Wednesday, January 9, 2019

ஆசுகவி - பகுதி 5.

முகநூல் மலர்ந்த ஆசுகவி - பகுதி 5.

501. ரக்ஷிக்கும்போது பிராட்டி சந்நிதி வேண்டும் :
செய்வினை யோபெரிது! செய்தவை இன்னமும்
எய்திலவாய் என்கூடு பூரித்து -- எய்தனன்!
ஐய! அதுகண்டு இருவராய் நின்றீரோ?
தெய்வநாய கன்தேவி யோடு!

போனகம் தருவரேல் புனிதமன்றே :
வாக்கும், செயலும், நினைவதும் மாலுக்கே
ஆக்கும் அடியார் எவராமவர் -- நோக்கொடு
சீர்த்தாள் விளக்கநீர் ஆக்கமும் போனகம்வாய்
சேர்பப் புனித முயிர்க்கு.

துலா மூலம் :
மாமுநியே இன்னமொரு நூற்றாண் டிரும்என்ற 
சேமநல் கூற்று தினமுமே -- நாமுரைக்க
ஆமது நாள்ஒன்றாய் நீட்டிக்கும் நல்குறவு
பூமாதும் மாலும் கனிந்து

அஷ்டாதச விதானம் :.
மாமுனிவன் பொன்னடிகள் எண்மரவர் வெண்குடையாய்
கோமானின் தோள்தழீஇ மாவல்லி -- மாமதில்
வீதி வலம்வரும் அவ்வனந்தன் தாமிவரும்
ஏதுண்டு சங்கை அதுக்கு?

வாய்க் கொண்டு பாடவல்ல கவியல்லேன் யான் :
துலாமூலம் தோன்றிய வள்ளர்க் கிணையே
இலாஞான தேசிகனை நாளும் -- குலாவிநங்கள்
ஏத்தினும் ஏத்தகில்லா வான்பெருமை மாமுனியை!
தோத்திரம் என்செய்வேன் யான்?

சேனை முதலியார் :
சேனா பதியாழ்வான் தேனாம் திருப்பாதம்
வானோர் பதிஉறை வார்க்கும்மற் -- றேனையோர்
தந்தமக்கும் ஆமே முதல்கதிநம் சடகோபர்
தந்ததிரு வாய்மொழிய துண்டு.

லோகாச்சார்யார் பிள்ளை :
அவரோநீர்? என்றசொல் கேட்டலும் ஆவதென்?
தேவரீர் நம்மை இரண்டாற்றின் நடுவேயாய்
மேவல் பணித்தீர் எனமணப் பாக்கத்து
தேவர் உரைப்பத் தெளிந்து.

யா வித்யா ஸா விமுக்தயே :
துறைகள் பலபல உண்டாம் அவையுள்
நெறியலா தற்றுஎன் போக்கும்? -- அறிவு
அரிய வழிபோகல் நீத்து எளிதாம்
உரிய செயல்கற்கை அஃது.

முதலாழ்வார் :
மாமயிலை அல்லிக் குளமாலை சொல்மாலை
தேமதுர ஞானத் தமிழ்கொண்டு -- நாமும்நன்
கேற்றபொய்கை பூதம்பேய் அன்னெரித்த நல்விளக்கில்
தோற்ற திருமாலைக் காண்டு.

510. ஆராதனைக்கு எளியான் :
யாதுமாய் யாவுமாய் யாங்கணும் நின்றமால்
மாதுவாழ் மார்பினன் வேதகீத -- பாதனே!
ஏதிலார் ஏழையர் ஏத்தநின்ற போதிலும்
வேதியார் வேட்கைபோல் ஈட்டு.
சதங்கை அழகியார்.
தன்னடியா ரோடுதமை ஒக்க ஒழுகுவான்
தன்னை எமர்எது பேர்கொண்டு -- சொன்னாலும்
அஃதே அவன்நாமம் என்றாற்று வார்க்கு
மிகுதோதான் மற்றைப் பெயர்?

ஸாத்விக தேவதா ஸ்வரூபம் :
தேவர்கள் ழூவரில் தண்மையர் யாவரென
ஆவலில் தேடி பிருகுமுனி -- மேவ
சதுமுகன் கோயிலும் முக்கணான் மூர்தமும் போய
அதுவால் திருமாலே தீர்வு.

ஸஞ்சய-திருதிராஷ்ட்ர வது :
நும்கண்ணால் நோக்கிக் காணீர் அண்ணல் 
நம்கண்ணன் கேசவன் நாரணனை நீவீர்!
எம்மால் அவனை உம்மால் ஏகாதசி 
இன்நாள் அவர்மன்னா எம்கண்கள் பயனாவதே!


ஸ்ரீ: ஸ்தானாபரணம் தேஜ :
அன்னை அவள்தன் அருளுக்கு நம்அரங்கன் 
தன்னைக் குழைத்து தன்தகவும்-- இன்னமும் 
என்னென்ன செய்தும் நிகரொப்பான், பின்அவள்
தன்மார்பில் சேரரெட் டித்து.

கருப்பு-சிவப்பின் பரபாவ சோபை :
மையோ மரகதமோ என்மாலோன் மேனிதன்
மையேறிய கண்ணாள் இமையோடிய -- மையாமால்
பொய்யோ அதுஅளித்தான் பேரெழில் போல்நன்று
செய்யாள் தனக்குமிது ஒப்பு.

செய்யாள் அவள்திரு மேனிதன் செவ்விமால்
மையோ டியகண் களில்மேவ -- செய்யகண்ணர்
என்னவரும் ஆக, கருணையும் கண்டிப்பும்
ஒன்று பிறிததா நேர்ந்து.

மிருகமிட்டுப் பிடிப்பாரைப் போலே :
திருமார்பில் ஒண்டொடி யாள்ஒருத்தி திண்சேர்
திருவடியில் என்று ஒருத்தி -- அருகினில்
இன்னும் இருவரை சேர்த்தியெமை யாட்செய்மால்
என்னேயுன் மாய வலை!


அஸ்தாநே பய சங்கை - அவனும், அவரும் :
இடமில்லா வெஞ்ச மரிடத்து மூத்தோர்
அடல்படித்த ஆசான் எனஇவர் -- பாடே
எதிரிடவோ? என்ற விசயன் கலக்கம்
அதுதரமோ ஆழ்வார்சங் கை ?

கையது ஆழிவெண் சங்கு திருவளர்
தையல் உடனாய் கலுழன்மேல் -- வையத்
துளார்க்கண் பட வந்த வரத்துக் கிரங்கி
வளமெழ வாழ்த்தும் அவர்.

520. பிராப்தி பலம் அதிகாரி தரம் :
அடிகள் அடியே பணிவார் முடிய
அடைவ தவன்தாளே! மாலடியார் -- கூடப்
பெறுவார்க் கவன்நாடு! தன்ஆ ரியன்தாள்
உறுவர்க் கவர்தாளே வீடு!

108 திவ்ய தேசம் :
ஆழ்வார்கள் பன்னிருவர் பாமாலை பாடியே
வாழ்தியஊர் ஒவ்வொன்றும் மாயோன்தான்-- தாழ்தி
அடியாரைத் தன்னுலகுக் காஉயர்த்தும் வாழ்சி
கடிதில் விடப்போமோ யாம்?

ஆசாரிய சம்பந்தம் ஒழிந்த பகவத் சம்பந்தம் தியாஜயம் - 
காரணம் புடம் போடாத பொன் நகைக்குதவாது
ஒருவருக்கும் நீவிரோதி இல்லை அரங்கன்
திருவடி போய்த்தொழ ஈங்கு-- ஒருபாடும்
இல்லை தடைஎன்ன; ஆழ்வான்தாம் சீயர்க்காள்
அல்லதேல்ஆம் என்றவதை நீத்து.

