவே முனைப்பாய் 
திசைக்கும் உலகே உடல். 
 
ஏகம் - ஸத் - ஏகோவை நாராயண ஆஸீத். ந பிரம்மா, ந சிவா: நே மே வா பிருத்வி 
த்வீ - லக்ஷமி-நாராயண அன்ய மிதுனம் கோ விசார:?
த்ரீணி - சிதசித் ஈஸ்வர தத்வத்ரியம்  
சத்வாரி - வேத சதுஷ்டயம். நாராயண, ராமாநுச பத சதுஷ்டயம், சாதுர் வர்ண்யம். வாசுதேவ, சங்கர்ஷ்ண, பிரதியும்ந, அநிருத்த: இத்யேக வியூக அவதார:
பஞ்ச - அக்நி, பஞ்ச பூத: பஞ்ச வர்ண:, பஞ்ச பிராண :
ஷடு -  குணாஸ்ரய : பகவத:, அரிஷட் பத:, ஷட் ரஸ :
ஸப்தமி - ஸப்த ரிஷி: ஸப்த லோகா: ஸப்த ஆவரணாநி 
அஷ்ட : - அஷ்டாங்க யோக:, அஷ்ட வஸு, அஷ்ட ஐஸ்வர்ய லக்ஷ்மி :
நவ - பக்தி, நவரஸா 
தச - விஷ்ணு தசாவதார: ஆழ்வார் ஸமூக :
ஏகாதச - ருத்ர: கர்மேந்த்ரிய, ஞானேந்த்ரிய மநசாதி ஏகாதச இந்திரிய:
துவாதச - ஆதித்ய: கேசவாதி துவாதச நாம:
த்ரியோதச - மஹதாதி திர்யோதச பிரகிருதி மூல தத்வ:
சதுர்தச - வித்யா ஸ்தான : சதுர்தச புவனாநி 
பஞ்சதச - கர்மேந்த்ரிய, ஜ்ஞானேந்த்ரிய, தன்மாத்ரா பஞ்சதசா:
ஷோடச - ஸம்ஸ்கார: ஷோடச பகவத் உபசார:
சகஸ்ர - சீர்ஷா புருஷ: ஸகஸ்ராக்ஷ ஸகஸ்ரபாத் புருஷோத்தம: ஸகஸ்ர நாம:

1678. த்வமப்ரேமயஸ்ச துராஸதஸ்ச ஜிதேந்த்ரியஸ்சோத்தமதார்மிகஸ்ச | 
அட்சைய கீர்திஸ்ச விசக்ஷணஸ்ச க்ஷிதிக்ஷமாவான் க்ஷதஜோபமாக்ஷ: || 
(வால்மீகி -கிஷ்.4.24.31)

கண்டகி தாடகி தன்உயிரைக் கொண்டிட்டு 
பெண்ணாள வேண்டிவந்த சூர்பநகா -- காதுமூக்கும் 
விண்டிட்டு வேடுவச்சி காய்கனி உண்டிட்டு 
திண்கல்லை பெண்படுத்தான் ராம்!

1679. க்ஷாத்ரவமும், க்ஷமையும் ;

ஒருத்திக்கு வாளியும் இன்னொரு திக்கு 
சுரிகையும் கொண்டு உயிரையும் -- ஈரா 
செவிமூக் இரண்டும் விடுத்தவன் மற்றோருத்தி 
காவிடைக் கல்லைபெண் ஆக்கு.

1680. சத்தியேந லோகாந் ஜெயதி ::

இராவணனை வீரத்தால் வீயதம்பி  கும்பனை 
சூர பராக்கிர மத்தால் -- உருளித்தான்;
பொல்லா மாமனையோ தன்பயத்தால் உய்ந்தசெல்வ 
வீடணர்க்கோ தன்சரண் தந்து. 

1681. மூவரில் முதலாய தொண்டன் ::

இலக்குவன் தொண்டு அணுக்கத் தகலா 
குலாவிசெய் தொண்டு; பரதன் -- இலங்கியண்ணல் 
சொற்படிசெய் சேவகமேல் அன்னவர்க்கே ஆள்என  
உற்றதேசத் ருக்ணன் படி. 

