Sunday, July 6, 2025

ஆசுகவி - பகுதி 12.

 ஆசுகவி - பகுதி 12.

1425. யதா ஸர்வகதோ விஷ்ணு: ததைவேயம் த்வஜோத்தமா !
தேவத்வே தேவதேவீம் மனுஷத்வே மானுஷீம்  தநூம் 
ராக்வத்வே அபவத் சீதா  ருக்மிணி கிருஷ்ண ஜன்மநி 
அன்யேஷு அவதாரேஷு ஏஷா அநபாயிநீம் ::
(இத்தால் பிராட்டிக்கு விக்ரக வியாப்திதான் சொல்லப்பட்டது. 
ஸ்வரூப வியாப்தி சொல்லப்பட வில்லை என்பதிலே நோக்கு)

எங்குமுள மாலின் மருவென மார்பினில் 
தங்கியுள மால்தேவி ஆங்கவன்போல் --எங்கும்  
பரம்பினள் ஆமோ  எனில்?அன்று அவள்தன்
இருப்பும் அணுவாதல்  கொண்டு. 

1426. பிராணவார்த்த பிரகாசகமான கோயில் 
சரம ஸ்லோக பிரகாசகமான திருமலை 
துவாயார்த்த பிரகாசகமான பெருமாள் கோயில் 
மூன்றும் ஸ்வரூப, உபாய, பல பிராப்தானுபந்தம். 

எட்டெழுத்து மந்திர மானகோயில் மாலரங்கம்;
காட்டிக் கணைகழல் மாட்டிருத்தும் — வானாடன்
வேங்கடம்; தம்தேவி தன்னை திணைத்தளவும் 
நீங்காதான் கச்சிக் கிறை !

1427. தன்குருவின் தாளிணைக்கு அன்பொன்றும் இல்லாதார் 
நண்ணார்  அவர் திரு நாடு. 

தாமரையை  நீரில் அலர்த்தக் கடவதாம் 
கோமள வான்கதி ரோனும்அன்  --  நீரின் 
பிரியின் உலர்த்தல்போல் நற்குருவை நண்ணா 
திரிவார்க்கு அன்நேர்செய் மால்!

1428. ஸ்வரூப உபாய பல விரோதி பிராபல்யம் ::

இற்பிறப்பு என்பதும் தான்தனக்கு என்பதும் 
மற்று உயிரை உடையனான --  நற்றவ 
நாரணற்கு அல்லா பிறர்க்கும் சிறுகலாசை 
கோரலிவை நம்மின் பகை.

1429. காந்தஸ்தே புருஷோத்தம :

திருமகளார் தன்தனிக் கேள்வன் அருமை 
பெருமை அனைத்தும் அவளால் -- வருவதாய் 
கூறும் தரமோ? அதுவாய் தனைசமைத்து 
பேரும் அவ்ளதாக்கு மாறு. 

1430. ஸர்வஜ்ஞனாய் ஸர்வ சக்தனாய் பிராப்தனான அவன்
அஜ்ஞநாய் அசக்தநாய் அபிராப்தனான இவன்

என்னை அறிவாய் எனதிடும்பை கூர்பிறப்ப
தன்னையும் நன்கறிவாய் என்றாகில் — பொன்றா
உறவும் புலவியும் தந்துபுகப் பெய்து
திறனும் வலமும் உனது. 

1431. ஆத்மாநுபவம் - பரார்த்த கைங்கர்யம்  
கிம் பிராப்பியம் ?

கைவல்யம் ஆன்ம அனுபவம் சீவன்இவ்
வையத்து உள்ளனாக ஈரிலின்பம் — எய்துகை
முக்தியதாய் பேசும் அதுபோழ்கை ஐயன்மால்
நீக்கமில் தொண்டே தலை.

1432. அவதார ரகசியம்:;
தேவாதீநாம் ஸமாஸ்ரயணீயத்வாத் தத்தத் ஜாதீய ரூப ஸம்ஸ்தான குண கர்ம ஸமந்வித: ஸ்வகீயம் ஸ்வபாவம் அஜகத்யேவ ஸ்வேச்சயா பகுதா விஜாயதே பரமபுருஷ: — ஶ்ரீபாஷ்யம் 1-3-1

பல்பிறவிப் பெம்மான் கருணையால் இச்சையாய்
எல்லா உயிரில் ஒருவனாம் - வல்ல 
உருவும் குணமும் இயல்பாய் அமைத்து
வருமேதன் மேன்மை மறைத்து. 

1433. காட்டாறு போலே விபவம்; அதிலே 
தேங்கின மடுக்கள் போலே அர்ச்சை. 

கிருத திரேதா துவாபரம்போல் கலியில் 
ஓரோர் யுகம்தனில் கச்சி -- வரதனாய் 
தென்னரங்கன் பூரிசகன் நாதன் வடவரை 
வேங்கடனாம் மால்நான் நிலத்து!
 
1434. அதிஷ்டானம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம் | 
விவிதாஸ் ச ப்ருதக் சேஷ்டாஹ் தெய்வம் சைவாத்ர பஞ்சமம் ||  கீதை 18-14
.
கரணங்களோடு சிந்தையும் ஐம்பொறி ஊடுயிரின்
பூரண முயற்சி இவைநாலும் — காரணம்
என்றாலும் உற்ற செயல்முற்று விப்பதொன்றும்
தெய்வம்தான் என்ப தறிவு. 

1435. ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்ட :

 

இறையாண்மை ஏற்பவர் காக்கும் இறைவன்

இறையாண்மை தன்னை மறுப்பார் — துறப்பனோ?                     

வானம் விளைபூமி காற்று கதிர்மழை   

தானும் படைத்தான் அதற்கு.