பிரபன்ன ஜன கூடஸ்த்தர் :
நாலு கவிப்பெருமாள் நான்விரும்பும் நம்பெருமாள்
ஏலு மொழிப்பெருமாள் நங்கள் -- கோலக்
குருகூர்ஆழ் வீர்! நும் பெருமாள் நமக்காய்
அருள்செய்ய ஆள்வீர் அவர்.

அழைப்ப வாழ்வித்தவர் :
ஆனை அழைத்திட ஆதிமூலம் தான்ஒருவன் 
தானாய் உலகோர் உணர்த்திட-- ஏனையார்
தெய்வங்கள் எண்ணமும் பொய்பவே தோன்றினான்
கொய்தபூ கொள்வான் விரைந்து.
.
சாங்கியம் X  வைதிகம் :
உடல்இது ஐந்தின் அவதாரம் ஆன்மா 
உடன்இருந்து ஆற்றும் அதற்று-- திடவெளி 
விண்விசம்பு என்ற இருபத்து நாலும்நம் 
கண்ணன் உடற்றுப் பிறந்து.

மாயா X  மாயி :
மங்கலொளி யில்பழுதை பாம்பு எனஒழுகல்
எங்கனம் பொய்ஞானம் ஆகுமோ -- ஆங்கே
உடலிதுபொய் மற்றதோள் ஆன்மா வதேமெய்
படகாட்டும் வேத விளக்கு.


மெய்யாம் உலகிதனுள் ஓடும் நதிநீர்
எய்துமாற்றம் போலல்லால் காணுமிவை -- பொய்யோ?
படைதளித் தாக்கும் இறையோடு யாவும்மெய்!
நாடலவன் பால்அன்பு கொண்டு.

வெண்ணை, சுண்ணாம்பு :
சிங்கக் குருகு முலையூட்டு வேளையிலும்
அங்குவந்த யானைத் தடல்கொள்பெண்-- சிங்கம்போல்
திங்களும் ஆதித் யனும்இரு கண்களாய்
நம்கூற்றும் நல்குலவும் மால்.

530.அகதிம், சரணாகதம் :
உய்ய ஒரேவழி நம்உடைய வர்கோலச்
செய்யத் திருவடி என்றிருப்பார்க் -- ஐயமென்?
மெய்யடியார் தம்மின் உறவுநல் சுற்றமெலாம்
ஐயன் அவர்நமக் கென்று!

ஆராதனைக்கு எளியான் :
யாதுமாய் யாவுமாய் யாங்கணும் நின்றமால்
மாதுவாழ் மார்பினன் வேதகீத -- பாதனே!
ஏதிலார் ஏழையர் ஏத்தநின்ற போதிலும்
வேதியார் வேட்கைபோல் ஈட்டு.

சதங்கை அழகியார்.
தன்னடியா ரோடுதமை ஒக்க ஒழுகுவான்
தன்னை எமர்எது பேர்கொண்டு -- சொன்னாலும்
அஃதே அவன்நாமம் என்றாற்று வார்க்கு
மிகுதோதான் மற்றைப் பெயர்?

கருணையால் காணுலகம் தோற்றப் படைப்பார்
தரமோ? பெறலால் அவைநமக்கே-- நேர்தல்
உறுமோ? அளித்தவன் ஆளப் பெறுதல்
திருட்டோ? மறுப்பார் களவு.


வேதம் வல்லாரைக் கொண்டு விண்ணோர்
பெருமான் திருப்பாதம் பணிந்து:
பெரிய பெருமாள் முதல்பெரியன் நல்லார் 
பரவும்நம் ராமா நுசன்நடுவா -- சீரிய
ஆரியர்கள் ஈட்டத்து மாமுனிகள் ஈராக
நேரிய நம்குருக்கள் தேறு .


வணங்கும் துறைகள் பலபலவாக்கி :
மலையில் பிறந்து கடலில் கலக்கும் 
அலகிலா ஜீவ நதிபோல் -- நலம்திகழ் 
நாரணன் காட்டு சமயங்கள் கண்டு 
மருளாதே போவதாழ்வார் பின்பு.


கோதை தமிழ் வேதமனைத்துக்கும் வித்து :
சேநயாகம் தொட்டுபூம வித்தையுள் மூட்டுமெய்
ஞான சுரபிநாலு வேதசார -- மாம்மூன்
எழுத்தவை கோவிந் தனைகூட்டும் (அ) கோதை (உ)
விழுப்பொருள் காட்டும் நமக்கு (ம).


தெய்வ சாந்நித்யம் மந்த்ர பிரகடிதம் :
கல்லில் வெளிப்படு சிற்பம் உளிகொண்டா
இல்லை அதனைக் கொணர்பவன் -- நல்மதி
கொண்டா? அதுபோலா ஆகமம்செய் கோயிலதில்
உண்டாமால் தெய்வம் குறி.


சாதனார்த்தம் இதம் சரீரம் :
நேற்றாக நாளையாக இன்று எனாதபோது 
காற்றோடு போகுமிக் காலம்எண்-- குற்றக்கால்
மூப்பும் நரையும் திரையுமாய் கூற்றும்பின்
ஏப்பம்செய் வாழ்வுஎன் பெற்று?


சேதன வியாபாரம் ஈஸ்வராதீனம் :
செய்வினை யாவும் செயலாதல் தன்னாலோ ?
ஐயன்மால் தூண்டு செயலதோ? -- ஐயம் 
இதுவால் விழுமிய முக்குணத்தான் தொக்கிய 
ஏதம்செய் வாசனையான் மேவு.


540. ஞானமய க்ஞானாஸ்ரயம் ஆத்மா :
ஆன்மா அறிவு இருவகை யாம்பிரிவோ?
ஒன்று செயலாய் பிறிதிதயம் -- தோன்று
உணர்வாய் அறிதல் தவறு! பிணக்கில்
இணக்கம் இரண்டதில் உண்டு.

துவயம் 
பதமாறும்  கண்டம் இரண்டுமென சீவர்க் 
உதவிடும் மந்திர ரத்னம் -- அதைஒர்
குருவழி பெற்று திருநா ரணன்தாள்
ஒருமுறை பற்றவாம் பேறு .

அலௌகிகம் ஆத்ம பந்தம் :
ஒருசொல் ஒருவில் ஒருஇல் எனவே
இருந்தான் இராமன்! அவனே-- திரும்பப்
பிறந்துபல மாதர் மணந்தான் எனவால்

முரணோ முழுமூ முதற்கு?


ஆழ்வான் அபிநிவேசம் :
(ஸ்)தவம்ஐந்தும் தந்த தவநிதியே! எம்மின்
பவபந்தம் போக்கவல்ல நல்குருவே! -- தேவாதி 
தேவனவன் வேண்டி பகைவர்க் கருள்நேசா!
மேவிஎமை(யும்) காகூரே சா!

பித்தியதே ஹிருதய கிரந்தி :
கண்ணனை மாலையான் கைதொழுதேன் கண்டேன்!என்
எண்ணம் நிறையவன் நின்றுதன் -- வண்ண
மலர்க்கோலப் புன்னகையும் காட்டியபின் உண்டோ
உலகியலே ஒவ்வா தவர்க்கு?

புணர்ச்சியில் மணாளன் (நித்ய பிரம்மச்சாரி) :
ஓரிருவர் எண்மர் பதினாறாம் ஆயிரவர் 
பாரியைகள் கண்ணனுக்கு என்றறிந்த-- நாரதரும் 
காரண காரியம் கண்டறிய சென்றாங்கு 
தேறியதெங் கும்முளமால் என்று.