1682. இளையவர்க்கு என்றும் அருளுடையாய்! கழல் போற்றி!

நாட்டில் பரதனுக்காய் ஆட்சியை ஆளநீடி 
காட்டில் குரக்கினத்து சுக்ரீவன் -- கூட்டனாய் 
வாலியைக் கொன்றரசை ஈந்தானேல் வீடணற்கு  
மேலாம் முடிதனதாள் தந்து.

1683. பலவடியார் முன்பரிசளிக்கும் பாம்பணையார்
அவராவார் ஆழ்வாரடியார். 

அப்பினில் இட்சுபோல மாலடியார் கூட்டத்து
நட்பினோடு நாளும் நனிகலந்த — மட்டிலே
தேட்டம் திறம்பா வகைதான் அதில்ஒட்டி
கூட்டும் இனிமை​ப் பெரிது.

1684. திருமந்திரத்தில் பிறந்து துவயத்தில் வளர்ந்து துவயைக நிரத்தனாக போந்து ஜப்தவ்யம் - துவயம். வஸ்தவ்யம் - ஆசாரியன் சந்நிதி. 
மந்திர ராஜம் (அஷ்டாக்ஷர மஹாமந்திரம்) அவதரித்தது பதரியில் - நரனுக்கு நாராயணன் உபதேசித்தது.
மந்திர ரத்னம் (துவய மஹாமந்திரம்) அவதரித்தது திருப்பாற்கடல் - வியூக வாஸுதேவன் தன் பாமினியான பெரிய பிராட்டிக்கு உபதேசித்தது.
சரம ஸ்லோகம் அவதரித்தது தேர்த்தட்டில் - அர்ஜுன சாரதி பார்த்தனுக்கு உபதேசித்தது.
ராம சரம ஸ்லோகம் அவதரித்தது கடற்கரையில் - பெருமாள் விபீஷணன் விஷயமாக அருளிச்செய்தது. 
வராக சரம ஸ்லோகம் அவதரித்தது க்ருத யுகத்தில் - வராஹப் பெருமாள் தன் பாமினியான பூமிப்பிராட்டிக்கு  அருளிச்செய்தது. 

ஆலமர நீழல் அரன்செய் உபதேசம் 
நீலநிற கண்டற்கு மால்மருகன் --  மேலை 
செய்த உபதேசம் யாவையிலும் மாலய்யன்  
பாமினிக்கு செய்ததற்றே மேல்.

1685.  ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும் 
கூறாளும் தனி உடம்பன் ::
(நாராயணாத் பிரம்மா ஜாயதே. நாராயணாத் ருத்ரோ ஜாயதே...
யஸ்ய கிஞ்சித் ஜகத் ஸர்வம் திருஸ்யதே ஸ்ரூயதே இவா.....
ஹ்ரீஸ்சதே லட்சுமி ச பத்ஞெள அஹோ ராத்ரே பார்ஸ்வே.... )

மாதொரு மார்வன்தான் மாதொரு பாகனை

மார்வினில் மாதுறும்  பக்கத்து — நேர்கொடு

வைத்தான்; உதரத்தே நான்முகனை தூகத்தான்

செய்வான் உயிர்உடற்காம் நட்பு.


1686. வள்வாய் அலகால் புள்ளந்துழாமே பொருநீர் திருவரங்கா !
(நம்மாழ்வார் திருவிருத்தம்-28)

கரையேறு நத்தைபுள் வாய்அலகில் மாளா
திரைநீர் விலக்கப் பிழைக்கும்  -- பொருநீர் 
புனல்அரங்கம் வாழ்வார் அடிகள் அவன்தாள் 
புனலால்உய் தற்கென் குறை?

1687. அபராத சகஸ்ர பாஜனம் பதிதம் பீம பவார்ணவோதரே 
-ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னம்-48

பொறிஐந்தும் கோளம் புலன்கண் உணர்வு 
அறிவ துயிர்மன தின்துணை  -- கருவிபாட்டு;  
அட்ட குவளை அடிசில் சுவைஅறியா 
வற்று வியன்வினையூண் ஊட்டு.