1436. எம்பெருமானின் “நெடுமாற்கடிமை” ::

நாக்கொண்டு நாரணன் பன்னிரு நாமமோதி
தேக்குநன் மேனியில் அன்நாமம் — தக்க
எழுதித் தொழுவார் வழுதிவள நாடமாறன் 
பெறும்பரிசாக் கும்மால் நமக்கு. 

தனக்கடிமை செய்வாரின் தன்னடியார் தாமுகக்கு
நல்லடிமை செய்ய விழைவார்க்கு — அவ்வடிமை 
தன்னை நல்குவதும்  நம்மடிகள் இன்னும்  
அதிசயத்த தொண்டது கொண்டு !

1437. சாஸ்திர ஞானம் பஹுக்லேசம்
புத்தே : சலன காரணம்.

வேதமோர் ஆயிரம் ஓதி உணரல்தான்
கோதிலா மூவர்க்காய் அஃதினுச்சி — மீதிலான 
ஞானமோ ஒவ்வா விகர்பமாய் ஆனபோது 
ஏதிலார் கற்கை அரிது. 

ஆடிமாத காற்றில் அலப்புறும் தீபம்போல் 
கூடி ஒருநிலையில் நில்லாது  --  ஒடி 
அலையும் மனமோர் குரங்கு அதனை 
வலைப்படுத்த வாரும் குரு.

1438. ந தெய்வம் கேசவாத் பரம்|
நச ஞாஸாத் ஏவச||

வேதநூல் ஓதிநாம் உய்வழி தேடுமாகில்
பாதியும் பெண்கள் அவர்போக்கி — மீதியில்
வேதிய ரேலும் துறவிக்கே வீடதால்
தீதிலான்ம நிட்சேபம் தேறு. 

1439. சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம
த்வாமேவ நிஸ்தரந்தி மநீஷின :

யத்ர அஷ்டாக்ஷர ஸம்சித்தி: தத்ர 
நவர்ததே வியாதி துர்பிக்ஷ தஸ்கரா: 

எட்டு எழுத்து பதம்மூன்றும் கொண்டதோர்
விட்டுவின் மந்திரம் காட்டுவதும் — மட்டிலா 
மால்மகிமைத் தத்துவம் உய்உபாயம் செய்கடமை
எல்லாம் அவர்கேயாம் என்று.  

1440. வைஷம்ய நைர்க்ருண்யே ந, ஸாபேக்ஷத்வாத்
(பிரஹ்ம ஸூத்ரம் - 2-1-34)

மழுங்காத ஞானம் படையாய்நீ வையத்து
தொழுங்காதல் ஒன்றில்லா என்னை — அழுந்திட்டாய்! 
ஈரும்என் வல்வினை காட்டியிட்டு முன்னம் 
திருத்தாது போரவிட்டாய் என்? 

.Interpretation:

"There is no partiality or cruelty [on the part of Brahman] because [it acts] with reference to [the karma of beings]; for so [the scripture] declares."
This Sutra refutes the accusation that Brahman is subject to partiality (वैषम्य - vaishamya) or cruelty (नैरघृण्य - nairghṛṇya) in creating the diverse world with its varying degrees of happiness and sorrow. The reason given is सापेक्षत्वात् (sāpekṣatvāt), meaning that Brahman's creation is dependent on or with reference to the karma (actions) of individual souls. The differing experiences of beings are not due to divine caprice, but rather are a consequence of their own past actions. The scripture (śruti) supports this view.
This particular Sutra is crucial for understanding the Vedantic perspective on the problem of evil and suffering, reconciling the concept of a benevolent and omnipotent Brahman with the observed inequalities in the world.

1441. இந்ரிய பய ஆக்ரோஷம் ::

எரியும் அடுப்பில் விறகை அடுக்கி
நெருப்பை அவிக்கலாமோ? அஃதால் — பொறியுணர்
அஃதின் திறம்பா தொழியின் வழியின்றி
அஃதே நடத்தும் இறை.

1442. திருவுக்கும் திருவான செவ்வி, அவளின்
ஸ்வரூபத்தாலும், அவனின் வால்லப்யத்தாலும் வந்ததொன்று :: 

அலைமகள் கேள்வன் உயர்வும் அவளால்;
தலைமகள் சீரும் அவனால் — நிலையும்
எனவாம் அமைவு அவளின் இயல்பும் 
மனங்கொள் மனைவியான பேறு. 

நடராசனாய் ஆடும் தெய்வம் 
பாஶுபதனாய் படைப்பான் அர்த்தநாரி என ஈருருவம் ஆவான் கால பைரவனாய்க் காப்பானும் தக்ஷிணா மூர்த்தியாய் அறம் நவின்று வேறுபாடுடைய வீரபத்திரன் ஆகி அகோரவுருவில் அணங்கழிப்பான் சுடலை பூசி ருத்ர பூமியில் காலபைரவன் என உலகை முடிக்கும்
அரனவன் அவதாரம் இவையுமோர் பத்தும்
அவன் அடியவர்கள் மேலான பித்து.
1443. ஆதத்தே இதி ஆதித்ய ஆத்மா : 
பாஹுச்சாயாம் அவஷ்டவ்யம் 

பிறப்பிடை தோறும் இடறுற்று ஏங்கி 
இறாய்த்து இளைப்பாறத் தேடுமிவ் —ஆவியை 
வந்தளித்த ராமா நுசன்கொந் தலர்ப்பாதம்
எந்தமக்கு ஆலின் நிழல். 

1444. எருத்துக் கொடியானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்தறி வாரும் இல்லை 
மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா! மறுபிறவித் தவிரத்
திருத்து (பெரியாழ்வார் 5-3-6) 

ஒருகுருவி கட்டிய கூட்டை பிரிக்க
தெரிவில் இவர்க்கு பிறவிப் - பெரும்பிணையை
தன்னால் பிறர்கொண்டும் நீக்கவற்றோ? பின்னியமால் 
தன்னைக்கால் கட்டி அவிழ்த்து. 

