1753.
'அஹம்' அல்லதை அகம் என ஆதரிக்கை அகங்காரம் ::
யான்எனது என்பதாம் வேற்றுமை தோற்றவாம்
சான்றுசெய் வேற்று உறுபதை -- நாம்நோக்கில்
யானல்ல அஃதைநீர் யான்என எண்ணுகை தான்அகங் காரமதை நீக்கு.
1754. பச்சைமா மலைபோல் மேனிப் பவளவாய் கமல செங்கண் அச்சுதா! அமரர் ஏறே::
பாசி படர்ந்தோர் மலையும் அதனின்வசத்தேயாம் செந்தீ மலரும் — பலாசமரமும் மருங்கினில் தாமரைக் காடும் விரவுமால் கண்கனிவாய். காட்டு.
1755. ஒரு கதை. அது உணர்த்தும் உண்மை ::
வன விலங்குகளின் பெருக்கம் குறைக்க அரசனும் அமைச்சனும் வேட்டையாடச் சென்றனர். காட்டில் அலைந்து திரிந்து இருவருக்கும் பசிதாகம் மேலிட இருவரும் உணவகம் காணாது சோர்ந்து போயினர். அமைச்சன் கடவுளை தியானித்தால் வழிபிறக்கும் என்றான். அரசன் தொலை தூரத்தில் விளக்கு எரிவதைக் கொண்டு அங்கே சென்று முயற்சிக்கலாம் என்றான். அமைச்சன் தெய்வபலத்தில் நம்பிக்கை கொண்டு தியானத்தில் மூழ்கினான். அரசன் தன் முயற்சியில் நம்பிக்கை கொண்டு விள்க்கெரியும் திசையில் நடந்தான். அங்கு ஒரு மூதாட்டி அரசனக்கு பசியாற்றினாள். உணவருந்திய அரசன் அமைச்சனுக்கும் ஒரு பட்டை சோறு கேட்டுப் பெற்றான்.
அரசன் கொண்டுவந்த சோற்றை புசித்து அவனும் பசியாறினான்.
இப்போது அரசன் தன்முயற்சியால் சோறு பெற்றதை குறிப்பிட, அமைச்சன் மறுத்து தன் தெய்வ நம்பிக்கையால் சேவகம் பெறவேண்டிய அரசன் தனக்கு உணவை கேட்டு பெற்றுத் தந்ததை தெய்வ பலத்தால் நடந்ததாகச் சொல்லிக் கொண்டான். இந்த நிகழ்சியை விளக்கும் பாடல் ::
வேட்டை நடுவே வயிறு பசித்திட
காட்டின் நடுவே உணவது - ஈட்டிட
தெய்வபலம் தன்முயற்சி ஈதிரண்டில் வெல்வதுவும்
ஐயம்தவிர் தெய்வம் வலிது.
1756. பூத ஸூக்ஷமம் ருசி வாசனா சஞ்சித கர்மமிவை தூம மார்க ஆன்மா துணை.
பொறிஐந் ததன்மூலக் கூறும் செயல்வாய்
உறுநசையும் பல்பிறவி தோறும் — நிறைபதிவும்
தூறா விளையும் இருவினையும்
பேணிப்
பிறிதுடல் சேரும் உயிர்.
1757. பிரம்ம ரந்திரப்ராப்தி ::
நூற்றில் ஒருவிந்தால் உந்தப் பிறந்துபின்நூற்றில் குறையாது வாழ்ந்துமுன் — நூற்றோறாம்
நாளம் அதைபற்றி ஏற ஒளிமார்கத்
ஆளாம் நபர்வைகுந் தத்து.
1758. செம்புனல் பெயல் நீர்போல் நம்மிடை கலப்பராம்
மஹநீய: மந்த: நீரந்ரேண ஸம்ஸ்லேஷ:
ஸீலவது ::
மாலேநின் பாலேபோல் சீர்நாமம் எத்தனையும்
ஞாலத்தே மேவாது வானத்தே — பாலிப்ப
பகல்விளக்காம் அன்றிநீ இங்குற குன்றின்மேல்
அகல்விளக்காம் நீர்மைபோல் ஏது?
1759. அக்ஞானஸ்த ஹேதோஹோ கூபஸ்த மண்டூகா:
கிணற்றுத் தவளை வெளிநாடு உண்டென்
உணரா வதுபோல் இறையருள் — காண
கலைகள் பதிநாலும் ஞானபக்தி தாள்தடச்
சாலைப் பயிலார் நுணல்.