1688. புலன் நுகர்ச்சி தூறாப் படுகுழி 
அதுதான் மீள்பிறவிக் கிடுகுழி ::

விட்டில் ஒளிக்காய் வீயவரி வண்டுதேன் 
தொட்டுச் சிறைப்படும்; மான் தீங்குழல் -- பாட்டில் 
பிணையாம் களிறு பிடிக்காய் அணைந்தே  
துணைமீன் தூண்டில்வாய் வீழ்ந்து. 

1689. நீர-க்ஷீர விவேகம் :

பாலில் கலந்துநில்  நீரை பிரித்துநன் 
பாலை சுவைக்கும் வெளீயதான -- பாலின்
நிறஅன்னம் போல்உலகில் அல்லவை நீத்து 
பிறவாமைக் குள்ளதே நாடு.   

1690. நகரமருள் புரிந்து நான்முகற்கு பூமேல்

பகர மறை பயந்த பண்பன் பெயரினையே

புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்

அந்தியாம் ஆம் பயன் எங்கண்?

-முதலாழ்வார்.


பிரஹ்ம வித்யா துவத்ரிம்சத் ::

வேத சிரசதிலாம் ஆன்ம நெறியில்ஓர் 

சாதகன் தேடு கலைகள் -- பதின்ஐ 

இரண்டிரண்டும் ஆகவதில்  ஒன்றினில் ஒன்றி 

பெருமான் குணத்தோ டியம்பு.


1691. தந்தா மவன்ஆன்ம சோதனம் மேற்பட

அத்தாமத் தன்புபூண்டு அங்காள்செந் --  தாமரைத்  

தூகுமால் தன்நாமம் செப்பாது செய்தியானம் 

ஆகுல நீர பிற .


1692. உண்டி சுருக்கி உள்மூச் சடக்கிஏன்   

தண்டிக்க வேண்டும்  நுமரை ? மால் -- சண்டப் 

பிரசண்டன் தன்நாமம் ஏதேனும் சாரசமாய் 

சொல்லி சுவைத்தக் கால்!


1693. ஸ்ரீமத் ராமாநுஜ சரணௌ சரணம் பிரபத்யே 
ஸ்ரீமதே ராமாநுஜாய நாம:
-- என்பது பகவத் ராமானுஜர் விஷயமான துவய மஹா மந்த்ரம். 

குருவுக்கு சிஷ்யர்கள் பத்நி ஸ்தானமாகையால், 
ஸ்ரீமத் ராமாநுஜ சரணௌ = என்பதற்கு ஸ்வாசார்யருடைய 
புருஷகாரமாக பகவத் ராமானுஜருடைய திருவடிகளை 
சரணமாக = மத் விச்ரம ஸ்தலீ என்கிற நினைவோடே பற்றுகிறேன்.
என்று பூர்வார்த்தத்தின் பொருள்.
உத்தரார்த்மும் அதேபோல ஸ்ரீமதே ராமாநுஜாய நம: என்பதற்கு 
ஸ்வாச்சார்ய சமூகத்தில் பகவத் ராமானுஜருடைய திருவடிகளில் 
சகலவிதமான கைங்கர்யங்களையும் செய்யப்ப பெறுவேனாக 
வேண்டும் என்பதே பிரார்த்தனை. 

ஆதியிலே மாலரங்கர் தன்படுக்கை யாம்அனந்தன் 
ஏதிலார் உய்யஇரா மாநுசனாய்ப்  -- போதவிட 
நீக்கமில் தொண்டரவர் முன்மொழிய ஐயன்தாள் 
தேக்கமில் சேவகத்தான் பற்று. 

1694. இயற்கையில் ஆவது இறையின் செயலாகாதே?

நீரினில் ஈரமதன் மூலத்தில் இல்லதேனும் 
நீருக் கவைசேர்ந்தத்  தால்வாரும் -- நீறாம் 
உடலில் உயிர்சேரல் இங்குஇயற்கை என்றால் 
கடவுளர்க்கு என்னோ பிழைப்பு? 

1695. சுண்ணம் கடிபாக்கு தின்னும்வாய் வெற்றிலை 
வண்ணம் பிறிதா யினும்உதடு -- முன்னில் 
சிவப்பதும் போல்உடல் மேவு உயிர்துவள
நோவுரில் மீளலெவர் கொண்டு?