1445. அன்னமய கோச உடல் சுத்திக்கு - ஸ்நானம்.

பிராணமய கோச உஸ்வாச நிஸ்வாச சுத்திக்கு - பிராணாயாமம்

மனோமயகோச நற்சிந்தனைக்கு  - ஸுபாஸ்ரய தியானம்

விக்ஞானமய கோச ஆன்ம சுத்திக்கு -  அஹங்கார நிவர்த்த சேஷத்வ ஞானம்

ஆனந்தமயகோச பகவத் நிக்ரஹாக்ரக பரிகாரம் - சேஷத்வநுசரித ஆத்ம நிவேதனம் ::

குளித்து உயிர்மூச் சிரண்டும் அடக்கி 

பளிங்கு மனதில் இறையை — களித்திட

தான்தனது அற்று அடிமைத் தனத்தவன்தாள்

மேன்பற்ற வாம்சுத்தி ஐந்து. 

1446. நழுவிய சதங்கையை மீட்டு அணிவது போல் மாலே !              ஒப்பதற்காம் என்னை உனக்கணியாய் பூட்டு ::

வேதமோர் நாலும் நவின்றிலேன் கோதிலவாம்  

வேதவழி நின்றிலேன் நீஎனைக் -- காத்திட 

ஏதுமிலேன் என்றாலும் நின்சரண் நாடியுளேன் 

ஆதலால் காத்திடர் நீக்கு !


1447. ஸா காஷ்டா ஸா பராகதி : — கடோபநிஷத்து. 

க பந்தா : ? மஹா ஜநோ ஏநகதத்வ பந்தா : ! — யக்ஷ பிரச்னத்தில் யுதிஷ்டிரன். 


யுக்தியால் முக்திக்கு தானோர் தனிவழி

நூக்கலும் எண்ணில் மறையதை — நோக்கித் 

தெளியலும் சான்றோர் வழிபலதுள் மேலாம்

அளிநன் பெரியன்கூர் ஆறு.!


1448. அவித்யா நிவிர்த்தி தேச விசேஷ பிரஹ்ம பிராப்த்தி : முக்தி: 
அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய பரம்ஜோதிர் உபசம்பத்ஸ்ய 
ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே - இதி முக்தைஸ்வர்யம் ::

செறிமன் கதிரொளி சேர்ந்துழி  லோகங்கள் 
ஆறிரண்டின் ஆதிவாகர் தம்துணை — கூறிட
மூன்றில் இரண்டகற்றி ஒன்றினில் ஒன்றும்மால்
மன்றதில் தன்நிலை எய்து. 

1449. ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாம ஏவ கேவலம்
கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிர் அந்யதா ::

நாமமோர் ஆயிரம் தாம்உடைய நம்பியை 
நேமமுடன் நாளும் தொழுவாக்கு -- ஆமே 
இகபர போகமெல்லாம் அச்சுதன் என்னும் 
தகவிற்கு ஏற்ப நடத்து. 

1450. கஸ்யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம் அட்சேத்ரக்ஞா  உபரி உபரி சஞ்சரத்தா ந விந்தேதுஹு ஏவமேவா ஸர்வா பிரஜா : அஹர் அஹர் கச்சத்ய : ஏதம் பிரஹ்ம லோகம் ந விந்யந்தி அநிருதேஹி ப்ரத்யூஷா: - சாந்தோக்கிய உபநிஷத்து. 

ஏழையின் இல்லத் திடைகழிக் கீழிலோர் 
பேழையில்  உள்ள புதையலை — ஏழை
அறியா துழதல்போல் தெய்வம் தனக்குள்ளாய்
தேறா வறிஞர்க்கில் மாறு. 

1451. யதாயதாஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத ! 
அப்யுத்தானம்  அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்  || கீதை 4-7.

ஆன்ற சபையில் குலவது ​தன்மானம் 
கொன்ற சுயோதனனை பின்னர் -- முடித்தது 
ஒன்றும் தருமத் திடர்கடியா வீணரை 
முன்னம்  முடிக்க விழைந்து. 

1452. பாவோ ந அன்யத்ர கச்சதி - என்றும்
அச்சுவை பெறினும் வேண்டேன் - என்றும்
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
என்னாநின்னாரிறே.
பரம்பதத்தில் நாமி அனுபவத்தைக் காட்டிலும் பூலோக வைகுந்தத்தில் நாம அனுபவம் ஸ்ரேஷ்டமாய் இங்குத்தை வாசம் இவர்களுக்கு சாத்தியம்:

வானேற நல்வழி காட்டும்நின் நாமங்கள்
தானேயோ மூவரை விண்ணாடே — ஆனாலும்
வேண்டேன் எனக்கூறி ஈண்டு அரங்கனையே
காண்டு அனுபவிக்க வைத்து?

1453. அவரவர் விதிவழி அடைய நின்றனரே ! ::

வியன்கலை வேதியர் வேள்விச் சடங்கர்தம்  
ஆய கருமம் அவையே -- இயையப் 
பலபல தெய்வம் தனைப்பேணி கோலுமருள்
ஈவதூம்மால்  ஆமே  கரந்து !

1454. புண்யோவை புண்யேந கர்மணா பவதி 
பாப: பாபேந இதி
( பிரஹதாரண்யக உபநிஷத்து)

மொய்த்த வினையின் முதல்அறிய லாகாதும்  
ஐய!வட்ட நல்வளையத் தில்ஏது  - எய்து 
முதல்என ஊகித்  தறியலாக வற்றேயாய்  
ஏதவைக்கு இங்கிப் பிறப்பு.  