கண்ட சதிர் காண்டு : 
தாயுரை கேட்டுநம் கண்ணன் 'களவில்லை 
தாயே!நீ காணாய்என் வாயுள்ளே -- ஆய 
உலகும் உமக்கு தயிர்நீர்த்த வெண்ணையோ?
ஞாலத் துளார்நம்பச் சாற்று'!


ரக்ஷிக்கும் போது பிராட்டி சன்னதி வேண்டற் பாலது:
உலகேழும் ஓடி காகையும் காப்பார் 
இலையென்று வாடி களைத்து -- பழுதிலா 
ராமன் திருவடிக்கே தானபயம் என்றுவீழ 
சேமமுறும் சானகியாள் கொண்டு.


துறவின் திறன் :
ஒருடுப்பும் பிற்றைநாள் வேண்டிற்று இற்றெனா 
தோரிருப்பும் வாய்மை மொழியும் -- பிறிதுயிர் 
பால்பரிவும் அஃதொப்ப சாது நடையுமாய 
மாலடியார் காட்டும் துறவு.


மாலின் மேலாதுளவோ ?
கடலில் பிறந்து ககனத் தெழுந்து 
திடலில் பொழிந்து உயிர்செய் -- கொடையாம்வான் 
மேக தொருவுரு ஆசானின் மீதோமால்
ஏகுமுயிர் தாயோன் தயை ?


550. மீள் நகர், மீளா நகர்:
செய்கிரியை நீடுநிறை வானுலகம் யாவையும் 
போய்வருதல் அற்றே வினைத்து ! மால் -- வைகும்
பரமபதம் தான்பிணை நீடிப்போக ஒட்டா 
பெருநகராய் ஆற்ற அரிது.


திரிகடுகம் :
தாகத் துதவா கடல்நீர்போல் நல்கலார்கை 
போகுசெல்வம் என்ன பயற்று?வி -- வேகமில் 
கல்வியும் ஏற்றமில் ஊற்றுபோல் என்செய 
வெல்கல் உதவாக் கடை.


குணம் என்னும் குன்று :
தன்மேன்மை கண்டகலு வார்க்களுக்கு நீர்மையும் 
தன்கார்யம் செய்யுமென நம்புவார்க்கு -- தன்னின் 
எளிமையும் வேட்டுமது ஈட்டித் தடைகள் 
களையுமால் என்னும் இறை?


நிறம் மாறா பூக்கள் :
சுட்டாலும் பொன்ஒளி குன்றாது; ஆவின்பால் 
அட்டாலும் தன்சுவை தாழாதே; -- இட்டு 
புகைத்தாலும் நல்மணம் மாறா அகில்போலா
திகைக்கலார் சான்றோர் அறம்.

மானமும், தன்மானமும் :
பெண்மானம் காக்க படவை சுரந்தநம் 
கண்ணன் கடப்பாடும் தான்முன்பு-- பெண்கள் 
துகிலை குருந்தின்மேல் இட்டுத் திருந்தும் 
அகவை உணர்த்தும் பொருட்டு.

அழகும், அருளுமே நமக்கு தஞ்சம் :
அலைகடல் அன்றமரர்க் காய்தான் கடைய
விலையில் பரிசாய் திருமகள்-- ஏலாக்கண்
மாலும் திருமால் எனஅவனே? மற்றவள் 
கோலா அடியார்க்கும் அஃது.

காரேய் கருணை :
சாலை கிணற்றின் கொணர்ந்தநல் வாவிநீர்
காலைபோல் மாலையும் ஆனை -- மலைக்கரசர்
அம்மால் பனிப்ப எதிராசர் பெய்தத்தால்
நம்பால் அருளாளர் ஆய்த்து?
அஹம் ஸ்மராமி மத் பக்தம் :
பிறந்தேன், பிறவி முடிப்பான் நினைவை
மறந்தேன், மறப்பிலானை எண்ணித் -- துறந்தேன்
மேலா விதியொன்றும் செய்வ திலையாய், அக்
கோல வராஹர்சொல் கொண்டு.

பரவாதி கேசரி எதிராசர்:
பரன்ஓன்றே என்பாரும் வேறுவேறு என்று 
முறண்கெளு வாரும் ஒருகண்-- திறணாளர் 
போக்கி குறைநிமிர்த்து நேர்செய் எதிராசர் 
முக்கண் அரனாம் அவர்க்கு.

நிருக ஸம்ரக்ஷணம் :
சூரிய சூதன் அறியாது செய்பிழையால்
பாரினில் ஓணான் எனவானான் -- கூறிடில்
விற்ற பசுவுக்கு புல்லிடுவார் உண்டோ?மால் 
சுற்றத் தவருள்ளாதல் கற்று.

560. நிலத் தேவர் : உலகும் உயிரும் உடலெனக் கொள்வான் 
அலகில் பெரும்கீர்த்தி மாயோன்-- குலாவும்
அடியார் அவரின் புனிதமுடைத் தாம்பூமி!
தேடியவர் தாள்தலைப் பெய்து.

ராஜ்யத்துக்கு பலஹரை போலாவோ : வறுமை துறத்த மழலை பெருக்கால்
திருமதி உறுத்த நிறைபொருள் -- கோறல்வாய்
அண்ணலுக்கு ஈத்த பிடிஅவல் ஈடாமோ
கண்ணன் குசேலவர் நட்பு?

ஈடும் எடுப்புமிலா இறையோன் : தோழமை காரணமா பௌண்டிரன் தான்பெற்ற 
ஆழியை ஆள அறிந்திலனாய் -- மோழை 
எழுவித்தான் வாசுதேவன் கைகிளர் சக்கரம் 
தாழுவித்துக் கொய்தான் தலை.

பாணாஸுர பங்கம் : கனவிலே கண்டு கடிமணம் புரிந்து 
புணர்ப்பிலே பாணன்மகள் ஊஷை -- இருப்பவே 
எதிர்ந்த அரனுமவன் மக்களும் வெப்பும் 
அதிரவாணன் தோள்துணித்தான் மால்.

ஆயர் புத்திரன் அல்லன், அரும் தெய்வம் : தாயுரை கேட்டுநம் கண்ணன் களவில்லை 
தாயே!நீ காணாய்என் வாயுள்ளே -- ஆய 
உலகும் உமக்கு தயிர்நீர்த்த வெண்ணையோ?
ஞாலத் துளார்நம்பச் சாற்று!


ஜெயந்திரன் துணிச்சல் : உலகேழும் ஓடி காகையும் காப்பார் 
இலையென்று வாடி களைத்து -- பழுதிலா 
ராமன் திருவடிக்கே தானபயம் என்றுவீழ 
சேமமுறும் சானகியாள் கொண்டு.

பரமைகாந்தி :
ஒருடுப்பும் பிற்றைநாள் வேண்டிற்று இற்றெனா 
தோரிருப்பும் வாய்மை மொழியும் -- பிறிதுயிர் 
பால்பரிவும் அஃதொப்ப சாது நடையுமாய 
மாலடியார் காட்டும் துறவு.


கடலின் பெரிது மாரிநீர் ஏரி.
கடலில் பிறந்து ககனத் தெழுந்து 
திடலில் பொழிந்து உயிர்செய் -- கொடையாம்வான் 
மேக தொருவுரு ஆசானின் மீதோமால்
ஏகுமுயிர் தாயோன் தயை ?


மீளாப் பெருநகர் :
செய்கிரியை நீடுநிறை வானுலகம் யாவையும் 
போய்வருதல் அற்றே வினைத்து ! மால் -- வைகும்
பரமபதம் தான்பிணை நீடிப்போக ஒட்டா 
பெருநகராய் ஆற்ற அரிது.


ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது :
தாகத் துதவா கடல்நீர்போல் நல்கலார்கை 
போகுசெல்வம் என்ன பயற்று?வி -- வேகமில் 
கல்வியும் ஏற்றமில் ஊற்றுபோல் என்செய 
வெல்கல் உதவாக் கடை.