1760. மாயாம் ந சேவே பத்ரம் தே ந வ்ருதா தர்மமாசரே |
சுத்தபாவம் கதோ பக்த்யா சாஸ்த்ராத் வேத்மி ஜனார்தனம் ||
-ஸஞ்சயன் .
உடனோதி உண்மை அறிவிலா மன்னன்
மடமை தெளியவே தேரோட்டி -- சஞ்சயன்
கோடிட்டுச் சொன்னமொழி ''வஞ்சனை நீத்துகற்ற
ஏடுவழி கண்ணனைக் காண்''
1761. வந்தாய்போலே வாராதாய்
வாராதாய்போல் வருவானே!
- நம்மாழ்வார் திருவாய்மொழி 6-10-9
அல்லல்தீர் மால்தனக்கும் ஆனவல்லல் மூன்றவை
சொல்லில் முதலைவாய் ஆனைசிறை - பட்டதும்;இங்
இல்லை அரி'யென்? இரணியன்தூண் தொட்டதும்
நல்லபலை பட்டைபறித் தாங்கு.
1762. நாஸ்தி பிரத்யவர வாநரம் கஸ்சிது ஸுக்ரீவ ஸந்நிதௌ
- தன்னைக் குறித்து சீதைக்கு ஹநூமத் வசனம்
யோஜனை நூறு அகல்ஆழி தாண்டிய
சாதனைக்காம் பேறு தலைக்கொளாத - தூதனை
ராமன்கை மோதிரம் ஈதென சீதைக்கு
ஈந்தானை வாதனை சாற்று.
1763. கர்பகதி, யாம்யகதி, தூமகதி, அர்சிராதிகதி
இன்நின்ற கதி நான்கில் யாவரும் இறந்தபின் செல்கதி ஒன்று.
ஆக்கையுள் ஆவி பிரியிலது செல்கதி
மாக்கள் எனமாதா கர்பத்து - நூக்கல்
சுவர்க நரகவீடு போகார் திவத்து
ஒளிகொண்ட சோதி பிடித்து.
1764. தர்சனம் பேத ஏவச ::
பிரமம் அருவமாய் லிங்கமாய் தேவதையாய்
ஓரோரு காலத்து மாறியதோ? -- பாரில்
கடவுளர்தம் வேதா கமபுராண தோற்றத் தடைவே சமயப் பிணக்கு. -
1765. அருள்வழி செல்செல்வம் ஆக்கும் திரு::
ஓடியாடி சேர்த்த பெருஞ்செல்வம் போகுங்கால்கூட வராதென்பர் ஆதலால் — மாடதனை
நன்நெறிக்காய் வித்திட்டால் பெற்றிடும் புண்ணியம்
பொன்றுங்கால் பொன்றா துணை. -
1766. ராமோ விக்ரகவான் தர்ம : - கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம்
(ஆத்மாநம் மானுஷம் மன்யே) - (அஹம் வோ பாந்தவோ ஜாத:)
(மரியாதா புருஷோத்தமன்) - (லீலா புருஷோத்தமன்)
ராமனின் பாதையில் ஏகலும் கண்ணன்மால்
தாமவன் செய்தனதாம் போக்கி -- பாமரரும்
நம்பி செயல்படவாம் தேர்த்தட்டு வார்த்தயவை
ஓம்பி ஒழுகல் உயர்வு.
1767. யார் வைதிகன் ?
வாசித்தல் கற்றல் உணர்தல் ஒழுகலெனபூசித்தற் குற்றசாதி அந்தணன் - பேசிய
நாலும் பழமறை சாகையும் பாலிப்பார்
செந்தண்மை யோடாம் பெரிது.
1768. மதியாநாதி கர்மப்ரவாஹ பிரவிருத்தாம்
பகவத் ஸ்வரூப திரேதாந கரீம்
விபரீத ஜ்ஞான ஜநநீம்
ஸ்வவிஷயாஸ்ச போக்கிய புத்தேர் ஜநநீம்
தேஹேந்த்ரியத்தவந போக்யத்தவேந சூக்ஷ்ம ரூபேண சாவஸ்திதாம்
தேவீம் குணமயீம் மாயாம்
(சரணாகதி கத்யம் சூர்.12)
கருவை உறையும் நெருப்பை புகையும்
உருவுகாட்டும் ஆடியை மூடி - கருக்கும்
புழுதியும் போலா அறிவை மழுங்கும்
அஞான மூடு திரை..