1455. தர்ம சாமான்யமும் உத்ரோத்தர விசேஷ தர்மமும் ஸர்வ தர்ம கர்ம சமாராத்யனும் ஆசார்யனே ! 

வேதம் மொழிந்ததும் ஞானியர் தாம்நடந்தும்
போத அறம்யாதும் செய்தரும —  சாமான்யம் 
அத்தோடு மேலாம்மால் பக்திபிர பத்திக் 
குதவு குரவர் பரவு. 
  
1456. தத் பக்த பக்தேஷு ப்ரீதி அப்யதிகா பவேத் ::

தன்தாள் பிடித்தார் அவர்மோக்கம் பின்னதாய்
தன்அன்பர் தாள்முடிய யார்பிடிப்பார் — அன்னவர்க்கோ 
முன்னம் நடக்கும் முதலைவாய் துன்னுவேழத் துன்பம் துடைத்த படிக்கு. 

1457. ஈசா வாஸ்யம் இதம் ஜகத்து :: 

சிலந்திதன் வாய்எச்சில் கொண்டு சமைத்த
வலையில் குடிஇருந்து பின்பு - கலைப்பவாம்,மால்
தன்மேனி அம்சமான மூலப் பிரக்ருதியின்
தன்மை பெருக்கியதில் மன்னு.  

1458. உபதேசத்தால் திருந்தாரை ஈஸ்வர ஸௌஹார்தத்துக்கு இலக்காக்கை ::
(ராவணனுக்கு வீடணன் ஹிரண்யனுக்கு பிரஹல்லாதன்
சம்சாரி சேதனர்க்கு ஆழ்வார் என இவர்கள் செய்த உபதேசங்கள் விபலமானதேனும், உபதேஷ்டாக்களின் பகவதாபிமுக்யம், பகவத் பக்தி, பகவத் அபிநிவேசம் அத்தால் பல்கிப் பெருகின படி)

தம்பி தமயனுக்கும் பிள்ளை தமப்பனுக்கும்
எம்பியோ முக்குமாறன் அன்பினால் - சொன்ன 
உபதேசத் துய்யா மனிசர்க்காய் தம்மின்
அபினிவேசம் தொய்கிலதாய் மிக்கு. 

1459. வெங்கதிரோன் குலத்துதித்த சோமன்::

பால்நிலாவின் ஆய கலைகள் பதினாறும்
போல்மேய ராமன் எண்ணிரண்டின் — பால்ஆய 
குணங்கள்  கணக்கையாம் எண்குற்றால் வெங்கதிரோன்
ராம திவாகரன் ரவிகுல சோமன் ஆனபடி ::

1460. நிலவின் கலைகள் பதினாறு வெங்கதிரோன்
ஏலு குலத்து இராமர்க் — கிலகு
குணங்கள்தான் எண்ணிரண்டாய்க் கூறி வணங்கும்
ரவிகுல சோமனவன் என்று. 

1461. மணிமகர்ருசீர் விதத்ய பாஸாத் விஸ்ருமரகேதுகரைர் ம்ருகம் ஹிமாம்ஸோ:
ஸ்ரிய இவ நவகேளயே ஜிக்ருட்சு: ஸுகயதி ரங்கபுரீ சகாஸதீ ந:
(ஶ்ரீரங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம் 31)

{மாயமான் நந்சி அது கிடைக்காமல் அம்மானையும் பிரிந்த ஏக்கம் தீர,
திருவரங்கத்து உயர் கோபுர கையில் விரல்போல் கொடிக்கொம்பால் நிலவை எட்டி அதன் பரப்பில் உள்ள மானை பிடித்து அரங்க நாயகியாம் சீதை விளையாட கொடுப்பதான உயர்வு நவிர்சி கலந்த ஸ்தோத்திர தமிழிக்கம்}

கோலநீள் கோபுரத்து உச்சிமேல் பாங்காய்
இலகு கொடியாம் விரல்நீட்டி — ஆலம்
பழம்போல் நிலவின்பால் மானைப் பறிக்கும்
எழிலரங்கர் சீதை பொருட்டு. 


1462. புநாதி புவநாந்யஹம் பஹு முகீதி ஸர்வாங்குலீ
ஜலஜ்ஜலித ஜாஹ்நவீ  . . . . . . . . . நகருசீர் விகாஹேமஹி 
(ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம் - 126.)

வண்டலம்பு  தண்தா மரைபோல் அரங்கன்கால் 
தண்டை துலங்கிட நான்முகன்கை  --   குண்டிகைநீர் 
வந்துழி கங்கைபோல் முத்தின் ஒளிநகத்து 
காந்தியோடை  யுள்குடைந்  தாடு.. 

1463.வில்லிறுத்து மெல்லியலாள் தோள் தோய்ந்து
ஐந்தவித்தான் வரலாறு  :

வில்லிறுத்து மையலாள் சானகிதன் ஏக்கமதை
கல்லினான் கல்விதனை காசிக்கே - செல்வித்து
இல்லறத்தை வெல்வித்தான் கர்மயோகி தன்கவலை
கொல்வித்து ஐந்தவித்த கோ!

1464. அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே:-

சுவர்கம் நரகம் வானுலகத் தல்லதாய்
மேவுவின்ப துன்பம் சுவைத்து — அவதிப்
படுவதும் இங்கேபோல் வைகுந்தம் காவிரி 
ஓடும் அரங்கத் திருப்பு. 