570. ஆச்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள் :
தன்மேன்மை கண்டகலு வார்க்களுக்கு நீர்மையும் 
தன்கார்யம் செய்யுமென நம்புவார்க்கு -- தன்னின் 
எளிமையும் வேட்டுமது ஈட்டித் தடைகள் 
களையுவான் மாலே இறை.


ஆகியளித்துக் காப்பான் :
மக்கள் மனைஉறவு பாசம் எனமாய 
துக்கச் சுழலையுள் போக்கிபின்-- மிக்கமறை
ஞானத் தொருமூர்த்தி மால்சரண் தந்திலனேல் 
ஈனத்துயிர்க் கேது கதி?


குணம் என்னும் குன்றேறி நின்றார் :
குணம்மூன்றில் முன்நின்ற ஒன்றது கொண்டு 
அணையும் இரட்டைப் பிணக்கு-- குணுக்கியபின் 
மாதவன் ஓத்தே உயிரதன் உய்பயனாய் 
சோதிவிண் சேர்ந்தாள்மால் தொண்டு.


மொழியும் பொருளும் ஆழியான் :
பெயர்குணம் செய்கிரியை சாதியென சப்த 
பயனும் பொருளும் எல்லாம்--இயைந்த
திருமாலை சுட்டுங்கால் அற்றதன் குற்றம் 
விரவலா தன்மையோன் தான்.


தாபத்திரியம் :
பிறப்பிடை தோறும் நலியும் இடும்பை
புறத்தோ? அகத்தவோ? வெம்மை -- உறுத்த
மனம்மெய் உயிரான் விளையும் அவையும்
பனிபோல் விலகும்மால் ஏய்ந்து.

கார்கி , மைத்ரேயி, லோபமுத்ரா வகையரா :
ஆண்டாள் அவள்போல கோளூர் புறத்தவம்மாள் 
கண்டன் கலிகன்றி தன்னைநற் -- தொண்டர்
குலாவ வருள்குமுத வல்லிஇம் மூவர்
நிலாவு நெறிநாம் பயந்து.

வாழ்கிறான் கண்ணன் :
முனிதந்த சாபத்தால் கோரை உலக்கை
எனவாகி யாதவர்கள் மாய -- இனிகண்ணன்
தானுமே தன்னடிச் சோதி நணுகினான்
மானவர்க்கு பாகவதம் தந்து.

புலனொடு ஐம்புலன் பத்தும் மனமும்
நிலம்நீர் இவையுடை பூதமைந்தும் -- காலம்
பிரகிருதி யோடுமகான் எட்டும் உயிரும்
பரமபத மாள்மால் உடற்று

ஸாகார நிராகார பிரகார :
கட்கிலீ! என்றதும் கண்டவர் வாயுரையோ?
காட்டலான் என்றதுவும் கண்டிலார் -- வேட்கையதோ?
நாட்டிலே உள்ளதும் அல்லதும் மாலுருக்
காட்டிட காணாதார் பித்து.

வைதிக ஹீந : பிரஷ்ட :
சடங்குகள் சாத்திரம் சம்பிர தாயம்
அடங்கலும் நம்பிக்கை வைப்பார்-- அடையாளம்
மூடமை என்றதை ஏளனம் செய்வார்
மடமை அவர்எச்சத் தாம்.

580. காரண-காரிய பிரஹ்மம் :
யாதுமாய் யாவுமாய் நாரணன் நிற்கவை
பேதுறத் தோற்றுவான் ஆற்றவே-- சாதுவாய்
தன்னுள்ளாம் காலம் உணர்த்த பலவுமாய்
எண்ணியாங்கு ஆவான் அவன்.

ந துவத் ஸம அப்யதிக குத : ?
இத்தனை ஏற்றம் திருமால் ஒருவருக்கே
பத்திபத்தி யாய்சாத் திரம்போற்றிச் -- சித்தரிக்க
எத்திறம் மற்றையார் தெய்வத் தவரேற்றம்
பெற்றனரோ? மாலின் மயக்கு.

பத்துடை அடியவர் இடர்ப்பவர் பொறுப்பதோ?
ஒருவாளி கொண்டு மலைஏழ் கடல்ஏழ்
தருவேழ் துளைத்தாயால் நும்பால்-- பரிவிலார்
நம்பால் வெறுவிசெய்வ தின்னும் பொறுத்தியோ?
எம்மால் இருத்தியாய்நீ காட்டு

வரம் பெறலால் தரம் கெடுமோ?
கடையர் அடைய விழைவது ஈதல்
உடைய திருமால் சிவனார் -- விடையதாகி
தாங்கல் ஒருபொருட்டோ? கேட்டுப் பெறுவதவர்
பாங்கு; கடவுளாவர் எங்கு?

விஷயாந்தர பிராவண்யம் :
விட்டிஇல் பூச்சி விளக்கில் விரும்பிவீழும்,
தேட்ட வலையுள்மாய் மீன்போல்,நம் -- மாட்டுள
ஐம்புலன் காட்டும்அம் மாயச் சுழிபட்டார்
வம்புலாம்ஈட் டத்தராய்க் கெட்டு.

உத்தவ கீதை :
அறுகால பொன்வண்டு ஆசான் நமக்கு;
விரைமலர் தேடியே தேனுண்ணும் -- மாறு
ஞானமது தேடி குருமார் பலர்பணிந்து
வானுலகு காண்பார் அவர்க்கு.

ஜங்கம தேவன் :
உள்ளம் ஒருகோயில் கண்கோ புரவாசல் 
வெள்ளவாரி வாவிமுன் வாயதா --வள்ளல் 
பிரானார்க்கு பூஉண்டு நீர்உண்டு 
கண்ணன்பால்
தீராக்கா தல்தலைக் கொண்டு.

ஒடக் கையரும், விட்டத்தில் இருப்பாரும் :
அந்தணர் ஆகை அனைவர்க்கு மாம்விதியே! முத்தீயோ
டந்தணல் ஓம்பலின் முன்படைத்த -- அந்தணன்
தாள்சேரக் கூம்புவார் முன்நிருத்தி மற்றையார்
ஆள்அவர்க் கென்னல் முறை.

ஒட்டா விளவின் கனி :
இராமநுசன் அண்டினார்க்கு இல்லை எனாது
பரமபதம் தான்தருவ னேலும் -- முறையாய் 
கனிந்துள்ளே ஒட்டறநின் றோடு கழல்விளமாய்
ஆனபின் அன்றோஆம் வீடு.

புறத்ததோடு அகத்ததாகில் அழகு:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்த தொழித்து விடில் - வழக்கதை 
மெய்ப்பித்த கூரேசர் நீட்டியும் கூட்டியும்
செய்தாரே முக்குறும்பு மாய்த்து.

590. நட்பு:
உதவிக்கை மாறு கரணன்கொள் நட்பு;
பதவிபெறு மாறு சுயோதனன் -- தீதுடை
நட்புமே! ஏழை குசேலன் உளங் கொளுயர் 
நட்புபிழை யாது(மில்)நீ ஆற்று.

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே : 
அண்ணல் இராமா நுசமுனி ஆதியில்இம்  
மண்ணில் அவதரித்து செய்தபல்-- புண்ணியம்
யாதுளும்தன் (தாள்)கொண்டு சதுர்த்தரோடு மாதர்க்கும் 
மாதவன்செய் மோக்கமுண் டென்று.
 

அழகுக்கு அவன்; ஒழுக நம்மாழ்வார் :
மால்அவ தாரம் யாவுளும் ராமன்போல் 
கோல்கண்ணன் போல்மிக்கு இல்லையாய் -- மால்வியா 
மோகம் அதுவே உருஎடுத்த ஆழ்வார்போல் 
யோகி எவரும் இலர்.