1696. சரீராத்மா பாவத்தில் சரீரத்துக்கான விகாரம் பிரஹ்மத்துக்கு இல்லையாய்
ஆத்மபரமான சரீர சேஷத்வம் போலே, ஆத்மாத்மீயங்கள் பகவத் 
சேஷ பூதம்.  

கடலில் அலைகள் கரையேற மீண்டும் 
கடலில் அடங்கும் அதுபோல் -- ஜடப்பொருளாம் 
வையம் உயிரிவை ஆதி பிரம்மத்து 
மெய்யின் விகாரமுயிர்க்கு இல். 

1697. ஷடங்க சரணாகதி மந்த்ர சார:

யோகம் தியானம் நீர்நெருப்பு கானிடை 
வேகும் தவம்தான் அரியதாய்  -- மாகவை 
குந்தப் பிறவி குறுகல் எளிதாம்மால் 
வந்தனீயத் தாட்த்தடம் புக்கு. 

1698. அடைக்கலத் தாளாகி உய்தல் எளியதேனும் 
கூடுவித்தாள் ஆரியன்தாள் நாடி -- கடைபட்சம் 
வேட்டுவது மால்ஈசன் பால்விசு வாசமும் 
காட்பண்யம் என்னிவையாம் ஐந்து. 

1699. பஞ்ச சம்ஸ்காரம், அர்த்த பஞ்சகம், பஞ்சகால பாராயணம், 
பஞ்சமோபாயம், மோட்ச பஞ்சகம் இவையாவார் அய்யங்கார். 
 
அய்யங்கார் என்ற வழக்கு நமக்காகும் 
மெய்யில் வாக்கும் செயலும்  -- இயையில் 
சடங்கு தொழுகை செயல்முகக் கோட்பாடு 
ஐஐந்தும் அடைகலத்து ஆறு. 

1700. ஆனுகூல்யஸ்ய சங்கல்பம் பிராதிகூலயஸ்ய வர்ஜனம் 
கோபித்திருப்த வரணம் ததா 
கார்ப்பண்யம் மஹா விசுவாச பூர்வக யாஞ்சனா 
மதிஹி சரணாகதி :
'' துவமேவ உபாய பூதோ மே பவ '' இதி பிரார்த்தனா 
மதிஹி சரணாகதி :
ஆபிமுக்ய, ஆகிஞ்சின்யத்தாலே தனக்கேற இடம் கிடைத்தவாறே என் ஊரைச் சொன்னாய். என்பேரைச் சொன்னாய். என் அடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத் தீர்த்தாய், அவர்கள் ஒதுங்க நிழல் கொடுத்தாய் என்றாற்போலே சிலவற்றை ஏறிட்டு , மடிமாங்காய் இட்டு, பொன் வாணியன் பொன்னை  உரைக்கல்லிலே உரைத்து மெழுகாலே எடுத்து காலக்கழஞ்சு என்று திரட்டுமாபோலே  ஜன்ம பரம்பரைகள் தோறும் யாதிருச்சிகம், பிராசங்கிக்கம், ஆனுஷங்கிகம் என்கிற ஸுக்ருத விசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே அவற்றை ஒன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும்.
-ஸ்ரீ.வ.பூ. பிர..4 சூத்.381.

உயிர்க்கு இவர்போல் இலைகாவல் எம்மைப் 
பயத்ததிரு மாலார்க்கு  ஆளா -- முயற்றி 
இயற்றப் படானேலும் தாம்மேல்  விழந்து,நம்
ஆயவொன்று பத்தாய்ப் புனைந்து.

ஸமர்பணம் ::
நாள்தோறும் ஞானம் தழைப்பசீ மாதவன்
தாள்நயந்த சீர்த்தொடை ஆயிரமும் —  கொள்கிற்பார்
அத்தாமத் தன்புதான் மிக்கியற்றும் சீனிவாசர்க் 
குற்றவராம் இங்குமங்கு மே!

--  ஆக்கம், படைப்பு மற்றும் பதிப்புரிமை :
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.