1769. ராகவன் வாழ்வும யாதவன் வாக்கும்
அடியவர்க்கு பாதையும் படிப்பினையாகும் ::
நரம்கலந்த சிங்கமாய் நாரா யணன்தான்
வரத்தின் வரம்புள் அவுணன் - உரம்கடிந்தான்
ராகவ சிம்மம் யதுகுல சிம்மம
தாகவந்து பேசி நடாத்து.
1770. பிரம்மா ஸ்வயம்பூ: சதுரானனோவா
ருத்ரஸ் த்ரிநேத்ர: த்ரிபுராந்தகோவா|
இந்த்ரோ மஹேந்த்ர: ஸுரநாயகோவா
த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம்||
-(ஸுந்தர காண்டம் ஸர்.51 ஸ்லோ.45)
முக்கணான் மொய்ம்புடன் ஈந்த வரத்தினார்எஃகு அனைய உரத்தினார் - பக்கம்
அரனேலும் பத்தலையன் பாணனொடு கர்ணன்
உரம்மேவா மாலின் புகர்.
1771. ஹனுமன மதமே ராமன மதமு ::
மனையாள் தன்னைப் பிரித்ததச கண்டனை
தானை தனிப்போரில் இன்றுபோய் - மேனாள்வா
வென்விடுத்தான் மற்றேனோ வாலியை கண்டகன்போல்
கொன்றான் இராமன் முனிந்து?
1772. முமுக்ஷஉவுக்கு அறிய வேண்டும் ரகசியம் மூன்று.
(பிள்ளைலோகாசார்யர் முமுக்ஷுப்படி சூத்.1)
அதாவது
மும்மைசால் உலகுக் கெல்லாம் மூல மந்திரம் மூன்று ::
தன்நிலையை முன்னறிய எட்டெழுத்துத் தொன்மந்ரம்பின்அவனை கிட்டும் வகைஇயம்பில் — மன்னுயிர்க்கு
கண்ணன் கழறும் கடைமொழிவாய் சென்றாங்கு
அண்ணல்மால் ஆட்ச்செய் இரண்டு.
1773. அர்த்த பஞ்சகம் :
பரன்தன் பெருமை உயிர்கள்தம் தன்மை
கரைசேர் முறைமை விரைந்து - இறைசேரா
மூள்வினை தன்முயற்சி தாழ்த்து பரனருள்
ஒன்றால் விளைவீடே வாழ்வு.
1774. ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்யச புநப்புந :இதமேகம் ஸுநிஷ்பன்னம் த்யேயோ நாராயணோ ஹரி:
ஆய கலைகள் பதிநான் கவைநன்
குயஓதி நீர்உணரு மேலாம் -- உயர்பொருள்
தாம்சொலில் எல்லா எவர்க்கும் நயம்பட
வாம்பொருள் அரிஒருவன் என்று.
1775. வேதாஸ் சாஸ்த்ரம் பரம் நாஸ்தி
ந தெய்வம் கேசவாத் பரம் ::
சாட்டி இலதோர் அரும்பெரும் தெய்வம்மால்
காட்டிடும் வேதம் கருணையால் - நாட்டினான்
நாநிலத்து பல்தெய்வம் உய்பவர்க்கு உய்வண்ணம்
மேனிலாமோ மற்றை யவர்?
1776. பகவன் நாம கிரஹணத்துக்கு உபதேஷ்டாவான குரு அபேட்சையும்
காசியாம் மரணம் முக்தி என்பதான தேச அபேட்சையும்
குளிகை பகல் உத்தராயணம் இத்யாதி கால பிரதீட்சையும்
வைதரணீ தான தர்மாதிகள் செய்ய தட்சிண தாம்பூலாதி திரவ்யாபேட்சையும்
இப்படி எதுவும் வேண்டாதபடிக்கு பிள்ளையின் நினைவில் நாராயண
நாம கிரகணம் பண்ணின அஜாமிளன் பராங்கதி கண்டு கொண்டான்
என்றால் நாம சங்கீர்த்தனத்துக்கும் ப்ரபத்திக்கும் கால தேச வஸ்து விவஸ்தா
அதிகாரி நியமம் எதுவும் இல்லை. கேவலம் விஷய நியமம் மாத்ரமே உள்ளது.
குருவரியர் தீட்சையும் முக்திநீடு தேசமும்
பூரித தக்கணையோ டாம்கால - நேரபரி
காரகாமம் ஏதுமில் நாரணன் நாமம் பரவும் அஜாமிளன் உய்ந்து.