சஸ்த்ர பாணியும், சாஸ்திர வாணியும் :
பாலனாய் பண்டு பலலீலைகள் செய்தவன் 
மேலொருநாள் கீதை உரைசெய்தான்-- ஏலுமேல் 
கோலவில்லி ராமனவன் வில்அழகின் நம்கண்ணன் 
நாலுமறை சொல்லே அழகு.

மாற்றான் மனை இடுக்கித் தோற்றான் :
இந்திரன் செற்ற இராவணன் தந்தமக்கு 
முந்தியோடு பிந்தி இணையில்லா -- அந்த 
இறுமாப்பு காரணமா சுந்தரிக் கொணர்ந்து 
அறுபட்டான் தன்தலை பத்து.

அக்ஷர ப்ரஹ்மம் :
புராணம் பதினெட்டும் தந்து அதனின் 
உறாத மனசாந்தி தன்னைப்-- பெறவே 
வியாசர் குணம்கண்ணன் ஒன்றே கருதிப்
பயந்தான்இப் பாகவதம் நன்று.

மாலின் மலிய அருள் தேவி :
அடிவீழ்வார் ஆட்கொள்ளல் அஃதென் பெருமை?
கடிகமல நாயகி கச்சித் -- தடத்த 
பெரும்தேவி போலுண்டோ? நம்மைத் தெருள்முன் 
அருள்தேவி பெற்றானைப் பெற்று.

வாகர்தா பிரதிபத்யையே :
தன்கன்றை ஆஅறியும், முன்னின் றுயிரளிப்பான் 
தன்கன்றை தானறிய மாட்டானோ? -- சொன்ன 
மறையின் பொருள்விளங்கா தோதிலும் பின்னும் 
இறைஉதகும் ஒண்பொருள் தேர்ந்து.

மக்நான் உத்தரதி ஸாஸ்திராந்  :
தன்னடியார் தம்திறத்து இன்னல் எவர்செய்யும்? 
அன்னவகை காப்பராம் மால்எம்மோய் -- தன்தமக்கும் 
நாத்திகர் நேர்குதர்க்கம் சாத்திரம் கொண்டன்னோ
உத்தரிப்பான் ஆசா ரியன்!

நாம் படும்பாடு அவர்க்கு விளையாட்டா?
முளைநெல் அளர்நிலத்து புல்லென் றொழியா 
விளைநெல்லாக் கும்விளை யாட்டே -- இளையா 
திறையோன் பிறப்பிடை தோறும் விடாது 
துறைப்பால் படுத்தும் நமை. 

600. பிறவி ஓர் வரமா? சாபமா?
தன்போக்கு தன்னிச்சை என்று விடுவியாது 
முன்போக்குக் காட்டி முயலவிட்டு -- தன்நோக்கத் 
தேற இடம்கிடைத்த வாறே நமைத்திருத்தப் 
போறும் திருமால் பரிவு.

பட்டரை நெகிழ்த முயல்-வேடன் விருத்தாந்தம்  :
விரித்த வலையில் முயல்குறுகு வீழ, 
தரியாது தாய்அவனை அட்டித் -- திறைஎன 
தன்னை அவர்குணவா ஈத்து இரக்கமுடன் 
மன்ன விடுத்தமை கேட்டு .

ரக்ஷிஸ்யே இதி விஸ்வாச :
நச்சிநாம் நாரணன் தாளில் சரணமென்று
இச்சையாய் வீழ விலக்காது -- மெச்சிநம்
அச்சுதன் நீடும் அபயம் அதற்பின்நாம்
நிச்சித் திருக்கலாம் வீடு.
வெள்ளை சாத்து விஜயம் : 
உள்ளம் உருவும் கரியசோழன் செய்கள்ளம் 
விள்ளும் வகைதாம் அகப்படாது -- வெள்ளை 
உடுத்துநம் சீயர்அன் றெல்லில் அகன்றுமேல் 
நாடு புகுந்தார் கரந்து .
மணிமண்டப மார்கதாயி :
தற்காத்து தாழ்நெறியோர் சொற்காத்து பற்றியபின்
அஃகாது நிற்று, சூழ்பயனை-- முற்றுங்கால் 
தன்பேறாய் துற்றாது மாலுக்காய் சென்றாங்கு 
இன்புற்றார் பெற்றார்காண் பேறு.

ஆத்ம ஸமர்பணம் :
பேசத் துடிக்கும் அதரம் , பயிர்பிழைப்ப
ஆசு கவிபோல் சொறிமழை-- ஏசு
கருணயம்கண் ஐய!நின்கை நின்ற குழல்போல்
கருதி அணையாய் எமை.


தமருகந்தது எப்பேர், மற்றப்பேர் :
நாம்வணங்கும் எம்பெருமான் நம்பெருமாள் என்றாக
நாம்இணங்கி ஏற்றதும் இன்நாளே! -- பாம்பணையான் 
தாம்பணியும் ஓர்ஈரம் கொல்லி பரிந்திட்ட 
தாம்அப்பேர் நன்றாதல் நேர்ந்து.

நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதிறே :
நாணும் நகையும் நளினமும் நங்கள்கோன்
பேணும்தம் தேவி யவள்போலா -- தோணும் 
வகைகண் டிலமே! அதுவாலோ மீள
தொகைதொடுத்து தோன்றும் அவன்?


குல கூடஸ்த்தர் :
பொய்த்தவம் போற்றும் புலச்சமயத் தாழுமிவ் 
வையத்து மாந்தரெல்லாம் வைட்டணவத் -- துய்ய 
மறைநாலும் வண்தமிழ் செய்தான்!அவ் வாழ்வார் 
இறையாவான் எங்கள் குடிக்கு !

கடலுக்குண்டோ குறைதல் வளர்த்தல் ?
உடலின் பிறிதாம் உயிற்கு பிரக்ருதி 
நீடின்ப துன்பம் புறம்பாம் ! -- கடலின்நீர்
ஆறால் மழைசெய் முகிலால் குறைதல்
பெருகிவளர் தல்இல வாங்கு.

குருபரம்பரை :
நம்பெருமாள் நம்மாழ்வார் நாதமுனி யாமுநாசார் 
எம்பெரு மானார் உழிதந்த- நம்குருக்கள் 
ஆதபட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை லோகாசார் 
கோதில் மாமுனியென் கூறு .


610. சிறுகக்கட்டி பெருக வாழ் :

சுவைஒளி ஊறுஓசை நாற்றம் இவைஐந்தின் 
தேவை அளவுபட ஓம்பா -- தவர்களுக்கு 
ஏவல் அவைநமக்கு என்பது நீங்கிநம்பால் 
மேவல் விகர்ப முடைத்து .


அவபிரத ஸ்நானம் :
தொண்டர் எலாம்கூடி அண்ணல் அவதாரம்
பண்ணஅவ் வைபவம் ஆனந்தமாய்க் -- காண்ட 
அசைவோ? தேவரீர் மஞ்சன மாட
இசைவதூம்  எமைத்தோர் மகிழ்வு.


தொண்டராள்கை திருமாலுக்குகப்பு :
திருமால் திருநாடு சேர்வதெம் பேறு!
திருமால் திருவடி கள்அஃதாம் -- ஆறு!
திருமால் திருத்தொண்டர் ஆட்செய்து போற 
இராமா நுசன்என்னே கூறு.


ஸ்ரீசடகோபன் :
அடிதாரும் அண்ணல் நிழலுமாய் அன்பர்
முடிகோலும் இந்த சடகோபம்-- அடியேனும் 
நாடி அமைகின்றேன்; வாடிய நெற்பயிர் 
தேடும் மாரி
யாம்மா றன்.