1465. அஹமர்த்தத்துக்கு ஜ்ஞாநானந்தங்கள் தடஸ்தம் என்னும்படி 
தாஸ்யமிறே அந்தரங்க நிரூபகம்.
அஹங்காரமாகிற  ஆர்ப்பை துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர்  அடியான் என்றிறே ::
(ஶ்ரீவசனபூஷணம் 2-74,78)

அறிவு அறிவுடமை ஆனந்தம் சீவர்க்
குறிய தருமமேலும் அஃது — புறவிதழ்
போலாய் உயிரை உடைய நாரணர்க்கு
கோலும் அடிமை நடுவு. 

1466. மஹதி குணாஸமாஜே மாநபூர்வே தாயே த்வம் 
பிரதிவதஸி யதார்ஹம் பாப்மநாம் மாமகாநாம் 
(தயா சதகம்   -33)

உய்ய உலகிதில் நீதியல் லாதன 
செய்து நிரையத்து  எய்த்திடில் -- ஐய !
இவன்தீ வினைக்குற்ற மீள்பிறவிக் குய்த்திடல்  
ஆவதில்மால் தன்தயைக்குத் தோற்று !

1467. ஏகாந்தீ வியபதேஷ்டவ்யோ நைவ கிராம குலாதிபி : விஷ்ணுநா வியபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவஹி 
(கிராம குலாதி வியபதேசங்களைக் காட்டிலும் பகவத் பகவதீய
சம்பந்தம் இட்டு வியவகரிகை ஆதரணீயம் என்கை )
[வைதிகருக்கு கோத்ர சூத்ர சரணம் போலே 
வைஷ்ணவருக்கு பராங்குச பரகால யதிவராதிகளைச் சொன்னது 
சேஷத்வ ஜ்ஞானத்த்துக்கு - பராங்குசன்.(கல்வி)
ததனுபந்த கைங்கர்ய பிராப்யத்துக்கு - பரகாலன் (பயன்)
ததுபய  பிராப்திக்கு ஆச்சர்ய சம்பந்த ரூபமான - எதிவராதிகள் (பேறு) என்னவுமாம்]

குடிபிறப்பும்  கோலொழுக்கும் ஓத்தும் அடையாளம் 
வீடுசெய் அந்தணர்க்கு ஆகுமேலும்  -- மாடு 
சரணர்க்கு மாறன் கலியன் எதிராசன் 
கூறுகல்விக் காயபயன் பேறு !

1468. ந கஸ்சிந் ந அபராத்யதி - என்ற மாதர் மைதிலி 
தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் - என்ற ராம கோஷ்டீ லகுதரா க்ருதா !

அனுகூலர் அல்லரேலும் வல்லவவன் செய்ய
முனைவதனை ஏலா விலக்கல் — தனையேனும்
நேரா தவர்க்குமால் தான்இரங்கும் அஃதேதும்
பாராது கொள்வாள் திரு. 

1469. "நித்யோ நித்யானாம் சேதன சேதனானாம்
ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான்
தமாத்மஸ்தம் யே ऽனுபச்யந்தி தீராஸ்
தேஷாம் ஷாந்திஃ ஷாச்வதீ நேதரேஷாம்"

ஆன்மா அழியாது வீடதற்கு இவ்வுடல் 
சன்மம் விடமாயும் இத்தேகம் -- என்பதும் 
தோன்றி மறையும் தருமத்து தீங்கிலா  
ஞான்று கொல்லல் அறம். 

1470. நாரீணாம் உத்தமையினுடைய அவஸ்தை வரக்கடவதாய் இருக்கும் ஆழ்வார்கள் தன்னேற்றம் ::
(அதாவது பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும், அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும் , கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும், அந்யாபதேச பேச்சும், 
அதுதன்னில் ராத்ரி வியசனம், தூத பிரேக்ஷணம் , அநுகாரம், மடலெடுக்கை, தோழி, தாய், மகள் என்னும் அவஸ்தா திரயா ஆபத்திகளும், பராங்குச, பரகாலராகிய இவ்விரு வாழ்வார்களுக்கும் அசாதாரணம்.)

தன்பேச்சு பெண்பேச்சு தாய்ப்பேச்சு தோழிதன்
இன்பேச்சு என்றாழ்வார் மால்காதல் — பிச்சோச்சி
தூதுவிட்டு  ஊடிகட்டு விச்சி  வெறிவிலக்கப்  
பேதலித்து ஊரும் மடல்.

1471. நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர :
(அவர தத்துவங்களின் இறங்கு முகம்)

எண்டிசையும் ஏனயரைக் காக்கும் கடவுள்காண்
எண்குணத்த நாரணன்மால் ! வானவில்போல் — வண்ணன் 
அயன்முனி ஏழும் பயத்தனாய்  ஊழித்தீ 
ஆயசிவன் தன்திறலும் ஆறு.

1472. ஸ்ருஷ்டி பகுமுகமானபடி  ::

உறும்திசை நாலிலும் நான்மறை ஓம்பிடக்
கூறிடும் நான்முகன் ஈந்ததும் — நீறுநிறை
பூசிடும் ஐந்தலை ஆனசிவன் தேசினில் 
தோன்று மகன்முகமோ ஆறு.

1473. ஓம் தத் புருஷாய வித்மஹே – We contemplate that Supreme Being.
ஸுவர்ண பக்ஷாய தீமஹே – Who has golden wings 
தந்நோ கருட꞉ ப்ரசோதயாத் – That Garuda may  inspire and guide us.

This mantra invokes Garuda’s strength, speed, and divine protection, often chanted for overcoming obstacles, especially those caused by serpentine energies (nāga dosha), and for spiritual elevation.

மறைப்பொருளாம் மாலைதன்  தோளில் சுமந்து 
இறைஅருளும் நித்யத்வம் தானும் -- குறைவிலாது  
தாரும் கருடன் மருந்தும் அமுதுமாம்  
போகி உடல்மே  வுயிர்க்கு. .