1777. அகத்திணை ஆர்ப்பு ::
மேக விடுதூதும் நாரைவாய் மாற்றமும்
மூகர் முகப்பே மடல்ஊர்ந்தும் -- சோகமிடர்
தோழியவள் சாடும் மருகுதாய் தன்பழியும்
நேரான்மால் நங்கள் பிழை.
1778. தனிநலம் தேடும் மனித குலம்
தெய்வம் தனக்காய் இணைக்கும் பாலம் ::
கூடிவாழ் காகை கரைந்து உடன்உண்ணும்
கூடி எறும்புகள் சங்கிலிபோல் - ஓடியாடும்
கூடா மனிதர் தனித்திரிவர் தெய்வக்தான்
கூட்டுமவர் தனதா கத்து.
1779. பாகவத அக்ரேச: சிவ:
எட்டெழுத்து மந்திரத்து ஓரெழுத்து தாம்-ரகாரம்
கற்றை சடையான் சிவநாமத் - துற்ற
எழுத்து மகாரம் இவைஇரண்டும் சேர
எழுமைநோய் ஔடதமாம் “ ராம் “!
1780. The proof of God is in His Creations.
நேர்மின் எதிர்மின் சுமையில் துகள்மையக்
கூரின் நிறைஅடர்த்தி எண்ணிக்கை - ஆர்ந்த
அணுகள் பிரபஞ்சம் அண்ட தடாக
இணக்கம் இறையின் படைப்பு.
1781. கிருஷ்ணார்சன பிரபவாதி நோ ஜகாதி
முனியாய் இருந்து ஒருமான் தினைவில்
தனதுயிர் போக மறுமையில் - மான்என
வாயினும் ஈட்டிய தற்றவம் நட்டத்து
வீயதே கூட்டும்மால் நோற்று.
1782. தனம் தானம் ஞானம் மூன்றும்
ஒருநாள் உழைப்பில் உயராது.
ஈதல் இசைபட வாழ்தல் மறைநாலும்
ஓதல் அதன்வழி சாகல் - நிதிபல
கூடல் இவைநல்ல வாதலின் மாடிவை
ஈட்டநீள் காலம் வேட்டு.
1783. அறுவடைக்கு வந்த பயிர் களவுபோகமே காக்க கழனியில் பரண்கட்டி வசிப்பாரைப் போல
ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரணி தடே ரமயா ரமமாணாய வெங்கடேசாய மங்களம்”
காலத்தால் ஞானத்தால் பக்தியால் சாலப்
பலநாளாண் டூழியூழி பின்னானார் - பாலிப்ப
விண்ணாடு தான்விலகி கோனேரிக் குன்றதன்மேல்
அண்ணலார்சேர் வேங்கட வெற்பு.
1784. ஸ்வாசாரியன் உபகாரக ஆசாரியன்-உத்தாரக ஆசாரியன் பரமாசரியன்.
பல்பொருளை பன்முகத்து கேட்டுத் தெளிகிற்பார்நல்லாசான் பான்மைப் பலருள்ளும் - செல்கதிக்கு
தீயில் இலச்சினையும் மந்திரமும் ஈயும்
எதிராச ராம்அவரே உய்வு.
1785. ஜலான் மச்யான் இவோ த்ருதௌ ::
அக்குளத்து மீனதே ஆயினும ஞானமில்
குக்கரில் கீழ்மிறவி புக்கதால் - மோக்கம்
நணுகா அவைபெரு மானுடல் ஊறும்
அணுக்க கரைப்பானை ஒத்து.
1786. பாதச்சாயா ஸுகா பர்த்து: தாத்ருசஸ்ய மஹாத்மன:
ஸ ஹி நாதோ ஜனஸ்யாஸ்ய ஸ கதி: ஸ பராயணம்.
ஶ்ரீராமாயணம்.
உடலை நிழலில் உயிரை வெயிலில்
விடுப்பார் திருந்தி திருமால் - குடைக்கீழ்
வருதலும் ஓய்விடம் மாலடியார் ஆல
மரநீழல் போலாம் கழல்.
1787. குழலழகர் வாயழகர் கொப்பூழில் எழுகமல பூவழகர் :
கதிரவன் காந்த கதிர்வீச்சம் அண்டத்
தெதிர்விசை நேர்மின் துகள்மோத - ஏதவழி
ஏகா தவைகோணி கூடைபோல் சூழ்ந்துயிர்
லாகுசெய்கொப் பூழ்க்கடவுள் ஒத்து.