தேர்தட்டு வார்த்தை யார் பொருட்டு ?
பார்புகழும் சாரதி போர்முனையில் தான்சொன்ன 
வார்த்தையை நேர்நிருத்தத் தோன்றிய -- 
தோர்வள்ளல் 
ராமா நுசராம்மால் தொண்டர் தலைவர்க்கு 
ஆமோ உலகத்துள் நேர் ?


மதுரா மதுரக்ஷரி:
நாரா யணாஎன்ற நாலெழுத்தின் சீர்த்தநல்
பாரா யணத்தேற்ற நாமம் -- பகரில்
இராமா நுசாஎனும் நாலெழுத்தே! எக்குற்றம்
பாரா தெமையாள் சிறப்பு.


கட்கிலீ ! காணுமாறு அருளாய் :
காண்பொருள் கண்ணில் கிடக்க கடவுளை
கண்கொண்டு காணார் மடமையை -- என்கொண்
டியம்புகேன்? உள்ளதும் அல்லதும் மாலுரு
ஆயபோது காணார் குருட்டு.

பூட்டிவைத்த செல்வம், கூட்டுவது என்ன?
கொந்தலார் கூட்டும் உழைக்கோல் இலாதான்மேய் 
மந்தையும் போல இடர்வதாப் -- போந்த 
விரவுநல் செல்வ விரிப்பும் மடமைத்தே 
நேரா தவர்பா டி
யைந்து.

அத்தி வரதர் விஜயம் :
சதுமுகன் வேள்வி சனித்ததாபம் தீர
அதிசயத்து அந்த அனந்தசரஸ் -- போதநம்
உத்ரவேதி அத்தி வரதர்,இம் மண்டலத்தோர் 
ஏத்த எழுந்தார்காண் வந்து.

மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன் :
மருந்துண்ண வேண்டாவே மாயவனார் தந்த
கருமவினைக் காயம் களைய -- திருந்திய
ஞானத் தொருப்பட்டு கண்செவிநா ஊறுசுவை
ஏனத்துரு மால்நெஞ்சில் வைத்து


620. அத்தி வரதர் :

நிலமேல் இருந்தாலும் நின்றாலும் நீரில்
அலமந்து ஆறக் கிடந்தாலும் -- கோல
வரதர்தம் கொள்ளை அழகதை யார்பெறுவர்? 
நாரணர்க்கோ அஃது இயல்பு.

ஜல சயன பெருமாள் :
ஆதியிலே வந்த அயனுக்கும், ஆழ்வார்கள் 
போதவழி போந்தநம் பூர்வர்கள் -- ஏதம் 
தவிர்ந்தஎம் தேவாதி தேவா! இனிஎமக்கும் 
சேவியா தேகுமென்நீ ருக்கு?

வரதாபயம் :
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே!
என்னில் பெரியர்யார் தான்உளர்? -- உன்னில்
பிறிதாம்என் தாள்அடைய பின்னைப் போழ்த்தெண்ணல்
நேறா வகைநாட வீடு!
அஹமேவ பரம் தத்வம்.
தர்சனம் பேதயேவ ச!
பிரபத்தி உபாயேஷு
தேஹாவசானே மோக்ஷம் ஸ்யாத்
அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் !!
-- அத்தி வரதர்.

அந்தி தொழ ஆளிடுவாருண்டோ ?
உனக்கா உணவை பிறிதொருவர் உண்ணவோ?
ஆனபோது உனக்கான நன்மை -- நினைகவோ
இன்னொருவர்? என்னில் புனக்காயா மேனிமால்
தன்னின் அருள்வேண்டின் ஆம்.

யார் கடவுள்?
நமக்கோர் பெயருண்டு; அஃதும் அடைவே
நமதின் உடற்கா? உயிர்க்கா? -- எமதெவை
யாவும் படைத்தளித் தோர்நாள் ஒளிப்பான்
எவன்?அவனே நம்மின் இறை.

அஹம்வோ பாந்தவோ ஜாத :
நான்பெரிய பூதமோ தேவனோ தெய்வமும்
தான்அன்று, நும்முள் ஒருவன்காண்! -- யான்ஓர்
இடையன் அசோதை அவள்மகன், கோபர்க்
கடைய எளியன்தான் என்று.

மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன் :
நீரும் நெருப்பும் வரதன் இருப்பாய்நம்
கூறும் பொருள்தான் உலகீர்காள்! -- தேறும் 
அலகில் அவன்கருணை நீரின் நனைய 
விலகும் வினையாம் நெருப்பு.

அநந்தாவதாரம் :
மன்னு வடமலை மாமதிள் மாலரங்கம் 
சென்னை திருவல்லிக் கேணியுள்-- பன்னகன் 
ஓச்சும் பணிமலையே மேனிமஞ்சம் பீடமாய்;
கச்சிக் குளமாவான் போந்து.

கைப்பொருளுக்கு கண்ணாடி கேடோ?
காண்பொருள் கண்ணில் கிடக்க கடவுளை
கண்கொண்டு காணார் மடமையை -- என்கொண்
டியம்புகேன்? உள்ளதும் அல்லதும் மாலுரு 
ஆயபோது காணார் குருட்டு.

ஆனி மூலம் - ஈடு சாத்து :
மாமுநியே இன்னமொரு நூற்றாண் டிரும்என்ற 
சேமநல் வாழ்த்து தினமுமே -- நாமோத 
தேயாது நாள்ஒன்றாய் நீட்டிக்க மாட்டலனோ 
பூமாதும் மாலும் 
புணர்த்து ?

630. ஜலதி பபூவ :
நெடுஞ்சாண் கிடையாய்க் கிடந்தாய் பலநாள் 
விடுமா றிலைஉனக்கேன் அந்தோ! -- தடுமாற்ற 
தீக்கதிகள் கண்டு தமர்முயங்கா தஞ்சலென 
வாக்குரைக்க வந்தாயோ மீண்டு ?

துவயம் :
பதமாறும் கண்டம் இரண்டுமென சீவர்க் 
குதவிடும் மந்திர ரத்னம் -- அதைஒர்
குருவழி பெற்று திருநா ரணன்தாள்
ஒருமுறை பற்றவாம் பேறு . 

குருபரம்பரை :
நம்பெருமாள் நம்மாழ்வார் நாதமுனி ஆளவந்தார்
எம்பெரு மானார் உழிதந்த- நம்குருக்கள்
ஆதபட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை லோகாசார்
கோதிலவா மாமுனிஎன் கூறு .

இந்தளத்தில் தாமரை :
பாற்கடல் பள்ளி பயின்றவன் தேவர்கள்
நோற்ப வரம்தான் இயம்பலும் -- பாற்பன
சிட்டர்நல் உத்தர வேதிமுன் நாரணன்
காட்டும் கலுழன்மேல் நின்று.

CPU-முத்தொழில் மூவாபணி பிரஹ்மம் :
கணிணியும் கண்ணன் பிறர்வாய்செய் எல்லா
பணியும்தான் பண்ணவல் லாதாய் — துணியில்
அழிப்போடு ஆக்கம் அவன்செயல் என்றவழி
ஒப்பீடு நம்முளமால் தோற்று.

யதா யதாஹி தர்மஸ்ச :
மூன்றில் முதலதாய் நின்றான் உலகிதுள் 
ஆன்ற திருமால் பல்பிறவி -- மன்னி 
ஒருபா டுழற்றலும் தாழ்வில் தருமம்
மறுபா டெழலுறக் காத்து.

நெற்றி நீறு நாரணற்கு எற்று?
நாமணியும் நாமம் திருமால் திருவடியேல்
தாமணிய மாலு
கத்தல் என்னோதான்? -- பூவணியும் 
மார்பின்மேல் பூமகள் மண்மகள் போல்தமர்கள் 
ஓர்கின்ற ஒன்றதாக் கொண்டு .