1474. துவம் மாதா தேவ தேவோ ஹரி பிதா - 

பெற்றெடுத்த தாயும் பிறப்பித்த தந்தையும்  
உற்ற  உயிருக்கு ஆவதூம் -- நற்றவன் 
நாரணன் தன்தேவி ஆய இருவர்தாம் 
பாரணங்கின் செல்வ மகற்கு. 

1475. துடுப்பிருப்ப கை வேவாவேன் ?

நியாயம் துணைகோலும் தர்கமும் வேதநூல் 
மேய விசாரம் வேதாந்தத் -- தாய  
விழுமைப் பொருளும்நாம் தேடித் தெளிதலின் 
தாழாது நற்குருவை நாடு. 

1476. ஸக்ருத் க்ருத ஸாஸ்த்ரார்த்த: 
ஆவர்த்தயா ப்ரஹ்ம வித்யா து அஸக்ருது  ::

யானேநீ மாலே!என் உள்ளாயால் என்றத்தால் 
யானுமாய நீயும் ஒரொருவர் -- தானோ?
பராவர தன்மைத்தாய் பக்திக் கிலக்காய் 
நிரந்தரம்யான் உன்னை நினை. 
 
1477. மஹநீய விஷயே ப்ரீதி: பக்தி :-

பழனத் தடஞ்செய்யுள் வித்திட்டுக் காத்து 
உழுது பெருக்கி கதிர்காண் — உழவன்போல்
ஆக்கி அளித்து அழிக்கும் இறைபக்கல்
பக்திக் கிலக்கவன்மேன் மை.  

1478. ஆதிக்கிய, சாம்ய, நியூனதையாகிற ஆகாரத்ரய ஸம்பன்நாம் அரவிந்த நிவாஸிநீம் :

இரக்கமதில் மேலாணிப் பும்அடிமை ஏலுமதில்
பெருமானும் தானும் சமமாய் — இருப்ப
படைத்தல் அளித்தல் அழிதலுடை மாலுக்கு
ஈடுமெடுப்பும் இல்லா திரு. 

1479. ஸுஆராத்ய ஸுலப ஶ்ரீதர :

இலைபூ சலம்எது வேனும் தனக்கு
அலகில் உகப்படை விக்கும் — சொலப்புகில்
நீடுமவர் அன்பதே நோக்கதாய் பேசும்மால்
சாடி இலாதெய்வம் தான்!

1480. ந கிஞ்சித் குர்யாத் சேஷத்வம் உபபத்யதே ::
(சேஷத்வ பிரதி சம்பந்தியான போது அவாப்த சமஸ்த 
காமத்வம் குலையாதோ என்னில், ஆகாது என்கிறது இத்தால்)

சேவகம் செய்யாது சேவகன் ஆவதே?
காவல் கடவுள் அடிமைதான் — மேவல்
கடமையாய் ஏலுமவர் ஏழமை ஏகாது
நீடி நிறம்பெறச் செய்து. 

1481. அந்யத் பூர்ணாம் அபாம் கும்பாம் ::

தூதனாய் போந்திரந் தானுக்கு  நீதியால் 
பாதி இராச்சியம்  ஈதலை -- சோதியாது 
மாறாய் சிறைபிடிக்க கோலுவார்க்கு எட்டானே      
பூரிநீர் கொண்டழைப்பார் விட்டு.

1482. ஒழுக்கம் விழுப்பம் தரலான்::
 
இங்கில்லை என்ற இரணியன்  போலேனோ?
எங்களிடை ஏன்புகுந்தாய் என்றேனோ -- வெஞ்சமத்து 
வாலியைப்போல்? இல்லொழுக்கம் இம்மியும் இல்லானை
ஆலிப்ப தெங்கேயோ மால்?

1483. தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் ::
(விஷ்ணு அவன் சன்னதி விலங்கறுக்கும்  - விஷ்ணு மாயையாகிற 
தேவதாந்தர சம்பந்தம் தளைப் படுத்தும்  என்கிறது இத்தால்)

எல்லில் பிறந்து இடைச்சேரி போந்தனையும் 
வல்விலங்கு வீழ்வித்த மாயன்அக் -- கொல்லியம் 
பாவை குவளையம்கண் வல்லி புகுதலும்  
காவல் கடிப்பு மிகுந்து. 

1484. அவகாச ப்ரத: ஆகாச :
ஆத்மநா ஆத்ம ஸம்பூத:

எங்குமுள ஆகாயம் எக்காலத் தும்உள 
நங்கள் உயிரும் பிரமமவன் — தங்கைநேர்
காரியம் ஆகிலவை வீயா நிலைமேவல்
சேராத சேர்க்கும் செயல். 

படைத்து பிறப்பவை எல்லாம் அழியும்
கடவுள் எவைக்குமாம் காரணத் — தோடு
கூடும் உலகும் உயிருமவர் காரியமாய்
நீடு நிலைக்கவும் பெற்று. 

1486. தத் பக்த பகத்தேஷு ப்ரீதி அப்யதிகா பவேத் 
(என் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி) ::

இருகரையர் என்பவர் உண்டபோது ஓர்வார்த்தை
சேராது ஒண்டியான போது — ஒருவார்த்தை
என்று இருப்பர் அவரை  சிரித்திருப்பார்
அன்றோசத் ருக்கனன் படி!

1487. விற்ற மாட்டுக்கு புல் இடுவார் உண்டோ?
(தன்னில் தன் அடியார்கள் கைகாட்டத் தாழாது கொடுக்க விழைவான்)

தன்வழி வாரா தவரைத் தடியாது
இன்முகம் காட்டி இனிஇவனை — பொன்இயல்
மேனி கமலைக்கண் காட்டத் திருத்தித்தன்
தேனுகள்தாள் தாழ விடுத்து. 
 