1788. நின் நாமம் கற்ற ஆவலிப்புடமை கண்டாய் அரங்க மாநகருளானே!
நாக்கில் சுவையும் வயிற்று பசிப்பிணியும்
காக்கும் உடலில் புதுப்பொலிவும் - ஆக்கும்நல்
பட்சிய போஜ்யம்போல் ராமநாமம் காட்டுமவன்
காட்சிக்கு நெஞ்சம் கரி.
1789. காலத்தின் கட்டாயம் ஸநாதன சங்கமம் ::
தத்துவம் வேறேனும் வேர்பற்றாம் தர்மமொன்று;
நித்த வழிபாடு மாறினும் - ஒத்ததே
வாழ்வியல்; கோட்பாடு வேறாய் சமுதாயம்
வாழ சனாதனத்து ஊன்று.
1790. பிரேயஸ் - உபாசனா பலம் - நாம் நமக்கு தேடும் நன்மை விலைப்பால் போலே.
ஸ்ரேயஸ் - மோக்ஷ பலம் - பகவான் தானாக நமக்குச் செய்யும் நன்மை முலைப்பால் போலே
பிறப்பும் இருப்பும் அவன்கருணை கூற
விருப்பால் முயன்று பெறும்அப் - பிரம்ம
பதவியும் ஈடன்றே தான்முனைந்து தெய்வம்
உதவும் பரம பதம்.
1791. பண்டைக் குலத்தைத் தவிர்ந்து
தொண்டக் குலத்தில் உள்ளீர் ஆவீரேல் :
சாவை கடக்க புகழுடம்பு எய்துக
ஆவக் கடவதூம் நன்னெறி - ஓவ
நடப்பதாம் அன்நெறி ஆழ்வார் தடத்து
குடியடிமை கோவிந்தர்க் குற்று.
1792. பகவத் அனுபவ ஜனித்த ப்ரீதிகாரித்த கைங்கர்யம் பகவத் கைங்கர்யம்
பகவத் அபிமத விஷய ஸ்வரூபாநுரூப கைங்கர்யம் பாகவத கைங்கர்யம் ::
அதாவது
நம்முடை விருப்பால் செய்வது பகவத் கைங்கர்யம்
நம்மை அவன் விரும்பும்படி செய்வது பாகவத கைங்கர்யம்.
1. நற்பண்பு - ஸகல கல்யாண குணாத்மகனாய் ,ஹேயகுண ப்ரதிபடனாய், ஸர்வேஸ்வரனாய் 2. வேண்டுதல் வேண்டா சமநோக்கு - வைஷம்ய நைர்க்ருண்யம் லவலேசமும் இல்லாதவனாய்
3. குற்றம் கிடக்க வெறுவாமை - அபராத ஸகத்வ சேஷியாய்
4 நட்புடைமை - ஸ்வாமித்வம் பாராட்டாது சகாவைப்போல் முழுசி பரிமாறுவனாய்
5. ஏதிலாமைக் கண்டிரங்கல் - கைமுதல் இல்லாமையே பற்றாசாய் கடையேற்றுபவனாய்
6. பக்திக் கெளியன் - இட்டத்து கொண்டு திருப்தனாய் தம்மையே தமர்க்கு நல்குபவனாய்
7. பதிபத்னி பாசத்தான் - அபிமத விஷயத்தில் சேஷத்வம் போக்கியமாம்படி கைங்கர்ய பிரதிசேஷியாய்
8. உண்மைத் தனம் - ருஜுபுத்தி ஸ்வபாவனாய்
மற்று
9. ஏற்றம்செய் ஏணியாம் - ஸாத்மிய போக பிரதனாய்
10. எல்லா எவர்க்குமாய் உற்றதே நாடுவான்- ஸர்வபூத ஸுக்ருத்தாய் இஷ்டா பூர்த்தங்களை அருள்பவனாய்
என் றித்தனையும் தன்னிலாம்
நன்மைகூர் தெய்வம் திருமால் திருவடிக்கு
அன்பது மிக்குசெய் தொண்டு - துரும்பதேனும்
இன்பம் பயக்குமே அஃதினும் அவனடியார்
பொன்னடிக்காய் மேவல் உயர்வு.
1793. நவராத்ரி கொலு உற்சவம் :
பல்லுயிரும் பால்பொருளும் தாம்புறப் பாடுகாண
வல்லமால்! கன்யா நவராத்ரி - எல்லில்
புறப்பாடு நும்மின்செய் எம்மின் பெரியர்யார்
கூறு தெரிய எமக்கு.