கடைக்குட்டி ஆழ்வார் :
சென்றுசென்று பாட்டால் வணங்கியும் பூசித்தும் 
நன்றுநன்று நான்கண்டு கொண்டேன் -- எனபழமால்
நின்றநின்ற ஊர்தொரும் மங்கையார் மன்னர்தாம் 
பன்னு பனுவல்எம் 
வைப்பு .

கடவுள் ஏன் கல்லானான் ?
பூமகள் நில்லாள் புவியோ சலிளாய்
தாமமரும் பாம்பணையும் தன்னை -- சுமக்கும்
கலுழன்பால் நாளும் வெறுவ திருமாலும்
ஏலானாய் கல்லாவான் கொல்?

640. அநிர்வசனீயம் :
கல்பதித்த கைநெஞ்சப் பூதைக் குமேயால்,பூ 
மல்குமேனி வாசம் மனதிழுக்கும் — அல்லே!அப் 
பல்குணத்த மால்பண் புரைக்கவே சொல்துணை 
அல்லாயாம் என்பிழைத்த மோ?

இத்தனைப் பெற்றுமன்றோ பிறவியில் பிணங்குமாறு :
தன்உந்தித்  தேவன் சதுமுகற்கு வேதமோதி,
தான்பிறந்த போது தமியன்—அருச்சுனன்
தன்பக்கல் கீதையும் ஓதியது போதாதாய்,
பன்னகர்வாய் பாஷியம் ஈத்து.

மெய்காப்பு மால்காப்பு அதிசயித்து :
திறந்த திருமாற்பில் பூவில் அமர்ந்தாள் 
இருந்ததாம் அந்தப் புரமென்றும் — ஓராது
சக்தி எனும்படை தன்னேற்றுக் காத்தார்க்கு
உக்தமாம் ரத்நாங்கி நன்று.

கண்டருளல் :
உண்டு பசியாறி நன்று மகிழ்ந்தார்க்கு
மீண்டும் அவர்உண்ணத் தூண்டாதா — போன்றுதான்
வேண்டுதல் வேண்டாமை இல்லா இறையோனும்
விண்டு புசித்தான் அல.

சரண்ய ஹ்ருதய தர்ப்பணம் :
உழைகோலும் ஊதுசங்கும் ஏந்தி சுயோதனன்
வீழ போரில் ஓர்தேரை ஊர்ந்ததும் - ஏழை
அருச்சுணன் வாழஓர் கீதை மொழிந்ததும்
கோருவார்க்கு தாமுளதாய் காட்டு. 

தனக்குற்ற நன்மை தெய்வத்தான் வரும் :
உனக்கா உணவை பிறிதொருவர் உண்ணவோ?
ஆனபோது உனக்கான நன்மை -- நினைகவோ
இன்னொருவர்? என்னில் புனக்காயா மேனிமால்
தன்னின் அருள்உன்னில் ஆம்.

அந்தர்யாமி பிராம்மணம் :
நமக்கோர் பெயருண்டு; அஃதும் அடைவே
நமதின் உடற்கா? உயிர்க்கா? -- எமதுடை
யாவும் படைத்தளித் தோர்நாள் ஒளியும்
அவைஅவன்கண் ஆகல் முறை.

பிறப்பும், இருப்பும் இயல்பான் வரும் :
நீரும் நெருப்பும் வரதன் இருப்பாய்நாம்
கூறும் பொருள்தான் உலகீர்காள்! -- தேறும்!
அலகில் அவன்கருணை நீரின் நனைய 
விலகும் வினையாம் நெருப்பு.

யார் வைஷ்ணவன்?
பிறர்குற்றம் பார்ப்பார்தம் குற்றம்தான் நோக்கார்
திறத்து அறிவார் அதுகண்— டுரையின்
அவர்பால் பொறையும் உபகரித்த தாம்நினைவும்
மேவலுமாம் வைட்டண வன்.

சுருங்கச் சொலினும் பெருக வாழலாம் :
ஓமெனும் ஓரெழுத்து ஓங்கிமால் எட்டெழுத்தாம்;
ராமவெனும் இஃதுமவன் ஆயிரம் -- நாம
சுருக்காய் திருவுடை நாரணன் தாள்சேர்
விருப்புடையார் சாற்றும் பிற?

650. பகவதர்ப்பிதம் ஸ்வபிரியம்:
கனிபூந்தேன் காய்கதிரும் கண்டவா உண்டு
தனிநலம் பேணாது முந்துற — அன்ன
பொருளனைத்தும் மண்ணில் சமைத்த திருமால்
திருத்திச் சுவைத்தல் நலம்.


பாம்பணையார் தாம்பணியும் மணவாளமுனி :
ஆதி அரங்கர்தாம் அன்போடு ஈடுதனை
காதினிக்க கேட்டு எழில்மகவாய் -- ஏகி
தமிழ்வேத முன்ஓதும் ஸ்ரீசைலேச மீத்தபுகழ்
மாமுனிவா! என்றோதும் யாம்.


அற்றது பற்றெனின் உற்றது வீடு :
இறைமலர்ப் பாதம் அடைகையும் அன்றி 
முறைமையில் முன்சன்ம ஊழ்தன் — திறத்த 
வினையாவும் வாசனை யோடே விடுகையும் 
தானே பிறவாமை பெற்று.

மாயாம் து பிரக்ருதிம் வித்தி :
நீரில் அலைகள் எழுவதும் காற்றாலே
நீரில் நிழல்கள் அலைவதும் — பாரில்அக்
காற்றதுவால் நம்உடல் மேவுமாவி ஊறுசுவை
நாற்றமிவை முன்வினைப் பாற்று.

எலும்பு சுவைக்க ரத்தம் துற்று :
ஈகருப்பஞ் சாற்றுள் விழினும் சிறகுயர்த்தி
மேய்கலா வாற்று அதுள்மாயும் -- பாயுநீர்
ஆழி அழகை கரையின் முயங்காதார்
ஆவி உலகுள் துயக்கு.

மேற்பூச்சு மேனி மிடுக்கற்றே :
அனந்தனுக்கு அண்டம் சுமத்தல் அரிதோ?
புனக்காயா மேனிமால் அன்பர்க்கு — ஆன
எதுவுமே ஆகுமோ அத்தால் பிறர்க்குமே?
சாதுவாய் தோற்றல் பிழைத்து.

சாதனஸ்ய கௌரவம் :
தேவன் திருமால் ஒருவன் அவனாம் 
பவரோ கமதன் மருந்து — தவமே 
தலைநின்றார்க் கல்லால் உதகா 
நிலைதாள் பணிவார்க் கெளிது.

அஹமன்னம் அஹமன்னாத அஹமன்னமதந்தம் ஆத்மி :
குன்றெடுத்தான் அன்றுவன போஜனமாய் இந்திரனுக்
கென்று கொணர்ந்தவைதான் ஒன்றுவிடா -- தின்றதர்க்காய் 
முற்பட ஈத்தவை துற்றாது கண்டருளல்
உற்றான் எமைத்தோர் பொருட்டு.

குருஹார முத்தாய்ப்பு :
ஐப்பசியில் மூலம் மணவாள மாமுனி
இப்புவியில் வந்தெமக்கா நற்றமிழால் -- ஒப்பிலாத
ஈடு உலகறிய ஓதுவித்து பொன்னரங்கர்
தேடு குருவானார் பின்.


ஒகட்டு : 
நோயில் விழுந்துமே பாயில் படுத்தக்கால்
வாயில் விழுந்தபால் கைக்காதோ? -- மேயகேளீர்
அஃதடுப்பச் செப்பும் கசத்ததில் அஃதா
கசக்கிலா சீரை பிடித்து.