1488. மும்மைசால் உலகத்து மூவர் ::

பொன்றும் உடலிதில் பொன்றாமை எண்ணியின்
நின்ற உலகின்பம் துய்ப்பவர் - அன்றி
சுவர்கத்து வேள்விப் பயன்அமர் என்றும்
திவத்துளாரும் ஆன பிரிவு. . 

1489. பவோ நான்யத்ர கச்சதி ::

கூப்பிட்ட கூவலுக்கு கோவிந்தன் தான்வருமேல்
கூப்பிடு தூரத்து ஆவதாம் — போய்பாடு
இல்லாத வைகுந்தம் ! காப்பவன் இங்காக 
அல்லேகல் என்ன பயற்று?

1490. ஸ்ரத்தாவாந் லபதே ஞானம் 
ஸ்ரத்தா ரூபம் பல ஹேதுகத்வாத்
பரீட்சாம்து ஜகன்நாத: கரோதி அத்ருட சேதஸாம் ::
யஸ்யதர்சனம் நார்ஹதி கந்துமன்யதா ::

கனியதில் காண்பது ஒர்வித்து அவ்வித்தில் 
தானுள பன்னூறு நல்வித்து — ஆனாய 
வைய்ய விருட்சம்  அதுபோல்மால் ஈத்தவேத
வித்து ஆண்டாள்முப் பத்து. 

1491. தெய்வம் அத்ர பிரமாணம் :: 

அதிகாரம் செய்கடமைத் தாய்அதனின் மேவுபயன்
யாதும் எதிர்நோக்கா தாற்றலு — மாதல்காண் 
எல்லா செயற்குமேது ஐவராக நாமொருவர்
வல்லரல்லர் என்னாம் கருத்து. 

1492. ஆர்ஜவஸ்ய ருஜு புத்தி: 
(அதுவே பகுத்தறிவாளர் பண்பு)

அல்லவை நீத்துமேன் நல்லதே பேசிசெய
வல்லராய் நெஞ்சில் நினைவதே — நல்லறம்;
சொல்லால் செயலால் மனத்தால் ஒருபாடு
ஒல்குவார்கே உண்டாம் திறம். 

1493. பூர்ணமதப் பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ணம் உதச்யேதே : 
பூர்ணாத் பூர்ணம் ஆதாய
பூர்ணம் ஏவா வசிஷ்யதே
(ஈசோபநிஷத்)

முழுதியாய் மூவா முழுதன்றி யாய்இங்
கிழிதியாய் எம்போல இன்னலில் — வீழ்தியாய்
கிணற்றங் கரைப்பிள்ளை யைத்தாயே தள்ளினாள்என்
பேணாப் பழிதுடைக்க லாற்று. 

1494. வேர்த்துப் பசித்து வயிறசைந்து நெடுநோக்குக் கொள்ளும் 
பத்த விலோசனன் பசியாற்றா அந்தணர்போல் 

பரமபதம் பாற்கடல் பேர்ந்து அயோத்தி
பரன்பிறந்து செய்பால லீலைத் — திறத்தாயன்
கோகுலம் தென்அரங்கம் என்றுநம் நேர்நிற்க
ஆகுலத் தென்புறம்பார்த் தோர்ப்பு?

1495. அறிந்துளார் அயர்ப்பு ::

நன்குலம் நல்லொழுக்கு நற்பண்பு நாணயம்
இன்நாலும் தன்னுற்றார் தாம்விம்மத் — துன்புற்றால் 
தாளா துலகம் அதுகண்டு மால்நீயும்
வாளா இருமேல்நின் தாழ்வு. 

1496. யத் த்வத்ப்ரியம் ததிஹ புன்யம், 
அபுன்யம் அன்யத் -- அதிமாநுஷ ஸ்தவம் - 53

மாலவனைத் தாள்பற்றி மால்அவனை வேண்டாது
கோலும் சுவர்கம் பரம்பதத்தோ — டேலுமோ?
புண்ணியமும் பாபம்போல் தீர விலக்கே,மால் 
எண்ணக் கிடக்கைப் புறத்து.  

1497. பக்த்யா து அநந்யயா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுந |
(பகவத்கீதை 11-)

புலனடக்கம் கண்ணன்பால் ஆறாத அன்பு 
வலங்கொள் இறைஅறிவு  மூன்றும் — தலைப்பெய்யில்
காணலாம் கண்ணனை என்றாலும் பக்திக்கு
கோணா திசைவான் அவன். 

1498. ஸ்வப்ரீதி ஸ்வயமேவ காரித :
(அவனருளால் அவன்தாள் பணிந்து)

ஊன்உட லூடு புலன்பட புந்தியுள்
தானமர்ந்து தன்னை தொழவைத்து — மேன்நீடும்
வான்வீடுக் ஈடாமோ கைமுதல் இல்லாத
என்புன்மை அன்றி விலை?

1499. மந்திரத்திலும் மந்திரத்துள்ளீடான வஸ்துவிலும் 
பிரேமம் கனக்க உண்டானால் காரியகரமாவது ::

கடிகமல தாளிணையில் நாயடியேன் கீழ்பணிய
கேடில் விழுச்செல்வ எட்டெழுத்தும் — நீடி
அபய கரபுட்ப வத்தை தலையில்
உபாயமாய் சூட்டல் அருள்!

1500. தர்சன லாஞ்சன சம்பந்தம் ஏககத்வேன முக்தி தாயக : 

மாயோன்கை ஆயுதமாம் சக்கரத்து அண்ணல்தம்
தூயசெய்ய நோக்கும் தோள்வலத்து — வேய 
பொறியும் சிசுபாலன் தேசழித்த தோர்சதிரும்
நீறுசெய்து உய்க்கும் அடிக்கு.  