1794. வஸ்தவ்யம் பகவத் சன்னிதி
ஜப்தவ்யம் அவன் திருநாமம்
பந்துத்வம் மாலடியார் தமக்கு
சாரம், சாரதரம், சாரதமம் எமக்கு.
நின்னத் தனைமாலே! நின்னடியார் எம்கேளீர்!
கன்னலமு தும்கைத் திடவாகும் - இன்சுவை
நின்நாமம் ஊணாய் கதிசெய் பதியேநின்
கோயில் வகுத்தவிடம் ஆகு.
1795. மமாஸ்து மங்கள விவிருத்தயே ஹரி:
இருபத் தொருகால் அரசுகளை கட்ட
வருமவ தாரம் குரோத - உருவான
காரணம் கூறிடில் இன்துணை பூமகள்
சேரா விலகும் இடத்து.
1796. நும் இட்டா தெய்வம் ஏற்றித் தொழிலும்
கிட்டுவது கண்ணன் கழல்.
ஒருமை இருமை இரண்டுமான தன்மைத்தும்
கூறுமடி யார்கூறு கட்டி - வாதிலும்
மாறுமோ அப்பிரமம் தன்நிலை தான்பிழற?
ஆறு சமயமெவன் மாட்டு?
1797. சைலே சைலே ந மாணிக்யம் மௌக்திகம் ந கஜே கஜே |
ஸாதவோ ந ஹி ஸர்வத்ர சந்தனம் ந வனே வனே ||
-
சுபாஷிதம்.
ஒவ்வொரு மலையிலும் மாணிக்கம் கிடைக்காது.
ஒவ்வொரு யானையின் நெற்றியிலும் முத்துக்கள் இருக்காது.
காடுகள் எல்லாவற்றிலும் சந்தன மரம் கிடைக்காது்
அதே போல சாதுக்கள் எல்லா தேசத்திலும் இருப்பார்கள் என்பது இல்லை.
உன்னதமான விஷயங்களும் சான்றோர்களும் உலகில் அரிதானவர்கள் என்பதே இதன் சுருக்கம்.
கொடியை கொழுகொம்பில் ஏற்றிட சுள்ளிக்கால்
தேடி இடுவார்போல் மாலடியார் - கூடி
பெரியார்கட் காட்பட்டால் தப்பாது பேறு
அரிதா வதொன்றவர் கூட்டு.
1798. கிருத யுகம் தபஸ் த்ரேதா யுகம் யக்ஞம் த்வாபர யுகம் அர்சனம் கலி யுகம் நாம சங்கீர்த்தனம்
இத்தனையும் ஓடகையற்கு. விட்டத்தில் இருப்பார்க்கு ‘’என்நன்றி செய்தேனா என்நெஞ்சில் திகழ்வதுவே’’
எற்ற அளவிலே நாம் படவேண்டிய பாடெல்லாம் அவன் படும்::
வேங்கடம் என்னும் பொருப்பிடை நின்றுபின்
ஓங்கோத பொன்னிப் பெருக்கிடை - தூங்கியும்
நான்முகன் ஓம நெருப்பிடை தோன்றியும்
தான்தவம்கொள் நம்மைப் பெற.
1799. அறு சமய செடியதனை அடியறுத்தான் வாழியே!
உலகம் உருவாம் அணுக்கள் அவையால்
அலதேல் இயற்கை செயும்தமைத்தாம். - என்னலப்பல்
மாள்வித்து பின்யோகம் தர்க்கம் மீமாம்சம்
ஆள்வித்து வாழ்வைதிக மே!
1800. சம்ஸாரிகளை திருத்த நாமா ஆள்? உடலில் ஒருவித எண்ணையைத் தடவி நெருப்பால் எரியவிட்டு விளையாட்டு காட்டும் வித்தகர் போன்ற பகவான் அல்லவோ அதற்குக் கடவன் என நாட்டாரோடு இயல்பு ஒழிந்து நாரணனை நண்ணுகையே நமக்கு உத்தேஸ்யம்.
உலகோர் குறைகளை கண்டுமவை காணா
விலகல் நலம்எதுபோல் என்னே - சொலப்புகில்
தைலக்காப் பிட்டு எரி யூட்டுவித் தர்போல்
அலாதார்க்கில் ஊரார் இயல்பு.
ஸமர்பணம் ::