660. சாளக்கிராம சிலா மூர்த்தி :
நானும் பிறந்து இனிநீ உலகிதில்
ஏனோ பிறத்தல் அமையும் — எனவேகாண்
மீனாய்மால் ஆமையாய் கேழலாய் மண்மிசை

ஆனாய் சிலாமூர்த்தி யே!

தியாக, போக, புஷ்ப த்ரிபுடி பரான் ஞான மண்டபம் :
தீர்த்தங்கள் ஆயிரத்துள் திகழ்நரணன் பாரின்மேல்
மூர்த்தம் கொண்டு ஒளிருமூர் அஃதுளாம்
தீர்த்தங்கள் எட்டுடன் ஞானத்துறை படிந்தாடி
சேர்துமே பங்கயத்தாள் இருந்தேத்தும் தாள்பிடித்தே.

அல்பாத் கரீயஸீம் :
வரம்ஈத்த ஈசன் தலையே பதம்பார்க்கக் 
கோரும் அசுரன் அவன்போல் -- கூறும் 
மறைநான்கும் ஓதி அவைத்தந்த அம்மால் 
இறையே இலைசெய்வார் யாதோ? 

மாயாம் து பிரக்ருதிம் வித்யாம் மாயினம் து மஹேஸ்வரம் :
மாயை உலகின் முதல்தனி வித்தேயாய்
சேயை வயிற்றுடை தாயைப்போல் -- இவையாவும்
கூறுகொள்உன் பொன்மேனிக் கேறா விகாரமதைக்
கூறுவார் மாய மயக்கு.

அநித்யாத் நித்ய பிரம்ஸா :
மேகநோய் மேனி அழகையே மாய்த்தல்போல்
ஏகமாய் சேர்த்த பொருள்எல்லாம் — போகவாய்
போகாமல் கள்ளர்வாய் போகுமால் மானிடமே!
நீகுவாய் பேராசை நோய்.
குறுங்குடி கைசிக மாஹாத்மியம் :
நாயனார் தம்தேவி தாம்கேட்கப் பண்டுபேர்
ஆயிரம் பேருடைய பெம்மானார் -- சேயினோம்
நாமுய்ய தாமுரைத்த நல்வார்த்தை கேட்டுமே
நாமுற்றப் பாடுவோர்க்காம் பேறு.

வந்தே வந்தியம் :
உண்டி கொடுத்தோர்; உலப்பில்முத் தீமூவாத்
தொண்டர்; மறையோதும் பட்டர்; நேர் -- கொண்ட
உபவாசம் கோடாதார்; கற்புடைப் பெண்டிர்
சகவாசம் தேடித் தொழும்.

கூவி உரைப்பார் செவிக்கு :
தம்மக்கள் தாம்ஓத ராமபிரான் தன்சரிதை
தான்கேட்டான் ; பக்திப் பிதாமகர் -- தாம்பணித்த
பேரா யிரம்கேட்ட கண்ணனுன்போல் நம்பிள்ளை
சீர்ஈடு தன்னின் செவிக்கு.


ஸது விஜ்ஞேய : ஸர்வார்த்த ஸாதக :
அறம்இன்றி ஆகா அருளும், அருளின்றி
சேரா பொருளும், பொருளின்றி -- யாரே
பெருக்
க அறம்அதுவால் அத்திருவாழ் மார்பன்
ஒருவற்கே நோற்கப் புகும்.
670. ஆத்திக நாத்திகர் :
இறைஅன் பிலாதார் கொடையும் தவமும்,
முறைமையில் ஓத்தொடு பூசை — பிறவும்
பலன்கருதி செய்பக்தி என்றிவை ஏலாமே
மாலுக்கு அஃதா விலக்கு.

யத்ர அஷ்டாக்ஷர ஸம்சித்த :
பிறர்க்குடை தெய்வங்கள் ஈத்தவை இன்பம்,
கரத்ததேல் துன்பம் எனவாய் — இருப்பார்
அவர்க்குடை எண்ணம் விரக்தியுள் மேவு
தவத்தராய் மாற்றும்மால் பற்று.

பக்திஸ்ச நியதா வீர :
இருக்கும்நாள் இவ்வுலக இன்பம் வெருவ
பெருகுமால் வெள்ளம் தலைப்பெய்து -- நீராய்
உருகுமுள்ளம் உன்னித் தவன்பணி செய்ய
கருமவினை பாசம் கழன்று.


ந துவம் ஸோசித்தும் அர்ஹசி :
தெய்வம் அடியா ரிடத்தும் குருவும்தன்
மெய்சீடன் பக்கலிலும் தந்தைதான் -- உய்யப்
பிறந்த மகனார் உயர்வினில் தாழல் உறினும்
மறந்தும் வருந்தார் மனத்து.

கர்ம பாரதந்திரியம் :
நாளும்வான் கோளும்மேன் நின்றதேவும் ஊழுமே
ஆளோ மதிவிகர்த்த நம்வினைக்கு? -- வாளெயிற்று
ஞானப் பிரான்மாலுக்கு ஆளென் அடிமைக்கண்
தானிசைந்து தாள்தழையார்க் கே.

தத் தஸ்ய சதுர்ஸம் பவேத் :
உனக்கேநாம் ஆட்செய்வோம் என்று தொடங்கி
உனக்கும் உனதடிய ராவார் — தமக்குமாய்பின்
மாலே! உனதடியார் பாலேயாய் கோலுமது
ஏலுவதும் என்கொள் குறிப்பு?

பாகவத ஸம்பந்தம் ஸ்வதந்திரோபாயம்:
இருகால் விலங்கு இறகுடை பட்சி
ஒருகால் திருமால் அடியார் -- அருள்நோக்
கிலக்கதேல் ஞான மநுட்டான மில்லா
நிலையரேனும் சேரும்மால் வீடு.

ஆகத்யமும் அநாதி :
தமிழர் திருநாள் திருவாய் மொழித்திருநாள்
நாமிங்கு கொண்டாடிக் கூட -- சமைத்தான்
அரங்கன் கலியன் நடத்துமத்தை நாதமுனி
யாரும் இருபத்தாய் கூட்டு.

678. முக்கண்ணப்பா :
ஆழ்வானும் ஆண்டா னுமான இருகண்ணர்
சூழ்வா தியர்மாய வாதப்போர் -- பாழ்பட
மாறன் தமிழ்மறை யோடு வடமொழி
கூறும் பழமறைகண் மூன்று.

679. சத்யம் ஞானம் அநந்தம் :
தத்துவம் மூன்றும் இறையனார் ஒக்கவே
சத்தியம் நித்தியம் உத்தமம் — அற்று;
முதல்இடை மற்று கடைஅவை என்பதாய்
அதனதன் மேன்மை உடைத்து.

(பிரஹ்மம் சத்ய தமம் என்றால் சித்தும், அசித்தும் சத்ய தரம், சத்யம் சாமான்யம் என்ற அளவாய், நித்யத்வதிலோ என்னில் பிரஹ்மம் நிர்விகாரமாய், சித்து - நித்ய முக்த பத்த தசாபேத தாரதம்யத்தோடும், அசித்து - பிரக்ருதி பிராக்ருத அவஸ்தாபேத தாரதம்யத்தோடுமான படிக்கு பிரஹ்மத்துக்கு நேர்நில்லா நித்யத்வமேவாய் , பிரஹ்மம் ஸர்வம் பூர்ணமாய், மற்றவை பூர்ணாத் பூர்ணமாதாய என்கிற கணக்கிலே யாம்).
-- Composed by Dasarathy Dasan,
(Agaram) Kidambi Srinivasa Rangan Srinivasa Dasan.


No comments:

Post a Comment