1501. தேசம்,தெய்வீகம், தர்மம்  ::

மற்றுள்ள தேசத்துநம்  பாரதம் தெய்வீகம் 
எற்றெனில் தெய்வம் விரும்பியே -- இற்று 
அவதரித்து தர்மநெறி பேசி நடந்து
உவந்து உதாகரித்தற் றால். 
 
1502. பகல்கண்டேன் நாரணனைக் கண்டேன் 
கனவில் மிகக்கண்டேன் 

ஐந்தவித்தார் மேன்மை பகல்பொழுது அன்னதாய்
காந்திகொளும் ஆன்ம தரிசனம் — சாந்தொடு
ஓங்க உலகியல் ஆழ்வார் தமக்கோஅப்
பாங்கிலா எல்லிப் பொழுது. 

1503. பேசும் தெய்வம் ::

திருவிளக்குப் பிச்சன், அரசர்க் குரிசில்
திறல்தொண்டை மன்னன், திருக்கச்சி — ஊரார்,
திருநாரணன்அம்மே! எனவழைத்த ஆயிப் 
பெருமாளார் மாட்டுசாத்து மால். 

1504. கர்ம-ஞான சமுச்சயம் :;

தந்தாம் செயல்நெறியில் நிற்ப அதுபற்றி
இந்திரைகோன் புந்தி களிப்புற்று — நந்தம்
கரும வினைகழிப்ப ஐம்புலன் தாமடங்கி
நேர்பலன் ஞானத் தலர்ந்து. 

1505. புலன் புணர்ச்சி காமம், அது தாழ்வு
இறை உணர்ச்சி பிரேமம், அது வாழ்வு ::

உன்னைத் தழுவிட தாகம் எனக்குமது
சொன்னேன் ! இராமாஓ! ஆனால்நீ — முன்னை
தவசிகள் நேசமும் தசமுகன் தங்கை
நவிற்சியும்போல் ஏலா தொழிந்து. 

1506. கடப்பாடற்ற உலகம் இடர்பாட்டுத் தலம்::

தியான மனனயோகம் என்னிவையில் பாபபுண்யம் 
ஆயபயம் யாதும் இlலையாய் — செயல்நெறி
நீத்ததன் ஞானத்துள் நிற்றுப் பயிற்றலும் 
சுத்தமறந் தன்ன  உலகு! 

1507. பற்றுக பற்ற்றான் பற்று, அப்பற்று விடற்கு :: 

வேர்முதலா? அன்றி விதைமுதலா? வேங்கடவா!
சார்வே தவநெறியாம் நின்பாதம் — சேர்ந்தபின்
நம்வினைகள் ஒய்வதா? அன்றி அவைதீர்ந்த
பின்நினைச் சார்வமோ சொல்! 

1508. யாக, அனுயாக அங்க பஞ்ச மஹா யக்ஞ பிரசம்ஸை ::

அடுப்பு உறல்உலக்கை அம்மி விளக்குமாறு
ஓடுசெய் நற்கிரியை யேலும் — மடியுமவ்
நுண்ணுயிர்க்காய் வாரும் அகமவை போக
பண்ணலம் வேள்விதான் ஐந்து. 
(தேவ, ருஷி, மனுஷ்ய, பூத, பித்ரு யக்ஞ பிரதீகம் திருவாராதனம் - 
அத் திருவாராதனா நிகமம்  அனுயாகம் - அனுயாக  அவஸ்யா பேட்சிதம் போஜ்ய பட்சியம் - போஜ்ய பட்சிய நிமித்தம் ஒக்ரணாதி ஆயத்தம் - ஆயத்தோபகரணம் அகம்  சம்பாவித சாதனம் - தன்நிஙிருத்த சக்ரம் பஞ்ச மஹாயக்ஞம்) .

1509. சிவேசாய ஸக மோததே ::

ஆதிப் பரனோடு ஒன்றாமவ் அல்லல்கூர்
வாதினை எல்லாம் இலைசெய்வான் — நீதியை
ஓதும் மறைப்பொருளை சாதிப் பதற்கன்றோ
பாதநீழற் கூட்டியாங்கின் புற்று!

1510. மங்களாசரண (நாந்தி) ஸ்லோகத்துக்கான விஷாயாத்ருகம் ::
1. ஆஷீகி - மங்களம் உண்டாகுக என்பதான ஆசீர்வசனம். 
2. நமஸ்கரி - என்கிற இஷ்ட தேவதா நமஸ்காரம்.
3. வஸ்து நிர்தேசம் ஆகிற கிரந்த தாத்பர்யம் இன்னது என்பதான மூன்றும் உள்ளடக் கியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் 
4. வக்தா - கிரந்த கர்த்தா இன்னார் என்பதோடு கூடிய அனுபந்த சதுஷ்டயம் (ஸ்ருதபிரகாசிகா பிரக்கிரியையில்) மங்கள ஸ்லோகத்துக்கு விஷயமாக வேண்டும். 

திருமா மகள்கேள்வன் தேனுகள் பாத 
விருமலர் ஏத்துவாம் ஏத்தலும் -- தீரும் 
வினையாவும் சேரும் திவத்து;அருள் தன்னால் 
முனையுமிவன் பாடல்மோ கித்து!

ஸமர்பணம் ::
நாள்தோறும் ஞானம் தழைப்பசீ மாதவன்
தாள்நயந்த சீர்த்தொடை ஆயிரமும் —  கொள்கிற்பார்
அத்தாமத் தன்புதான் மிக்கியற்றும் சீனிவாசன்
உற்றவராம் இங்குமங்கு மே!

--  ஆக்கம், படைப்பு மற்றும் பதிப்புரிமை :
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.